யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/4/17

கோடை வெயிலின் தாக்கம்: பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சென்னை மாநகரில் தற்போது அதிகரித்துவரும் கோடை வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட
வாய்ப்புள்ளது. அதனால் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது.

வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள தினசரி அதிக 
அளவில் தண்ணீர் அருந்தவும். இளநீர், மோர் மற்றும் பழரசங்கள் அருந்துவதால் உடல் வெப்பத்தை தணிக்கலாம்.

கோடைக்காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலா 
மற்றும் காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், நேரடியாக 
உச்சி வெயிலில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும், தவிர்க்க 
இயலாத சமயங்களில் குடை அல்லது தலையை மறைக்கும் 
துணியினை பயன்படுத்தலாம்.

சர்க்கரை கரைசல்

அதிகநேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்கவும், கடுமையான
வெயிலில் செல்லும்போது வியர்வை அதிகம் வெளியேறுவதால் உப்பு சர்க்கரை கரைசல் கலந்த நீரை பருகவும், வெயிலில் செல்லும்போது தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக நிழலில்
ஓய்வெடுக்கவும். போதுமான தண்ணீர் அருந்தவும்.

அதன்பின்னரும் உடல்நலக்குறைவு ஏற்படின் அருகாமையில் உள்ள 
அரசுமற்றும் மாநகராட்சி மருத்துவமனைக்கு செல்லவும். அடிக்கடி 
நல்லதண்ணீரால் முகத்தினை கழுவ வேண்டும். மேலும், ஒரு 
நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் வியர்வை துவாரங்கள் திறக்கப்படுவதோடு தோலில் படியும் அழுக்குகளும் 
குறையும்.


கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகளை அணிதல், இறுக்கமாக 
ஆடைஅணிவதை தவிர்த்தல், குழந்தைகள் வெயில் நேரத்தில் திறந்த வெளியில் விளையாடுவதை தவிர்த்தல், தெருக்களில் விற்பனைக்கு 
வரும் ஐஸ் போன்ற உணவு பொருட்களை உண்பதை தவிர்த்தல் 
வேண்டும்.

அவசரஉதவி

சின்னம்மை, தட்டம்மை நோய்களுக்கான அறிகுறி தென்பட்டால், 
அரசுமற்றும் மாநகராட்சி மருத்துவமனைக்கு செல்லவும், அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கவும். நோய் பாதிக்கப்பட்டவரை, நோயிலிருந்து விடுபடும் 
வரையில் தனிமையில் இருக்க வைக்கவும். அனைவரும், வெளியில் செல்லும்போது காலணிகள் அணிந்து செல்லவும்.

கூடுதல் தகவல் மற்றும் புகார்களுக்கு ‘1913’ மற்றும் ‘104’ என்ற
 எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். 
அவசரஉதவி மற்றும் சிகிச்சைக்கு தண்டையார்பேட்டை 
தொற்றுநோய் மருத்துவமனை தொலைபேசி எண்கள். 044–25912686, 87 
மற்றும் ‘108’ ஆகியஎண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக