யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/10/17

வணக்கம். இன்றைய ஜேக்டோ ஜியோ கூட்டத்தில் கலந்து கொண்ட SSTA தோழர் ஒருவர் பதிவிட்டது...'



இ.நி.ஆ களின் நிலைபற்றி ஜேக்டோஜியோவின்  நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்காக சென்றேன்.உள்ளபடி உரைக்கின்றேன் .

கூட்டம் உணர்வு பூர்வமாகவே இருந்தது. cpsக்கு தரும் முக்கியத்துவம், ஊதிய முரண்பாடுகளுக்கு தரவில்லையே என்ற ஆதங்கத்தை இ.நி.ஆ சார்பாக  உரைப்பதற்குதான் சென்றேன். ஆனால்,அதற்கு வாய்ப்பில்லாமல்  பங்கேற்ற அத்துனை சங்க வாதிகளும்  இடைநிலை ஆசிரியர் களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மிக கடுமையானது அதை களைந்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள். 

சங்கங்களின்பால் அவநம்பிக்கையோடு சென்ற எனக்கு  , இன்னும் ஜேக்டோ ஜியோவை நம்பலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நமக்காக அரசு ஊழியர்களும் , பிறதுறைசார்ந்த சங்க வாதிகளும் நமக்காக குரல் கொடுத்து , இன்னும் மனித நேயம் சாகவில்லை என்பதை அறிய முடிந்தது.

தோழர்கள் தாஸ், பாலசந்தர், அன்பரசு, மாயவன்,மோசஸ், இன்னும் பிற தலைவர்கள் அத்துனைபேருமே வருகின்ற நீதிமன்ற அமர்வில் நமது ஊதிய முரண்பாடு  முக்கிய பிரச்சினையாக விவாதிக்கப்படும் என்பதை தெரிவித்தார்கள். 

நீதிமன்றத்தின் மூலம் நமக்கு முடிவு எட்டப்படவில்லையென்றால்,24/10/2017 அன்று ஜேக்டோ ஜியோ மீண்டும் கூடி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

23/10/2017 நமக்கானதாக அமைய பிரார்திப்போம்.

ஜாக்டோஜியோவை நம்பி பின்சென்றோம் .
நம்பிக்கை வீணாகவில்லையென'்றே கருதுகின்றேன்.

நன்றி. '
[3:12 AM, 10/14/2017] +91 84897 46426: 

மத்திய அரசில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் ஊதியம் பெறும் அவல நிலையில் தமிழக இடைநிலை ஆசிரியர்கள்




ஜூலை 2009 ல் பணியில் சேர்ந்தஇடைநிலை ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் படி எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது...?

01-01-2016 அன்று
Pay-6890
Grade pay-2800
Personal pay-750
HRA-200
MA-100


பெற்ற இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய நிர்ணயம்...

Pay-6890+Grade pay-2800=9690

9690×2.57=24903

அரசாணை எண்: 303 நாள்: 11-10-2017ன் பக்கம் 21ல் உள்ள Pay Matrixன் படி,
தர ஊதியம் 2800க்கு கீழ் level 8க்கு நேராக கிடைமட்டமாக உள்ள 24903க்கு அடுத்த ஊதியம் 25300.

ஆகவே புதிய ஊதிய நிர்ணயத்தில், 01-01-2016ல் ஊதியம் 25300+PP 2000= 27300

இவர் ஜீலை 2016 மாத ஆண்டு ஊதிய உயர்வைக் கொண்டிருப்பார்,

01-07-2016ல் கீழ் level 9க்கு நேராக கிடைமட்டமாக உள்ள  அடுத்த ஊதியம் 26100.

01-07-2017ல் கீழ் level 10க்கு நேராக கிடைமட்டமாக உள்ள  அடுத்த ஊதியம் 26900. 

01-10-2017ல் ஊதியம்-26900 தனி ஊதியம்-2000 அகவிலைப்படி(5%)-1445 வீட்டு வாடகைப்படி-400 மருத்துவப்படி-300 மொத்தம் -31045

பணியில் சேர்ந்து 8 ஆண்டுகள் முடித்த ஒரு இடைநிலை ஆசிரியர் புதிதாக பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர் பெறும் ஊதியத்தை விட மிகவும் குறைந்த ஊதியம் பெறும் நிலை. ..

இந்த நிலை மாறிட 2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்த 21000 இடைநிலை ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினால் தான் இழந்த ஊதியத்தை பெற முடியும். 

ஒற்றுமை ஓங்குக.  விரைவில் களப்போராட்டம் மற்றும் சட்ட போராட்டம். 
ஆயத்தமாவோம். .

ஜேக்டோ ஜியோ முடிவுகள்




1)  20/10/2017 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஊதியக்குழு முரண்பாடுகளை, அரசின் ஏமாற்றுத்தனத்தை கூட்டம்போட்டு விளக்குதல்


2) 23/10/2017 க்குள் இடைநிலைஆசிரியர் உட்பட முரண் நீக்கப்பட்டு 21 மாத நிலுவை வழங்கப்படாவிட்டால் போராட்ட நடவடிக்கைகளை 24/10/2017 அன்று ஜேக்டோ ஜியோ கூடி முடிவெடுக்கும்.

13/10/17

FLASH NEWS-ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக
தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு அதிகரிக்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.6.100லிருந்து ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.77 ஆயிரத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இந்த சம்பள உயர்வு 2016ம் வருடத்தை கருத்தியலாக,1.10.17 முதல் பண பயனுடன்அமல்படுத்தப்படும்.

பென்சன்தாரர்கள்
பென்சன் மற்றும் குடும்ப பென்சன்தாரர்களுக்கும் 2.57 மடங்கு பென்சன் அதிகரிக்கப்படும். இதன் மூலம் குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 ஆகவும், அதிகபட்ச பென்சன் ரூ.1,12,500 மற்றும் குடும்ப பென்சன் 67,500ஆகவும் இருக்கும்.ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதல் செலவு

சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள, கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ. 3 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.11 ஆயிரமாகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள ஊழியர்களின் நலனை கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும்.இதனால், அரசுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனை அரசே ஏற்று கொள்ளும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வீட்டு வாடகை படியும், மருத்துவ படியும் ஏமாற்றம்.

Image may contain: text

ஊதியக்குழு அறிவிப்பு ஏமாற்றம்*

*21 மாதங்களுக்கு நிலுவைத் தொகை இல்லை.

*மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ 18,000/
என அறிவித்ததை தற்போது 21,000 ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
ஆனால் தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ 15700.

Innovations In Educational Administration -என்ற தலைப்பின் -கீழ் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தேசிய விருது வழங்குவதற்கு பரிந்துரை செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு? விரிவான செய்தி தொகுப்பு.

அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'மத்திய  ஊதியக் குழு  திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை  வழங்கி வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக்கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழுதான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது.

இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வுசெய்து, இன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை  செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.  தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது  என தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன்.  இதன்படி, தற்போது  உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100  மற்றும் அதிகபட்ச ஊதியம்  ரூ.77,000  என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 மற்றும்  அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 எனவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான  உயர்வைவிட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியைப் பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம்,  குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்துச் செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின்  குறைந்தபட்ச  ஊதியம் ரூ.3000 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம்,  நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தமுடிவுகளின் அடிப்படையில்,  அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.  இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு  அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


  இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரண்டு  லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 இல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி, பின்னர் புதிய ஊதிய மாற்றம் செய்திட வேண்டி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் விண்ணப்பம்_ 11/10/17.

Image may contain: text

TN-7th PC- HRA SLAB


TN -7th PC- தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை (3% + 3 %)

TN -7th PC- PAY FIXATION TABLE



TN-7th PC- நகர ஈட்டுப்படி குளிர்கால படி ,மலை வாழ் படி மற்றும் இதர படிகள்



PAY DIFFERENCE FOR NEW & OLD SCALE (6th & 7tH PAY COMMISSION)

அரசாணை எண் 300 நிதித்துறை நாள் 10.10.17- அகவிலைப்படி 3%- 01.07.2017 முதல் உயர்த்தி (136% to 139% ) ஆணை வெளியிடப்படுகிறது


TN-7th PC-இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை

7th PC-புதிய ஊதிய விகிதம் அமுலுக்கு வரும் நாள் விவரம்

FLASH NEWS-G.O.Ms.No.303, Dated 11th October 2017-ABSTRACT OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified. Posted: 12 Oct 2017 01:00 AM PDT G.O.Ms.No.303, Dated 11th October 2017-ABSTRACT OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified NMMS EXAM | 2017 REG - DIRECTOR PROCEEDINGS! Posted: 11 Oct 2017 08:04 PM PDT JACTTO - GEO அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது

ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்து
பரிசீலனை செய்ய ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) மதியம் சரியாக 2.00 மணிக்கு சென்னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.


 எனவே ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழவில் இடம் பெற்ற அனைத்து துறைவாரி சங்க தலைவர்கள் (சங்கத்திற்கு ஒருவர் மட்டும்) தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மு.சுப்பிரமணியன்,
மாயவன்,
மீனாட்சி சுந்தரம்,
தாஸ்,
அன்பரசு,
வெங்கடேசன். ஒருங்கிணைப்பாளர்கள்,
மோசஸ்-நிதிக்காப்பாளர்,

தியாகராஜன்- செய்திதொடர்பாளர்.

NMMS EXAM | 2017 REG - DIRECTOR PROCEEDINGS!




FLASH NEWS-G.O.Ms.No.303, Dated 11th October 2017-ABSTRACT OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified.