புதுடில்லி : எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப்
இந்தியா, வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியை, 0.5 சதவீதம் குறைத்துள்ளது. அதே சமயம், பல்வேறு, ‘டிபாசிட்’களுக்கான வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.
கடனுக்கான வட்டி:
இவ்வங்கியின் வீட்டுவசதி கடனுக்கான வட்டி, 8.30 சதவீதமாக குறைந்துள்ளது. வாகன கடனுக்கான வட்டி, 8.70 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இவ்வங்கியில் தான், வீட்டுவசதி கடனுக்கான வட்டி, மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாத ஊதியம் பெறுவோருக்கு, 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுவசதி கடன், 8.30 சதவீத வட்டியில் கிடைக்கும். கார் கடனுக்கான வட்டி, 8.75 – 9.25 சதவீதமாக இருந்தது. இது, தற்போது, 8.70 – 9.20 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
‘வாடிக்கையாளரின் கடன் தகுதி, கடன் வரம்பு உள்ளிட்ட அம்சங்களை பொறுத்து, வட்டி விகிதம் இருக்கும்’ என, எஸ்.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘டிபாசிட்’
குறைக்கப்பட்ட புதிய வட்டி விகிதம், நவ., 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக, இவ்வங்கி தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஐ., பல்வேறு, ‘டிபாசிட்’களுக்கான வட்டியை, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதன்படி, ஓராண்டு, ‘டிபாசிட்’டிற்கு வழங்கப்பட்டு வந்த, 6.50 சதவீத வட்டி, தற்போது, 6.25 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அது போல, மூத்த குடிமகன்களின், ‘டிபாசிட்’களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி, 7 சதவீதத்தில் இருந்து, 6.75 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. ‘டிபாசிட்’களுக்கான வட்டி குறைப்பு, நவ., 1 முதல், அமலுக்கு வந்துள்ளது.