இ.நி.ஆ களின் நிலைபற்றி ஜேக்டோஜியோவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்காக சென்றேன்.உள்ளபடி உரைக்கின்றேன் .
கூட்டம் உணர்வு பூர்வமாகவே இருந்தது. cpsக்கு தரும் முக்கியத்துவம், ஊதிய முரண்பாடுகளுக்கு தரவில்லையே என்ற ஆதங்கத்தை இ.நி.ஆ சார்பாக உரைப்பதற்குதான் சென்றேன். ஆனால்,அதற்கு வாய்ப்பில்லாமல் பங்கேற்ற அத்துனை சங்க வாதிகளும் இடைநிலை ஆசிரியர் களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மிக கடுமையானது அதை களைந்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
சங்கங்களின்பால் அவநம்பிக்கையோடு சென்ற எனக்கு , இன்னும் ஜேக்டோ ஜியோவை நம்பலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நமக்காக அரசு ஊழியர்களும் , பிறதுறைசார்ந்த சங்க வாதிகளும் நமக்காக குரல் கொடுத்து , இன்னும் மனித நேயம் சாகவில்லை என்பதை அறிய முடிந்தது.
தோழர்கள் தாஸ், பாலசந்தர், அன்பரசு, மாயவன்,மோசஸ், இன்னும் பிற தலைவர்கள் அத்துனைபேருமே வருகின்ற நீதிமன்ற அமர்வில் நமது ஊதிய முரண்பாடு முக்கிய பிரச்சினையாக விவாதிக்கப்படும் என்பதை தெரிவித்தார்கள்.
நீதிமன்றத்தின் மூலம் நமக்கு முடிவு எட்டப்படவில்லையென்றால்,24/10/2017 அன்று ஜேக்டோ ஜியோ மீண்டும் கூடி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.
23/10/2017 நமக்கானதாக அமைய பிரார்திப்போம்.
ஜாக்டோஜியோவை நம்பி பின்சென்றோம் .
நம்பிக்கை வீணாகவில்லையென'்றே கருதுகின்றேன்.
நன்றி. '
[3:12 AM, 10/14/2017] +91 84897 46426:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக