தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், நேரடியாக பட்டப்படிப்புகள்
நடத்தப்படுகின்றன. மைசூரு, அஜ்மீர், போபால், புவனேஷ்வர் உள்ளிட்ட, மண்டல மையங்களில், இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன.
மிகக் குறைந்த கட்டணத்தில், தங்குமிடம் வசதிகளுடன், பட்டப்படிப்பும், பி.எட்., படிப்பும் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த படிப்புக்கு, உடனடி வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. வரும் கல்வி ஆண்டில், பி.எட்., இணைந்த பி.எஸ்சி., - பி.ஏ., படிப்புகள், நான்கு ஆண்டுகளும், பி.எட்., இணைந்த எம்.எஸ்சி., படிப்பு, ஆறு ஆண்டுகளும் நடத்தப்படுகிறது. அதே போல், பி.எட்., - எம்.எட்., தலா இரு ஆண்டுகளும், பி.எட்., - எம்.எட்., இணைந்த படிப்பு, மூன்று ஆண்டுகளும் கற்றுத் தரப்படுகிறது. இந்த படிப்பில் சேர, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதற்கு, www.ncert-cee.kar.nic.in என்ற இணையதளத்தில், மே, 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.