யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/6/17

உதவி கமிஷனர் பதவிதகுதித்தேர்வு அறிவிப்பு - TNPSC

சென்னை, : இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு, முதல் நிலை தகுதி தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழகத்தில், இந்து அறநிலைய துறையில், நிர்வாக பிரிவு உதவி கமிஷனர் பதவிக்கு, மூன்று காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலை தகுதி தேர்வு, செப்., 3ல் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை, இம்மாதம், 28 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும், விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், 
www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ., அனுமதி பெறாமல் பள்ளிகள் முறைகேடு

திண்டுக்கல், : மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரிய அனுமதி பெறாமல், பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, விளம்பரம் செய்து மாணவர்களிடம் வசூல் செய்வதில் தீவிரம் காட்டுகின்றன. 

'நீட்' தேர்வு
மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு; மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்; ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., என்ற மத்திய அரசின் இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான வினாக்கள்
கேட்கப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் செயல்படும், பல தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்திற்கு மாறி வருகின்றன.இக்கல்வி திட்டத்தை செயல்படுத்த, பல கட்ட ஆய்வுகள் இருக்கின்றன. சில பள்ளிகளே, அவற்றை முறையாக கடைபிடித்து அனுமதி பெற்றுள்ளன. பெரும்பாலான பள்ளி கள் அனுமதி பெறுவதற்காக, விண்ணப்பங்களை மட்டும் அனுப்பி உள்ளன.இன்னும் சில பள்ளி கள் விண்ணப்பிக்காம லேயே, சி.பி.எஸ்.இ., என விளம்பரம் செய்து, பெற்றோரிடம் கட்டண வசூலில் மும்முரம் காட்டுகின்றன.பெற்றோரும், சி.பி.எஸ்.இ., பள்ளிக்கான அனுமதி அல்லது அங்கீகாரம் இருக்கிறதா எனப் பார்க்காமலேயே பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர்.
விதிமுறைகள்பெற்றோர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். விதிமுறைகள் வருமாறு: பள்ளி பரப்பளவு, 2 ஏக்கர் இருக்க வேண்டும். வகுப்பறை, 500 ச.அடி; ஆய்வகம் 600 ச. அடியில் இருக்க வேண்டும். நுாலகம், படிக்கும் அறையுடன், 14 மீ.,க்கு 8மீ., என்ற அளவில் இருக்க வேண்டும். கணிப்பொறி, கணித ஆய்வகங்கள் தனித்தனியாக இருக்க வேண்டும்.
பள்ளிக்கான தற்காலிக அனுமதி பெறுவோர், அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று, அத்துறை மூலம், மத்திய கல்வி வாரியத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 
தமிழக அரசின் அங்கீகாரத்தையும், மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு வளாகத்தில், மெட்ரிக் அல்லது சி.பி.எஸ்.இ., பள்ளி மட்டுமே இயங்க முடியும்.
எழுத வேண்டும்அனுமதி எண்ணை, பள்ளி அறிவிப்பு பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்து

100 சதவீத தேர்ச்சி பெற்ற சென்னை பள்ளிகள்

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வில், சென்னையிலுள்ள பல பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
சென்னை, கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில், தேர்வு எழுதிய 2௫௮ மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில், 59 பேர், தரவரிசையான, சி.ஜி.பி.ஏ.,வில், 10க்கு, 10 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்களை, பள்ளியின் முதுநிலை முதல்வர் அஜீத் பிரசாத் ஜெயின் பாராட்டினார்.

அண்ணாநகர், எஸ்.பி.ஓ.ஏ., ஸ்கூல் அண்ட் ஜூனியர் காலேஜ் பள்ளியில், தேர்வு எழுதிய 805 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 199 மாணவர்கள், ஏ 1 கிரேடான, 10க்கு, 10 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களை,
பள்ளியின் முதல்வர் ராதிகா உன்னி வாழ்த்தினார்.
ராஜா அண்ணாமலைபுரம், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், 640 பேர் தேர்வு எழுதியதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88 மாணவர்கள், 10க்கு, 10 மதிப்பெண்ணுடன் சி.ஜி.பி.ஏ., தரம் பெற்றுள்ளனர். அவர்களை, பள்ளியின் தாளாளர் மீனா முத்தையா மற்றும் முதல்வர் அமுதலஷ்மி வாழ்த்தினர்.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்திலுள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில், தேர்வு எழுதிய, 129 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 33 பேர், 10க்கு, 10 மதிப்பெண் தரம் பெற்றுள்ளனர். அவர்களை, சென்னை மண்டல துணை கமிஷனர் எஸ்.எம்.சலீம் மற்றும் முதல்வர் மாணிக்கசாமி வாழ்த்தினர்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு திருவனந்தபுரம் மண்டலம் முன்னிலை

சென்னை, :சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவு கள், நேற்று வெளியாகின. கடந்த ஆண்டை விட, ௫ சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. வழக்கம் போல, திருவனந்தபுரம் மண்டலம், அதிக தேர்ச்சி பெற்றுள்ளது. 

16 லட்சம் பேர்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது; 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., வாரியம் நேற்று வெளியிட்டது. இதில், 90.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
கடந்த ஆண்டு, 96.21 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 5.26 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. திருவனந்தபுரம் மண்டலம், 99.85 சதவீத தேர்ச்சியுடன், வழக்கம் போல, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய, சென்னை மண்டலத்தில், 99.62
சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

'கிரேடு' முறை 

இந்த தேர்வில், விடைத்தாள்கள் மதிப்பிடப்பட்டு, மொத்த மதிப்பெண்களுக்கு, சி.ஜி.பி.ஏ., என்ற, தர வரிசை குறிக்கப்பட்டுள்ளது. மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, மொத்தம், 10 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்களுக்கு, 'கிரேடு' முறை வழங்கப்பட்டுள்ளது. 
இந்த கிரேடு அடிப்படையில், உயர்கல்வி தகுதி; மதிப்பெண்ணை உயர்த்தும் தேர்வு தகுதி, தகுதியில்லை என, 10 விதமான குறிப்புகள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சதவீத கணக்கீடு எப்படி?

சி.பி.எஸ்.இ., தேர்வில், ஒவ்வொரு பாடத்திற்கும், 10 தர மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஐந்து பாடங்களிலும் தாங்கள் எடுத்த, தர மதிப்பெண்களை கூட்டி, அதை ஐந்தால் வகுத்தால், மொத்தம் எவ்வளவு சி.ஜி.பி.ஏ., என்ற, தரவரிசை கூட்டுத் தொகை வரும். இதுவும், 10 மதிப்பெண்களுக்குள்
மட்டுமே வரும். பின், மதிப்பெண் சதவீதத்தை தெரிந்து கொள்ள, சி.ஜி.பி.ஏ., எண்ணை, 9.5 என்ற எண்ணால் பெருக்கினால், மொத்தம் எத்தனை மதிப்பெண் என்பது, சதவீதமாக வரும். உதாரணமாக ஒருவர், ஒன்பது சி.ஜி.பி.ஏ., எடுத்திருந்தால், அவரது மொத்த மதிப்பெண் சதவீதம், 85.5 சதவீதமாகும்.

மீண்டும் அமலாகிறது மதிப்பெண் முறை

நடப்பு கல்வி ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் மதிப்பெண் மற்றும் 'டாப்பர்ஸ்' முறைஅமலாகிறது. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு, ௨௦௧௦ல், பொதுத்தேர்வு முறை மாற்றப்பட்டு, பள்ளி அளவிலான தேர்வு அமலானது. விருப்பப்படும் மாணவர்கள் மட்டும், பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். பின், 2011ல், மதிப்பெண் முறை மாற்றப்பட்டு, கிரேடு முறை அமலானது. 

இந்நிலையில், பள்ளி அளவிலான தேர்வால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி, மீண்டும் பொதுத்தேர்வு கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில், பொதுத்தேர்வு கட்டாயமாகிறது. 
அத்துடன், வரும் பொதுத்தேர்வில், கிரேடு முறை ஒழிக்கப்பட்டு, மீண்டும் மதிப்பெண் மற்றும் முதல் மூன்று இடங்களை பெறும், 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. நேற்று வெளியான, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு தான், கிரேடு முறையில் கடைசியானது. இனி வரும் தேர்வு முடிவுகளில், மதிப்பெண் படி மாணவர்கள் தேர்ச்சி கணக்கிடப்பட உள்ளது.

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட 
உள்ளன. அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டு
உள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தர
விடப்பட்டுள்ளது. இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

WHATSAPP & FACE BOOK ஜூன்-6 உலாவரும் வதந்திகள்??? ( உண்மைகளா )

ஜூன்-6 உலாவரும் வதந்திகள்- 

*#ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் மற்றுமே பணியாற்றமுடியும் அடுத்தகல்வி ஆண்டு முதல் எனத்தகவல்.

*#நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஒரே அலகு UNIT ஆக மாற்றம் எனத்தகவல்.

*#கூடுதலாக 12 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்படும் எனத்தகவல்.


*#அனைத்துவகை பள்ளிகளில் யோகா ஆசிரியர் நியமனம் எனத்தகவல்.

*#பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரப்படுத்தலாம் எனத்தகவல்.

*#6வது வகுப்பு முதல் கணினியியல் கல்வி ஒரு பாடமாக கட்டாயமாக கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#தொடக்கக்கல்வியில் மாவட்டத்தில் உள்ள 1முதல்5 வரையிலும் அனைத்து ஓன்றியங்களையும் இனைத்து மாவட்ட அளவில் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் 10% வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத்தகவல்.

6ஆம் தேதி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கும் 41அறிவிப்பில் முதல் அறிவிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்(தமிழக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் எம்எல்ஏ,எம்பி உள்பட )பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் அரசுப்பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்றப்படும் என அறிவிக்கப்படும் எனத்தகவல்

2/6/17

Student's are advised not to take admission in any M.Phil/P.hd., Programme through Distance Education - UGC..

PRESS RELEASE COPY-12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியீடு - தேர்வுத் துறை அறிவிப்பு.



09/07/2017 மற்றும் 23/07/2017 ஆகிய இரு தினங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்

மாற்று சான்றிதழ் - சில விவரங்கள் :

தொடக்க கல்வித்துறை மாற்று சான்றிதழின் அடிக்கட்டு பள்ளியில் இருக்க வேண்டிய ஆவணம் என்பதால் , மாற்று சான்றிதழின் விவரங்கள் முன்புறம்
இரண்டு A4 பேப்பர் அளவில் இருக்க வேண்டும் . நடுவில் கிழிப்பதற்கு வசதியாக துளையிட்ட தாளாக இருக்க வேண்டும் . நூறு மாற்று சான்றிதழ்கள் கொண்ட பைண்டிங் செய்ய பட்ட புத்தகமாக இருக்க வேண்டும் . மாற்று சான்றிதழின் இடப்பக்கம் உள்ள அனைத்து விவரங்களும் வலப்புறம் இருக்க வேண்டும் . இடப்பக்கம் உள்ள மாற்று சான்றிதழின் அடிக்கட்டையில் விவரங்களை பூர்த்தி செய்து , அதே விவரங்களை வலது பக்கம் உள்ள மாற்று சான்றிதழில் பூர்த்தி செய்து , இடது பக்க சான்றிதழில் பெற்றோரிடம் கையொப்பம் பெற்று , பின்னர் வலது பக்கம் உள்ள சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் . இடது பக்கம் உள்ள அடிக்கட்டு சான்றினை முக்கிய பதிவேடாக பாதுகாக்க வேண்டும் . இதில் உள்ள தாள் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும் . சான்றின் முன் பக்கம் , பின்பக்கம் அனைத்து விவரங்களும் பள்ளியில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும் . Xerox எடுக்காமல் , பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகமாக வாங்க வேண்டும் .


எஸ்பிஐ.,ல் எதற்கெல்லாம் கட்டணம் :

SBI - இன்று முதல் அமல்படுத்தியுள்ள சேவை கட்டணம் என்னென்ன? எதற்கெல்லாம் கட்டணம்?


நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ள
சேவை கட்டணம் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை கட்டணம் குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கு எஸ்பிஐ தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

1. 'எஸ்பிஐ பேங்க் பட்டி' (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

2. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.

3. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும், 3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல் ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.

4. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம் என்ற வரைமுறை பொருந்தும்.

5. ஏழ்மை நிலையில் இருப்போர் வங்கிக் கணக்கில் அதிகம் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 4 முறை மட்டுமே பணம் எடுக்கமுடியும் என்ற வரையறை வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இவர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுவதில்லை.

6. ஆன்லைன் பணபரிமாற்றம் : ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி, ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

7. அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டு பரிமாற்றம் : 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும்.

ரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.

8. செக் புக் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 10 செக் தாள்கள் கொண்ட

புக்கிற்கு ரூ.30 உடன் சேவை வரியும், 25 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.75 உடன் சேவை வரியும், 50 செக் தாள்கள் கொண்ட செக் புக்கிற்கு ரூ.150 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

9. ஏடிஎம்., கார்டுகளுக்கு கட்டணம் : ஜூன் 1 ம் தேதியிலிருந்து புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.


10. பணம் எடுப்பதற்கான கட்டணம் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

June diary - 2017

June-1.New academic year begins.

June - 1 BT s dist to dist transfer counseling continues (DSE)

June - 1: Last date to apply HSE instant exam (+2)

June - 2: SGT to BT promotion (DSE)

June - 2: Last day to apply PG TRB


June - 3.Last date to apply SSLC instant exam

June - 3: Grievance day likely (DEE).

June - 7: School reopens

June - 10: Grievance day likely (DSE).

June - 22: RH Shabha Kahdar

June - 23: Supplementary exam for XII begins

June - 26: HL Ramzan


June - 28: Supplementary exam for X begins.

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசுபள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்

இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்

முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர்
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 1,663 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு நடத்தப்படுகிறது.


 இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், 'முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படும். தகுதி யானவர்கள் விண்ணப்பம் அனுப்ப, இன்று வரை அவகாசம் அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

இதற்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, நேரடி நியமனம் செய்வதால், அவர்கள் இதுவரை பணியாற்றிய காலம் முடிவுக்கு வந்து, புதிய நியமனமாக கருதப்படும். இந்த உத்தரவை, பதவி உயர்வாக மாற்றினால் தான், ஏற்கனவே பணியாற்றிய காலமும் பணிமூப்பு கணக்கில் வரும் என்கின்றனர்.


இதற்கிடையில், 'பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுநிலை பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசுபள்ளிகளில் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன், 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 286
பட்டதாரி ஆசிரியர்; 623 பின்னடைவு இடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என, 1,111 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்கள், ஏற்கனவே நடந்த ஆசிரியர்


 தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது.அதனால், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களின் கூடுதல் விபரங்களை பதிவு செய்ய, மார்ச், 10 முதல், 23 வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதில், கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.


'ஜூன், 8 முதல், 10 வரை, சென்னை, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இதில் பங்கேற்கலாம்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு 'நோ'

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியாகின. மாணவர்களுக்கு, 'டிஜி லாக்கர்' என்ற,
டிஜிட்டல் முறையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடைத்தாள் ஆய்வுக்கு, ஜூன், 5க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.


 விடைத்தாள் ஆய்வில், மதிப்பெண் மாற்றம் இருந்தால், விண்ணப்பித்தோருக்கு கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பித்தோர் தேவைப்பட்டால், விடைத்தாள் நகலை ஆன்லைனில் பெறலாம். இதற்கு, ஜூன் 14 முதல், 19க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நகல் கிடைத்த பின், விடைத்தாளில் கூட்டல் பிழைகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி மதிப்பெண் கேட்கலாம்.


விடைகள் மதிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தாலும், விடைத்தாள் நகல் கிடைத்த ஏழு நாட்களில், மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால், 'திருத்தப்பட்ட விடைகளுக்கு, மறுமதிப்பீடு வழங்கப்படாது' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Epayslip இல் Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars கடந்த இரண்டு மாதாங்களாக Update செய்யாமல் இருந்தது. அதற்கு CM CELL க்கு மனு அனுப்பிய பின் Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars நேற்று முதல் OPEN ஆகிறது. CM CELL மனுவின் விவரம்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு LTC எனும் விடுப்பு பயணச் சலுகை வழங்கி வருகிறது. ஆனால் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி துறை இல்லையென்கிறது. ஆனால் நிதித் துறை ஆசிரியர்களுக்கு LTC உண்டு என்று சொல்கிறது.Cm cell அளித்த பதில் விவரம் பின்வருமாறு

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை!!! UGC Letter

தொலைநிலை கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும்
பிஎச்.டி., பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக, எம்.பில்., படிப்புக்கு, இரண்டு ஆண்டுகள்; பிஎச்.டி.,க்கு, ஆறு ஆண்டுகள் மட்டும், அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் எம்.பில்., படிக்க, மூன்று பேர்; பிஎச்.டி., படிக்க, எட்டு பேருக்கு மட்டுமே, வழிகாட்டி பேராசிரியர் செயல்படலாம் என்பது உட்பட, பல நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில பல்கலைகளில் விதிகளை மீறி, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை, தொலைநிலையில் நடத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
அனைத்து பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது: எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்பை, தொலைநிலையில் நடத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைநிலையில், ஏதாவது பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு அறிவிக்கப்பட்டால், அதில், மாணவர்கள் சேர வேண்டாம். இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை மற்றும் சில பல்கலைகளுக்கு மட்டும், தொழில்நுட்பம் இல்லாத பாடப்பிரிவுகளில், 'ரெகுலர்' படிப்பில், முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி படிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.