சென்னையில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்
சுமார் 15 பழைய வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது டி.பி.ஐ வளாகம். இங்கு கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே இன்று சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தவிபத்தில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 பழைய வண்டிகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தற்போது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதால், மாணவர்களுக்கு வழங்கவேண்டிய புத்தகங்கள் சேதமின்றி காப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது