யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/6/17

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம்

தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருவதால் அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ. 700 சிறப்பு ஊதியம் வழங்கப்படுவதோடு, அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

பாடத்திட்ட மாற்றத்திற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில் அமைக்கப்படும்

தமிழக பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக இன்னும் 2 நாட்களில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும், ஒரு பாடத்திற்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 மதிப்பெண்களாகக் குறைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் பொதுவான சராசரி மதிப்பெண் கணக்கிடப்பட்டு ஒரே சான்றிதழ் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில் அமைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் இந்திய அரசியல் சாசனத்தில் உள்ளது போல இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக மாணவர்களின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் பழனிச்சாமியின் ஒப்புதலோடு ஜூன் 6 அன்று வெளியாகவுள்ள கல்வி சார்ந்த அறிவிப்புகளைப் பார்த்து நாடே வியப்படையும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், பத்திரப் பதிவுத் துறையிலும் நல்ல அறிவிப்பு வெளிவர இருக்கிறது எனவும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 491 தனியார் மெட்ரிக், 40 நர்சரி பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரச் சான்று வழங்கும் விழா காட்பாடி தனியார் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரச் சான்று வழங்கி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
வேலூர், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு கல்வி மாவட்டம் ஏற்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது 41 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. பிளஸ் 1 பாடத் திட்டம் குறித்த கமிட்டியில் இடம்பெற உள்ள கல்வியாளர்கள் குழு குறித்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 17,000-த்துக்கும் மேற்பட்ட மெட்ரிக். மற்றும் 3,000 நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளின் நிர்வாகிகள் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.

அதேபோல, தனியார் தொழிற்சாலைகள் உதவியுடன் கட்டப்பட்டு வரும் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெறும்.
யோகா, தேசப் பற்று, சாலைவிதி, பெற்றோரை மதிக்கும் நிலை, விளையாட்டு ஆகிய 5 அம்சங்களை உள்ளடக்கிய வகுப்பறைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்திரப் பதிவுத் துறையிலும் நல்ல அறிவிப்பு வர இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கும் அரசாக இருப்பதால் 5 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்றார்.
நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்.பி. கோ.அரி, எம்எல்ஏ-க்கள் என்.ஜி.பார்த்திபன், சு.ரவி, ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்

7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் படி, மத்திய அரசு ஊழியர்களின் மாத வருமானம் ரூ .7,000 இலிருந்து ரூ. 18,000 ஆக குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் திருத்தப்பட்ட வருமானம் 9,300 முதல் 34,800 ஊதியம் வரை அதிகரித்துள்ளது. 4200, 4600, 4800 மற்றும் 5400 ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் ஊதியம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது மேலும் 40 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
 *5,200-20,200 ஊதிய குழுவினால் மத்திய அரசாங்க ஊழியர்கள் வகுப்பு 1800 முதல் 2800 வரை ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இது மேலும் 40 மட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
 *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்.
   *7th Pay Commission: Revised pay matrix under all pay bands for central government employees.    
 *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம் பாதுகாப்பு பணம் மேட்ரிக்ஸ்.    *பாதுகாப்பு பேட் மேட்ரிக்ஸ், முந்தைய 24 நிலைகளாக பிரிக்கப்பட்டது இப்போது சிவில் பே மேட்ரிக்ஸ் போன்ற 40 நிலைகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 7 வது ஊதியக் குழுவின் கீழ் திருத்தங்கள் செய்ய அனுமதி அளித்தது.  *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்.  
 *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம் ஓய்வூதிய திருத்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2016 க்கு முந்தைய ஓய்வூதியம் பெறும் மத்திய ஊதியக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட ஓய்வூதிய மதிப்பீட்டு முறையை மாற்றியமைத்துள்ளது.

4/6/17

தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 2016-2017-ம் ஆண்டுக்கான பொது சேமநல நிதி வருடாந்திர கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைதளத்தில் (www.agae.tn.nic.in) இம்மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

👉 பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே சந்தாதாரர்கள் இந்த வலைதளத்தில் இருந்து தங்களின் 2016-2017 வருடாந்திர கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்" - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

பள்ளிக் கல்வித் துறையில் நாடே திரும்பிபார்க்கும் வகையில் 41 அறிவிப்புகளை முதலைமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



🔸 எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கபட்டார்.


🔹 இதையடுத்து அவர் கல்வித்துறையில் புதிது புதிதாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

🔸 பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

🔹 அதில் இனி மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் கிடையாது எனுவும் இனிமேல் கிரேடு முறையில் தான் மார்க் வரும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

🔸 மேலும் இனிவரும் காலங்களில் பனிரெண்டாம் வகுப்பிற்கு வழங்கபட்டு வந்த 1200 மதிப்பெண்களை குறைத்து 600மார்க்குகலாக மற்றம் செய்வதாக அறிவித்தார்.

🔹 இதைதொடர்ந்து பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என அறிவித்து கல்லூரிகளில் உள்ளது போல அரியர்ஸ் முறை இதில் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.

🔸 இந்நிலையில் தற்போது புதிதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

💥 இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

🔸 மாணவர்களின் எதிர்காலத்தை கருதி 41  அறிவிப்புகளை வெளியிட உள்ளோம்.

🔹 இதுகுறித்த அறிவிப்பு வரும் 6 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி அனுமதியுடன் வெளியிடப்படும்.

🔸 இந்த அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிபார்க்கும் வகையில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

🔹 இதனால் அந்த அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேலூரில் தகவல்

 தற்காலிக ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

விரைவில் 41 அரசாணைகள் வெளியிடப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

'நீட்' தேர்வை ரத்து கோரி ஐகோர்ட்டில் மேலும் மனு

மதுரை, 'நீட்' தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஜொனிலா உட்பட, 10 மாணவர்கள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:'இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, மே 7ல் நடந்தது. அனைத்து மாநிலங்களிலும், ஒரே மாதிரியான வினாக்கள் இடம்பெறவில்லை. தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். மே 7ல் நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், 'நீட்' மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதை ஏற்று, 'நீட்' தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை ஜூன் 12க்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் ஒத்திவைத்தார்.இந்நிலையில், புதுக்கோட்டையை ஜெரோபோ கிளாட்வின், உயர்நீதிமன்ற கிளையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 'பிளஸ் 2 வில், 1,177 மதிப்பெண் பெற்றுள்ளேன். 'நீட்' தேர்வு வினாக்கள், ஒரே மாதிரியாக இடம்பெறாததால், அதனடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய முடியாது. 'நீட்' தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார். மனு, விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

தனியார் பள்ளிகள் வெளியேற்றும் மாணவர்களை சேர்க்க உத்தரவு

தனியார் பள்ளிகள் வெளியேற்றும் மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய கல்வி ஆண்டு நேற்று துவங்கியது. கோடை விடுமுறை முடிந்து, வரும், 7ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன், மாணவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும்படி, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அனுப்பியுள்ள 
சுற்றறிக்கை:
• உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6ம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அருகில் உள்ள தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளிகளில் இருந்து, மாணவர்களின் விபரங்களை பெற்று சேர்க்க வேண்டும்
• மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பள்ளி வளாகங்களை துாய்மைப்
படுத்த வேண்டும்
• வகுப்பறை கட்டடங்களின் உறுதித்தன்மை, மின் சுவிட்சுகளின் செயல்பாடுகள், மேற்கூரையின் தன்மை, கழிப்பறை பராமரிப்பு, குடிநீர் வசதி போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தேர்ச்சியை காரணம் காட்டி, தனியார் பள்ளிகளிலிருந்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டால், அவர்களை அரசு பள்ளிகளில், ஒன்பது, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் சேர்க்க, தயக்கம் காட்டக் கூடாது. 
அதேநேரம், எந்த பள்ளியிலிருந்து மாணவர் வெளியேற்றப்பட்டார் என்ற தகவலை, இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

உதவி கமிஷனர் பதவிதகுதித்தேர்வு அறிவிப்பு - TNPSC

சென்னை, : இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு, முதல் நிலை தகுதி தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழகத்தில், இந்து அறநிலைய துறையில், நிர்வாக பிரிவு உதவி கமிஷனர் பதவிக்கு, மூன்று காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலை தகுதி தேர்வு, செப்., 3ல் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை, இம்மாதம், 28 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும், விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், 
www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ., அனுமதி பெறாமல் பள்ளிகள் முறைகேடு

திண்டுக்கல், : மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரிய அனுமதி பெறாமல், பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, விளம்பரம் செய்து மாணவர்களிடம் வசூல் செய்வதில் தீவிரம் காட்டுகின்றன. 

'நீட்' தேர்வு
மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு; மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்; ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., என்ற மத்திய அரசின் இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான வினாக்கள்
கேட்கப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் செயல்படும், பல தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்திற்கு மாறி வருகின்றன.இக்கல்வி திட்டத்தை செயல்படுத்த, பல கட்ட ஆய்வுகள் இருக்கின்றன. சில பள்ளிகளே, அவற்றை முறையாக கடைபிடித்து அனுமதி பெற்றுள்ளன. பெரும்பாலான பள்ளி கள் அனுமதி பெறுவதற்காக, விண்ணப்பங்களை மட்டும் அனுப்பி உள்ளன.இன்னும் சில பள்ளி கள் விண்ணப்பிக்காம லேயே, சி.பி.எஸ்.இ., என விளம்பரம் செய்து, பெற்றோரிடம் கட்டண வசூலில் மும்முரம் காட்டுகின்றன.பெற்றோரும், சி.பி.எஸ்.இ., பள்ளிக்கான அனுமதி அல்லது அங்கீகாரம் இருக்கிறதா எனப் பார்க்காமலேயே பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர்.
விதிமுறைகள்பெற்றோர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். விதிமுறைகள் வருமாறு: பள்ளி பரப்பளவு, 2 ஏக்கர் இருக்க வேண்டும். வகுப்பறை, 500 ச.அடி; ஆய்வகம் 600 ச. அடியில் இருக்க வேண்டும். நுாலகம், படிக்கும் அறையுடன், 14 மீ.,க்கு 8மீ., என்ற அளவில் இருக்க வேண்டும். கணிப்பொறி, கணித ஆய்வகங்கள் தனித்தனியாக இருக்க வேண்டும்.
பள்ளிக்கான தற்காலிக அனுமதி பெறுவோர், அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று, அத்துறை மூலம், மத்திய கல்வி வாரியத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 
தமிழக அரசின் அங்கீகாரத்தையும், மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு வளாகத்தில், மெட்ரிக் அல்லது சி.பி.எஸ்.இ., பள்ளி மட்டுமே இயங்க முடியும்.
எழுத வேண்டும்அனுமதி எண்ணை, பள்ளி அறிவிப்பு பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்து

100 சதவீத தேர்ச்சி பெற்ற சென்னை பள்ளிகள்

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வில், சென்னையிலுள்ள பல பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
சென்னை, கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில், தேர்வு எழுதிய 2௫௮ மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில், 59 பேர், தரவரிசையான, சி.ஜி.பி.ஏ.,வில், 10க்கு, 10 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்களை, பள்ளியின் முதுநிலை முதல்வர் அஜீத் பிரசாத் ஜெயின் பாராட்டினார்.

அண்ணாநகர், எஸ்.பி.ஓ.ஏ., ஸ்கூல் அண்ட் ஜூனியர் காலேஜ் பள்ளியில், தேர்வு எழுதிய 805 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 199 மாணவர்கள், ஏ 1 கிரேடான, 10க்கு, 10 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களை,
பள்ளியின் முதல்வர் ராதிகா உன்னி வாழ்த்தினார்.
ராஜா அண்ணாமலைபுரம், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், 640 பேர் தேர்வு எழுதியதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88 மாணவர்கள், 10க்கு, 10 மதிப்பெண்ணுடன் சி.ஜி.பி.ஏ., தரம் பெற்றுள்ளனர். அவர்களை, பள்ளியின் தாளாளர் மீனா முத்தையா மற்றும் முதல்வர் அமுதலஷ்மி வாழ்த்தினர்.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்திலுள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில், தேர்வு எழுதிய, 129 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 33 பேர், 10க்கு, 10 மதிப்பெண் தரம் பெற்றுள்ளனர். அவர்களை, சென்னை மண்டல துணை கமிஷனர் எஸ்.எம்.சலீம் மற்றும் முதல்வர் மாணிக்கசாமி வாழ்த்தினர்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு திருவனந்தபுரம் மண்டலம் முன்னிலை

சென்னை, :சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவு கள், நேற்று வெளியாகின. கடந்த ஆண்டை விட, ௫ சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. வழக்கம் போல, திருவனந்தபுரம் மண்டலம், அதிக தேர்ச்சி பெற்றுள்ளது. 

16 லட்சம் பேர்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது; 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., வாரியம் நேற்று வெளியிட்டது. இதில், 90.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
கடந்த ஆண்டு, 96.21 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 5.26 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. திருவனந்தபுரம் மண்டலம், 99.85 சதவீத தேர்ச்சியுடன், வழக்கம் போல, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய, சென்னை மண்டலத்தில், 99.62
சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

'கிரேடு' முறை 

இந்த தேர்வில், விடைத்தாள்கள் மதிப்பிடப்பட்டு, மொத்த மதிப்பெண்களுக்கு, சி.ஜி.பி.ஏ., என்ற, தர வரிசை குறிக்கப்பட்டுள்ளது. மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, மொத்தம், 10 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்களுக்கு, 'கிரேடு' முறை வழங்கப்பட்டுள்ளது. 
இந்த கிரேடு அடிப்படையில், உயர்கல்வி தகுதி; மதிப்பெண்ணை உயர்த்தும் தேர்வு தகுதி, தகுதியில்லை என, 10 விதமான குறிப்புகள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சதவீத கணக்கீடு எப்படி?

சி.பி.எஸ்.இ., தேர்வில், ஒவ்வொரு பாடத்திற்கும், 10 தர மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஐந்து பாடங்களிலும் தாங்கள் எடுத்த, தர மதிப்பெண்களை கூட்டி, அதை ஐந்தால் வகுத்தால், மொத்தம் எவ்வளவு சி.ஜி.பி.ஏ., என்ற, தரவரிசை கூட்டுத் தொகை வரும். இதுவும், 10 மதிப்பெண்களுக்குள்
மட்டுமே வரும். பின், மதிப்பெண் சதவீதத்தை தெரிந்து கொள்ள, சி.ஜி.பி.ஏ., எண்ணை, 9.5 என்ற எண்ணால் பெருக்கினால், மொத்தம் எத்தனை மதிப்பெண் என்பது, சதவீதமாக வரும். உதாரணமாக ஒருவர், ஒன்பது சி.ஜி.பி.ஏ., எடுத்திருந்தால், அவரது மொத்த மதிப்பெண் சதவீதம், 85.5 சதவீதமாகும்.

மீண்டும் அமலாகிறது மதிப்பெண் முறை

நடப்பு கல்வி ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் மதிப்பெண் மற்றும் 'டாப்பர்ஸ்' முறைஅமலாகிறது. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு, ௨௦௧௦ல், பொதுத்தேர்வு முறை மாற்றப்பட்டு, பள்ளி அளவிலான தேர்வு அமலானது. விருப்பப்படும் மாணவர்கள் மட்டும், பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். பின், 2011ல், மதிப்பெண் முறை மாற்றப்பட்டு, கிரேடு முறை அமலானது. 

இந்நிலையில், பள்ளி அளவிலான தேர்வால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி, மீண்டும் பொதுத்தேர்வு கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில், பொதுத்தேர்வு கட்டாயமாகிறது. 
அத்துடன், வரும் பொதுத்தேர்வில், கிரேடு முறை ஒழிக்கப்பட்டு, மீண்டும் மதிப்பெண் மற்றும் முதல் மூன்று இடங்களை பெறும், 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. நேற்று வெளியான, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு தான், கிரேடு முறையில் கடைசியானது. இனி வரும் தேர்வு முடிவுகளில், மதிப்பெண் படி மாணவர்கள் தேர்ச்சி கணக்கிடப்பட உள்ளது.

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட 
உள்ளன. அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டு
உள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தர
விடப்பட்டுள்ளது. இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

WHATSAPP & FACE BOOK ஜூன்-6 உலாவரும் வதந்திகள்??? ( உண்மைகளா )

ஜூன்-6 உலாவரும் வதந்திகள்- 

*#ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் மற்றுமே பணியாற்றமுடியும் அடுத்தகல்வி ஆண்டு முதல் எனத்தகவல்.

*#நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஒரே அலகு UNIT ஆக மாற்றம் எனத்தகவல்.

*#கூடுதலாக 12 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்படும் எனத்தகவல்.


*#அனைத்துவகை பள்ளிகளில் யோகா ஆசிரியர் நியமனம் எனத்தகவல்.

*#பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரப்படுத்தலாம் எனத்தகவல்.

*#6வது வகுப்பு முதல் கணினியியல் கல்வி ஒரு பாடமாக கட்டாயமாக கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#தொடக்கக்கல்வியில் மாவட்டத்தில் உள்ள 1முதல்5 வரையிலும் அனைத்து ஓன்றியங்களையும் இனைத்து மாவட்ட அளவில் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் 10% வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத்தகவல்.

6ஆம் தேதி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கும் 41அறிவிப்பில் முதல் அறிவிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்(தமிழக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் எம்எல்ஏ,எம்பி உள்பட )பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் அரசுப்பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்றப்படும் என அறிவிக்கப்படும் எனத்தகவல்