யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/11/17

B.Ed முடித்த தமிழ் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை :

B.Ed முடித்த தமிழ் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் 858 தமிழ் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், பி.எட்., முடித்ததால், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
'இவர்களுக்கு, பி.எட்., படிப்பு கட்டாயம் ஆக்கப்படவில்லை. பி.எட்., முடித்த தமிழ் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்க வழிவகை இல்லை' என, கல்வி துறை செயலர்.

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி

பாலிடெக்னிக் ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதற்கு, எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளில், 1,058 ஆசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி விபரம் மட்டும், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர் கூறியதாவது:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த செயல், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கு எதிரானது; பாரபட்சம் காட்டுவதாக உள்ளது. மேலும், தேர்ச்சி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நவ., 23 - 25 வரை நடக்க உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது, தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் பட்டியலை, உடனடியாக வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, அவர்களையும் அழைத்து, பணி நியமனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு
உள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தலைவர், ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவியில், 1,065 இடங்களுக்கு, எழுத்து தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 23 முதல், 25 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.


இன்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவினருக்கு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள, நிர்மலா மேல்நிலை பள்ளி மற்றும் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகளில், வரும், 24, 25ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.இன்ஜினியரிங் பாடங்களுக்கு, சென்னை தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில், வரும், 23 முதல், 25 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். கூடுதல் விபரங்களை, www.trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு பொது தேர்வு இணையதளத்தில் விண்ணப்பம்

தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இணையதளம் வாயிலாக, பதிவு செய்யலாம்' என, அரசு தேர்வுகள் இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.அவரது அறிவிப்பு:
தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு, 2018 ஜனவரியில் நடக்கிறது. அதற்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள், நவ., 15ல் இருந்து, 25 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, சேவை மையங்களுக்கு சென்று, பதிவு செய்யலாம்.
விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணம், 125 ரூபாய் மற்றும் இணையதள பதிவு கட்டணம், 50 ரூபாய் என, மொத்தம், 175 ரூபாயை பணமாக, மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். தேர்வு தொடர்பான விரிவான தகவல்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆன் - லைன் பத்திரப்பதிவு நவ., 15 முதல் கட்டாயம்

தமிழகத்தில், 578 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், ஆன் லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை, நவ., 15ல் துவக்கப்பட உள்ளது. இதனால், பதிவு முடிந்த சில நிமிடங்களிலேயே பத்திரங்களை பெறலாம்.
தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்களை, ஆன் லைன் முறையில் பதிவு செய்யும் புதிய நடைமுறை, 154 சார் பதிவாளர் அலுவலங்களில், செயல்பாட்டில் உள்ளது. இதை, மற்ற அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தேவையான கணினி உள்ளிட்ட நவீன கருவிகள், தகவல் பதிவு பணியாளர் ஆகிய வசதிகளை, டி.சி.எஸ்., நிறுவனம் வழங்கி உள்ளது. ஒவ்வொரு நிலையிலும், ஆன் லைன் முறையில் உண்மை தன்மை சரி பார்க்கப்பட்டு, தவறுகள் இருந்தால், அவற்றை திருத்தும் வகையில், இந்த நடைமுறை உருவாக்கப்பட்டு உள்ளது.

அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும், நவ., 15 முதல், புதிய நடைமுறை துவக்கப்பட உள்ளது. இதற்காக, முதல்வர், துணை முதல்வரின் நேரத்தை பெற்று, முறைப்படி அறிவிகக, பதிவுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறையால், பதிவு முடிந்த சில நிமிடங்களில், பத்திரத்தை மக்கள் பெற முடியும்.

CM CELL - கணினி ஆசிரியர்களின் பணிக்காண கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறையா அ பதிவு மூப்பு என்பது குறித்து அரசின் பரிசீலணையில் உள்ளது..

மூன்றே மாதத்தில் மக்கும் மக்காச்சோள கழிவு 'கேரி பேக்'

கோவை:மூன்றே மாதத்தில் மக்கும் தன்மை இருப்பதால், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, மக்காச்சோள கழிவில் தயாரிக்கப்பட்ட 'கேரி பேக்' பயன்படுத்த, கோவை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் வரை குப்பை சேகரமாகிறது. இதில், குறைந்தது, 100 டன் வரை, பிளாஸ்டிக் கழிவுகளாக இருக்கின்றன. டீக்கடை, பழக்கடை, பூக்கடை, சந்தை, உணவகங்கள் மற்றும் ஜவுளி கடைகள் என, பல வகைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, மாநகராட்சி பகீரத முயற்சி எடுத்து வருகிறது.
பல வகைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட, பயன்பாடு இன்னும் தொடர்கிறது. வணிக நிறுவனத்தினருடன் ஆலோசித்தபோது, 'நுகர்வோருக்கு ஏதேனும் ஒரு வகையில் பொருளை பார்சல் செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது. மாற்றுப்பொருள் அறிமுகப்படுத்தினால், மாறிக்கொள்ள தயாராக இருக்கிறோம்' என, தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆய்வு செய்து, பெங்களூருவில், மக்காச்சோள கழிவுகளில் 'கேரி பேக்' தயாரிப்பது கண்டறியப்பட்டது. அதன் மக்கும் தன்மை, சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா, விலங்கினங்கள் உட்கொண்டால், உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என, விஞ்ஞான பூர்வமாக அலசப்பட்டது.
மூன்றே மாதத்தில் மக்கும் தன்மை கொண்டது; பொடிப்பொடியாகி, மண்ணோடு கலந்து விடும். சுடுநீரில் கரைந்து விடும். தீ வைத்து எரித்தாலும், துர்நாற்றம் வீசாது என்பது தெரியவந்தது. அதன்பின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் ஒரு பகுதியாக, 'லோகோ' அச்சிட்டு, கோவையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வர்த்தக துறையை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் அழைத்து, கோவை மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி - லோகோ' அச்சிட்ட, மக்கும் தன்மையுள்ள 'கேரி பேக்' மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்படும். படிப்படியாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிக்கப்படும்.மக்காச்சோள கழிவில் இருந்து, மக்கும் தன்மையுள்ள கேரி பேக் தயாரிப்பது எப்படி என, கோவையில் உள்ள தொழில்முனைவோருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. தேவையான மூலப்பொருட்கள் தருவித்துக் கொடுக்கப்படும். தற்போது விலை அதிகமாக இருந்தாலும், அதிகப்படியானோர் பயன்படுத்த துவங்கினால், சற்று குறையும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

NAS 2017 - தேர்வு (13/11/2017) அன்று ஆசிரியர்களின் பணிகள்

+ Date: 13/11/2017
+ Shambling schools HM BRC யில் வினாத்தாள் வாங்கி செல்ல வேண்டும்
+ Survey யின் போது ஆசிரியர் & மாணவர் 100% வருகை தரவேண்டும்
+ Field Investigaters பணிகள்
1) தேர்வை நடத்துவது
2) 3 க்கும் 5 க்கும் OMR sheets நிரப்புவது
3) ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் Interview எடுத்து பதிதல்
+ தயார்நிலையில் இருக்க வேண்டியவை:
1) பள்ளியின் U-DISE NO
2)மாணவர்களின் DOB /ஆதார் என் / சேர்ந்த ஆண்டு / Community / special need
+ NAS questioner ஐ போட்டோ /Xerox /எடுப்பதும் what's app ல் அனுப்புவதும் தடை செய்யப்பட்டு உள்ளது
+ உதவுவோரும் உரியோரும் தண்டிக்கப் படுவர்
+ Monitoring officers:
DEE / DSE / SCERT / NCERT / MHRD அலுவலர்கள்
+ Supervising Flying squad:
BDO / REVENUE துறை அலுவலர்கள்
+ FIELD INVESTIGATER :
B.Ed பயிற்சி மாணவர்கள் 
+ Portion: ஆங்கிலம் தவிர்த்த பிற பாடங்கள்

வங்கிக் கணக்கை ஹேக் செய்து நூதன கொள்ளை: அதிர்ச்சியில் கோவை!

கோவையில், வங்கிக் கணக்கை ஹேக் செய்து, 12 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, என்.ஜி.ஜி.ஒ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். துடியலூரில் இயங்கி வரும், ஶ்ரீ பரம சக்தி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின், நிர்வாக மேலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், மர்ம நபர்கள் சிலரால் இவரின் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆறுமுகம், "எனது மெயில் ஐ.டி-யை முதலில் ஹேக் செய்து, அதில் இருந்து சில ஆவணங்களை திருடியுள்ளனர். பின்னர், அந்த ஆவணங்களை வைத்து, எனது செல்போன் எண்ணை ட்யூப்ளிகேட்டாக எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் எனக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது.
அந்த செல்போன் எண்ணைத்தான் எனது வங்கி பரிவர்தனைக்கு பயன்படுத்தி வந்தேன். எனவே வங்கிக்கு அழைத்தபோது, RTGS பரிவர்த்தனை மூலம் 12.75 லட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. உடனடியாக சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தேன். எனக்கு, போலீஸில் இருந்து சப்போர்ட் செய்கிறார்கள். ஆனால், வங்கியில் இருந்து எந்த விதமான உதவியும் செய்யவில்லை" என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து, சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விகடன்

விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ‛‛குட்பை''

வங்கிகள் விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு‛‛குட்பை'' சொல்லி, செல்போன் மூலமே பரிவர்த்தனையை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

இது குறித்து நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் கூறியதாவது : ‛‛ மக்களின் மொபைல் தொலைபேசி மூலமே அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களை வேகமாக கற்றுக் கொள்ள முடிகிறது . படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்படும் என்று கூறியுள்ள அவர், வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படுவதால் அனைத்து பரிவர்த்தனைகளும் அதன் மூலமே நடைபெறும்'' என்று தெரிவித்தார்.

திருத்திய ஊதிய விகிதத்தில் ஊதியப் பட்டியல் தயார் செய்வது குறித்து சில புதிய தகவல்கள்.

1.நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 ம் சேர்த்து கணக்கிடவும்
2, 01.10.2017 முதல் 5% DA கணக்கிடவும்.
3. Cps பிடித்தம் செய்ய அடிப்படை ஊதியம், தனி ஊதியம் (ரூ. 2000) மற்றும் அகவிலைப்படியை சேர்ந்து  கணக்கில் கொள்ள வேண்டும்.
4.HRA கணக்கிட,  அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 சேர்ந்து  grade I(b) கலத்தில் உள்ளவாறு  கணக்கிடவும்.
5.CCA கணக்கிட,  அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 சேர்ந்து கலம் 4ல்  உள்ளவாறு  கணக்கிடவும்.
6.மருத்துவப் படி அனைவருக்கும் ரூ. 300.மட்டுமே.
7.மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்  போக்குவரத்துப் படி ரூ. 2500.

8TH STD PRIVATE PUBLIC EXAM APPLY NOW:

திருமணமாகாத மகள் என்ற நிலையில் மனு கொடுத்து, பணி நியமனம் வழங்கப்படும் முன் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு மின் வாரியததில் வாரிசு வேலை கொடுக்கலாம் :

12/11/17

JACTTO GEO : நீதிபதி பற்றி அவதூறு - 2 ஆசிரியர் சஸ்பெண்ட் :

ஜாக்டோ ஜியோ சார்பில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு  கடந்தமாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவரும்,
வெள்ளேகவுண்டன் பாளையம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருமான பொன்.ரத்தினம்,  தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் திருக்குமரன், தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க  மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட 5  பேரும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்த னர்.

இதையடுத்து தலைமையாசிரியர் பொன்.ரத்தினம், ஆசிரியர் திருக்குமரன் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி  அலுவலர் பழனிசாமி உத்தரவிட்டார்.

நீட்' தேர்வு பயிற்சி மையம் 13ல் துவக்கம் : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு

நீட் தேர்வு பயிற்சி மையத்தை வரும், 13ல் முதல்வர், பழனிசாமி திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாநில அளவில், 412 இடங்களில் பயிற்சி மையம் செயல்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில், சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இலவச லேப்டாப் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று பேசியதாவது:தமிழக பிளஸ் 2 மாணவர்கள், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாநில அளவில், 412 பயிற்சி மையங்கள் திறக்கப்பட உள்ளன.

வரும், 13ல் முதல்வர், பழனிசாமி, முதல் பயிற்சி மையத்தை திறந்து வைத்து, பயிற்சியையும் துவக்கி வைக்கிறார். படிப்படியாக பிற இடங்களில் மைய செயல்பாடு துவங்கும். பயிற்சிக்காக இதுவரை, 'ஆன் - லைனில்' 75 ஆயிரம் மாணவ - மாணவியர் பதிவு செய்துள்ளனர். மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு, டிசம்பருக்குள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும்மதிப்பளிக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த எல்.முருகானந்தம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,‘தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்துதரமத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகள், உரிமைகளுக்கு கல்வி நிலையங்கள் மதிப்பளிக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.அவர்களையும் மற்ற மாணவர்கள் பயிலும் பொதுப்பள்ளிகளில் சேர்த்தால்தான் மாற்றுத்திறனாளிகள் குறித்த புரிதல் பிற மாணவர்களுக்கும் ஏற்படும்’ என்று கூறியுள்ளனர்.

மேலும் அந்த உத்தரவில், ‘தமிழக அரசு, மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளின் ஆளுமைத்திறன், உணர்வுகள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு முகாம்களை பள்ளி, கல்லூரிகளில் நடத்த வேண்டும். அவர்களை தொழில் சார்ந்த செயல்பாடுகளிலும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக் கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறி விசாரணையை டிசம்பர் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட கலெக்டர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள், சுகாதார பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பில்லூர்மட்டம், கீழ் ஆர்செடின், மேல் ஆர்செடின், நான்சச் ஆகிய குடியிருப்பு பகுதிகள், குடிநீரில் குளோரின் அளவு ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நான்சச் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார். அதன் பின்னர் திடீரென அங்கு பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மதியம் சத்துணவு சாப்பிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வியப்படைந்தனர்.
அதனை தொடர்ந்து பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், இந்திரா நகர், பாரத் நகர், கல்குழி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், பாரத் நகரில் செயல்பட்டு வரும் ஆரம்ப பள்ளியின் சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரத்தினை ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை மற்றும் தனிநபர் கழிப்பறை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் குன்னூர் கோட்டாட்சியர் கீதாபிரியா, வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ENGINEERING STUDENTS JOB RELATED NEWS | EDUCATION MINISTER:

பொறியியல் படித்த 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

பொறியியல் கல்லூரிகளில் படித்த 10 லட்சம் பேருக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.
ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியர்களை தயார்படுத்தும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
இதற்காக 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 73 ஆயிரம் பேருக்கு இதற்கான பயிற்சிகள் வரும் 13ம்தேதி தொடங்கப்படவுள்ளது.  இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கவுள்ளார். அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவதன் மூலமாக மாணவ, மாணவிகள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் 60 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. 
மேலும் 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்குவதற்கு நிதியுதவியாக 100 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. 593 பொறியியல் கல்லூரிகளில் 10 லட்சம் பேர் படித்துள்ளார்கள். இவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் படித்து முடிக்கும்போதே வேலைவாய்ப்புடன் கூடிய உத்தரவாதம் அளிக்கப்படும். பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து 7 பேர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டங்களை புரிந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் பேசினார். விழாவில், 347 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டது.

10th - NOMINAL ROLL OFFLINE MODE UPLOAD | DATE EXTENDED:

பி.எச்.டி ஆய்வில் புதிய நடைமுறை :

Image may contain: text