யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/4/17

தமிழ் பல்கலை.யின் டிப்ளமோ படிப்பு இசை ஆசிரியர் பதவிக்கு தகுதியானது: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் வழங்கும் இசை ஆசிரியர் டிப்ளமோ படிப்பு, இசை ஆசிரியர் பதவிக்கு தகுதியானது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை செயலர் (பொறுப்பு) இரா.வெங்கடேசன் கடந்த மார்ச் 15-ம் தேதி பிறப் பித்த அரசாணையில் கூறப்பட் டுள்ளதாவது: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்ககம்இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பை வழங்கி வருகிறது. இந்தப் படிப்பானது, பள்ளிக்கல்வித் துறையின் இசை ஆசிரியர் பதவிக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோவுக்கு இணையானது என்று தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) இணைப்புக்குழு (Equivalence Committee) தீர்மானித் துள்ளது.

 அதன் அடிப்படையில், தமிழ் பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி இயக்கக இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கல்வித் தகுதியானது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் இசை ஆசிரியர் நியமனத்துக்கு பொருந்தும் என அரசாணை வெளியிடுமாறு பல்கலைக்கழகப் பதிவாளர் அரசை கேட்டுக் கொண்டார்.அவரது கருத்துரு மற்றும் டிஎன்பிஎஸ்சி இணைப்புக் குழுவின் தீர்மானம் ஆய்வு செய் யப்பட்டது.

தமிழ் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் வழங்கும் இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கல்வித் தகுதியை, பள்ளிக்கல்வித் துறையின் இசை ஆசிரியர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இசை ஆசிரியர் பயிற்சி டிப்ளமோவுக்கு இணையானதாக கருதலாம் என அரசு முடிவுசெய்து ஆணை வெளியிடப்படுகிறது.இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக