பொறியியல் படித்த 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
பொறியியல் கல்லூரிகளில் படித்த 10 லட்சம் பேருக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.
ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியர்களை தயார்படுத்தும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
இதற்காக 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 73 ஆயிரம் பேருக்கு இதற்கான பயிற்சிகள் வரும் 13ம்தேதி தொடங்கப்படவுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கவுள்ளார். அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவதன் மூலமாக மாணவ, மாணவிகள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் 60 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.
மேலும் 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்குவதற்கு நிதியுதவியாக 100 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. 593 பொறியியல் கல்லூரிகளில் 10 லட்சம் பேர் படித்துள்ளார்கள். இவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் படித்து முடிக்கும்போதே வேலைவாய்ப்புடன் கூடிய உத்தரவாதம் அளிக்கப்படும். பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து 7 பேர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டங்களை புரிந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் பேசினார். விழாவில், 347 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டது.