- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
6/11/17
பிஎஸ்சி நர்சிங் மூன்றாம் கட்ட கலந்தாய்வு!!!
பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உட்பட ஒன்பது
துணை மருத்துவ படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என நேற்று (நவம்பர் 4) அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்
1.பி.எஸ்சி (நர்ஸிங்) - செவிலியர்களை உருவாக்கும் படிப்பு
2. பி.பார்ம் (பார்மஸி) - மருந்தியல் துறை வல்லுநர்களை உருவாக்கும் படிப்பு
3. பி.பி.டி (பிசியோதெரபி) - முடநீக்கியல் துறை
4. பி.ஏ.எஸ்.எல்.பி (அகெளஸ்டிக்ஸ் மற்றும் லேங்வேஜ் தெரபி ) - செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்
5. பி.எஸ்சி (ரேடியோலஜி) - X ray , Scan போன்றவை குறித்து படிப்பது.
6. பி.எஸ்சி (ரேடியோதெரபி) - ரேடியோ கதிர்களை கொண்டு நோய் நீக்கும் துறை
7. பி.எஸ்சி ( எமெர்ஜென்சி & ட்ராமா கேர் ) - விபத்து மற்றும் அவசரக் கால சிகிச்சைகள் குறித்த படிப்பு
8. பி.எஸ்சி (மெடிக்கல் லேப் டெக்னீசியன்) - இரத்தம், சிறுநீர் போன்றவற்றின் மூலம் நோய் கண்டறியும் ஆய்வுகள் குறித்த படிப்புகள்
9. பி.எஸ்சி (மெடிக்கல் ரெக்கார்ட் சைன்ஸ்) - பெரிய மருத்துவமனைகளில் நோயாளிகளின் ஆவணங்களைப் பராமரிப்பது குறித்த படிப்பு) ஆகிய ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கு 8,381 இடங்கள் உள்ளன. துணை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டன. சுமார் 26,460 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 25, 293 பேருக்கான தகுதிப் பட்டியல், www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதற்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை நடைபெற்றது.
இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ள நிலையில், 759 காலி இடங்கள் உள்ளன. இதற்கான, மூன்றாம் கட்ட கலந்தாய்வு சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி நடக்கும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி!
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்)
காலியாக உள்ள டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 354
பணியின் தன்மை : டிரேடு அப்ரென்டிஸ்( பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன.)
வயது வரம்பு : 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசித் தேதி : 15/11/17
மேலும் விவரங்களுக்கு www.iocl.com என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழில் வானிலை இணையதளம்!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக
கனமழை பெய்து வரும் நிலையில் சமூக
வலைத்தளங்களில் ஒவ்வொருவரும் வானிலை அறிவிப்பாளர்களாக மாறி தங்கள் இஷ்டத்திற்கு வானிலை அறிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற பெரும்பாலான வானிலை அறிக்கைகள் வதந்திகளாகவே இருப்பதால் பொதுமக்களுக்கு எது உண்மையான வானிலை அறிக்கை என்றே தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில் இதுபோன்ற போலி வானிலை அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழில் புதியதாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் கூறியுள்ளார். பொதுமக்கள் இந்த புதிய இணையதளத்தின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது, எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை தமிழிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம். http://www.imdchennai.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று Regional Weather என்பதன் கீழ் உள்ள Forecast Regional என்பதை க்ளிக் செய்தால் அதில் தமிழ், இந்தி என இருமொழிகள் இருக்கும். நமக்கு தேவையான மொழியை க்ளிக் செய்தால் அந்த மொழியிலேயே வானிலை அறிக்கையை பெற்று வதந்திகளை தவிர்த்து கொள்ளலாம்.
http://www.imdchennai.gov.in
பென்ஷனுக்காக 45 ஆண்டு போராட்டம்: தியாகி இறந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மனைவிக்கு வழங்க உத்தரவு
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியம் கோரி 45
ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து நிவாரணம் கிடைக்காமல் இறந்த 96 வயது தியாகிக்கு உரிய ஓய்வூதியத்தை அவரது 73 வயது மனைவியிடம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் எம்.கணபதி(96). இவர் இந்திய தேசிய ராணுவத்தில் 1943-ல் பணியில் சேர்ந்தார். இவரை பிரிட்டீஷ் ராணுவம் கைது செய்து 1945 ஏப்ரல் முதல் 1946 ஜனவரி வரை சிறையில் அடைத்தது. இவருக்கு 1969 முதல் மாநில அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு வழங்கும் தியாகிகளுக்கான ஓய்வூதியம் கேட்டு 1972-ல் விண்ணப்பித்தார். அதன் மீது மத்திய அரசு கடந்த 45 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2011-ல் கணபதி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் கணபதி 2012 ஜூனில் இறந்ததால், உயர் நீதிமன்ற அனுமதியின் பேரில் இவ்வழக்கை அவரது மனைவி வள்ளி(73) தொடர்ந்து நடத்தினார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை, ஞானகுருநாதன் வாதிட்டனர். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மாநில அரசு அங்கீகரித்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகியை, சுதந்திரப் போராட்டத்தின்போது அவரது மதிப்புமிக்க சேவையை கருத்தில் கொள்ளாமல், அவரது ஓய்வூதிய கோரிக்கையை கடந்த 45 ஆண்டுகளாக கவனிக்காமல் கிடப்பில் போட்டது துரதிர்ஷ்டவசமானது. தன் கோரிக்கை என்ன ஆனது என தெரியாமலேயே அந்த ஆத்மா மறைந்துவிட்டது.
இதுபோன்ற வழக்கில் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தியாகி ஏ.பிச்சை தொடர்ந்த வழக்கில், ‘இன்றைக்கு நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என் றால் அதற்கு நமது நாட்டின் முன்னோர்கள்தான் காரணம். ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகிகள் தங்கள் ஓய்வூதியத்தை வழக்கின் மூலமாகவே பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தியாகிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசு தனிப் பிரிவு தொடங்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது.
தியாகி வி.ராஜய்யன் ராபின் தொடர்ந்த மற்றொரு வழக்கில், தியாகிகள் ஓய்வூதியம் கேட்டு அளிக்கும் மனுக்களை தொழில்நுட்பரீதியில் அதிகாரிகள் அணுகக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்த வழக்குகளின் அடிப்படையில் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தனது கணவருக்குரிய ஓய்வூதியத்தை வழங்கக் கோரி மனுதாரர் 2 வாரங்களில் மனு அளிக்க வேண்டும். அதை 8 வாரங்களில் அதிகாரிகள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)