யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/6/17

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

'தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.கோவையில் செய்தியாளர்களிடம் அவர்
நேற்று கூறியதாவது:
 கல்வித் துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்று வதற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம். இது வரை47 அறிவிப்புகள் வெளியாகி யுள்ளன. மேலும் பல அறிவிப்புகள் வெளியாக உள்ளன.‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் பல்வேறு பொதுத் தேர்வு களிலும் வெற்றிபெறும் வகை யில் தமிழக மாணவர்களின் திறனைமேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு உதவும் வகையில் 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் மற்றும் வரை படங்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. சிபிஎஸ்சி பாடத் திட்டத்துக்கு சமமான கல்வியை மாநில அரசு கல்வித் திட்டத்திலும் அமல்படுத்த விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசுப் பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைப்பது தொடர்பான உத்தரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களில் இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கும்.பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் ரூ.7,700-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் 1-ம் தேதியே பகுதி நேர ஆசிரி யர்கள் சம்பளம் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பகுதி நேர ஆசிரியர் களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தனியார் பள்ளிகளில் வசூலிக் கப்படும் கல்விக் கட்டணம் தொடர்பாக, நீதிமன்றத் தீர்ப்புக் குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும், மிக அதிக அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட் டுள்ள குழுவிடம் புகார் தெரிவித்து, உரிய தீர்வு காணலாம்.குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஒவ்வொருவரும் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. எனினும், அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை. மதுரையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்பார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்

நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண்

நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை
நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அதிகரித்துள்ளது. 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துளளது.

அதனால், பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' மதிப்பெண்கள் மட்டுமே, மருத்துவ இடங்களுக்கு உதவாது. 'நீட்' தேர்வு மதிப்பெண் அதிகமாக இருந்தால் மட்டுமே, தர வரிசையில் முன்னிலை பெற்று, அரசு ஒதுக்கீடு பெற முடியும். தமிழக அரசின் புதிய முடிவின்படி, பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கான மவுசு குறைந்து, 'நீட்' மதிப்பெண்ணுக்கான மவுசு அதிகரித்துள்ளது.

பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகத்தினரும், தனியார் பள்ளி மாணவர்களும், பிளஸ் 2 சிறப்பு பயிற்சிகளை குறைத்து, 'நீட்' தேர்வுக்கான பயிற்சிக்கு, முன்னுரிமை அளிக்க துவங்கி உள்ளனர். அதனால், தனியார் பள்ளிகளிலேயே நேரடியாக, 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள் துவங்கி உள்ளன.

அதேபோல, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களுக்கு, கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது. பல புதிய பயிற்சி மையங்களும், சாதாரண டியூஷன் மையங்களும், 'நீட்' தேர்வு பயிற்சிக்கு தயாராகி உள்ளன. பயிற்சிக்கான கட்டணம், ஓர் ஆண்டுக்கு, 20 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

தமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் !!

அரசுபள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்.

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்.
1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?

2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?

3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?

4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?


5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.


6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?


7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?


8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?


9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?


10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.


11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?


12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?


13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?


14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?


15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.


16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?


17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?


18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?



20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு

சென்னை : எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால்
நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர், கு.தேவராஜன் நியமிக்கப்பட்டார்.
குழுவின் உறுப்பினராக, தேர்வுத்துறை முன்னாள் இணை இயக்குனர் ராமராஜன், பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர்கள் பூபதி, வாசு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சமீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்தவருடம் புதிதாக 11ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு வருகிறது. எனவே முதலில் 11ம் வகுப்புக்கு கேள்விகள் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த குழு உறுப்பினர்கள் 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு கேள்விகள் வடிவமைக்க கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பாட நிபுணர்களுடன் பேசி வருகிறார்கள்.
இந்தகேள்விகள் மாணவர்களின் திறனை பரிசோதிக்கும்படி இருக்கும். மாணவர்கள் புரிந்து படித்திருப்பதை ஆய்வு செய்யும். அதே நேரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இருக்கும்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் கேள்விகள் வடிவமைப்பு தயாராகி விடும். அதன்பிறகு அரசின் ஒப்புதல் பெறப்படும். காலாண்டு தேர்வு வர இருக்கிறது. வினாத்தாள் வடிவமைத்து கொடுத்து அதன்பிறகுதான் தேர்வுத்துறை அதை அச்சடிக்க கொடுக்கும். அதனால் தான் விரைவில் கேள்விகளை வடிவமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

Epayslip இல் Financial Year 2017-18 in Annual Income Statement, Pay Drawn Particulars. Update செய்யாமல் இருந்தது. அதற்கு CM CELL க்கு மனு அனுப்பி பதில் பெற்ற விவரம்

27/6/17

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. 'ஜூலை, 7 வரை, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் பெற்றுக் கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.


தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரியை சேர்த்து, 3,050 இடங்கள் உள்ளன. இதில், 15 சதவீதமான, 456 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, மீதி, 2,594 இடங்கள் உள்ளன. இதுதவிர, சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 783 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், 85 சதவீதம் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், 15 சதவீதம், பிற பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது.
'நீட்' தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. நேரில் விண்ணப்பம் பெற, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், 'செயலர், மாணவர் சேர்க்கை கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்ற பெயரில், ௧௦௦ ரூபாய்க்கு எடுக்கப்பட்ட, 'டிடி'யுடன் மனு கொடுக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம் செய்து, அதனுடன், 'டிடி' இணைத்து அனுப்பலாம். ஜூலை, 7 வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூலை, 8 மாலை, 5:00 மணிக்குள், தேர்வுக் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் 
அறிவித்துள்ளது.

நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீட்' எப்படி?

பெங்களூரு: மருத்துவம், பல் மருத்துவ சீட்களுக்காக, 'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு, அரசு கோட்டாவில், 'சீட்' கிடைக்குமா, இல்லையா; 'சீட்' பெறுவது எப்படி? என்பது போன்ற பல விதமான கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மத்திய உயர் கல்வி தேர்வாணையம் - சி.பி.எஸ்.இ., மே, 7ம் தேதி நடத்திய தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில், பெங்களூரு, டில்லி பப்ளிக் பள்ளி மாணவர் சங்கீர்த் சதானந்த், 720 மதிப்பெண்ணுக்கு, 692 மதிப்பெண்ணுடன், நான்காவது ரேங்க் பெற்று, சாதனை புரிந்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த மற்றொரு மாணவியான ரக் ஷிதா ரமேஷ், 677 மதிப்பெண்ணுடன், 41வது இடத்தை பிடித்தார். மருத்துவ படிப்பில், மாநிலத்துக்கான, 'கட் ஆப்' மார்க், மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் மூலம், கர்நாடகா தேர்வாணையம் - கே.இ.ஏ.,வுக்கு வரும்; அதன் பின் கே.இ.ஏ., அறிவிக்கும். சி.பி.எஸ்.இ., வழங்கும், 'கட் ஆப்' மார்க் அடிப்படையில், மாணவர்களுக்கு உத்தரவிடப்படும். அதன் பின் ஆவணங்களை பரிசீலிப்பது, 'சீட்' வழங்கும் செயல்பாடு கே.இ.ஏ., மூலமாக நடக்கும். பொதுப்பிரிவு, எஸ்.சி., - எஸ்.டி., என அந்தந்த பிரிவு வாரியாக பிரிக்கப்படும்.
அரசு கோட்டாவில் மருத்துவம், பல் 
மருத்துவ படிப்புக்கு இருப்புள்ள சீட்டுகள் பற்றி, விரைவில் அறிவிக்கப்படும். தனியார் பல்கலைக்கழகம், தனியார் கல்லுாரிகளில் உள்ள மருத்துவ சீட்டுகள் குறித்து இன்னும் 
தெரியவில்லை.
'நீட்' தேர்வில், நல்ல ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு, நாட்டின் பிரபல மருத்துவ கல்லுாரிகளில், எளிதாக, 'சீட்' கிடைத்து விடும். 
மாணவர்களுக்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக, தகுதி தேர்வை தவிர, மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம், 'சீட்' வழங்குவது, கல்லுாரி நுழைவு, ஆவணங்களை பரிசீலிப்பது என அனைத்தும், மாநில அரசு மூலமாகவே நடத்தப்படும்.
சி.இ.டி., மற்றும், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களின் ஆவணங்களை பரிசீலிப்பதில், எந்த பிரச்னையும் இல்லை. ரேங்க் அடிப்படையில், கே.இ.ஏ., ஆவணங்களை பரிசீலிக்கும் பணியை துவக்கியுள்ளது.
'நீட்' எழுதிய, சி.இ.டி., எழுதாத மாணவர்கள், கே.இ.ஏ., இணையதள மான, www.kea.kar.nic.in பதிவு செய்து கொள்ளும்படி, கர்நாடக மாநில மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., 'கட் ஆப் மார்க்' 
வழங்கிய பின், பதிவு செய்துள்ள மாணவர்கள், தங்களின் சான்றிதழ்களை, சம்பந்தப்பட்ட மையங்களில் பரிசீலித்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு
உள்ளது.

குழு...! புதிய கல்வி கொள்கையை உருவாக்க... கஸ்தூரிரங்கன் தலைமையில் நியமனம்

நாட்டின் புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்ய, விண்வெளி விஞ்ஞானி, கே.கஸ்துாரிரங்கன் தலைமையில், ஒன்பது உறுப்பினர் உடைய குழுவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நியமித்துள்ளது.


 புதிய கல்வி கொள்கை, உருவாக்க, குழு


நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர் திட்டமிட்டுள்ளார். இதற்காக, பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, ஒன்பது உறுப்பினர்கள் உடைய குழுவை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி உள்ளது. 


100 சதவீதம்


இந்த குழுவுக்கு, விண்வெளி விஞ்ஞானியும், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவருமான, கஸ்துாரிரங்கன் தலைமை வகிப்பார்.இந்த குழுவில் இடம் பெற்று உள்ள, முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அல்போன்ஸ் கானாம்தனம், கேரளாவின் கோட்டயம்,

எர்ணாகுளம் மாவட்டங்கள், 100 சதவீத கல்வியறிவை எட்ட முக்கிய காரணியாக திகழ்ந்தவர். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒருவரான, ராம்சங்கர் குரீல், ம.பி.,யில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் பல்கலை துணைவேந்தர். இவர், விவசாயஅறிவியல் மற்றும் மேலாண்மையில் அனுபவம் வாய்ந்தவர்.


இரண்டாவது முறை


குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள், பல்வேறு பிராந்தியங்களையும், பிரிவுகளையும் சேர்ந்தவர்கள்; பல துறைகளில் ஆழ்ந்த, உலகளாவிய அனுபவம் பெற்றவர்கள். 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்த பின், கல்விக் கொள்கை அமைப்பதற்காக, இரண்டாவது முறையாக குழு அமைக்கப்பட்டுள்ளது. 
மனிதவள மேம்பாட்டு அமைச்சராக, ஸ்மிருதி இரானி இருந்தபோது, புதிய கல்விக் கொள்கை உருவாக்க, 2015ல், முன்னாள் கேபினட் செயலர், டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு, 2016, மே, 7ம் தேதி, தற்போதைய மனிதவள மேம்பாட்டுஅமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம், அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் இடம்பெற்றிருந்த சில பரிந்துரைகள் பிற்போக்கானவை என்ற புகார் எழுந்ததால், பல்வேறு அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்களிடம், ஜாவடேகர் ஆலோசனைகளை கோரினார்.

இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்ய, கஸ்துாரிரங்கன் தலைமையில் தற்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில்...


கடந்த, 1968ல், நாட்டின் முதல் கல்விக் கொள்கை, அப்போதைய பிரதமர் இந்திராவால் அமல்படுத்தப்பட்டது. அதன் பின், 1986ல், பிரதமராக பதவி வகித்த ராஜிவ், இரண்டாவது முறையாக, கல்விக் கொள்கையை அமல்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, 1992ல், நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசு, கல்விக் கொள்கையில் சில திருத்தங்களை மேற்கொண்டது. 2005ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, குறைந்தபட்ச பொது கொள்கை அடிப்படையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய 440 மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய சென்னை காவல்துறை அதிகாரியின் கல்விச் சேவை

சென்னை காவல்துறை அதிகாரி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் படிப்பைப் பாதியில் நிறுத் திய 440 மாணவர்களை அடை யாளம் கண்டு, அவர்களை மீண் டும் பள்ளிக்கு அனுப்பி உள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங் கிய மற்றும் மறு குடியமர்த்தம் செய்யப்பட்ட சென்னை கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர் பள்ளிக்குச் செல்லாமலும், இன்னும் சிலர் படிப்பைப் பாதியிலும் நிறுத்தி இருந்தனர்.அடிக்கடி மோதல் சம்பவங் களும் அந்தப் பகுதியில் நடந்தன. 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலான குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தனர். இதனால், இந்த பகுதியில் கல்வி நிலை கீழ்நோக்கிச் சென்றதாகக் கூறப்பட்டது.

பெற்றோருக்கு வேலைவாய்ப்பு

இப்படிப்பட்ட நிலையில், கண்ணகி நகர், எழில் நகர் மற்றும்அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் படிப்பை பாதியில் நிறுத்திய 440 குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களை மீண்டும் பள் ளிக்கு அனுப்பி கல்வி வளர்ச் சியை ஏற்படுத்தி உள்ளார் சென்னை அடையார் துணை ஆணையர் பி.சுந்தரவடிவேல். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா? என்பதைக் கண்காணிக்க போலீஸாரையும் நியமித்துள்ளார். மாணவர்களின் பெற்றோருக்கு வேலை வாய்ப் பையும் ஏற்படுத்தி வருகிறார்.

இதுபற்றி அவர் ‘ கூறியதாவது:சென்னையில் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் காரணமாக அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்ட குடும்பத்தினர் பெரும் பாலும் கண்ணகி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் எந்த இடத்தில் முன்புஇருந்தார்களோ அதே இடத்தின் பெயரிலேயே அவர்களுக்குள் அழைத்து வரு கின்றனர்.இவர்களுக்குள் பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக பலர் மீது வழக்கு உள்ளது. இதன் காரண மாக இந்தப் பகுதியில் உள்ளவர் களின் பெயரைச் சொன்னாலே அவர்களின் சமூக அந்தஸ்து குறை யும் வகையில் இருந்தது. எனவே, அவர்களின் பொருளாதார மேம் பாட்டிற்கு ஏதாவது செய்ய வேண் டும் என நினைத்தேன். கல்விமூலம் மட்டுமே சீர்திருத்தங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும் என நம்பினேன். அதன் அடிப்படையில் கண்ணகி நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மற்றும் படிப்பைப் பாதியில் விட்டவர்கள் குறித்து கடந்த 6 மாதமாகக் கணக்கெடுத்தோம்.

30 மாணவருக்கு ஒரு போலீஸ்:

அதில், அடையாளம் காணப் பட்ட 440 பேரை அருகில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்துள் ளோம். மாணவர்கள் பள்ளிக்கு தினமும் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்க 30 மாணவர்களுக்கு ஒரு போலீஸை நியமித்துள்ளோம்.மேலும் மாணவர்கள் படிப்ப தற்கு தனி இடம் ஒதுக்கி கொடுத் துள்ளோம். அவர்களுக்கு டியூசன் எடுக்க தனி ஆட்களை நியமித் துள்ளோம். நோட்டு, புத்தகம், பேக், எழுதுபொருள் உள்ளிட்டவை களையும் வாங்கிக் கொடுத் துள்ளோம். மாணவர்களின் பெற் றோர் பொருளாதாரத்தை உயர்த்த, அவர்களின் படிப்புக்குத் தகுந்த வேலையை வாங்கிக் கொடுத்து வருகிறோம்.தற்போது நடந்து முடிந்த காவல்துறை தேர்வில் கண்ணகி நகர்மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 51 பேருக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். கல்வி யில் வளர்ச்சி ஏற்படுத்துவதன் மூலமும் குற்றங்களைக் குறைக்க முடியும்என்றார்

5 வருட சட்ட படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு  2 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் தகுதியானவர்களுக்கு தரவரிசை பட்டியல் மற்றும்  அவர்கள் பெற்ற கட்– ஆப் மதிப்பெண் ஆகியவை இன்று  (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு இணையதளத்தில்  (www.tndalu.ac.in) வெளியிடப்படுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்  சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அசோக்குமார்  தெரிவித்தார்

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!

2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்.

2017-2018ஆம் ஆண்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி (தனியார்) மருத்துவம், பல் மருத்துவம் பட்டப்படிப்பிற்கு ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன.

அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.

மருத்துவம் / பல் மருத்துவம் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேடுகள் கீழ்க்ண்ட அனைத்து அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பதாரர்களின் மனுவின் பேரில் 27.06.2017 முதல் 07.07.2017 வரை எல்லா நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை உட்பட) காலை 10..00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 08.07.2017 மாலை 5.00 மணிவரை
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்
விண்ணப்பம் வழங்கப்படும் நாட்கள் - ஜூன் 27 காலை 10 மணி முதல் ஜூலை 7 மாலை 5 மணி வரை வழங்கப்படும்.
விண்ணப்பம் பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி - 08.07.2017 மாலை 5 மணி வரை
1. சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 600001.
3. மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - 625020.
4. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் - 613004.
5. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600010.
6. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு - 603001.
7. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி - 627011.
8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் - 641014.
9. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் - 636030.
10. அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி - 620001.
11. அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி - 628008.
12. அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, ஆசாரிபள்ளம், கன்னியாகுமரி மாவட்டம் - 629201.
13. அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, அடுக்கம்பாறை, வேலூர் - 632011.
14. அரசு தேனி மருத்துவக் கல்லூரி, தேனி - 625531.
15. அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி - 701.
16. அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் - 610004.
17. அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் - 601.
18. அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை - 630561.
19. அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை - 606604.
20. அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் எஸ்டேட், சென்னை - 600002.
21. அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை
22. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.
விண்ணப்பப்படிவங்கள் தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்கம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10ல் வழங்கப்படமாட்டாது.

எம்பிபிஎஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்..ஜுலை 8 கடைசி நாள்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்  விநியோகிக்கப்படுகின்றன. 22 மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு பிடிஎஸ் கல்லூரியிலும் மருத்துவ விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தளியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 3050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அசில இந்திய ஒதுக்கீடான 456 இடங்கள் போக எஞ்சியுள்ள 2594 இடங்கள் தமிழக அரசு ஒதுக்கிட்டின் மூலம் நிரப்பப்படுகிறது.
சுயநிதி கல்லூரிகளில் உள்ள 400 இடங்களில் 200 நிர்வாக இடங்கள் போக 200 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்டுகிறது. பல் மருத்துவ கல்லூரியைப்  பொறுத்தவரை மொத்தமுள்ள 1910 இடங்களில் 720 நிர்வாக ஒதுக்கீடு போக மீதமுள்ள 1190 இடங்கள் தமிழக அரசு மூலம் நிரப்பப்படவுள்ளன.
இதனிடையே நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் 2,66,221 மாணவர்கள்  , 3,45,313 மாணவிகள்  5 திருநங்கைகள் என மொத்தம் 6,11,539 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. ஜூலை 7 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும்,  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 8 கடைசி நாள் நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 17-ல் கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-பி.லிட் மற்றும் DTEd முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக ஆவதற்கு தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்

TRB PG EXAM | 02.07.2017 - CHIEF- ADL CHIEF - DEPT - ADL - DEPT DUTY ORDER MEETING - 28.07.2017

FLASH NEWS:-குறைந்த மாணவர்கள் உள்ள நடுநிலைப்பள்ளி துவக்கப்பள்ளி ஆக தரம் இறக்கப்பட்டு பட்டதாரிகளை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாற்ற அரசு திட்டம் விரைவில் ..


G.O 233 Date:22/6/17 - Medical Admission - Admission policy for MBBS/BDS course 2017-18.Allocation of seats for Student Studying in State board,CBSE and Other boards

G.O 233 Date:22/6/17 - Medical Admission - Admission policy for MBBS/BDS course 2017-18.Allocation of seats for Student Studying in State board,CBSE and Other boards...



BREAKING NEWS : 6,7,8 வகுப்புகளை கையாளாத மற்றும் பட்டதாரிகளை விட குறைந்த தரநிலை ஊதியம் பெறும் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு தரக்கூடாது - மதுரை உயர்நீதிமன்றம் ஆணை - JUDGEMENT COPY

திரு.த.உதயச்சந்திரன் IAS அவர்கள் RMSA பயிற்சியில் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்

ஆசிரியர்கள் தங்களின் பாடங்களை எவ்வாறு மாணவர்களுக்கு நடத்த
வேண்டும்,ஆசிரியர்களின் கடமைகள் என்ன? என்பதை பற்றி-திரு.த உதயச்சந்திரன் IAS அவர்கள் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்:

கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் 01 மணி நேரம் ஒதுக்கி இந்த வீடியோவின் நான்கு பாகங்களையும் நன்றாக பாருங்கள் நிச்சயம் உங்கள் மனதில் மாற்றம் வரும்.மிகவும் அருமையான சமுதாய பற்றுடன் கூடிய பதிவு.
போற்றுதலுக்குரிய பள்ளிக்கல்வி முதன்மை செயலர் திரு. த.உதயசந்திரன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.  நூறு நாட்களில் பள்ளிக்கல்வித் துறையை  தலைநிமிரச்செய்தீர்கள்.அரசாணை எண் 99 மற்றும் 100.ஆகியவற்றை  செதுக்கிய விதம்.அதனை இந்த வீடியோவில் தாங்கள் எடுத்துரைத்த விதம் அருமை.

அதுதமிழக ஆசிரியர்களின்  மனதிலும் கல்வித்துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தினை உண்டாக்கும் என்பதில் மாற்றம் இல்லை.பள்ளிக்கல்வித் துறையில் நீங்கள் ஏற்படுத்த நினைக்கும் மாற்றங்கள் நிச்சயம் தமிழ் சமுதாய மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை வளர்க்கும்- மேலும் NTSE,NEET,IIT,JEE,IAS,IPS போன்ற போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும் பயிற்சியும் பள்ளி அளவில் வழங்க நினைக்கும் உங்களின் முயற்சிகள் நிச்சயம் வெற்றிபெறும்.
  • VIDEO PART I  (21:35 MINUTES) CLICK HERE
  • VIDEO PART II  (09:24 MINUTES) CLICK HERE
  • VIDEO PART III  (21:13 MINUTES) CLICK HERE
  • VIDEO PART IV  (14:30 MINUTES) CLICK HERE
  • தமிழை காக்கவேண்டிய பொறுப்பு தமிழகத்தில் ஒரு ஆங்கில ஆசிரியரின் கையில் உள்ளது.ஆங்கில ஆசிரியர்கள் வகுப்பறையில்.ஆங்கிலத்தை முறையாக கற்பித்தால் தமிழகத்தில் தமிழ் வாழும் என தாங்கள் கூறியது ஆச்சரியமே ஆனால் உண்மை. கடைசி மனிதனின் பயனுள்ள கருத்துக்களையும் உள்வாங்கி அவற்றையெல்லாம் தொகுத்து அதனை அடிப்படியாக கொண்டு செயல்திட்டங்களை அமைக்கும் தங்களின் மேலான வழிகாட்டுத்தல் போற்றுதலுக்குரியது. நீங்கள் கல்வித்துறையில் இன்று ஏற்றிய அகல் விளக்கு நிச்சயம் ஒருநாள் என் சமுதாயம் ஒளி பெரும் மிகப்பெரிய மகாதீபமாக மாறும் என்பதில் ஐயம் இல்லை.உங்களின் ஆணைக்காக காத்திருக்கும் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

உங்கள் வங்கி கணக்கு புத்தகங்களில் புதிதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

நிறைய வங்கிகள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள்
கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்களை வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் / அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகளில் வழங்குவதில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சொல்கிறது.


ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) வணிக வங்கிகள், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குப் புத்தகங்களின் போதுமான பணப் பரிவர்த்தனை விவரங்களை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருக்கிறது. 'சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வங்கிக் கணக்குகளில் இடப்படும் உள்ளீடுகள் தொடர்பான குறைந்தபட்ச விவரங்களை வழங்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவிக்கிறது.

இருந்தாலும், இப்போதும் நிறைய வங்கிகள் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்களை வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் / அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகளில் வழங்குவதில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சொல்கிறது.

வைப்புநிதி இன்சூரன்ஸ் காப்பீடு
வங்கிகள் 'வைப்புநிதி இன்சூரன்ஸ் காப்பீட்டு' விவரங்களுடன் காப்பீட்டு வரம்பு விவரங்களையும் கணக்குப் புத்தகங்களின் முன்பக்கத்தில் அளிக்க வேண்டும். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் இணையத்தளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்தியாவில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும், வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளுக்கும் சேர்த்து, வைப்புநிதி காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத நிறுவனத்தினால் (DICGC) காப்புறுதி தரப்படுகிறது. ஒரு வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டுத் தோல்வியடைந்தால், DICGC வங்கி வைப்புத் தொகைகளைப் பாதுகாக்கிறது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்/அவள் வைத்திருக்கும் அசல் மற்றும் வட்டி இரண்டிற்குமான அதே அளவுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகிறது.

ஆர்பிஐ சுற்றறிக்கை
ஜுன்22 தேதியிடப்பட்ட ஆர்பிஐ சுற்றறிக்கையில், வங்கிகள் கணக்குப் புத்தகத்தில் சேர்க்க வேண்டிய பணப் பரிவர்த்தனைகளின் விவரங்களை அளிக்கிறது. இங்கே சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:

மூன்றாம் தரப்பினருக்குப் பணம் செலுத்துதல்:
(i) பணம் பெறுபவரின் பெயர்,

(ii) பணப் பரிவர்த்தனையின் முறைமை, தீர்வாக வங்கி வணிக நடவடிக்கைகள், இடை - கிளை, ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, ரொக்கம், காசோலை (எண்)

(iii) பணம் செலுத்தல் வங்கித் தீர்வகம்/வங்கியின் இடை கிளை பரிவர்த்தனை/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி வழியே செய்யப்பட்டிருந்தால், பணப் பரிமாற்றம் செய்தவரின் பெயர்.

வங்கிக் கட்டணங்கள்:
(i) பரிவர்த்தனையின் தன்மை - கட்டணம்/தரகு/அபராதம்/தண்டனைத் தொகை மற்றும் பல.
(ii) கட்டணங்களுக்கான காரணங்கள், விரிவாக - உதாரணமாக. காசோலை திருப்பம் (எண்), வெளியிடப்பட்ட வரைவோலைக்கான தரகு/கட்டணம்/பணம் அனுப்புதல் (எண்), காசோலை சேகரிப்புக்கான வசூல் கட்டணங்கள் (எண்), காசோலை புத்தகம் வழங்கல், குறுஞ்செய்தி எச்சரிக்கை, ஏடிஎம் கட்டணங்கள், கூடுதல் பணத்தைத் திரும்பப் பெறுதல், மற்றும் பல..

தவறாகப் பெறப்பட்ட வரவுத் தொகைகளைத் திரும்பச் செலுத்துதல்:
(i) வரவு நுழைவு திருப்பிச் செலுத்தப்பட்ட தேதி

(ii) திருப்பிச் செலுத்தியதற்கான காரணங்கள், விரிவாக.

கடன்/கடன் மீது வட்டி ஆகியவற்றின் தவணை மீட்பு:

(i) கடன் கணக்கு எண்

(ii) வங்கிக் கடன் கணக்குதாரரின் பெயர்.

நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை உருவாக்கம்: நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை வங்கிக் கணக்கு/ரசீது எண்

(ii) நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை வைத்திருப்பவரின் பெயர்.

POS-ல் பரிவர்த்தனை (விற்பனை புள்ளி):

(i) பரிவர்த்தனை தேதி, நேரம் மற்றும் அடையாள எண்

(ii) POS இன் அமைவிடம்
பண வைப்பு
(i) அது 'பண வைப்பு' என்பதைச் சுட்டிக்காட்டும்

(ii) பண வைப்பீட்டாளரின் பெயர் - தன்னுடைய/மூன்றாம் தரப்பு.

மூன்றாம் தரப்பிலிருந்து ரசீது:
(i) பணம் அனுப்பியவர்/பணம் மாற்றியவர் பெயர்

(ii) பரிவர்த்தனையின் - தன்மை, இடை கிளை, ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, ரொக்கம், மற்றும் பல.


(iii) பணம் செலுத்தல் வங்கியின் இடை கிளை பரிவர்த்தனை/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி வழியே பெறப்பட்டிருந்தால், பணப் பரிமாற்றம் செய்தவரின் பெயர்.

Cursive Writing For Beginners | Writing Cursive Alphabets : Capital | Cursive Handwriting Practice