யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/4/17

DSE - REQUIRED - Expert Teachers For 10th & 12 th (ALL SUBJECTS )

ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்.16ல் ஆலோசனை Posted: 12 Apr 2017 08:08 PM PDT மதுரை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்துவது தொடர்பாக ஒன்பது மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் விருதுநகரில் ஏப்.,16ல் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஏப்.,29 மற்றும் 30ல் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடக்கின்றன. லட்சக்கணக்கானோர் இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் தற்போது நடக்கின்றன. இதுகுறித்து மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களின் முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் விருதுநகரில் இணை இயக்குனர் குப்புசாமி தலைமையில் நடக்கிறது. அப்போது தேர்வு மையங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படும். DSE - REQUIRED - Expert Teachers For 10th & 12 th (ALL SUBJECTS ) Posted: 12 Apr 2017 08:07 PM PDT 👉CLICK HERE TO VIEW | MORE DETAILS... �� ATM மையங்களில் உள்ள டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் மூலம், எத்தனை முறை வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் கட்டணமின்றி ரொக்கமாக டெபாசிட் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SBI (பாரத ஸ்டேட் வங்கி) மற்றும் தனியார் வங்கிகளில் மாதத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ரொக்கமாக கட்டணமின்றி டெபாசிட் செய்ய முடியும்.

குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ரொக்க டெபாசிட் செய்தால், பல்வேறு விகிதங்களில் கட்டணம் வசூலிக்கப்படும்.

💵 SBI (பாரத ஸ்டேட் வங்கி) யில் ரூ.50 கட்டணம்
வசூலிக்கப்படுகிறது.

🔸இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் மாதத்துக்கு 3 முறை மட்டும், SBI (பாரத ஸ்டேட் வங்கி) யில் கட்டணமின்றி ரொக்க டெபாசிட் செய்யலாம்.

 அதற்கு மேல் டெபாசிட் செய்தால், ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

 இந்த எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கையில் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்கள், ATM மையங்களில் இருக்கும் டெபாசிட் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.

 அதற்கு கட்டணம் கிடையாது என்றார் கங்க்வார்.


நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பணம் குறித்த கேள்விக்கு, "கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, ரூ.13.35 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளது' என்றார்.

DSE - REQUIRED - Expert Teachers For 10th & 12 th (ALL SUBJECTS )

ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்.16ல் ஆலோசனை

மதுரை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்துவது தொடர்பாக ஒன்பது மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் விருதுநகரில்
ஏப்.,16ல் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஏப்.,29 மற்றும் 30ல் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடக்கின்றன.
லட்சக்கணக்கானோர் இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் தற்போது நடக்கின்றன.

இதுகுறித்து மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களின் முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் விருதுநகரில் இணை இயக்குனர் குப்புசாமி தலைமையில் நடக்கிறது.

அப்போது தேர்வு மையங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படும்.

ATM மைய இயந்திரங்களில் கட்டணமின்றி ரொக்க டெபாசிட்: மத்திய அரசு

ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் மூலம், எத்தனை முறை வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் கட்டணமின்றி ரொக்கமாக டெபாசிட் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் மாதத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ரொக்கமாக கட்டணமின்றி டெபாசிட் செய்ய முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ரொக்க டெபாசிட் செய்தால், பல்வேறு விகிதங்களில் கட்டணம் வசூலிக்கப்படும். பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் மாதத்துக்கு 3 முறை மட்டும், பாரத ஸ்டேட் வங்கியில் கட்டணமின்றி ரொக்க டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் டெபாசிட் செய்தால், ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கையில் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்கள், ஏடிஎம் மையங்களில் இருக்கும் டெபாசிட் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். அதற்கு கட்டணம் கிடையாது என்றார் கங்க்வார்.

நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பணம் குறித்த கேள்விக்கு, "கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, ரூ.13.35 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளது' என்றார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2011க்கு முன்பு சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை.



கடந்த 2011ல் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக சேர்ந்து பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இந்த ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை கடந்த மாதம் 1ம் தேதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் 2010 நவம்பர் 15ம் தேதி, 2011 ஜனவரி 11 மற்றும் 24ம் தேதிகளில் பல்வேறு தனியார் உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்து பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையை எதிர்த்து, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சரோஜினி, சுதா உள்ளிட்ட ஏராளமானோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

 அரசு கூடுதல் பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகி, மனுதாரர்களிடம் பள்ளிக்கல்வித் துறை எந்த உத்தரவாதத்தையும் கட்டாயப்படுத்தி பெறவில்லை என்றார்.இதைக் கேட்ட நீதிபதி, ‘‘ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்களாக பணிபுரிவோருக்கு இது கடைசி வாய்ப்பு எனவும், இந்த தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்எனவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவர் எனவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், கடந்த 2011ம் ஆண்டு முதல்தான் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே அதற்கு முன்பு பணியில் சேர்ந்த தங்களுக்கு இது பொருந்தாது என வாதிட்டுள்ளார். எனவே, 2011ம் ஆண்டுக்கு முன்பிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியது இல்லை.

 அவர்களை தேர்வு எழுத சம்மந்தப்பட்ட துறை கட்டாயப்படுத்தக கூடாது.  இத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என அறிவித்த சுற்றறிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் 18ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)


நன்றி:
திரு.ரகுபதி,ஆசிரியர்.

TET' தேர்வுக்கு இருவகை 'ஹால் டிக்கெட்'

ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வுக்கு, இரு வகையான, 'ஹால் டிக்கெட்'கள் வெளியிடப் பட்டுள்ளன. தமிழகத்தில், 2010ல், அமலான கட்டாய கல்விச் சட்டப்படி, 
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29 மற்றும், 30ல், 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது.

 இதில், 7.50 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலித்ததில், பல விண்ணப்பங்களில் புகைப்படம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இரு வகையான ஹால் டிக்கெட்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இணையதளத்தில், அதன் விவரங்களை தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.

சிந்தித்தறியும் TET 2017 (TET special)

🏆சிந்தித்தல் அடிப்படையிலான TET தேர்வா ?

🏆எவ்வாறு இருக்கும் ? எப்படி வினாக்கள் கேட்கப்படலாம் ?

🏆கடந்த 4 முறை நடந்த தமிழக டெட் தேர்வுகள் படித்தல், அறிதல், மனனம் சார்ந்த வினாக்கள் கொண்டதாக பெருமளவு வினா அமைந்து இருந்தது


🏆எதிர்வரும் தேர்வு சிந்தித்தல் திறனுக்கு முக்கியதுவம் தருவதாக அமைய கூடும் என கூறப்படுகிறது.

🏆இதை ஏற்கனவே மத்திய அரசு நடத்தி வரும் CTET தேர்வில் அரசு கடைபிடித்து வருகிறது.

🏆இத்தேர்வின் வினா அமைப்பு எளிமையாக ஆனால் சிந்தனை திறன் பயன்படுத்தி விடை அளிப்பதாக அமையும்

🏆உதாரணமாக , உளவியலில்
வகுப்பறையில் மாணவனின் உள பண்பை ஆசிரியர் அறியும் , தீர்வு காணும் வீதமாக வினா இருக்கும்

* வகுப்பறை சூழல்
* மாணவன் உளவியல்
* கற்றல் - கற்பித்தல் இடர்
* ஆசிரியர் தீர்க்க கூறும் வழிகள்
* உளவியலின் அடிப்படையில் கற்பித்தல் போன்று எளிய வினா நுணுக்கமான தெரிவுகள் (option ) இடம் பெறும்.
இவ்வகையில் உளவியல் கேள்விகள் இடம் பெறலாம்
* பொது தமிழ் கேள்விகள்
* எளிய புலமை _ ஆங்கிலம், இலக்கணம் (Grammar )
* அறிவியல், ச.அறிவியல் பாட கருத்துரு சார்ந்த கேள்விகள்
* கணிதம் முழுக்க முழுக்க மன திறனறி ( Aptitude) வினாக்கள்
* கூடுதல் பகுதியாக மேற்கண்ட பாடப்பகுதியை கற்பிக்கும் முறைகள் (ஆசிரியர் பயிற்சியில் பயின்றவை) கண்டிபாக இடம் பெறும்
எனவே வர இருக்கும் TNTET 2017 தேர்வும் இவ்வகையில் அமையலாம்
* மேலும் சமச்சீர் கல்வி புத்தக பாட திட்டம் பெருமளவு வகுப்பு 11 உடன் ஒத்து போகின்றன. கூடுதலாக இவ்வகுப்பு வினா இடம் பெறலாம்
கற்பித்தலில் புதுமை (Innovative)
கற்பித்தல் வகைகள்(division in teaching & teaching methodology)
பள்ளிகள் வகை ( classification of schools)
போன்றவை இடம் பெறலாம்
* முதல் இரு டெட் தேர்விலும் கணித வினாக்கள் 15 - 20 ஆக கேட்கபட்டது
மீதம் கற்பித்தல் முறை சார்ந்து பொது வினா அமைந்தது.
🏆எனவே படிக்கும் போது பயமின்றி தெளிவாக படியுங்கள்.

🏆வெற்றி நிச்சயம் - முயற்சி பரிட்சயப்பட்டால்🏆

*குறிப்பு ::: சிந்தித்தல் சார் வினா அமைப்பு மதிப்பெண் அதிகரிக்க வழி வகை செய்யும்.
இயல்பாகவே நாம் ஆக்க சிந்தனை பெற்றவர்கள்...
எனவே தேர்வு சார் பயம் தவிர்த்து அறிவு சார் படித்தல் மேற்கொள்ளுங்கள்
( எதிர்மறை பின்னூட்டம் தரும் நண்பர்கள் மற்றவர் நம்பிக்கையை உடைப்பதை நிறுத்தி விட்டு தங்கள் எண்ணத்தை தங்களுள் வைத்து கொள்ளுங்கள் )
பணியிடம் எவ்வளவு இருந்தால் என்ன இருக்கும் பணியிடம் நமக்கு ஒன்றாக அமையட்டும்

தேன்கூடு 🐝- பிரதீப் K ப. ஆ. பூங்குளம்

வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி.. தென் தமிழகத்தில் மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு!

வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 
இதன்காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயில் மற்றும் வெப்பக் காற்றால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.

கடும் வெப்பத்தால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அது இலங்கைக்கும், அந்தமானுக்கும் இடையே நிலை கொண்டுள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அது விரைவில் தமிழகம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தமிழகத்தை நெருங்கினால் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலை வங்கதேசம் நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ESI,P.F நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டம்:ஊழியர்கள் கடும் அதிருப்தி.

இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட 15 சமூக பாதுகாப்பு சட்டங்களை ஒருங்கிணைத்து புதிய தொழி லாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம், இஎஸ்ஐ, பிஎப் நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில்கொண்டு வர திட்டமிடப்பட்டுள் ளது. 
இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட 15 சமூக பாதுகாப்பு சட்டங்களை ஒருங்கிணைத்து புதிய தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், பிஎப், இஎஸ்ஐ நிறுவனங்கள்ஒரே நிறுவனமாக மாறி மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும்.இதில், குரூப்-ஏ பணியிடங்கள் மத்திய அரசு வாரியம் மூலமும், குரூப்-பி, சி, டி ஊழியர்கள் மாநில அரசு வாரியம் மூலமும் தேர்வு செய்யப்படுவர். மத்திய, மாநில அரசுகளின் கீழ் உள்ள இந்த இரு வாரியமும் தேசிய கவுன்சிலின் கீழ் இயங்கும்.இந்த மசோதாவை நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்து சட்டமாகஇயற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுகுறித்து தற்போது பொதுமக்களிடமும் கருத்துக் கேட்கப்படுகிறது. இந்நிலையில், புதிய தொழிலாளர் கொள்கை மசோதாவுக்கு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழகம் மற்றும் புதுவைக்கான வருங்கால வைப்பு நிதி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.கிருபாகரன்  கூறியதாவது:மத்திய அரசின் புதிய தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையின் மூலம், இபிஎப், இஎஸ்ஐ நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக மாறி மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும். குறிப்பாக, சந்தாதாரர்களிடம் இருந்து பிஎப் பணம் வசூலிப்பது, அவர்களுடைய ஆவணங்களை பாதுகாத்தல், அவர்களுக்கான சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட ஆறு வகையான பணிகள் தனியார் ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் மட்டும் 2 கோடி வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர் கள் உள்ளனர். அவர்கள் செலுத்தும் பிஎப் தொகையை இந்த தனியார் ஏஜென்சிகள் வசூலித்து பராமரிக்க உள்ளன. தனியார் ஏஜென்சிகள் சந்தாதாரர்களின் பணத்தை எந்தளவுக்கு பத்திரமாக கையாளுவார்கள் என்பது கேள்விக்குறியாகிவிடும்.உதாரணமாக, போக்குவரத்து துறை பிஎப் நிறுவனத்திடமிருந்துபிரிந்து சென்று தனது ஊழியர் களுக்கு பிஎப் தொகையை அந்த நிர்வாகமே வசூலிக்கத் தொடங்கியது. ஆனால், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை சரியாக பராமரிக்கத் தெரியாததால் தற்போது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாமல் தவித்து வருகிறது.

மேலும், வருங்கால வைப்பு நிதி மத்திய, மாநில அரசின் வாரியத்தின் கீழ் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. இதன்படி, அதிகாரி பணியிடங்கள் மத்திய அரசும், குரூப் பி, சி, டி ஊழியர் களை மாநில அரசும் நியமிக்கும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி வாரியத்துக்கு முதலமைச்சர் தலைவராக இருப்பார்.இவ்வாறு பிரிக்கும் போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. உதாரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. தமிழகத்தில் மாநில அரசு ஊழியர் களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக வும், கேரளாவில் ஓய்வு பெறும் வயது 56 ஆகவும் உள்ளது.

எனவே மத்திய அரசின் கீழ் உள்ள எங்கள் துறை மாநில அரசின் கீழ் வரும்போது ஊழியர்கள் ஓய்வு பெறுவது, பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இப்புதிய மசோதா மூலம் வீட்டில் ஒருவரை பணியமர்த்தினால் கூட அவர்களுக்கு அந்தக் குடும்பத் தலைவர் சமூக பாதுகாப்பு நிதி செலுத்த வேண்டும்.இவ்வாறு கிருபாகரன் கூறினார்.

தமிழ்ப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி தேர்வுகள் பிரிவில் மூன்றாம் கட்டத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி தேர்வுகள் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரிவு மூலம் துணைத் தேர்வுகள் 2016, டிசம்பர் மாதம் நடைபெற்றது.

இதில், மூன்றாம் கட்டமாக முதுநிலை வணிக மேலாண்மை 2,3,4-ம் பருவங்கள், பட்டயத்தில் இசை, இசை ஆசிரியர் பயிற்சி, கருவி இசை, பேச்சுக் கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளை  www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இர்கான் நிறுவனத்தில் 112 வேலை -

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2017-ம் ஆண்டிற்கான 112 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி - காலியிடங்கள் விவரம்:
1. Additional General Manager (Civil) - 07
2.  Joint General Manager (Civil) - 10
3. Deputy General Manager (Civil) - 14
4. Manager (Civil) - 13
5. Deputy Manager (Civil) - 17
6. Assistant Manager (Civil) - 12
7. Assistant Engineer (Civil) - 09
8. Junior Engineer (Civil) - 21
9. Deputy Manager/SHE - 02
10. Junior Engineer/SHE - 04
11. Additional General Manager (Electrical) - 01
12. Joint General Manager (Electrical) - 01
13. Joint General Manager (Mechanical - 01
விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2017.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 22.04.2017.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ircon.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

புள்ளியியல் அலுவலக காவலர், துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மாவட்டத்தில் உள்ள பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை தலைமை அலுவலகத்துக்கு 2-முழு நேர காவலர் மற்றும் 2-துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இன சுழற்சியின்படி நிரப்பப்பட உள்ள இந்த 4 பதவிகளுக்கும், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்த 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொதுப்பிரிவினருக்கு 30 வயதும், மற்ற பிரிவினருக்கு அரசு ஒதுக் கீட்டின் அடிப்படையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 28-ம் தேதிக்குள், ஆணை யர், பொருளியல் மற்றும் புள்ளி யியல் துறை, 259, அண்ணாசாலை, டி.எம்.எஸ்.அலுவலகம், தேனாம் பேட்டை, சென்னை-6 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய தபால் துறையில் 2853 வேலை

இந்திய தபால் துறையின் கர்நாடக வட்டம், மகாராஷ்டிரா, புதுதில்லி தபால் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 2853 ஊரக தபால் சேவாக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Gramin Dak Sevaks (GDS)
மாநிலம்: கர்நாடகம்
காலியிடங்கள்: 1048
மாநிலம்: மகாராஷ்டிரா
காலியிடங்கள்: 1789
மாநிலம்: புதுதில்லி
காலியிடங்கள்: 16
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 8.5.2017, 06.05.2017
கர்நாடக தபால் வட்டம்: http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/04/Karnataka-Postal-GDS-Circle-Recruitment-2017-1048-Gramin-Dak-Sevaks-GDS-Posts.pdf

மகாராஷ்டிரா தபால் வட்டம்: http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/04/Maharashtra-Postal-GDS-Circle-Recruitment-2017-1789-Gramin-Dak-Sevaks-GDS-Posts.pdf

புதுதில்லி தபால் வட்டம்: http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/04/Delhi-Postal-GDS-Circle-Recruitment-2017-16-Gramin-Dak-Sevaks-GDS-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

வங்கி வேலையை பெறுவதற்கு வளர்க்க வேண்டிய திறமைகள்... என்ன?

அறிமுகம்
அரசு
                                               
வேலையை விரும்புபவர்களில், வங்கிப் பணியில் சேர்வதற்கே அனேகம் பேர் ஆர்வம் காட்டுவார்கள். ஆண்டுதோறும் பல ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதால் வங்கித் தேர்வுகள், திறமை படைத்தவர்களுக்கான சிறந்த வரமாக விளங்குகின்றன. 
வங்கித் தேர்வுகள் கொஞ்சம் சவாலானதுதான். பொது அறிவு, நுண்ணறிவுத்திறன் கேள்விகளுடன், ஆங்கில அறிவு, பொருளாதாரம், வங்கித்துறை சார்ந்த கேள்விகளும் தேர்வு எழுதுபவர்களுக்கு சவாலை ஏற்படுத்துகின்றன. தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு கடினமாக உழைத்தால்தான் வங்கிப் பணிகளில் சேர்வது சாத்தியமாகும்.

எப்போதும் தயார்நிலை
அறிவிப்பு வரும் வரை காத்திருக்காமல் எப்போதும் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு திறமையை மெருகேற்றி வந்தால் எளிதில் வெற்றி பெறலாம். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுக்கு தனித்தனியே தயாராக வேண்டியதில்லை.

போட்டியாளர்கள் எண்ணிக்கையை குறைத்து, திறமையானவர்களை வடிகட்டத்தான் 2 தேர்வுகள் நடக்கிறது என்பதால் நன்றாகப் படித்தாலே 2 தேர்வுகளிலும் ஜெயித்துவிடலாம்.

ரீசனிங் பயிற்சி
ரீசனிங் மற்றும் ஆப்டிடியூட் சார்ந்து 50 கேள்விகள் இடம் பெறும். உங்களின் பகுத்தறியும் திறனை புடம்போட்டு சோதிக்கும் தேர்வு என்பதால் ஆழ்ந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ரீசனிங் பகுதிகளுக்கு எளிதில் விடையளிக்க முடியும். உதாரணமாக ஒரு கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும் படம் அல்லது வடிவத்தின் அடுத்தநிலை எப்படியிருக்கும் என்றோ அல்லது பொருத்தமான அடுத்தபடம் எது என்றோ நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இதற்கு துரிதமாக விடைகாண புதிர்கள், மூளை விளையாட்டுகளில் பயிற்சி பெறுவது அவசியம்.

கணித பயிற்சி
ஆப்டிடியூட் வினாக்களில் கணிதப் புலமை உள்ளவர்கள் எளிதாக மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். 12-ம் வகுப்பு வரை கணிதம் படித்திருந்தால் இந்தப்பகுதி சுலபமாக இருக்கும். பெரும்பாலான கேள்விகள் அரித்மெடிக், ஜியாமட்ரி சார்ந்து கேட்கப்படும். கணித சூத்திரங்களை நினைவு வைத்து பயிற்சி செய்தால் எளிதாக விடைகாண முடியும். தீவிரமான பயிற்சியின் மூலம் இதை சாத்தியமாக்கலாம்.

ஆங்கிலப் பயிற்சி
ஆங்கில மொழி தொடர்பாக 30 கேள்விகள் கேட்கப்படுகின்றன. கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பத்தியிலிருந்து சரியான விடைகளைத் தேர்வு செய்வது, ஆங்கில வாக்கியங்களில் உள்ள தவறுகளை கண்டுபிடிப்பது, வாக்கியங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற வகை வினாக்கள் இப்பகுதியில் இடம் பெறும். அடிப்படை ஆங்கில இலக்கணம், வாக்கிய அமைப்பு, புரிந்து கொள்ளும் திறன் ஆகிய திறமைகளை வளர்ப்பது மதிப்பெண்களை அள்ள உதவி புரியும். வார்த்தை வளத்தை அதிகரித்துக் கொள்ள ஆங்கில செய்தித்தாள்கள், பத்திரிகைகளை தொடர்ந்து வாசித்து பயிற்சி பெற வேண்டும்.

நிதித்துறை அறிவு
வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த கேள்விகள் 40 எண்ணிக்கையில் இடம் பெறுகிறது. இந்தியப் பொருளாதாரம், இந்திய வங்கித்துறை, நிதி அமைப்பு, நிறுவன நடைமுறைகள், அரசு திட்டங்கள் பற்றி ஆழமான தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வது இந்த பகுதிக்கு விடையளிக்க உதவியாக இருக்கும். அன்றாட செய்தித்தாள்கள், நிதி மற்றும் வங்கிப் பணிகள் சார்ந்த பருவ இதழ்களை தவறாமல் படித்து வந்தால் இவை பற்றிய தகவல்களை தொகுத்து திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.

கணினி திறமை
கணினி அறிவு சார்ந்து 20 கேள்விகள் கேட்கப்படும்.
வங்கித்துறைக்கு கணினி அறிவு மற்றும் திறமை முக்கியமானதாகும். கணினி சார்ந்த அடிப்படை அறிவு அவசியம். தவிர அடிப்படை கணினித் தொழில்நுட்பம், மென்பொருள், வன்பொருள், இணையதளம், நவீன நுட்பங்கள் மற்றும் தகவல்தொழில்நுட்பம் பற்றிய பரந்த அறிவுத்திறனும் அதிக மதிப்பெண் பெற உதவியாக இருக்கும்.

நேர்காணல்
எழுத்து தேர்வுக்கு அடுத்தகட்டம் நேர்காணல். புரபெசனரி அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்படுகிறது. நேர்காணலில் இந்த கேள்விகளைத்தான் கேட்பார்கள் என்று குறிப்பிட முடியாது. ஆனாலும் பொருளாதாரம், வங்கித்துறை சார்ந்த அடிப்படைகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், பரபரப்பு நிகழ்வுகள் பற்றிய கேள்விகள் இடம் பெறும் என்று யூகிக்கலாம். சொந்த விவரங்கள், வேலை பற்றிய அறிவு சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும். வங்கி வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூபிக்கும் தேர்வாகவே நேர்காணல் இருப்பதால் நன்கு பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.

திரட்டும் திறன்
தேர்வுகளுக்குத் தயாராகும்போது பலதுறை தகவல்களையும் திரட்டிப் படிப்பது அவசியம். பள்ளிப் பாடப் புத்தகங்கள், இயர் புக்குகள், பொது அறிவு தொகுப்பு புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். தினசரி பேப்பர்களை படித்து குறிப்பு எடுத்துக்கொள்வதும் அவசியம். அதில் இடம்பெறும் மாதிரி வினாப்பட்டியலையும் தொகுத்து வைத்துக்கொள்ளலாம்.

பயிற்சி எனும் கலை
வங்கித் தேர்வு வினாக்கள் நுட்பமானதாக இருக்கும். துல்லியமாக புரிந்து கொண்டு வேகமாக விடையளிக்கும் திறனே குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க உதவியாக இருக்கும். முறையான பயிற்சி இன்றி இது சாத்தியமில்லை. நன்கு பயிற்சி எடுத்தால் கேள்விகளை படித்தவுடன் புரிந்து கொண்டு விடையளிக்க முடியும். மாதிரி தேர்வுகள் மூலம் திறமையையும், தேர்வை எதிர்கொள்ளும் திறனையும் வளர்த்து வர வேண்டும்.

தொடர்ந்து வங்கித்துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை இளைஞர்கள் தங்களுக்கான சரியான வாய்ப்பாக கருதி வங்கி பணியை பெறுவதற்கான முயற்சியிலும் பயிற்சியிலும் ஈடுபட்டு பணி உத்தரவை பெற கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்...!

சரியாக செயல்படாத கல்வி அதிகாரிகள் 5 பேரை கைது செய்ய மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு...

எம்.பி.பி.எஸ்., சேர பிளஸ் 2 மதிப்பெண் தேவையா? : 'நீட்' தேர்வால் மாணவர்கள் குழப்பம்.

நீட்' தேர்வால், மருத்துவப் படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படுமா என்ற குழப்பத்திற்கு, சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு களில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபை யில் மசோதா நிறைவேற்றப் பட்டது. அதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் இன்னும் கிடைக்க வில்லை. 'நீட்' தேர்வுக்கு இன்னும், 25 நாட்களே உள்ளன. இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கில், 'நீட்' தேர்வு மதிப்பெண்படி, மாணவர்கள் சேர்க்கப்படுவரா; பிளஸ் 2 மதிப்பெண்ணும் கணக்கிடப்படுமா என, பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.மாநிலங்களே முடிவு செய்யலாம்

இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது: 'நீட்' நுழைவுத் தேர்வு என்பது, தகுதியை முடிவு செய்யும் தேர்வாகவே கருதப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால் போதும். கடந்த ஆண்டில், 'நீட்' தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என, தனியார் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. 'நீட்' தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு மேல், எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என்பதை, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச மதிப்பெண் : தமிழகத்தில், 'நீட்' தேர்வில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள், முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது போன்று, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கும், 'நீட்' தேர்வின் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி பெறலாம்.

அவர்களில், பிளஸ் 2வில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கின்றனரோ, அவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை கொடுத்து, 'அட்மிஷன்' நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில், 'நீட்' தேர்வு மற்றும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அட்மிஷன் குறித்த வழிமுறைகளை, தமிழக சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர். 

மின் வாரிய உதவியாளர் மதிப்பெண் வெளியீடு.

தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், இளநிலை உதவியாளர், 'டைப்பிஸ்ட்' என, 2,175 பணியிடங்களை நிரப்ப, 2016 ஜூன், ஆகஸ்ட் மாதங்களில், எழுத்துத் தேர்வு நடந்தது. 
அதில் பங்கேற்றவர்கள், தனியாக பார்க்கும் வகையில் மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம், சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில், தற்போது, எழுத்துத் தேர்வில் பங்கேற்ற, அனைவரும் பெற்ற மதிப்பெண் முழு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது.

மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, 10 பதவிகளில், 2,175 பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், எழுத்துத் தேர்வு நடந்தது; அதில் பங்கேற்ற அனைவரின் மதிப்பெண் விபரமும் வெளியிடப்பட்டது. அதன்படி, 'கட் - ஆப்' மதிப்பெண் நிர்ணயித்து, விரைவில் வெளியிடப்படும்; அதை தொடர்ந்து, நேர்காணல் நடத்தி, அதிக மதிப்பெண் எடுப்பவர்கள், வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.

B.Ed, படிப்புக்கு தேசிய நுழைவு தேர்வு

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், நேரடியாக பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மைசூரு, அஜ்மீர், போபால், புவனேஷ்வர் உள்ளிட்ட, மண்டல மையங்களில், இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன.

மிகக் குறைந்த கட்டணத்தில், தங்குமிடம் வசதிகளுடன், பட்டப்படிப்பும், பி.எட்., படிப்பும் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த படிப்புக்கு, உடனடி வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. வரும் கல்வி ஆண்டில், பி.எட்., இணைந்த பி.எஸ்சி., - பி.ஏ., படிப்புகள், நான்கு ஆண்டுகளும், பி.எட்., இணைந்த எம்.எஸ்சி., படிப்பு, ஆறு ஆண்டுகளும் நடத்தப்படுகிறது. அதே போல், பி.எட்., - எம்.எட்., தலா இரு ஆண்டுகளும், பி.எட்., - எம்.எட்., இணைந்த படிப்பு, மூன்று ஆண்டுகளும் கற்றுத் தரப்படுகிறது. இந்த படிப்பில் சேர, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதற்கு, www.ncert-cee.kar.nic.in என்ற இணையதளத்தில், மே, 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.