யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/4/17

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கெடு

மதுரையில் தொடக்க பள்ளியில் கலெக்டர் வீரராகவராவ் நடத்திய ஆய்விற்குபின் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தி நடவடிக்கை எடுக்க உதவி தொடக்கக் கல்வி
அலுவலர்களுக்கு (ஏ.இ.ஓ.,க்கள்) ஒரு மாதம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

வரிச்சியூர் அருகே தட்சனேந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த வாரம் கலெக்டர் நடத்திய ஆய்வில், எட்டாம் வகுப்பு மாணவர்களால் ’மதுரை’, ’ஸ்கூல்’,’டாய்லெட்’, ’சயின்ஸ்’ போன்ற ஆங்கில வார்த்தைகள் கூட பலருக்கு எழுத தெரியவில்லை.ஆறாம் வகுப்பு மாணவர்களால் தமிழ் வாசிக்க தெரியவில்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அப்பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில் சி.இ.ஓ., ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவின்பேரில், திருமங்கலத்தில் விடைத்தாள் திருத்தும் பணிப் பொறுப்பில் உள்ள தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) முத்தையா, அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களையும் அழைத்து நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, ’மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் தலா ஒரு உதவி மற்றும் கூடுதல் ஏ.இ.ஓ.,க்கள் உள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பள்ளிகளிலாவது மாணவர் கற்றல், கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய வேண்டும்.

தொடக்க பள்ளியில் ஆசிரியர் ஈடுபாடுடன் பணியாற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் தரமான கல்வி பெற அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.ஒரு மாதத்தில் மீண்டும் ஏதாவது பள்ளியில் கலெக்டர் ஆய்வு நடத்தும்போது அப்போதும் கற்றல் திறனில் முன்னேற்றம் இல்லையென்றால் கலெக்டர் நடவடிக்கை பாயும், என்றார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு.

Central Government Hike 4% DA(132% to 136%) for 6th Pay Commission Pay Scales Employees-Rate of Dearness Allowance applicable w.e.f. 1.1.2017 to employees of Central Government and Central Autonomous Bodies continuing to draw their pay in the pre-revised pay scales/grade pay as per 6th Central Pay Commission

இயக்கம், சட்டம், சங்கம் வரலாற்று தொடர்புடையவர்கள் 💣இயக்கம் ;



📖ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்

📖சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்

📖பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே

📖சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா

📖ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

📖பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்

📖அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி

📖சாரதா சதன் - பண்டித ராமாபாய்

📖சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி

📖வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்

📖சாரணர் படை - பேடன் பவுல்

📖இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

📖ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

📖செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்

📖இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்

📖சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்

📖சுதந்திர கட்சி - ராஜாஜி

📖இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே

📖சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்

💣வரலாற்று இயக்கம் ;

1. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்

2. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி

3. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே

4. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்

5. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி

6. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி

7. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி

8. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி

16. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி

17. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி

18. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்

19. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே

💣வரலாற்றுச்சட்டங்கள்

🌎1773 - ஒழுங்குமுறைச் சட்டம்

🌎1784 - பிட் இந்தியச் சட்டம்

🌎1786 - திருத்தும் சட்டம்

🌎1793 - சாசனச் சட்டம்

🌎1813 - சாசனச் சட்டம்

🌎1833 - சாசனச் சட்டம்

🌎1853 - சாசனச் சட்டம்

🌎1858 - அரசு பேரறிக்கை

🌎1861 - இந்திய கவுன்சில் சட்டம்

🌎1874 - இந்திய கவுன்சில் சட்டம்

🌎1878 - இந்திய மொழிகள் சட்டம்

🌎1882 - தலசுய ஆட்சி சட்டம்

🌎1883 - இல்பர்ட் மசோதா

🌎1889 - ஆண்டு சட்டம்

🌎1892 - இந்திய கவுன்சில் சட்டம்

🌎1909 - இந்திய கவுன்சில் சட்டம்

🌎1919 - இந்திய ஆட்சி சட்டம்

🌎1919 - ரௌலட் சட்டம்

🌎1937 - இந்திய ஆட்சி சட்டம்

🌎1947 - இந்திய சுதந்திரச் சட்டம்

🌎1950 - இந்திய அரசியல் சட்டம்

💣சங்கங்கள், கட்சிகள் மற்றும் தொடர்புடையவர்கள் ;

1. திராவிட முன்னேற்றக் கழகம் - சி.என்.அண்ணாதுரை

2. தியாசாபிகல் சொசைட்டி, சுதந்திரச் சிந்தனை சொசைட்டி - அன்னி பெசன்ட்

3. சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொஸைட்டி - கோபாலகிருஷ்ண கோகலே

4. டான் சொஸைட்டி - சதீஷ் சந்திரா

5. பேட்ரியாடிக் அசோசியேஷன் - சையது அகமது கான்

6. இந்தியன் அசோசியேஷன் - சுரேந்திரநாத் பானர்ஜி

7. சேவா சதனம் - சுப்புலெட்சுமி

8. சுயராஜ்ஜிய கட்சி, சாரதா சதன், கிருபா சதன் - சி.ஆர்.தாஸ், ரமாபாய் (பண்டிட்)

9. திராவிடர் கழகம் - பெரியார் ஈ.வே.ராமசாமி

10. கலாஷேத்திரா - ருக்மணிதேவி அருண்டேல்

11. பார்வேட் பிளாக் - நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ்

12. சர்வன்ட்ஸ் ஆஃப் பீபுள் சொஸைட்டி - லாலா லஜபதிராய்

13. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

14. ஏஷியாடிக் சொஸைட்டி - வில்லியம் ஜோனிஸ்

15. காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி - ஜெயபிரகாஷ் நாராயண்

16. சால்வேஷன் படை - ஜெனரல் பூத்

17. ஆல் இந்திய ஜனசங்கம் - ஷியாம் பிரசாத் முகர்ஜி

18. இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

பொதுப்பணிகள் - 7 வது ஊதியக்குழு ஆய்வுக்குழுவிடம் கோரிக்கைகள் சமர்பிக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கு அழைப்பு

இலவச எல்.கே.ஜி., அட்மிஷனில் சிக்கல் : தனியார் பள்ளிகள் திடீர் முட்டுக்கட்டை

நிலுவைத்தொகை, 124 கோடி ரூபாயை தராவிட்டால், வரும் கல்வி ஆண்டில், இலவச மாணவர் சேர்க்கையை நடத்த மாட்டோம்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.


மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான கட்டணம், பள்ளிக்கல்வித் துறை சார்பில், மானியமாக வழங்கப்படும். 
இதன்படி, இரண்டு ஆண்டுகளாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, தமிழக அரசு, 300 கோடி ரூபாய் வரை வழங்காமல், பள்ளிகளுக்கு பாக்கி வைத்துள்ளது. அதனால், பல பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளன.

இது குறித்து, தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது: முதல் கட்டமாக, 124 கோடி ரூபாய் தருவதாக அரசு அறிவித்துள்ளது. அந்த நிதி இன்னும் பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை. கோடை விடுமுறைக்குள், பாக்கி தொகையை தர வேண்டும். இல்லையெனில், இலவச அட்மிஷன் வழங்க முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

1990 - 91 ஆம் ஆண்டு தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய காலத்தில் ஈட்டிய விடுப்பினை கணக்கில் சேர்த்துக் கொள்வது பற்றிய திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் ஆணை !!

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியம் சாத்தியமா?? *மாநில அரசுக்கு இணையான ஊதியம் சாத்தியமா ?? ஓர் அலசல் !!

தமிழகத்தில் *இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியம் சாத்தியமா?? *மாநில அரசுக்கு இணையான ஊதியம் சாத்தியமா*??                   மாநில அரசுக்கு இணையான ஊதியம் தருவதாக இருந்தால் 2009 ஜுலையில்  பணியில் சேர்ந்தவருக்கு 01.01.2016 ல்   -அடிப்படை ஊதியம் + தர ஊதியம் + சிறப்பு ஊதியம் -10440× 2.57= 26,100                               2800 தர ஊதியத்திற்கு நமது நியாமான ஆரம்ப  நுழைவூதியம் -29,200           7 ஆண்டு பணிக்கு நிர்ணயம் செய்யும் பொழுது - 8 வது இடத்தில் உள்ள 35,900 ல் நிர்ணயம் செய்ய பட வேண்டும்.          அடிப்படை ஊதியத்தில்  வித்தியாசம் - 35,900-26100 = 9,800  இதை 5500 பேருக்கும் 2012 & 2013 ல் 15,000 நபர்களுக்கு வழங்க வேண்டும்                                      அரசுக்கு செலவு - 
5500× 9800=5,39,00,000.                     15,000×7800=11,70,00,000.     இரண்டு சேர்த்து தோராயமாக-18,00,00,000. பதினெட்டு கோடி மாததிற்கு ,வருடத்திற்கு -18,00,00,000×12= 2,16,00,00,000 - *இருநூற்று பதினாறு கோடி செலவாகும*்....
*6 வது ஊதியக்குழுவில்  2009 ஜுன் மாததிற்கு பின் பணியேற்ற பிற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எனபல்வேறு பிரிவினருக்கு  ஊதியத்தில் முரண்பாடு ஏற்படும். அப்போது அரசு தற்போது பெறும் அடிப்படை ஊதியம்+ +PP+தர ஊதியத்தை மட்டுமே கணக்கில் கொண்டு  பெருக்கும்( Multiple factor) கணக்கீட்டை மட்டும் செய்ய முற்படும் ...         ஆக மொத்தத்தில்  நமக்கு வேண்டியவற்றை இப்போதே  சுதாரித்து அரசிடம் வலியுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்...இல்லையேல் நம்நிலை 😭😭😭😵.       *மத்தியஅரசுக்கு இணையான ஊதியம் தருவதாக இருந்தால் 2009 ஜுலையில்  பணியில் சேர்ந்தவருக்கு 01.01.2016 ல் தற்போது பெரும் அடிப்படை ஊதியம் + தர ஊதியம் + சிறப்பு ஊதியம் -10440× 2.57=26,100                          4200 தர ஊதியத்திற்கு ஆரம்ப  நுழைவூதியம் -35,400                                    7 ஆண்டு பணிக்கு நிர்ணயம் செய்யும் பொழுது - 8 வது இடத்தில் உள்ள 43,600 ல் நிர்ணயம் செய்யபட வேண்டும்.          அடிப்படை ஊதியத்தில்  வித்தியாசம் - 43,600-26100 = 17,500* இதை 5500 பேருக்கும் 2012 & 2013 ல் 15,000 நபர்களுக்கு வழங்க வேண்டும்                                      அரசுக்கு செலவு - 5500× 17,500=9,62,50,000.                                     .                                *2012&2014 App tr-15,000×15,500=23,25,00,000* இரண்டு சேர்த்து தோராயமாக-33,00,00,000.  நமக்கு முன்னர் பணியில் சேர்ந்தோர் தோராயமாக -*1999 ஜுலை க்கு பின் 2009 ஜுன் வரை -35,000 அவர்களுக்கு கூடுதலாக கிடைப்பது தோராயமாக 8400  35,000× 8400 = 29,40,00,000      மூன்றிக்கும் மொத்தம் அறுபத்து மூன்று கோடி மாதத்திற்வ ருடத்திற்கு -63,00,00,000×12= 756,00,00,000*எழநூற்று ஐம்பத்தாறு கோடி செலவாகும* அடிப்படை ஊதியத்தில் மட்டுமே இத்தோராய கணக்கீடு இதற்கு அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி என சேர்த்தால் சுமார் 1,000 கோடி வரை செலவாகும்... 7 வது ஊதியக்குழுவிற்கு மொத்த ஒதுக்கீடு மிக அதிகபட்சமாக -5000 முதல் 7000  கோடியாக இருக்கும் இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இப்பெரும் தொகையை செலவிட அரசு தயாராக இருக்குமா?? தற்போதைய நிதிச்சூழ்நிலையில்... இன்னும் மொத்தவருவாயில் 5% மட்டுமே தமிழக அரசால் கடன் பெற முடியும் ... சிந்தியுங்கள் எது சாத்தியம் என்று....விளக்குங்கள் நமது சகோதரர்களுக்கு

CBSE., பள்ளிகளில் ஒரே மதிப்பீட்டு முறை : வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை, நாடு முழுவதும் ஒரே மதிப்பீட்டு முறை அறிமுகமாகிறது. நாடு முழுவதும், 19 ஆயிரம் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் இயங்குகின்றன.

இந்தப் பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு வரை, 10ம் வகுப்புக்கு, சில மாணவர்களுக்கு பொது தேர்வும், சில மாணவர்களுக்கு பள்ளி அளவிலான தேர்வும் நடத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டிலிருந்து, 10ம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளி அளவில், சிறப்பு மதிப்பீட்டு முறை மேற்கொள்ளப்பட்டு, 'கிரேட்' என்ற தர வரி சை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் ஒரே வகையான மதிப்பீட்டு முறையை பின்பற்ற, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.
இரண்டு பருவத்துக்கும், தனித்தனியே மதிப்பீடு செய்யப்பட உள்ளது. 20 மதிப்பெண்களுக்கு மாத வாரியாகவும், 80 மதிப்பெண்களுக்கு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வு அடிப்படையிலும், மதிப்பீடு செய்யப்படுகிறது.

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., சேர்மன், ஆர்.கே.சதுர்வேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில் ஒவ்வொரு விதமான மதிப்பீட்டு முறையை கையாள்வதால், நாடு முழுவதும், ஒரு பள்ளியிலிருந்து, மற்றொரு பள்ளிக்கு மாறும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. தேசிய அளவில் ஒரே மதிப்பீட்டு முறை இருந்தால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும், அதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மாடல் தயாரித்து கற்றல் : நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களே செயல்திட்ட மாடல்களை
தயாரித்து, கற்கும் முறை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 'செயல் திட்டவழிக் கற்றல்' திட்டத்தை தொடக்கக் கல்வித்துறை செயல்படுத்தி உள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தாங்களே அறிவியல், கணித பாடங்களுக்குரிய செயல்திட்ட மாதிரிகளை தயாரித்து கற்க உள்ளனர். இதற்காக மாவட்டத்திற்கு 35 நடுநிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒரு பள்ளிக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் மாவட்டத்திற்கு 1.05 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம்
மாடல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொள்ளலாம். இதன்மூலம் மாணவர்
களின் அறிவியல் சிந்தனை துாண்டப்பட்டு, படைப்பாற்றல் அதிகரிக்கும்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அறிவியல், கணித ஆர்வமுள்ள 10 மாணவர்கள் மற்றும் ஆசிரியரை கொண்ட ஒரு குழு அமைத்து மாடல்கள் தயாரிக்கப்படும். கடைகளில் விற்கும் மாடல்களை வாங்கி பயன்படுத்தினால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாடல்கள் மூலம் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படும், என்றார்.

Lab Assistant Post - Experience Certificate Form



1990 - 91 ஆம் ஆண்டு தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய காலத்தில் ஈட்டிய விடுப்பினை கணக்கில் சேர்த்துக் கொள்வது பற்றிய திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின்ஆணை !!

குழந்தைகளின் புத்தக சுமை : பெற்றோருக்கு மனச்சுமை அமலுக்கு வருமா மெட்ரிக் இயக்குனர்உத்தரவு.

கலந்தாய்வுக்கு காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்.

ஆதார் உடன் பான் இணைக்க வேண்டும் தவறினால் ரூ.10,000 அபராதம்.

ஆதார் எண்ணுடன் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ("பான்')ஜூலை 1ஆம் தேதி முதல் இணைக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறை பணப்பரிமாற்றத்தின் போதும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று வரி தொடர்பான நிபுணர் சுரேஷ் தெரிவித்தார்.
எனவே, ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.இது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த இணைப்பு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கவில்லை எனில், ஒவ்வொரு பணப் பரிமாற்றத்தின்போது, நிரந்தர கணக்கு எண் இல்லை என்று பதிவாகும். நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.இதுதவிர, ரூ.2 லட்சத்துக்கு மேல் பணபரிமாற்றம் செய்வது இணையம் மூலமாகவும், கணக்கு மூலமாகவும் செலுத்தலாம். இல்லைஎனில், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

ஆய்வக உதவியாளர் பணி: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு.

ஆய்வக உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும், நாளை துவங்குகிறது. அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்
களுக்கு, 2015, மே, 30ல் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 
தேர்வு முடிவுகள், மார்ச், 24ல் வெளியாகின. இவர்களுக்கு, நாளை முதல், வரும், 11ம் தேதி வரை, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலம், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.எழுத்துத் தேர்வுக்கு, 150; வேலைவாய்ப்பு பதிவில், இரண்டு ஆண்டு வரை காத்திருப்போருக்கு, 2; நான்கு ஆண்டுகளுக்கு, 4; ஆறு
ஆண்டுகளுக்கு, 6; எட்டு ஆண்டுகளுக்கு, 8; பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போருக்கு, 10 மதிப்பெண்கள் என, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் தரப்படுகிறது.பிளஸ் 2வுக்கு, இரண்டு; பட்டம் மற்றும் அதற்கு மேலான படிப்புகளுக்கு, மூன்று மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆய்வக உதவி யாளராக அனுபவம் இருந்தால், இரு மதிப்பெண்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

'பத்தாம் வகுப்பு முடித்த பலர், கல்லுாரி களுக்கு செல்ல முடியாமல், தொலை நிலை கல்வியில், டிப்ளமோ முடித்துள்ளனர். பட்ட படிப்புக்கு வழங்குவது போல, டிப்ளமோ படித்த தங்களுக்கும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்' என, அவர்கள் கோரிஉள்ளனர்.

போலி சான்றிதழ் கண்காணிப்பு : ஆய்வக உதவியாளர் பணி அனுபவத்துக்கு, இரண்டு மதிப்பெண் வழங்கப்படுவதால், பல பள்ளி, கல்லுாரிகளில் பணம் வாங்கிக்கொண்டு, போலி சான்றிதழ் வழங்குவதாக, புகார் எழுந்துள்ளது. எனவே, பணி அனுபவ சான்றிதழை, பள்ளி, கல்லுாரிகளின் ஆவணங்களில் சரிபார்க்க, அதிகாரிகள் முடிவு செய்துஉள்ளனர்.

தமிழ் பல்கலை.யின் டிப்ளமோ படிப்பு இசை ஆசிரியர் பதவிக்கு தகுதியானது: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் வழங்கும் இசை ஆசிரியர் டிப்ளமோ படிப்பு, இசை ஆசிரியர் பதவிக்கு தகுதியானது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை செயலர் (பொறுப்பு) இரா.வெங்கடேசன் கடந்த மார்ச் 15-ம் தேதி பிறப் பித்த அரசாணையில் கூறப்பட் டுள்ளதாவது: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்ககம்இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பை வழங்கி வருகிறது. இந்தப் படிப்பானது, பள்ளிக்கல்வித் துறையின் இசை ஆசிரியர் பதவிக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோவுக்கு இணையானது என்று தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) இணைப்புக்குழு (Equivalence Committee) தீர்மானித் துள்ளது.

 அதன் அடிப்படையில், தமிழ் பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி இயக்கக இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கல்வித் தகுதியானது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் இசை ஆசிரியர் நியமனத்துக்கு பொருந்தும் என அரசாணை வெளியிடுமாறு பல்கலைக்கழகப் பதிவாளர் அரசை கேட்டுக் கொண்டார்.அவரது கருத்துரு மற்றும் டிஎன்பிஎஸ்சி இணைப்புக் குழுவின் தீர்மானம் ஆய்வு செய் யப்பட்டது.

தமிழ் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் வழங்கும் இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கல்வித் தகுதியை, பள்ளிக்கல்வித் துறையின் இசை ஆசிரியர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோவுக்கு இணையானதாக கருதலாம் என அரசு முடிவுசெய்து ஆணை வெளியிடப்படுகிறது.இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

I "M" Possible - TET தன்னம்பிக்கை வரிகள் !!!

TET தன்னம்பிக்கை வரிகள் - பிரதீப் ப .ஆ . பூங்குளம்

இன்றைய வெற்றி விதைகள்:🐝

* பல முறை தேர்வில் தோற்றவரா நீங்கள் - கவலை வேண்டாம் - அறிவும் சூழலும் முரண்பட்டது. இணையும் போது வெற்றி நிச்சயம்


* முதல் முறை தேர்வு எழுதுபவரா கவலை வேண்டாம். முதல் முயற்சி வலிமை மிக்கது

* வயது அதிகம் மறதி என்ற பயம் இருந்தால் அகற்றுங்கள். அனுபவமே கல்வியின் அடித்தளம் . மன நிலையை ஒருநிலை படுத்துங்கள். இளைஞரை விட பல மடங்கு திறன் பெற்றவர் ஆவிர்

* வழிகாட்டுதல் இல்லை என்ற நிலை இருப்பின் வருத்தம் வேண்டாம் சுயத்தை மீறிய திறன் மற்றவரிடம் இல்லை. நம்பிக்கை உடன் படியுங்கள்

* மறதி, சோர்வு , சலிப்பு வருகிறாதா? கண்டிப்பாக ஏற்படும். நம்பிக்கை விதையுங்கள் இவை களை செடியாய் மறைந்து விடும்

* படிக்கும் பகுதி அதிகம் என்ற பயம் உள்ளதா ? ஒரு எண்ணத்தை மனதில் விதையுங்கள் " I முதல் 10 வகுப்பு மாணவன் படிப்பதை நம்மால் எளிதாக படிக்க முடியும் என "

* போட்டியாளர் அதிகம் என பயமா? எவரை பற்றியும் கவலை வேண்டாம். ஓடும் குதிரையில் முதல் குதிரை நான் என கொள்ளுங்கள்

* நேரம் போதவில்லையா?
இருக்கும் நேர்த்தை மிக நேர்த்தியாக பயன்படுத்துங்கள்

* பணி இடம் இருக்குமா ? எவ்வளவு இருந்தாலும் கவலை இல்லை. 1 பணியிடமாவது கிடைக்கும் அது எனக்கு என முடிவு கொள்ளுங்கள்

* அட்டவணை படிக்க இயலவில்லையா ? கவலை வேண்டாம். நாம் இயந்திரம் அல்ல இட்டதை எட்ட. இயன்ற வரை போராடு

* பாடம் புரியவில்லையா ? வாழ்வியலுடன் தொடர்பு படுத்தி படியுங்கள்

* கணிதம் வரவில்லையா? புத்தக கணக்கை தீர்த்து பாருங்கள். தேர்ச்சி மதிப்பெண் நிச்சயம்

* கனவை நீக்குங்கள். நிஜத்தில் வாழுங்கள். இன்றைய முயற்சியே
நாளைய வெற்றி

* எண்ணம் தெளிவாகட்டும்
இலக்கு
உயர்வாகட்டும்

* நேர்மறை எண்ணம் நேர்மறை முடிவு தரும்.
எதுவாக நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய்- விவேகானந்தர்

வாழ்த்துகளுடன் : தேன்கூடு🏆

TRB - 1,111 ஆசிரியர்கள் நியமனம் - பட்டதாரி ஆசிரியர்களிடையே குழப்பம் நீடிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்த 1,111 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட நியமன அறிவிப்பில் பாடவாரியாக பணியிடங்கள் அறிவிக்காததால் பட்டதாரி ஆசிரியர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

TNTET - 2017 Exam ஹால்டிக்கெட் தயார்.

டிஇடி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணியில் டிஆர்பி ஈடுபட்டு வருகிறது. இதை, அடுத்த வாரம் தபாலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிஇடி தேர்வை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏப்ரல் 29, 30 தேதிகளில் டிஇடி தேர்வு நடக்க உள்ளது.இதற்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கி மார்ச் 23ம் தேதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. தவறாக பூர்த்தி செய்தது, தகுதி இல்லாத பாடங்களுக்கு விண்ணப்பித்தவை என சுமார் 2,000 பேரின் விண்ணப்பம் கண்டறியப்பட்டுள்ளது.மற்ற விண்ணப்பங்களுக்கு ஹால்டிக்ெகட் தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி 598 மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு 1,263 தேர்வு மையங்களும் அமைக்க டிஆர்டி ஏற்பாடு செய்துள்ளது.

தேர்வு எழுத தகுதியானவர்கள் பட்டியலை அடுத்த வாரம் இணைய தளத்தில் டிஆர்பி வெளியிட உள்ளது. அப்போது, ஹால் டிக்கெட் குறித்த விவரங்களும் வெளியிட்டுஇணை தளம் மூலமாகவே ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதுதவிர, தபால்மூலம் ஹால்டிக்கெட் அனுப்பவும் டிஆர்பி முடிவு செய்துள்ளது.வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் டிஇடி தேர்வில் வெற்றி பெறுவோர் ஆசிரியர் பணி நியமனம் பெறுவதற்கு முன்பு கடை பிடித்த வெயிட்டேஜ் முறையின் கீழ் மதிப்பீடு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் (டிஇடி) பெற்ற மதிப்பெண்ணை 60 ஆல் பெருக்கி 150 ஆல் வகுக்க கிடைக்கும் மதிப்பெண், இடைநிலைஆசிரியர் தேர்வில் (டிடிஎட்) பெற்ற மெதிப்பெண்ணை 25 ஆல்பெருக்கி மொத்த மதிப்பெண்ணால் வகுக்க கிடைக்கும் மதிப்பு (25%), மேனிலைத் தேர்வில் (பிளஸ் 2) பெற்ற மதிப்பெண்ணுக்கு 15% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதற்கு, மொத்த மதிப்பெண்ணை 15 ஆல் பெருக்கி, 1200ல் வகுக்க கிடைக்க மதிப்பு எடுக்கப்படும். மேற்கண்ட முறையின் கீழ் 60%, 25%, 15% என கணக்கிட்டு அவற்றை கூட்டினால் வரும் மதிப்பெண்படி பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் போடுவார்கள்..