அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்விக் குழுவே இன்னும் அமைக்கப்படாததால், பொறியியல் கல்லூரிகளுக்கான புதிய பாடத் திட்டம் இந்தக் கல்வியாண்டில் அமலுக்கு வருமா என கேள்வி எழுப்புகின்றனர் பேராசிரியர்கள்.
அரசு விதிகளின்படி தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் நிறுவனங்களின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத் திட்டம் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு இது பொருந்தும்.
இந்த விதியின்படி, நடப்பு 2017-18 கல்வியாண்டுக்கு இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய வேண்டும்.பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள 523 பொறியியல் கல்லூரிகளிலும் இந்தப் பாடத் திட்டத்தைத்தான் பின்பற்ற வேண்டும்.
இதற்கென பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பாடத் திட்டக் குழு, புதிய பாடத் திட்டத்தை உருவாக்கும் பணியை ஏற்கெனவே நிறைவு செய்துவிட்டது.
இதில், தொழில் நிறுவனங்களின் இன்றைய தேவைக்கேற்ப பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. தொழில் நிறுவனப் பயிற்சி உள்ளிட்டவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள விருப்பப் பாடத் தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.), 2017-18 கல்வியாண்டு முதல் 523 இணைப்புக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் கல்வித் திட்ட இயக்குநர் கீதா கூறியிருந்தார்.
கல்விக் குழு அமைக்கப்பதில் தாமதம்: இந்தப் புதிய பாடத் திட்டத்தை, பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு (Academic Council) ஒப்புதல் பெற்ற பிறகுதான், நடைமுறைக்குக் கொண்டு வர முடியும்.
அதாவது, முதலில் கல்விக் குழுவில் அந்தப் புதிய பாடத் திட்டம் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். பின்னர், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு அதற்கு இறுதி ஒப்புதல் அளிக்கும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை கல்விக் குழுவே அமைக்கப்படவில்லை. ஆட்சிக் குழுவும் முழுமையாக அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
எனவே, புதிய கல்வித் திட்டத்துக்கு ஒப்புதல் பெற முடியாது என்பதால், 2017-18 கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய பாடத் திட்டம் வருவது சந்தேகம்தான் என்றனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக கல்வித் திட்ட உயர் அதிகாரி கூறியது:
பல்கலைக்கழகத்துக்கு கல்விக் குழு அமைப்பதற்கான பெயர்கள் இறுதி செய்யப்பட்டு ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டன. விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, உடனடியாக புதிய கல்வித் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதனை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட முடியும் என்றார்.