யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/7/17

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள விரைவில் புதிய பாடத் திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன்

அகிலஇந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் விரைவில்
அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புதிய பாடத்திட்டம் குறித்த 3 நாள் கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த பாடத்திட்டம் நிச்சயம் தரம் வாய்ந்ததாக இருக்கும். அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள ஒரு புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதையொட்டி 54,000 கேள்வி-பதில்கள், வரை படங்கள் அடங்கிய தொகுப்பு 15 நாள்களில் வெளியாகும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கணினி, வைஃபை வசதி ஆகியவற்றை வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. பொதுத் தேர்வு நேரங்களில் சில ஊர்களில் மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வெழுத வேண்டியுள்ளது என்ற கோரிக்கையைக் கருத்தில் கொண்டு நிகழ் கல்வியாண்டில் அருகில் உள்ள மையங்களில் தேர்வெழுத வசதியாக கூடுதலாக 200 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படும். நீட் தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம்.
இந்தத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை: புதிதாக வடிவமைக்கப்படும் புத்தகங்களின் ஒவ்வொரு பக்கமும் மாணவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஒரு மாணவனின் கல்வித் தகுதியை மதிப்பிடும் தேர்வு முறையானது, அறிவியல் விளையாட்டு போன்ற எந்தக் குறிப்பிட்ட துறையில் அந்த மாணவன் சிறந்து விளங்குகிறான் என்பதையும் மதிப்பிடும் வகையில் மாற்றப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் இடம் பெறாத தகவல்களை ஆசிரியர்களும், பெற்றோரும் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ருஷிகேஷ் சேனாபதி: புதிய பாடத் திட்டத்தில் மனப்பாட முறையைக் காட்டிலும், மாணவர்களின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த மாதிரியான பாடங்கள், வடிவமைப்பை விரும்புகிறார்கள் என்பது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். புரிதலுக்கு முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப்படுவதன் மூலம் தேசிய அளவிலான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் சாதிக்க முடியும்.

2030-ஆம் ஆண்டுக்கும் ஏற்ற பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்: மு.ஆனந்தகிருஷ்ணன்

வரும் 2030-ஆம்ஆண்டு வரையிலான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என கலைத்திட்ட
வடிவமைப்புக்குழுவின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறினார். சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய கருத்தரங்கில் அவர் பேசியது:
தமிழகத்தில் 58,000 பள்ளிகளில் 5.7 லட்சம் ஆசிரியர்களும் 1.30 கோடி மாணவர்களும் உள்ளனர். அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் வரும் 2030-இல் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்வார்கள். அந்த நேரத்தில் மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாகவும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிடும். அந்தச் சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் அமையும். இனி வரும் காலங்களில் தேவைப்படும் போதெல்லாம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். படங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் ஒவ்வொரு பாடமும் மாணவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கேற்ப ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுவது அவசியம்.
பாடப்புத்தகங்கள், நூல்நிலைய புத்தகங்களை மட்டும் படிக்காமல் இதர தொழில்நுட்பக் கருவிகள், சேவைகளையும் பயன்படுத்த மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அடுத்து வரப்போகும் தேர்வு முறை மாணவர்களை அச்சுறுத்துவதாக இல்லாமல், மகிழ்ச்சியுடன் எழுதும் வகையில் இருக்க வேண்டும். இந்தப் பாடத்திட்டம் மூன்று கட்டங்களாக வடிவமைக்கப்படவுள்ளது.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு: தற்போதுள்ள தலைமுறை இரண்டு விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். ஒன்று கவனச் சிதறல். மற்றொன்று எந்த விஷயமும் எளிதாகக் கிடைக்கப் பெறுதல். இதனால் மாணவர்களின் சிந்தனைத் திறனும், போராட்டக் குணமும் குறைந்து விடுகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகும். மனப்பாடத்தை மாபெரும் அறிவு என நாம் கொண்டாடும் வரை கல்விக்கு உய்வு இல்லை. அவர்களை ஒரே முறையில் சிந்திக்க நாம் பழக்கி விட்டோம். இதுதான் இப்போது சிறந்த வளர்ப்பு முறையாகக் கருதப்படுகிறது. மாணவர்களைப் பல வகைகளில் சிந்திப்பதற்கான சாளத்தை கல்வி உருவாக்கிக் கொடுக்குமேயானால் அந்தக் குழந்தை தனது உண்மையான ஆற்றலை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்த உதவியாக இருக்கும். அந்த வகையில் கல்வியை மாணவர்கள் நேசிக்கும்படி செய்து விட்டால் 50 சதவீதம் தானாக கல்வி நிறைவு பெறும்.
ஒவ்வொரு பாடத்தையும் வடிவமைக்கும்போது அதை வாழ்க்கையோடு எப்படி தொடர்புபடுத்தி அந்தக் குழந்தை புரிந்துகொள்கிறது என்பது முக்கியம். எந்த மாற்றத்தையும் எதிர்கொள்ளவும் நாம் மனரீதியாக தயாராக இருந்தால்தான் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். சுவாரஸ்யமாகவும், சுவையாகவும் இருக்கக்கூடிய பாடத்திட்டம் அமையும்பட்சத்தில் கல்வி கற்கண்டாக மாறும். கற்பது அனுபவமாக மாறும். இஸ்ரேல் நாட்டில் ஒருவர் கல்வியில் இடை நின்றவர் எனக் குறிப்பிட்டால் அவர் பி.ஹெச்டி முடிக்கவில்லை என்று அர்த்தம். அந்த அளவுக்கு அங்கு படித்தவர்கள் உள்ளனர். நமது கல்வி முறையில் மிகச் சரியான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அறிவின் சிகரமாக தேசத்தை மாற்ற முடியும் என்றார்.

பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன்: வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும். மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டால் அன்று நடத்தப்பட்ட பாடங்கள் பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் அனுப்பி வைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். மாணவர்களின் தரம் உயரும்போது ஆசிரியர்களின் பெருமை மேலோங்கும்.

பி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., புது அறிவிப்பு

ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் நான்கு வகையாக தர வரிசை செய்யப்படும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ.,
அறிவித்துள்ளது. பி.எட்., கல்லுாரிகளை புதிய தரவரிசைக்குள் கொண்டு வர, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை என்.சி.டி.இ.,யின் ncte-india.orgஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்கட்டமைப்பு, கல்வியின் தரம், மாணவர்களின் தேர்ச்சி, ஆசிரியர்களின் திறன் அடிப்படையில், கல்லுாரிகள் தரவரிசை செய்யப்படும்; 'ஏ, பி, சி, டி' என, நான்கு வகைகளில், கல்லுாரிகள் பிரிக்கப்படும். அதில், 'டி' பிரிவில் இடம் பெறும் கல்லுாரிகள் மூடப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தர வரிசைக்காக கல்லுாரிகள் ஆய்வு செய்யப்படும்
பி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., புது அறிவிப்பு

ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் நான்கு வகையாக தர வரிசை செய்யப்படும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., அறிவித்துள்ளது. பி.எட்., கல்லுாரிகளை புதிய தரவரிசைக்குள் கொண்டு வர, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை என்.சி.டி.இ.,யின் ncte-india.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்கட்டமைப்பு, கல்வியின் தரம், மாணவர்களின் தேர்ச்சி, ஆசிரியர்களின் திறன் அடிப்படையில், கல்லுாரிகள் தரவரிசை செய்யப்படும்; 'ஏ, பி, சி, டி' என, நான்கு வகைகளில், கல்லுாரிகள் பிரிக்கப்படும். அதில், 'டி' பிரிவில் இடம் பெறும் கல்லுாரிகள் மூடப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தர வரிசைக்காக கல்லுாரிகள் ஆய்வு செய்யப்படும்

தேர்வு, மதிப்பீடு முறையில் மாற்றம் தேவை : கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்

மாணவர்களுக்கு என்ன தெரிகிறது என்ற வகையில், தேர்வு மற்றும் மதிப்பீடு
முறையை மாற்ற வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசின் புதிய பாடத்திட்ட கருத்தரங்கில், கல்வியாளர்கள் பலர் பங்கேற்று கருத்து தெரிவித்தனர். அவர்கள் பேசியதாவது: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன்:
இந்தஆண்டு, முதல் வகுப்பு படிக்கும் மாணவர், 2030ல், பிளஸ் 2 முடிப்பார்; அப்போது, தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார அளவிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இதை சமாளிக்கும் வகையில், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.பாடத்தில் உள்ளதை மட்டுமே தேர்வில் மதிப்பிடும், தேர்வு முறையை மாற்ற வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.
ஜெர்மன் துணை துாதர், அஷிம் பேபிக்: கல்வியாளர்களின் கருத்தை கேட்டு, பாடத்திட்டத்தை மாற்றுவது தான், நல்ல அடித்தளம். அடுத்த, 12 ஆண்டுகளில் ஏற்பட போகும் மாற்றங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும். ஒரு நாடு, மாநிலம் என, குறுகிய வட்டத்தில் இல்லாமல், சர்வதேச அளவில், அனைத்து நாடுகள், மக்களுடன் பழகும் வகையில் மாணவர்கள் தயாராக வேண்டும். அதற்கேற்ற, சுயமாக நிர்ணயிக்கும், தன்னாட்சி முறை பாடத்திட்டம் தேவை.இங்கிலாந்து, பின்லாந்து, ஜெர்மன் என, பல நாடுகளில், தன்னாட்சி பாடத்திட்ட முறை உள்ளது. சமூக அறிவியல், மனோதத்துவவியல், சூழ்நிலையியல் போன்றவற்றில், அதிக முக்கியத்துவம் தேவை. மாணவர்கள் தாமாக சிந்தித்து, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள, பாடத்திட்டம் உதவ வேண்டும்.
இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை: தமிழகத்தில், அரசு பள்ளியில், தமிழில் தான் படித்து, இந்த நிலைக்கு, நான் வந்துள்ளேன். இஸ்ரோவில், இன்னும் பல விஞ்ஞானிகள், தமிழகத்தை சேர்ந்தவர்களாக பணியாற்றுகின்றனர். தாய்மொழி கல்வியை, தவறாக நினைக்கக்கூடாது. ஆனால், பாடப்புத்தகத்தை கடந்து, படிக்க வேண்டும். மாணவர்களுக்கு என்ன தெரியவில்லை என, அளவிடும் தேர்வு முறை மாறி, அவர்களுக்கு என்ன தெரியும் என்ற தேர்வு முறைக்கு வர வேண்டும். தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ருஷிகேஷ் சேனாபதி: என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், 2005ல், தேசிய பாடத்திட்ட விதிகள் வகுக்கப்பட்டன. இதில், தற்போதைய மாணவர்களுக்கு தேவையான, அனைத்து பாடத்திட்ட முறைகளும் உள்ளன. ஆனால், எத்தனை பாடத்திட்டம் கொண்டு வந்தாலும், ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் முறை, மாற வேண்டும்.
புத்தகங்களில் உள்ளதை அப்படியே கற்பிப்பது மட்டுமின்றி, அதை, வெளிப்புற அனுபவங்களின் படி, கற்றுத்தர வேண்டும். வகுப்பை விட்டு, பாடப்புத்தகத்தை கடந்து, கற்று தர வேண்டும். வெறும் மதிப்பெண்ணை மட்டும் பார்க்காமல், தனித்திறன் வளர்க்க வேண்டும். தேர்வில், சுயமாக சிந்தித்து பதில் அளிக்கும் சிக்கலான வினாக்களுக்கு, மாணவர்கள் தயாராக வேண்டும்.

பாடத்திட்ட குழு உறுப்பினர், சுல்தான் அகமது இஸ்மாயில்: இந்தியாவில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. கல்லுாரி, பல்கலைகளில் மதிப்பெண்ணுக்கே முக்கியத்துவம் கிடைக்கிறது. பாடத்திட்டத்தை தயாரிக்கும், தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனமோ, பள்ளிக்கல்வித்துறையோ, மதிப்பெண் அடிப்படையில் தான் வேலை தருகிறது. அதனால், மாணவர்கள் மதிப்பெண்ணுக்காக படிக்கும் சூழல் உள்ளது. இதை கொள்கை அளவில் மாற்றுங்கள். திறமைக்கு மட்டுமே மதிப்பு என்றால், அதற்கேற்ப, மாணவர்களும், ஆசிரியர்களும் உடனே மாற தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

தெலுங்கானா அரசு மாணவர்களுக்கு அறிவித்துள்ள அசத்தல் அறிவுப்புகள்

ஐதராபாத்: பள்ளி மாணவர்களின் புத்தக சுமைக்கு, எடை கட்டுப்பாடு விதித்துள்ளதுடன், 'ஐந்தாம் வகுப்பு வரை, 'ஹோம் ஒர்க்' கிடையாது' என்றும், தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. 
மாணவர்கள் அதிக புத்தக சுமையை சுமந்து செல்வதால், உடல்நல பாதிப்புடன், மனநல பாதிப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், புதிய அறிவிப்புகளை, தெலுங்கானா அரசு நேற்று வெளியிட்டு உள்ளது.அதில் கூறியுள்ளதாவது:மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், ஆரம்பப் பள்ளி மாணவர்கள், 6 - 12 கிலோ வரையிலும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 17 கிலோ வரையிலும், புத்தக சுமையை துாக்கிச் செல்லும் நிலை உள்ளது. இதனால், அவர்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன; மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மாணவர்களுக்கான புத்தக சுமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது; அதன்படி, முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் அதிகபட்சம், 1.5 கிலோ புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், 3 கிலோ; ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள், 4 கிலோ புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.

எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், 4.5 கிலோ; 10ம் வகுப்புக்கு, அதிகபட்சம், 5 கிலோ எடையுள்ளதாகவே புத்தக சுமை இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'ஹோம் ஒர்க்' எனப்படும், வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது. இவற்றுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

வி.ஏ.ஓ., தேர்வு தள்ளிவைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், கிராம நிர்வாக அலுவலருக்கான, 
வி.ஏ.ஓ., தேர்வு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, பல்வேறு வகை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி இடங்களில், டி.என்.பி.எஸ்.சி., மூலம், புதியவர்கள் நியமிக்கப்படுகின்றனர். 
இதற்காக, போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் மற்றும் துறை ரீதியான புதிய நியமனம் குறித்து, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஆண்டு தேர்வு திட்ட அறிக்கை வெளியிடப்
படுகிறது.இந்த ஆண்டுக்கான திட்ட அறிக்கைப்படி, வருவாய் துறையில், வி.ஏ.ஓ., பதவிக்கான, 494 காலி இடங்களை நிரப்ப, செப்., 17ல், எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும்.
இந்த தேர்வுக்கான, அதிகாரபூர்வ அறிவிக்கை, ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜூலை மூன்றாம் வாரமாகியும், இன்னும் 
அறிவிக்கை வெளியாகவில்லை.இது குறித்து, தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை அணுகிய போது, 'வி.ஏ.ஓ., தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது' என, அதிகாரிகள் 
தெரிவித்து உள்ளனர்.அதாவது, மாநிலம் முழுவதும், 32 மாவட்டங்களிலும், வி.ஏ.ஓ., காலியிட விபரங்கள் இன்னும், தமிழக அரசிடமிருந்து, டி.என்.பி.எஸ்.சி.,க்கு வரவில்லை.
காலியிட விபரம் மற்றும் புதிய நியமனத்துக்கான அனுமதி கடிதம், அரசிடமிருந்து வந்ததும் தேர்வு அறிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
'தற்போதைய நிலவரப்படி, ஆகஸ்டில் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகவும், அக்., இறுதி வாரத்தில் தேர்வு நடக்கவும் வாய்ப்புள்ளது' என, அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

பிளஸ் 2 சான்றிதழில் தமிழ் பிழை திருத்தம் தேர்வு துறை அறிவிப்பு

பிளஸ் 2 சான்றிதழ்களில், தமிழ் பெயர்களில் திருத்தம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில், இந்த ஆண்டு முதல், ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில், பல மாணவர்களுக்கு, தமிழில் பிழைகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. 
இதையடுத்து, சான்றிதழை திருத்தம் செய்ய, தேர்வுத் துறை அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் உத்தரவிட்டார். அதனால், பெயர் திருத்தம் செய்ய, வரும், 24 வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், இதற்கான கடிதத்தை வழங்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை, இணையதளம் மூலம் அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பி, தலைமை ஆசிரியர்கள் திருத்தம் செய்யலாம். திருத்தப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 31 முதல், பள்ளிகளில் பெறலாம். அப்போது, பழைய அசல் மதிப்பெண் சான்றிதழை, பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனரகம் 
அறிவித்துள்ளது.

332 இடங்களுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்கியது

கால்நடை மருத்துவ படிப்புகளில் 332 இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2017–2018–ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றும்(வியாழக்கிழமை), தொழில்நுட்ப பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு நாளையும்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
பொதுப்பிரிவில் (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) 320 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதன்படி 48 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 272 இடங்களுக்கும், அதேபோல் தொழில்நுட்ப பிரிவில் 60 இடங்கள் என மொத்தம் 332 இடங்களுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.
இதில் பொதுக்கல்வி பிரிவில் (பி.வி.எஸ்.சி., ஏ.எச்.) மாற்றுத்திறனாளிகளுக்கு(சிறப்பு பிரிவு) 16 இடங்களும், விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு 5 இடங்களும் (ஆண்–3, பெண்–2), முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு 2 இடங்களும், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 16 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நேற்று கலந்தாய்வு நடைபெற்றது.
இதுபோக, மீதமுள்ள 233 இடங்களுக்கு இன்று பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த இடங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 115 பேர் கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதேபோல், தொழில்நுட்ப பாடப்பிரிவுகளான உணவு தொழில் நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகியவற்றில் உள்ள 80 இடங்களுக்கான கலந்தாய்வும் இன்று நடைபெறுகிறது. இந்த இடங்களை பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியவர்களுக்கு ஒதுக்கீடு கிடையாது.
அந்தவகையில், உணவு தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 396 பேரையும், கோழியின தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 364 பேரையும், பால்வள தொழில்நுட்பத்தில் உள்ள 20 இடங்களுக்கு 520 பேரையும் கலந்தாய்வுக்காக அழைத்துள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்குழு தலைவரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலருமான சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

19/7/17

மாண்புமிகு கல்வித்துறை செயலரின் வழிகாட்டுதலின் படி போட்டித் தேர்வுகளிக்கு பயிற்சி அளிக்கவும் போட்டித்தேர்வுகளுக்கான கட்டகங்கள் தயார்செய்யவும் விரும்பும் ஆசிரியர்கள் நிரப்பவும்.

TNTET: சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த10 சந்தேகங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள்

1) Identification Cettificate ல் subject code இரண்டு கட்டம் உள்ளது
எவ்வாறு நிரப்புவது ( உதரணம் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் )

2)Identification Cettificate ல் பெயர் தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா



 3)Identification Cettificate ல் கையெப்பம் தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா

4)சுய விவர படிவத்தில் அனைத்தும் பெயர் உட்பட தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா

5)+2 இவற்றில் முக்கிய பாடம் என்ற கட்டத்தில் வரலாறு , கணிதம் , இப்படி படித்த முக்கிய பாடம் எழுத வேண்டுமா

6) D.T.Ed ல் முக்கிய பாடம் இல்லை அதில் எழுவும் எழுத வேண்டுமா  அதை நடத்தும் தேர்வு வாரியம் எது ( B.Lit with D.TEd=  B.Ed  தேர்வர்கள் மட்டும்)

7) பட்டப்படிப்பில் முக்கிய பாடம் எழுத வேண்டுமா அதில் எதுவும் துணைப்பாடம் எழுத வேண்டுமா

8) இடம் தேதி என்ற இடத்தில் நமது ஊர் எழுத வேண்டுமா அல்லது சான்றிதழ் சரிபார்க்கும் ஊர் அன்றைய தேதி எழுத வேண்டுமா

9) சுய விவர படிவத்தில் போட்டோவில் அரசிதழ் பெற்ற அலுவலரிடம் இரண்டு நகல்களில் கையெப்பாம் வாங்க வேண்டுமா(Identification Cettificate கண்டிப்பாக வாங்க வேண்டும்)


10) தேர்ச்சி பெற்ற மாதம் வருடம் என்ற கட்டத்தில் மேல் உள்ள தேர்வு எழுதிய மாதம் ஆண்டு எழுத வேண்டுமா அல்லது கீழ் உள்ள ரிசல்ட் தேதி மாதம் எழுத வேண்டுமா

மாண்புமிகு கல்வித்துறை செயலரின் வழிகாட்டுதலின் படி போட்டித் தேர்வுகளிக்கு பயிற்சி அளிக்கவும் போட்டித்தேர்வுகளுக்கான கட்டகங்கள் தயார்செய்யவும் விரும்பும் ஆசிரியர்கள் நிரப்பவும்.

Welfare of Differently Abled Persons Department –Early Intervention Centre for children with Autism in Siragugal Special School, Thanjavur District-Sanction of Grant- Orders- Issued.

பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு

தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கி ணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்தபள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர். பல்வேறு விதிகள் அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம்போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன. குளறுபடிகள் கண்டறிந்துள்ளது.

அதனால், பள்ளிகளின் திட்டங்களை வகுப்பதிலும், ஒழுங்குமுறை செய்வதிலும், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வியின் ஆண்டறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, குளறுபடிகளை கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து நிர்வாகங்களையும், ஒரே குடையின் கீழ் வரும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்படக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது - 'துக்ளக்' கட்டுரை

ஆசிரியர்கள் பற்றி 'துக்ளக்'கில் (12.7.2017) வெளி வந்த கட்டுரையின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது என்கிற அளவுக்கு 'துக்ளக்'கில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர்கள்
கவனித்தார்களா என்று தெரியவில்லை, 'துக்ளக்' எழுதியுள்ளவை இதோ!)*

உண்மையான அக்கறை திருவாளர் அமைச்சர் பெருமகனுக்கோ, அவரது துறை அதிகாரிகளுக்கோ இருந்திருந்தால், எங்கெங்கோ பட்டி, தொட்டிகளில் 'பள்ளிக்கூடம்' என்ற பேரில் நின்று கொண்டிருக்கிற, எப்போது இடிந்து விழுவோம் என்று தெரியாத கட்டிடங்களைப் பற்றியோ, அதில் படிக்கிற ஏழை மாணவர்கள், அங்கு வேலை பார்க்கிற ஆசிரியர்கள் என்கிற பிழைப்புவாதிகளைப் பற்றியோ அமைச்சரின் அறிக்கை, பேட்டிகளில் வெறும் தகவல்களாவது வந்து விழுந்திருக்கும்.*

*அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கிற ஆசிரியர்களின் கல்வித் தரம் ஒழுங்காக இருந்தால் அல்லவா மாணவர்களின் கல்வியில் தரம் வரும். பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கே வருவதில்லை.*

*லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து, படித்து ஆசிரியர் வேலையில் சேருகிறவருக்கு, மாணவர்களின் படிப்பைப் பற்றி என்ன கவலை? மாணவர்கள் படித்தாலென்ன, கழுதை மேய்க்கப் போனாலென்ன? அவர்களுக்கு என்ன வந்தது? ரியல் எஸ்டேட், வட்டிக்குப் பணம் விடுவது, கடை கண்ணியைத் திறந்து வியாபாரம் செய்வது என்று சகல பிஸினஸ்களிலும் இறங்கி விட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்கக் கூட நேரமில்லை.*

*ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைக்கு வருகிறார்களா, வேலைக்கு வந்தால் முழு வேலை நேரத்தையும் பள்ளிகளில்தான் செலவிடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க எந்த வழியுமில்லை. இதையெல்லாம்தான் நீதிபதி கிருபாகரன் தனது உத்திரவில் குறிப்பிட்டிருக்கிறார்.*

*இவ்வளவு மோசமான நிலையில், கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க தமிழர்களுக்கு என்ன பைத்தியமா பிடித் திருக்கிறது?*

ஆசிரியர்களே 'துக்ளக்'கை தெரிந்து கொள்வீர்!*

RTI - சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை..!

சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட
கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
இந்தியாவில் உள்ள தேசிய நெடுங்சாலைகளில் பயணம் செய்யும்போது கட்டாயம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் கார், லாரி என வாகனத்திற்கு வாகனம் மாறுபடும்

இந்தகட்டண விவகாரத்தை வைத்து, பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் கேட்டிருந்தார். அதற்கு விளக்கமளித்த அரசு, சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு வரி இல்லை என்றும் மாறாக அது சேவை கட்டணமாகவே வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சுங்கச்சாவடியில் மூன்று நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருந்தால் அவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுங்கச்சாவடிகளில் மிக நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்கும் வாகனங்கள் 3 நிமிடங்களுக்கு மேல் நின்றால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிய வந்துள்ளது.

நம் மாணவர்களைத் தமிழக அரசும் கைவிடலாமா? - HINDU தலையங்கம்

பொதுமருத்துவம், பல் மருத்துவம் ஆகிய பட்டப் படிப்புகளுக்காக ‘நீட்’
தேர்வு எழுதியவர்களில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்களை ஒதுக்கித் தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்துசெய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் தமிழக மாணவர்களுக்குக் கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருக்கிறது.
ஆக, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையாக இருக்காது என்றும், தமிழக சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் மாணவர்களை நம்ப வைத்துத் தமிழக அரசு ஏமாற்றியிருக்கிறது என்றுதான் கல்வியாளர்கள் பலரும் கருதுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான சமுக நீதியையும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்புகளையும் ‘நீட்’ தேர்வும், உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பும் ஒரேயடியாகத் துடைத்துப்போட்டிருக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லையென்றால், மாநில அரசும் அப்படியே இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

‘நீட்’ தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் 72% மத்திய கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கே சென்றுவிடும். தமிழ்நாட்டில் மருத்துவ சேவை சிறப்பாக நடப்பதற்கு முக்கிய காரணம், மருத்துவக் கல்வியின் முதுநிலை படிப்புகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குத் தரும் முன்னுரிமைதான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மருத்துவக் கல்வி என்பது முழுக்க முழுக்க இப்போது வணிகமயமாகிவிட்டதால், பொதுத் தகுதித் தேர்வு நடத்துவது தகுதியுள்ள மாணவர்களை அடையாளம் காண உதவுகிறது என்று கூறக்கூடும். ஆனால் அது அரசின் சமூக, பொருளாதார லட்சியங்களுக்கு முரணாக இருந்துவிடக் கூடாது. வெவ்வேறு வகையிலான பிராந்தியங்கள், பொருளாதாரப் பின்னணிகள், மொழிகள் உள்ள நாட்டில் எல்லோரும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்திலேயே படிக்க வேண்டும், ஒரே மாதிரியே தேர்வுகளை எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது.


இவ்விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து மத்திய அரசு ஒரு முடிவெடுக்க வேண்டும். அதற்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம். நாடாளுமன்ற இரு அவைகளையும் சேர்த்து 48 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கு நம் மாணவர்கள்மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமென்றால், இந்த பலத்தைக் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நசுக்கப்பட்டதற்கு ஆளும் அதிமுகவும் ஒரு காரணம் என்ற அவப்பெயரை வரலாறு என்றென்றும் சொல்லிக்கொண்டிருக்கும்!

ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய பலன் : பி.எப்., ஆணையர் தகவல்

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்தஊழியர்கள், தற்போது, பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்களை பெறலாம்,'' என, தமிழகம்
மற்றும் புதுச்சேரி மாநிலங்களின், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர், பி.டி.சின்ஹா தெரிவித்தார்.

பழைய பென்ஷன் திட்டம் வந்தால் தான் -ஜெ.ஆன்மா சாந்தியடையும் அடித்து சொல்கிறது -ஜாக்டோ -ஜியோ

7ஆவது ஊதிய குழு குறித்து தமிழக நிதியமைச்சர் தகவல்

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
சென்னை:

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். ‘தனது மகள் கல்வியில் சிறந்த நிலையை நிச்சயம் அடைவாள்’, என்று உறுதியுடன் அவர் கூறுகிறார்.

“அரசுப் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் சேர்க்கக்கூடாது?”, என்று சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பினார். இந்தநிலையில் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

அவரது பெயர் லலிதா, பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை கமிஷனர் பதவி வகிப்பவர். கல்வித்துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இவரது ஒரே மகள் தருணிகா. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான லலிதா தனது மகள் தருணிகாவை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் நேற்று சேர்த்தார்.

பொதுவாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. பெரிய டாக்டராகவோ, என்ஜினீயராகவோ, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ ஆக்கி பார்க்கவேண்டும் என்ற ஆசையில் நகரில் உள்ள பெரிய பள்ளிகள் சேர்ப்பார்கள்.

ஆனால் அரசு அதிகாரியாக இருந்தபோதிலும் எப்படி தன் மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் உதித்தது? என்பது குறித்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

‘ஏதாவது மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், நீ அதை உண்டாக்கி காட்டு’, என்ற பழமொழி உண்டு. என்னை பொறுத்தவரை சமுதாயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். அதை நான் பின்பற்றியிருப்பதாலேயே எனது மகளை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து இருக்கிறேன். இதுதான் எனது ஆசையாகவும் இருந்தது.

மாநகராட்சி பள்ளிகள் தற்போது நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. தகுதியான, திறமையான ஆசிரியர்கள் இங்கு உள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தரம் வாய்ந்ததாகவே மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இன்றைய தினம் என் பிள்ளையை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து இருக்கிறேன். அவள் நிச்சயம் இங்கு கல்வி கற்று சிறந்த நிலையை அடைவாள் என்பதில் உயரிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை பின்பற்றி மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கவேண்டும். மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயரவேண்டும் என்பது தான் என் விருப்பம்.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை துணை கமிஷனராக கடந்த 2013 முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றி இருக்கிறேன். அப்போதே ‘என் வயிற்றில் வளரும் குழந்தையை நிச்சயம் மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும்’, என்று நினைத்தேன். இப்போது மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை கமிஷனராக இருக்கும்போதே நினைத்ததை செயல்படுத்தி உள்ளேன்.

எனதுகணவர் சுமந்த் மற்றும் எனது பெற்றோர் ராஜேந்திரன்-தமிழரசி ஆகியோர் நான் எடுத்த முடிவு சரிதான் என்று அதனை வரவேற்று, எல்லா விதத்திலும் ஊக்கம் அளித்தனர். எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா பெருமிதத்துடன் கூறினார்.


தனதுஒரே மகளை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

14/7/17

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த குழு: செங்கோட்டையன் அறிவிப்பு.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

செங்கோட்டையன் அறிவித்துள் ளார்.சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய திமுக உறுப்பினர் க.பொன்முடி,
‘‘கடந்த 2012-ல் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு முதலில் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. தங்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால்கூட போதும். ஆனால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.

இதனைவலியுறுத்தி சென்னையில் இன்று (ஜூலை 12) போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்’என்றார்.அவருக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘ஊதிய உயர்வு உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க குழு அமைத்து தீர்வு காணப்படும்’’ என்றார்.