


சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள், அவரது உதவியாளர் வீடு, நடிகரும் சமக தலைவருமானசரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனைசுமார் 35-க்கும் மேற்பட்ட இடங்களில்நடத்தப்பட்டது. அந்த சோதனையின்முடிவில் விஜய பாஸ்கரின் வீடுகள், அலுவலங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளனஎன்று வருமான வரித்துறையினர்தெரிவித்தனர். தற்போது, வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது தொடர்பான ஆவணங்கள் என்று சொல்லப்படுபவைவெளியாகியுள்ளன. அந்த ஆவணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் மூலமாக ஒரு ஓட்டுக்கு 4,000 ரூபாய் வரை வழங்க திட்டமிட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர்த்தொகுதியைப் பாகம் பாகமாகப் பிரித்து 85 சதவீத வாக்களர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்,அதன்படி 89 கோடி ரூபாய் வரை செலவிட கணக்கிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் போலியானவை என ‘அதிமுக அம்மா’ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - ஆனந்த விகடன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக