யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/10/17

மீனவப் பட்டதாரிகளுக்கு ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சி!!!

மீனவப் பட்டதாரி இளைஞர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வுக்கான பயிற்சிபெற 
அக்டோபர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நேற்று முன்தினம் (அக்டோபர் 22) அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மீனவப் பட்டதாரி இளைஞர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வில் பங்கேற்கப் பயிற்சி அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம் இணைந்து இந்தப் பயிற்சி திட்டத்தை நடத்தவுள்ளது. எனவே, கடல் மற்றும் உள்நாட்டு மீனவக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளும் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 21-35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 42. விண்ணப்பப் படிவத்தை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர், மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.11, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பொன்னேரி - 601 204 முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை அக்டோபர் 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27972457 என்னும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தற்போது பணியில் இருக்கும் மீனவப் பட்டதாரி இளைஞர்களும் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வாங்கியான 
ரிசர்வ் வங்கியின் பல மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் காலியாக உள்ள 623 "அசிஸ்டன்ட்" பணியிடங்களுக்கு விண்ணப்பிதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களுக்கு தேசிய அளவில் நடைபெறும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இந்த எழுத்துத் தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அதனைத் தொடர்ந்து மொழிப்பாட அறிவுத் தேர்வு (Language Proficiency test) ஆகிய தேர்வுகள் இதில் அடங்கும். இதில் அனைத்து தேர்விலும் வெற்றி பெறும் தகுதியான நபர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.



முதல்நிலைத் தேர்வில் ஆங்கில மொழிப்பாடத்தில் இருந்து 30 கேள்விகளும், எண் கணிதத் திறன் (Numerical ability) பகுதியில் இருந்து 35 கேள்விகள், காரணம் அறியும் திறன்(Reasoning ability) பகுதியில் இருந்து 35 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு பதிலளிக்க ஒரு மணி நேரம் மட்டுமே கால அவகாசம் ஆகும். இதில் எடுக்கும் மதிப்பெண்களை பெறுத்தே முதன்மை தேர்வை எழுத முடியும். முதன்மைத் தேர்வில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பகுதிகளுடன் சேர்த்து பொதுஅறிவு மற்றும் கணினி அறிவு ஆகியவை இடம்பெறும். ஒவ்வொரு பகுதியிலும் 40 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் இடம்பெறும்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கம்பியூட்டரில் வேர்ட்-ஐ(Word) இயக்க தெரிந்திருப்பது அவசியம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்வராக இருக்க வேண்டும். அதவது 02/10/1989 தேதிக்கு பின்பு பிறந்தவர்கள் மற்றும் 01/10/1997 தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்த பணிக்கான சம்பளம் தோரயமாக 34990 ரூபாய் ஆகும். இந்த பணிக்கு ஆன்லைனில் www.rbi.org.in. என்கிற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த 10.11.2017 கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணம் ஓபிசி மற்றும் பொது பிரிவினருக்கு 450 ரூபாய், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 50 ரூபாய் ஆகும்.நவம்பர் 27&28-ம் தேதிகளில் முதல்நிலைத் தேர்வும், டிசம்பர் 20-ம் தேதி முதன்மைத் தேர்வும் நடைபெறும்.



இதில் ஓபிசி/எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான முன்பயிற்சி (Pre-Examination Training) அருகில் உள்ள ரிசர்வ் வங்கியின் மாநில அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு தனியே விண்ணப்பித்தல் அவசியம். இதற்கான விண்ணப்பமும் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பிக்க மற்றும் மேலும் தகவல்களுக்கு ரிசர்வ் வங்கியின் இணையதளமான www.rbi.org.in. என்ற முகவரியை சொடுக்கவும்.

கந்துவட்டியால் பாதிக்கப்படும் மக்கள் புகார் தெரிவிக்க சேவை துவக்கம் -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மாணவர்கள் கற்றல் அடைவுத்திறனில் பின்தங்கி இருப்பதற்கு பொறுப்பேற்பது யார்? RTI LETTER பதில்.



நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி??

                                                       
3000 ஆசிரியர்கள் ’நீட்’ தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, ’நீட்’ நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது. இந்த பயிற்சி, நவம்பரில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, 3,000 ஆசிரியர்கள், ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்பு அகாடமியில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர். வழிகாட்டுதல்கள் பின், தமிழக மாணவர்களுக்கு, ’நீட்’ மற்றும் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற, சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில், நுழைவு தேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களை, ஆன் - லைனில் பதிவு செய்ய, புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன், ஒரு வாரத்திற்கு முன், இணையதளத்தை துவக்கினார். இதையடுத்து,பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம். தமிழகத்தில்,412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் வழியாக, http://tnschools.gov.in என்ற, இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்டும். பதிவுக்கு பின், ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும்.

வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம். பயிற்சி துவங்கும் நாள், நேரம் பின் அறிவிக்கப்படும் என, இயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

இனி பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இரண்டு டைம்லைன்... வருகிறது புதிய வசதி!

நியூயார்க்: இனி பேஸ்புக்கில் ஒரு டைம்லனுக்கு பதிலாக இரண்டு 
டைம்லைன்களை மக்கள் பார்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்றபடி விரைவில் இந்த ஆப் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.

முதலில் இது சோதனை முயற்சியாக சில நாடுகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது. பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் குறைவாக இருக்கும் சிறிய நாடுகளில் இந்த அப்டேட் முதலில் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மக்களின் பேஸ்புக் பயன்பாட்டை எளிதாக்கவும், தேவையில்லாத போஸ்ட்டுகள் டைம்லைனில் இல்லாமல் போவதற்கும் இந்த அப்டேட் அதிகம் உதவுமென கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் தொடர்ந்து நிறைய அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.

சில நாட்களுக்கு முன் திடீரென்று பேஸ்புக் ஒருநாள் சரியாக இயங்கமால் போனது, பல இடங்களில் இது 'பேஸ்புக் ஷட் டவுன்' என்று கேலி செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. அதன்பின் பேஸ்புக் மக்களை கவரும் வகையில் நிறைய அப்டேட்களை அளிப்பதற்கு முடிவு செய்தது. பெரிய அளவில் அப்ளிகேஷனில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த மாற்றங்கள் எல்லாம் இன்னும் சில மாதங்களில் வரும் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கின் அடுத்த அப்டேட்டில் வாட்சப்பில் இருப்பது போலவே 24 மணி நேர ஸ்டேடஸ்கள் வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட இருக்கின்றது. இதன்படி நாம் போடும் ஸ்டேடஸ்கள் பேஸ்புக்கில் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அப்டேட்டின் படி நாம் போடும் அனைத்து ஸ்டேடஸ்களும் 24 மணி நேரத்தில் மறைந்து போகாது. இதன்படி நாம் தேர்ந்தெடுக்கும் ஸ்டேடஸ்கள் மட்டுமே 24 மணி நேரத்தில் காணாமல் போகும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாகவே வாட்சப்பில் இந்த வசதி சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அப்டேட் இந்த மாதத்திற்குள் விரைவில் வெளியாகும்.

அதேபோல் தற்போது புதிய அப்டேட்டுக்கான திட்டம் ஒன்றில் இறங்கியுள்ளது பேஸ்புக். இதன்படி பேஸ்புக்கின் மொபைல் ஆப்களில் ஏற்கனவே பேஸ்புக் பேஜ்களுக்கான தனி டைம் லைன் இருக்கிறது. ஆனால் யாரும் அதை பெரிதாக பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் புதிதாக இரண்டு டைம் லைன்களை உருவாக்கும் முடிவை எடுத்துள்ளது பேஸ்புக். அதன்படி நமது நண்பர்கள் போடும் போஸ்டுகள் தனியாக வரும். மற்ற பேஜ்களின் போஸ்டுகள் , ஸ்பான்சர் போஸ்ட்டுகள், வியாபார விளம்பரங்கள் எல்லாம் தனியாக வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான அப்டேட் இன்னும் சில வாரங்களில் வரலாம்.

இந்த அப்டேட் முதலில் இலங்கை, பொலிவியா, கம்போடியா போன்ற சிறிய நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. அங்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும். மேலும் இந்த மக்களை தேவை இல்லாத போஸ்டுகளை பார்ப்பதில் இருந்து காக்கும் என்று கூறுகிறது. மேலும் இது நேரத்தை மிச்சப்படுத்தும் என்றும் கூறியுள்ளது. நமக்கு தேவை இருந்தால் மட்டும் வியாபாரம் சார்ந்த போஸ்டுகளை பார்க்கலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

இணையதளத்தின் வேகம் 4 மடங்கு அதிகரிக்க பரிசீலனை!!!- மத்திய அரசு

                                               

சார்பதிவாளர் கைது-மக்கள் வெடி வெடித்து கொண்டாட்டம்!!

                                              

ஏழாவது ஊதியக்குழு பள்ளிக்கல்வித் துறைக்கான Special pay.

                                                    

டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் 
என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் ரூ.486 கோடி செலவில் அனைத்து பள்ளிகளும் கணினி மயமாக்கப்படும் என சென்னை அசோக்நகரில் பள்ளி விழா ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். நவம்பர் 15-ம் தேதி முதல் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.*

24/10/17

கட்டமைப்பு வசதி இல்லாத 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரம் ரத்து!!

புதுடில்லி: கட்டமைப்பு வசதி இல்லாத, 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரத்தை
, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

நாட்டிலுள்ள, 13 ஆயிரம், ஐ.டி.ஐ., எனப்படும், தொழிற் பயிற்சி மையங்களில், 70 லட்சம் மாணவர்கள், பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். மத்திய அரசின் திறன் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும், என்.சி.வி.டி., எனப்படும், தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில், தனியார் ஐ.டி.ஐ.,களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கி வருகிறது. ஐ.டி.ஐ.,களின் கட்டமைப்பு வசதி, பயிற்சியாளர்கள் தகுதி ஆகியவற்றை ஆய்வு செய்து, தரச் சான்று வழங்கும் முறை, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து, மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர், ராஜேஷ் அகர்வால் கூறியதாவது: என்.சி.வி.டி., ஆய்வில், 5,100, ஐ.டி.ஐ.,கள், தரச்சான்று பெற்றுள்ளன. போதுமான, கட்டமைப்பு வசதியும், தகுதியான பயிற்சியாளர்களும் இல்லாத, 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு!!

மத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக வங்கிகளும்,
நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் அசல் அடையாள ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, இனி வங்கியில் ரூ.50,000-க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வது, புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவது, கடன்களைத் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள ஆவணத்தின் நகல்களுடன், அதன் அசலையும் எடுத்துச் செல்ல வேண்டும். போலியான அடையாள ஆவணத்தின் மூலம் வங்கிக் கணக்குத் தொடங்குவது, பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக கருப்புப் பணத் தடுப்புச் சட்ட விதிகளில் சில திருத்தங்களைச் செய்து அரசாணை ஒன்றை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், நிதி சார்ந்த சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அடையாள அட்டை ஆவணங்களின் நகல்களைப் பெறும்போது, அசல் ஆவணத்தையும் பார்த்து உறுதி செய்வதுடன், அந்த ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். இது தவிர வாடிக்கையாளர்களிடம் பெற்ற தகவல்களை இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை முகவர்கள், சீட்டு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணப்பரிமாற்றத்துக்கும் ஆதார் உள்ளிட்ட முக்கிய அடையாள ஆவணங்கள் கட்டாயமாகும். வெளிநாட்டு கரன்சிகள் மூலம் ரூ.10 லட்சம் மதிப்புக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம் இருந்தால் ஆதாரை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
மின்னணு முறையில் வெளிநாட்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் அனுப்புவது மற்றும் பெறுவது, பொருள்கள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது; ரூ.50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள அசையாத சொத்துகளை வெளிநாட்டில் வாங்குவது ஆகியவற்றுக்கும் இந்த விதிகள் உண்டு.
மேலும், இருப்பிடத்தை உறுதி செய்யும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும் மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், போஸ்ட் பெய்டு செல்லிடப்பேசி கட்டணம், காஸ் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்கள் 2 மாதங்களுக்கு முந்தையதாக இருந்தால் அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

ஆர்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . ஆர்பிஐ வங்கியின்
வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கையை பின்ப்பற்ற வேண்டும். ரிசர்வ் வங்கியில் அஸிஸ்டெண்ட்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது . ஆர்பிஐ    இந்திய ரிசர்வ் வங்கியில் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூபாய் 450 செலுத்த வேண்டும். ஆர்பிஐ வங்கியில் விண்ணப்பிக்க எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 50 செலுத்தினால் போதுமானது ஆகும்.ஆர்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு பெற 20 வயது முதல் 28 வயது வரை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அந்ந்த பிரிவுகளுக்கு வயது வரம்பு தளர்வுகளும் உண்டு . ஆர்பிஐ வங்கியில் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க தொடக்க தேதியானது அக்டோபர் 18 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . ஆர்பிஐ வங்கியின் முதண்மை தேர்வு நவம்பர் 27, 28/2017 ல் நடைபெறுகிறது. ஆர்பிஐ வங்கியின் மெயின்ஸ் தேர்வு என அழைக்கப்படும் முக்கிய தேர்வு டிசம்பர் 20, 2017 ஆம் நாள் நடைபெறுகிறது. ஆர்பிஐ வங்கியின் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அஸிஸ்டெண்ட் பணியிடங்கள் மொத்தம் 632 ஆகும். இந்தியாவில் ஹைதிராபாத், அகமதாபாத், திருவனந்தபுரம் , கொச்சின் போன்ற இடங்களில் பணிவாய்ப்பு இடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் சம்பளத்தொகையாக மாதம் ரூபாய் 13150 முதல் 34990 வரை பெறலாம்.   இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தாரர் குறைந்த பட்சம் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் 55% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர் ஆன்லைனில் முதண்மை தேர்வு மற்றும் முக்கிய தேர்வு அத்துடன் மற்ற  முறைகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள் , விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் நேரடியாக விண்ணப்பிக்கலாம் . அதிகாரபூர்வத்தளத்தின் இணைப்பு கொடுத்துள்ளோம். விண்ணப்பிக்கவும் இணைய இணைப்பு இங்கு இணைத்துள்ளோம். இந்திய ரிசர்வ் வங்கியில் பணியிற்கு விண்ணப்பிக்க அறிவிக்கையையும் இணைத்துள்ளோம் . நவம்பர் 11 விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகும் .

Read more at: https://tamil.careerindia.com/jobs/job-notification-of-rbi-002821.html

வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு!!!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், ஆதி திராவிடர்,
மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், எம்.பி.சி., எனப்படும், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு, 'கிரீமிலேயர்' என்ற, வருமான உச்சவரம்பு பயன்படுத்தப்படுகிறது.

மாணவர்களின் பெற்றோர், ஆண்டுக்கு, ஆறு லட்ச ரூபாய் என, மூன்று ஆண்டுகளுக்கு மேல் பெற்றால், அவர்கள், 'கிரீமிலேயர்' வரம்பில் வருவர் என்பதால், இட ஒதுக்கீடு வழங்கப்படாது.
இந்நிலையில், தற்போது பொருளாதார முன்னேற்றம், விலைவாசி உயர்வு, தனிநபர் வருமான வரம்பு அதிகரிப்பு போன்றவற்றால், 'கிரீமிலேயர்' வருமான வரம்பை அதிகரிக்க, கோரிக்கைகள் எழுந்தன. இதன்படி, ஆண்டுக்கு, ஆறு லட்ச ரூபாய் என்பது, எட்டு லட்ச ரூபாயாக, வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல், இந்த வருமான வரம்பு அடிப்படையில், இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

டூவிலர் பின் இருக்கைக்குத் தடை!!!

கா்நாடகாவில் திறன் குறைந்த இருசக்கர வாகனங்களில் பின்னால் 
உள்ள இருக்கைகளுக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு நேற்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.

சாலை விபத்துக்களின்போது, இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவரைவிட, பின்னால் இருப்பவரே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 100 சி.சிக்கும் குறைவான 25% இருசக்கர வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இதனால், பின் இருக்கைக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 சி.சிக்கும் குறைவான இருசக்கர வாகனங்களில் பின் இருக்கைகளுக்குத் தடை விதிக்க, கர்நாடக மாநில மோட்டார் வாகனச் சட்டத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், அதை நடைமுறைப் படுத்தப்படவில்லை என கர்நாடக மாநிலப் போக்குவரத்து ஆணையர் தயானந்தா தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விதி புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்குத் தான் பொருந்தும். அதன்படி, இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் வாகன ஓட்டிகள் மட்டும் அமரும் வகையிலேயே இருக்கையை அமைக்க வேண்டும். பழைய இருசக்கர வாகனங்களுக்கு இந்தப் புதிய விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது

TN 7th PC - ELEMENTARY EDUCATION PAY FIXATION FORM

மத்தியரசு அதிகாரி வேலை!!!

GST world rates

australia ----10%
Bahrain -----5%
Canada -----15%

china---------17%
japan --------8%
Korea ------10%
Kuwait -----5%
Malaysia ----6%
Mauritius -----15%
Mexico ----16%
Myanmar----3%
New Zealand ---15%
Phillipines ---12%
Russian federation--18%
Singapore 7%
South Africa ---14%
Thailand ---7%
UAE-----5%
America (usa). ----7.5%
Vietnam ----10%
Zimbabwe ---15%


Greatest India---28%


(and for petrol &  diesel we are paying separate tax of 33%)
  Forwarded as received

தட்டச்சு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

சென்னை: ஆகஸ்டில் நடந்த தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு, 
இன்று(அக்.,23) வெளியாகிறது.

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், தொழில்நுட்ப தேர்வுகள், இந்தாண்டு, ஆகஸ்டில் நடத்தப்பட்டன. இதில், தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. இதை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின், www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில், பகல், 1:00 மணிக்கு மேல், தெரிந்து கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

TRB - ஆசிரியர் பணிக்கான வினா - விடையில் குளறுபடி!!!

அரசு பள்ளிகளில்,1,325 ஆசிரியர் 
பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய போட்டிதேர்வில், தவறுதலாக வினா - விடை தயாரிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில்,ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என, பல்வேறு சிறப்பு பாடங்களுக்கு, நிரந்தரமாக, ௧,௩௨௫ ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

 இதற்கு, செப்., ௨௩ல், போட்டி தேர்வு நடந்தது; ௩௫ ஆயிரத்து, 781 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான, தற்காலிக விடைக்குறிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. அதில், வினாவும், விடையும் தவறாக உள்ளதாக, முதல்வருக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் அனுப்பிய புகார் வருமாறு: பத்தாம் வகுப்பைத் தேர்ச்சியாக கொண்ட, சிறப்பு ஆசிரியர் பணிக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே, பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் வெளியிட கோரியும், டி.ஆர்.பி., கண்டு கொள்ளவில்லை. இந்த தேர்வில், கவின் கலை கல்லுாரி பாடங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து, வினாக்கள் இடம் பெற்றன. அதனால், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், அதிர்ச்சியில் உள்ளனர்.வினாத்தாளில், கிடைமட்டக்கோடு என்பதற்கு, தவறான பதில் குறிப்பு தரப்பட்டுள்ளது. 'அஜந்தாவில், புத்தரின் ஓவியம் தீட்டப்பட்ட குகை எண் என்ன...' என்ற கேள்வியில், சரியான பதில் குறிப்பு தரவில்லை. 'இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பைன் ஆர்ட்ஸ்' என்பதற்கு பதில், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பைன் ஆர்ட்ஸ்' அமைந்துள்ள இடம் என, தவறாக கேட்கப்பட்டுள்ளது.

தந்த சிற்பக்கலை யாருடைய காலத்தில் சிறப்பு பெற்றது என்ற வினாவுக்கு, நாயக்க மன்னர்கள் காலம் என, பள்ளிக்கல்வி, பிளஸ் ௨ தமிழ் புத்தகத்தில் பதில் உள்ளது. ஆனால், விஜயநகர மன்னர்கள் காலம் என, வரலாற்றையே மாற்றி, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இப்படி பல்வேறு வினாக்களும், பதில் குறிப்புகளும் தவறுதலாக உள்ளதால், அவற்றுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.