தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், இளநிலை உதவியாளர், 'டைப்பிஸ்ட்' என, 2,175 பணியிடங்களை நிரப்ப, 2016 ஜூன், ஆகஸ்ட் மாதங்களில், எழுத்துத் தேர்வு நடந்தது.
அதில் பங்கேற்றவர்கள், தனியாக பார்க்கும் வகையில் மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம், சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில், தற்போது, எழுத்துத் தேர்வில் பங்கேற்ற, அனைவரும் பெற்ற மதிப்பெண் முழு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, 10 பதவிகளில், 2,175 பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், எழுத்துத் தேர்வு நடந்தது; அதில் பங்கேற்ற அனைவரின் மதிப்பெண் விபரமும் வெளியிடப்பட்டது. அதன்படி, 'கட் - ஆப்' மதிப்பெண் நிர்ணயித்து, விரைவில் வெளியிடப்படும்; அதை தொடர்ந்து, நேர்காணல் நடத்தி, அதிக மதிப்பெண் எடுப்பவர்கள், வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.