யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/4/17

B.Ed, படிப்புக்கு தேசிய நுழைவு தேர்வு

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், நேரடியாக பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மைசூரு, அஜ்மீர், போபால், புவனேஷ்வர் உள்ளிட்ட, மண்டல மையங்களில், இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன.

மிகக் குறைந்த கட்டணத்தில், தங்குமிடம் வசதிகளுடன், பட்டப்படிப்பும், பி.எட்., படிப்பும் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த படிப்புக்கு, உடனடி வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. வரும் கல்வி ஆண்டில், பி.எட்., இணைந்த பி.எஸ்சி., - பி.ஏ., படிப்புகள், நான்கு ஆண்டுகளும், பி.எட்., இணைந்த எம்.எஸ்சி., படிப்பு, ஆறு ஆண்டுகளும் நடத்தப்படுகிறது. அதே போல், பி.எட்., - எம்.எட்., தலா இரு ஆண்டுகளும், பி.எட்., - எம்.எட்., இணைந்த படிப்பு, மூன்று ஆண்டுகளும் கற்றுத் தரப்படுகிறது. இந்த படிப்பில் சேர, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதற்கு, www.ncert-cee.kar.nic.in என்ற இணையதளத்தில், மே, 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு பள்ளி வாரியாக காலியிடம் அறிவிப்பு.

தனியார் மெட்ரிக் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இலவச சேர்க்கைக்கான காலியிடங்கள் பட்டியலை, தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு உள்ளது.

மத்திய அரசின் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், நுழைவு வகுப்பான ஒன்றாம் வகுப்பில், மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, நலிந்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசே பள்ளிகளுக்கு செலுத்தும். அதன்படி, வரும் கல்வி ஆண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கை, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்புக்கு நடத்தப்பட உள்ளது. தேர்வுத்துறை இணையதளம் மூலம், ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. ஏப்., 20 முதல், மே, 18 வரை பதிவு செய்யலாம். அதன்பின், குலுக்கல் முறையில் வெளிப்படை தன்மையுடன், மாணவர்கள் தேர்வு
செய்யப்படுவர்.

இந்த இலவச சேர்க்கைக்கு, 9,000 பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இந்த இடங்களின் பட்டியலை, பள்ளிகள் வாரியாக, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மாவட்ட வாரியாக எந்த பள்ளியில், எத்தனை இடங்கள் உள்ளன; அவற்றில், இலவச சேர்க்கைக்கான இடங்கள் எத்தனை என்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்.16ல் ஆலோசனை

மதுரை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்துவது தொடர்பாக ஒன்பது மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் விருதுநகரில் ஏப்.,16ல் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஏப்.,29 மற்றும் 30ல் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடக்கின்றன.
லட்சக்கணக்கானோர் இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் தற்போது நடக்கின்றன.

இதுகுறித்து மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களின் முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் விருதுநகரில் இணை இயக்குனர் குப்புசாமி தலைமையில் நடக்கிறது.
அப்போது தேர்வு மையங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படும்.

12/4/17

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 21

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு - மே 22

* அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 23

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 24

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 25

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு - மே 26

உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 27

உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 28

* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 29

* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 30

இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - மே 31

உத்தேச காலஅட்டவணையின் படி, இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகளை மே 31-ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

G.O. Ms. No. 87 Dt: April 10, 2017- PENSION – Announcement made by the Honble Minister on the floor of the Legislative Assembly – Issue of Identity Card to Pensioners /Family Pensioners –Modalities - Orders -Issued.

360 சேனல்கள். 50 HD சேனல்கள். முதல் மூன்று மாதம் இலவசம் ..

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ  
4G இலவச சேவை அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில நாட்களில் நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவி இன்று சுமார் 10 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அடுத்தடுத்த இலவச அறிவிப்பே இந்த வரவேற்பிற்கு காரணம்
இந்த நிலையில் இலவச இணையதள சேவையை அடுத்து ஜியோ தற்போது டி. டி. ஹெஸ் சேவையிலும் கால்பதிக்க உள்ளது.
இலவசம் கொடுத்தால்தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக முடியும் என்பதை சரியாக புரிந்து கொண்ட ஜியோ, டி. டி. ஹெச் சேவையிலும் முதல் மூன்று மாதங்கள் இலவசம் என அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை மேலும் ஜியோ செட்-டாப் பாக்ஸ்ம் டிடிஎச் சேவையில் 360க்கும் மேற்பட்ட சேனல்களை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது.அதில் 50 சேனல்கள் ஹெச். டி. சேனல்களாகும். ஜியோ சேவைகளைப் போலவே இவற்றையும் குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லை எனில் என்ன செய்ய வேண்டும்?

TET விழிப்புணர்வு சிறு பதிவு 


* ஆசிரியர்  தகுதி தேர்வு நுழைவு சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது

* துவக்கம் வெற்றி பெறுவதாக அமையட்டும்


* நுழைவு சீட்டு தேர்வு எழுதுவது முதல் பணி நியமனம் பெறும் வரை அத்தியாவசியம்

  * நுழைவு சீட்டை உங்கள் Gmail முகவரியில் ஒரு Soft Copy ஆக சேமித்து வையுங்கள்

* புகைபடம் இல்லாமல் இருப்பின் கீழே தரப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வின் போது மையத்தில் ஒப்படைக்கவும்

If there is no photograph on your hall ticket- Please click here to download the form

TNTET - 2017 Exam. Hall Ticket - TRB Published - Download செய்ய

மதிப்பெண் சான்றுகளைப் பெற தனித்தேர்வர்களுக்கு அழைப்பு

மதுரை: எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.துணை இயக்குனர் ஆசீர்வாதம் கூறியுள்ளதாவது: எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வு எழுதும் மையங்களில் நேரடியாக வழங்கப்படுகிறது.
மையங்களில் பெற்று கொள்ளாத சான்றிதழ்கள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நிலுவையில் வைக்கப்படும். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மார்ச்/ஏப்ரல் 2009 முதல் செப்.,/அக்., 2013 வரையிலான காலத்திற்குரியவை ஆயிரக்கணக்கில் தனித்தேர்வர்களால் பெறாமல் அலுவலகத்தில் உள்ளன.விதிகளின்படி தேர்வுமுடிவுகள் வெளியான இரண்டாண்டுகள் கழித்து தேர்வர்களால் கேட்கப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட வேண்டும். எனவே ஒரு மாதத்திற்குள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாத தனித்தேர்வர்கள் தேர்வு எழுதியதற்குரிய நுழைவுச்சீட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட கடிதத்துடன் 40 ரூபாய் மதிப்பிலுள்ள அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட உறையை இணைத்து பெறலாம், என கூறியுள்ளார்.

ஆன்லைனில் எல்.கே.ஜி., இலவச சேர்க்கை : தில்லுமுல்லு தடுக்க அரசு அறிமுகம்

சென்னை: 'தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., இலவச சேர்க்கைக்கான, விண்ணப்ப பதிவு, ஆன்லைனில் நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், வருவாய் குறைந்த பிரிவு மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
இதற்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசே, கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும். இந்த நிதியை பள்ளிகளுக்கு வழங்குவதிலும், மாணவர்களை சேர்ப்பதிலும், தில்லுமுல்லு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, நமது நாளிதழில், ஒரு வாரத்திற்கு முன், செய்தி வெளியானது. அதனால், புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழான, இலவச மாணவர் சேர்க்கை, ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில், அரசு தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள், ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இ - சேவை மையங்களை பயன்படுத்தியும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்ட விபரம், விண்ணப்ப நிலை போன்ற தகவல்கள், மொபைல் போன் எண்ணுக்கு வரும்.வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஏப்., 20ல் துவங்கி, மே, 18ல் முடிகிறது. 9,000 தனியார் சுயநிதி, மெட்ரிக் மற்றும், 'பிரைமரி' பள்ளிகளில், ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 262 இடங்கள், இலவச சேர்க்கைக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. சிறுபான்மை அந்தஸ்துள்ள பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கை நடக்காது. முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மாவட்ட மற்றும் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், வட்டார வளமைய அதிகாரிகள் அலுவலங்களில், மாணவர்கள் எந்த கட்டணமும் இன்றி விண்ணப்பிக்கலாம் என, தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னுரிமை யாருக்கு?ஆன்லைனில் பதியப்படும் விண்ணப்பங் கள், அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டரின் பிரதிநிதிகளின் மேற்பார்வையில், வெளிப்படையான குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தைகள், மாற்று திறனாளிகள் போன்றோருக்கு, குலுக்கலுக்கு முன்னதாக, முன்னுரிமையில் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் ஆசிரியர் இடங்கள் பள்ளிக்கல்வி பட்டியல் சேகரிப்பு

பள்ளிக்கல்வித்துறையில், ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து, கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை அடைந்தால், அவர்களுக்கு அந்த கல்வி ஆண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்கப்படும்.
அதன்படி, மே மாதம் ஓய்வு பெறும் உத்தரவு வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பட்டியலை சேகரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளில், ஆண்டுதோறும், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுவர். ஆனால், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை விகிதத்தில், ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக இருப்பதால், ஓய்வு பெற்றதும் அந்த இடங்கள் மீண்டும் நிரப்பப்படாது.ஆனால், இந்த ஆண்டு, காலியிடங்களின் பட்டியலை திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். எனவே, இந்த காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவரா என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

3 மணி நேரத்தில் விற்று தீரும் 'அம்மா குடிநீர்' பாட்டில்கள்

வெயில் தாக்கம் காரணமாக, 'அம்மா மினரல் வாட்டர்' பாட்டில்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. மூன்று மணி நேரத்தில் விற்று தீர்ந்து விடுவதால், பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பஸ் ஸ்டாண்ட், சாலையோர உணவகங்கள் என, 324 இடங்களில், அம்மா மினரல் வாட்டர் பாட்டில்கள், காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, 2.90 லட்சம் முதல், 3.10 லட்சம் பாட்டில்கள், கும்மிடிப்பூண்டியில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஒரு லிட்டர் பாட்டில், 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் ஸ்டால்களில், மூன்று மணி நேரத்தில், பாட்டில்கள் விற்று தீர்ந்து விடுகின்றன.

விற்பனை ஊழியர்கள் கூறியதாவது: முக்கிய நகரங்களில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில், இரண்டு ஸ்டால்கள் மட்டுமே செயல்படுகின்றன. பல ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் நிலையில், தேவைக்கு ஏற்ப பாட்டில்கள் வருவது இல்லை. சாலையோர உணவகங்கள், தேவையின்றி செயல்படும் ஸ்டால்களுக்கு அனுப்பும் பாட்டில்களை, பஸ் ஸ்டாண்ட் ஸ்டால்களுக்கு அனுப்புவதன் மூலம், பயணிகளின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
அதிகாரிகள் கூறியதாவது: மார்ச் மாதத்தை விட, ஏப்ரல் மாதத்தில், பாட்டில்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டோம். இருந்த போதிலும், பயணிகள் மத்தியில் தேவை அதிகரித்து விட்டதால், தட்டுப்பாடு நிலவுகிறது. கூடுதல் பாட்டில்கள் அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 
'சும்மா' இருக்கும் ஊழியர்கள் : குடிநீர் விற்பனை ஸ்டால் ஒன்றுக்கு, இரண்டு ஊழியர் என்ற வகையில், 648 பேர் பணியில் உள்ளனர். இப்பணிகளை, அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களே மேற்கொண்டு வந்தனர். பாட்டில்களில் ஏற்படும் சேதத்தை ஊழியர்கள் தலையில், அதிகாரிகள் சுமத்தியதால், பலர் இந்த பணியில் இருந்து வெளியேறி விட்டனர். தற்போதைய நிலையில், வயதான டிரைவர், கண்டக்டர்களே பணியில் உள்ளனர். மூன்று மணி நேரத்தில், வாட்டர் பாட்டில்கள் விற்று தீர்ந்து விடுவதால், இந்த ஊழியர்கள், 'சும்மா' இருக்கின்றனர்.

மூலப்பொருட்கள் தட்டுப்பாடு : புத்தகங்கள் விலை உயர்வு

தொடர் வறட்சியால், காகிதம் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, தமிழகத்தில் புத்தகம், நோட்டுகளின் விலை உயர்ந்துள்ளது.
விவசாயிகள் வளர்க்கும் சவுக்கு, மூங்கில் மரங்களை, ஒப்பந்த அடிப்படையில் காகித ஆலை நிறுவனங்கள் வெட்டி எடுத்து வந்து, மரக்கூழ் தயாரித்து, அதில் சில மூலப்பொருட்களைச் சேர்த்து காகிதம், நோட்டு, புத்தகங்களைத் தயாரிக்கின்றன. தற்போது நீர் நிலைகள் வறட்சியானதால், இம்மரங்கள் பட்டுப்போய் உள்ளன. கடந்த ஓராண்டில், காகித உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மூன்று முறை காகிதத்தின் விலை உயர்த்தப்பட்டுவிட்டது. கடந்தாண்டு, 1 டன், 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான காகிதம், தற்போது, 72 ஆயிரம் ரூபாய் என, ஓராண்டுக்குள் டன்னுக்கு, 7,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, பேப்பர் மற்றும் ஸ்டேஷனரி வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: வறட்சியால், சவுக்கு மரங்களின் வரத்து குறைந்ததால், காகித விலை உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில், 1 டன் காகிதம், 7,000 ரூபாய் வரை விலை உயர்ந்திருப்பது எதிர்பாராதது. வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விலை உயரும். இந்தாண்டு, மூன்றுமுறை உயர்ந்துவிட்டது. இதனால், சாதாரண நோட்டு, புத்தகம் கூட, ஒரு குயர் அளவிலானது, மூன்று ரூபாய் வரை அதிகரித்து விற்க வேண்டி உள்ளது. கடந்தாண்டு, இரண்டு குயர் லாங் சைஸ் நோட்டு, 38 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 43 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்ற பைண்டிங் இல்லாத நோட்டுகள் தற்போது, 35 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

கியூசெட்' தேர்வுக்கு 4 நாட்களே அவகாசம்

சென்னை: மத்திய பல்கலைகளில் படிப்பதற்கான, 'கியூசெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நான்கு நாட்களே அவகாசம் உள்ளது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, மத்திய பல்கலைகளில்,
பட்டம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க, 'கியூசெட் என்ற, பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு, மே 17, 18ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச் 20ல் துவங்கியது; வரும், 14ம் தேதி முடிகிறது. இதற்கு இன்னும், நான்கு நாட்களே உள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காதோர், இந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொழில்நுட்ப தேர்வு எப்போது? : சிறப்பு பாட ஆசிரியர்கள் தவிப்பு

அரசு பள்ளி சிறப்பு பாட ஆசிரியர்களுக்கான, தொழில்நுட்ப தேர்வு, ஒன்றரை ஆண்டுகளாக நடக்கவில்லை. அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கைவினை, சிற்பக் கலை உள்ளிட்டவற்றுக்கு, தனியாக சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
2012ல், 1,200 பேர் நியமிக்கப்பட்ட பின், ஐந்து ஆண்டுகளாக, சிறப்பு ஆசிரியர் நியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தொழில்நுட்ப தேர்வும் நடத்தப்படவில்லை. அதனால், சிறப்பு பாடப் பிரிவுகளில், பயிற்சி பெற்றவர்கள், பணியில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது: கடந்த, ஏழு ஆண்டுகளாக, தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி நடத்தப்படவில்லை. அதேபோல், 2015 நவம்பருக்கு பின், தொழில்நுட்ப தேர்வுகளையும் நடத்தவில்லை. சிறப்பாசிரியர்கள் பணிக்கு, 1,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அவற்றில் ஆசிரியர்களை நியமிக்க, சிறப்பு தேர்வு நடத்தப்படும் என, 2014ல், பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது; 2015ல், பாடத்திட்டமும் வெளியானது. ஆனால், அந்த தேர்வையும் நடத்தவில்லை. இதனால், தனியார் பள்ளிகளில் கூட வேலைக்கு சேர முடியாமல், பட்டதாரிகள் தவிக்கின்றனர். எனவே, பள்ளிக் கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுத்து, முடங்கிய பணிகளை மீண்டும் துவக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சுருக்கெழுத்தர் பதவி 17ல் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, ஏப்., 17 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு துறைகளில் காலியாக உள்ள, சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பதவிக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்ய, 2016 நவம்பரில், எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.
இதில், தகுதி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கி உள்ளது. தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் பெயர் உள்ளோருக்கு, ஏப்., 17 முதல், 24 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங் ஏப்., 18ல் பதிவு துவக்கம்

அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவை, ஏப்., 18ல் துவங்க, உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், தமிழக அரசின் இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி மூலம், மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
இதற்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில், ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான, இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, ஏப்., 18ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவை துவங்க, உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மருத்துவ பல்கலை, வேளாண் பல்கலை, கால்நடை மருத்துவ பல்கலை, ஐ.ஐ.டி., ஆகியவற்றின் கவுன்சிலிங் தேதிகளுடன் ஒப்பிட்டு, இன்ஜி., கவுன்சிலிங் தேதி முடிவு செய்யப்படும். இதற்காக, தமிழக அரசின் தேர்வுத்துறை அதிகாரிகளிடம், பல்கலை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மே 12ல், தேர்வு முடிவு வெளியானால், எத்தனை நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, தேர்வுத் துறையினரின் தகவல்களின் படி, இன்ஜி., கவுன்சிலிங் தேதி முடிவு செய்யப்படும். இதன்படி, ஜூன் 23ல், விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டிற்கும்; ஜூன் 26ல், பொது பிரிவுக்கும் கவுன்சிலிங்கை துவங்க, ஆலோசனை நடந்து வருவதாக, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன

10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப்., 14க்குள் முடிக்க கெடு

தமிழகத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; ஏப்., 14க்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 31ல் முடிந்தது; 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர்.
மொழி பாட விடைத்தாள்கள், மார்ச் 31 முதல் திருத்தப்படுகின்றன. கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு, ஏப்., 2 முதல் திருத்தம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, மொழி பாடங்களுக்கு, 'சென்டம்' ரத்து செய்யப்பட்டுள்ளது. பல கட்ட ஆய்வுக்கு பின், மொழி பாடத்தில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வழங்கும் நிலை ஏற்பட்டால், தேர்வுத்துறை அனுமதிக்கு பின் வழங்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்., 14க்குள் விடைகளை திருத்தி முடிக்க வேண்டும்; பின், மதிப்பெண்ணை சரி செய்யும் பணிகளை துவங்க வேண்டும் என, ஆசிரியர்களை, தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிளஸ் 2 விடை திருத்தம் தீவிரம் : பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தமும், தீவிரமாக நடந்து வருகிறது. ஏப்., 5ல் துவங்கிய விடை திருத்தம், மொழி பாடத்திற்கும், மற்ற முக்கிய பாடங்களுக்கும் தனித்தனியே நடந்து வருகிறது. ஏப்., 21க்குள், விடை திருத்தத்தை முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆதார் - பான்கார்டு இணைப்பு: 10 அம்சங்கள்

புதுடில்லி: ஆதார் எண் மற்றும் பான் கார்டு விவரங்களை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் ஏற்படும் குளறுபடிகளை நீக்க, சில வழிமுறைகளையும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதன் 10 முக்கிய அம்சங்கள்: 


1.நாடு முழுவதும், 111 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், 25 கோடி பேர் மட்டுமே, நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டை பெற்றுள்ளனர். இவர்களில், 6 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி வருகின்றனர். 2.ஆதார் எண் விவரங்களையும், பான் கார்டு விவரங்களையும் இணைக்கும் பணியை, 1.08 கோடி பேர் மட்டுமே இதுவரை முடித்துள்ளனர். 3.கறுப்பு பண ஒழிப்புக்கு இது மிகவும் உதவும் என்பது வருமான வரித்துறையின் எண்ணம். அதற்காகவே இந்த ஏற்பாடு. 4.ஆதார் எண் அட்டையில், பலருக்கும் முழு பெயரும் இருக்காதுஇனிஷியல் மட்டுமே இருக்கும். ஆனால், பான் கார்டில் முழு பெயரும் இருக்கும். இதுபோன்ற நிலையில், ஆதார் எண்ணுக்கான இணைய தளம், பான் கார்டு விவரங்களை ஒன்றிணைக்க ஒப்புக் கொள்ளாது; ஆதாரம் தேவை எனகேட்கும். 5.இதுபோன்ற சூழ்நிலையில், பான் கார்டை ஸ்கேன் செய்து, ஆதார் இணைய தளத்தில், பதிவேற்றம் செய்யலாம். பான் கார்டை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும்படி, ஆதார் எண் நிர்வாகத்திடம் வருமான வரித்துறை கூறியுள்ளது. 6.பெண்கள் திருமணத்திற்கு முன் தங்கள் பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்து இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரை சேர்த்து இருப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், இரண்டு தரப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி விவரம் ஒன்றாக இருந்தால் தான் பிரச்னை தீரும். 7.வெவ்வேறு பெயர்களை பதிவு செய்துள்ள பெண்களுக்கு மேலும் ஒரு தீர்வு முன் வைக்கப்படுகிறது. வருமான வரி தாக்கலின் போது ஓ.டி.பி.,அதாவது ஒரு முறை பாஸ்வேர்டு, அவர்களின் மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பப்படும். அந்த மொபைல் எண், இரண்டு தரப்பிலும் ஒன்றாக இருந்தால் சிக்கல் தீர்ந்து விடும். 
8.இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. சிலர் ஆதார் எண் பதிவின் போது மொபைல் போன் எண் தகவலை தந்து இருக்க மாட்டார்கள். ஆதார் இணைய தளத்திற்கு சென்று மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய முயன்றாலும், அதற்கான சாப்ட்வேர் அனுமதி அளிப்பது இல்லை. 9.இதுபோன்ற சூழ்நிலையில், அருகில் உள்ள ஆதார் அலுவலகம் அல்லது ஏஜென்ட்டிடம் சென்று, போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆனால், அப்போதும் ஆதார் இணையதளம் சரியாக வேலை செய்வதில்லை. இதனால், மொபைல் எண்ணை பதிவு செய்வது, விலாசத்தை மாற்றுவது எளிதில் நடப்பதில்லை.10. சிலருக்கு பான் கார்டில் முழு பெயர் இருக்காது. அதுபோன்ற பான் கார்டை பதிவேற்றம் செய்தால், ஆதார் எண்ணிற்கான இணையதளம் ஏற்றுக் கொள்ளாது. இதுபோன்ற நேரத்தில், வருமான வரித்துறை அலுவலகத்தை அணுகி பிரச்னையை தீர்த்து கொள்ளலாம்.

ஊதியக்குழு கருத்து தெரிவிக்க 'கெடு'

சென்னை: எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து, வரும், 15க்குள் கருத்துகள் அனுப்பும்படி, ஆசிரியர் சங்கத்தினருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய, தமிழக அரசு, ஆய்வுக்குழுவை அமைத்துள்ளது.
இதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர், அரசு அலுவலர்கள், ஊழியர்களிடம் கருத்துகளை கேட்டு, ஆய்வறிக்கை தயார் செய்கின்றனர். இந்நிலையில், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறை சங்கங்களுக்கு, ஊதிய ஆய்வுக்குழு, கடிதம் அனுப்பி உள்ளது. அதில், வரும், 15க்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, ஆசிரியர் சங்கங்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.