யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/11/17

பள்ளிக்கல்வி - 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2017/18 -பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்:

கருணை அடிப்படையில் அரசு பணி யாருக்கு வழங்கப்படும்!!!

கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

# கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

# கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?


தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

# இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?

உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

# இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?

இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

# கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

# கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.8

# கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

# கருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?

காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

# என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?

அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,  எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.

# என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?

தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

# கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?

கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்,  மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

# கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,  ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,

தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

# திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?

திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

# மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.

-thanks -- வழக்கறிஞர் பாண்டியன்
தமிழக அறப்போர் இயக்கம்

TNPSC GROUP IV EXAM FULL TIME COACHING IN CHENNAI:

GST வரி விதிப்பில் மாற்றம்: விலை குறையும் 200 பொருட்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அடுத்து, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் உட்பட சுமார் 200 பொருட்களின் விலை இன்று முதல் குறைகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மாற்றத்தால் பயன்பெறுவோரில் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளன. அடுத்து, சிறு குறு தொழில்கள், உணவகங்கள், ஹோட்டல்களும் இதன் மூலம் பயனடைகின்றன.


கடந்த வாரம் குவாஹாட்டியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 28% வரி விதிப்பில் இருந்த 180 பொருட்கள் உட்பட சுமார் 210 பொருட்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான சாக்லேட், செரிவூட்டப்பட்ட பால், மயோன்னைஸ் சாஸ், மசாலா கூழ், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சர்க்கரைக் கட்டிகள், பாஸ்தா, பர்ஃபி, இட்லி-தோசை மாவு, உறையவைக்கப்பட்ட மீன், சீவிங்கம், துணி துவைக்கும் சோப்புப் பவுடர், ஷேவிங் க்ரீம், பிளேடு, ஷாம்பு, டியோட்ரண்ட், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை இன்று முதல் குறைகிறது.
அதேப்போல, வெட் கிரைண்டர்கள், கவச வாகனங்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 6 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 8 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், 6 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து பூஜ்யம் சதவீதமாகவும் (வரி இல்லை) குறைக்கப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி கவுன்சில் குழு முடிவின்படி, 178 பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டதையடுத்து, 28 சதவீத வரிகள் விதிக்கப்பட்ட பொருள்களின் பட்டியலில் இருக்கும் பொருள்களின் எண்ணிக்கை 50-ஆக குறைந்துள்ளது. அந்தப் பட்டியலில் பெயிண்ட், பர்ப்யூம்ஸ், ஏசி இயந்திரம், துணி துவைக்கும் இயந்திரம், குளிர்பதன பெட்டி, வாக்குவம் கிளீனர், கார்கள், 2 சக்கர வாகனங்கள், விமானம், படகு போன்ற ஆடம்பரப் பொருள்களும், பான் மசாலா, சிகரெட்டுகள், புகையிலை தயாரிப்பு பொருள்கள் போன்ற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்களுமே தற்போது உள்ளன.

28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ள பொருள்களில், காபி, மார்பிள், கிரானைட், கஸ்டர்டு பவுடர், பற்பசை, பாலிஷ், திரவியங்கள், கழிப்பறை சார்ந்த பொருள், தோல் ஆடை, சிகையலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும் விக், குக்கர், ஸ்டவ், சவரக்கத்தி, வெட்டுக்கருவிகள், வாட்டர் ஹீட்டர், பேட்டரிகள், மூக்கு கண்ணாடி, கை கெடிகாரம், மெத்தை, வயர், கேபிள், மரப்பெட்டி, சூட்கேஸ், ஹேர் க்ரீம், ஹேர் டை, முகப்பூச்சு, காற்றாடி, விளக்கு, ரப்பர் ட்யூப், மைக்ரோ ஸ்கோப் உள்ளிட்டவை முக்கியமானவை.

டயாபடிக் உணவு, பிரிண்டிங் மை, கைப்பைகள், தொப்பிகள், கண்ணாடி பிரேம்கள், மூங்கில்/பிரம்பாலான மர சாமான்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

உருளைக் கிழங்கு மாவு, சட்னி பவுடர் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

உலர்த்தப்பட்டகாய்கறிகள், தேங்காய் ஓடு, மீன் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாக குறைக்கப்பட்டுள்ளது.

இட்லி தோசை மாவு, கயிறு, மீன் வலை, ஆடை, உலர்ந்த தேங்காய் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

0% உலர்த்தப்பட்ட காய்கறிகள், தேங்காய் ஓடு, மீன்
5% ஏசி மற்றும் ஏசி அல்லாத உணவகங்கள், சட்னி பவுடர்
12% ரீபைண்ட், சர்க்கரை, டயாபடிக் உணவு, தொப்பிகள், கைப்பைகள்
18% சாக்லேட்டுகள், காபி, மார்பிள், கிரானைட், குக்கர்கள், கை கெடிகாரம், ஷாம்பூ, காற்றாடிகள்
28% பான் மசாலா, சிகரெட்டுகள், புகையிலை பொருள்கள், சிமெண்ட், பெயிண்ட், ஏசி, வாஷிங் மெஷின், கார்கள், 2 சக்கர வாகனங்கள் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சில பொருட்களாகும்.

EMIS STUDENT ADMIT OPTION FROM OTHER SCHOOLS ENABLED NOW EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை (அட்மிட்) குறைபாடு நிவர்த்தி

இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும்
போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும அக்குறை சரி செய்யப்பட்டுள்ளது
.மேலும் அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம்  இப்போது EMIS வலைதளம் சரி செய்யப்பட்டுள்ளது போட்டோக்கள் அப்லோடு செய்யமுடியும்.  அடையாள அட்டை பதிவுகள் பதியலாம் எந்த நிலையிலும் தவறுகள் சரிசெய்யும்(edit)  வசதி செய்யப்பட்டுள்ளது

புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை நீடிப்பு

பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், புதிய பேராசிரியர்கள் 
நியமனத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
பல ஆண்டுகளாக, பல்கலைகளில் நிதி வரவு - செலவை சரியாக நிர்வகிக்காததால், பல்கலைகளில் கடும் நிதிச்சுமை ஏற்பட்டு உள்ளது. அதே நேரம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், 1,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 8,000க்கும் மேற்பட்டோர், வேலையின்றி சம்பளம் பெறுவதால், அந்த பல்கலைக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளது.
இப்பல்கலையால் அரசுக்கு, மாதம் தோறும், 50 கோடி ரூபாய் செலவாகிறது. எனவே, பணியின்றி இருக்கும், பேராசிரியர்கள், ஊழியர்களை, அரசு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு மாற்ற, உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, எந்த பல்கலையிலும், அரசு கல்லுாரியிலும், புதிய பணி நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை விதிக்கப்பட்டு, ஓர் ஆண்டு முடிந்த நிலையில், தற்போது பணி நியமன பணிகளை தொடரலாமா என, பல பல்கலைகளின் துணைவேந்தர்கள் அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு, தமிழக அரசு தரப்பில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின், நிதி இருப்பு குறைவாக இருப்பதாலும், ஒவ்வொரு பல்கலையிலும் வருவாய் குறைந்து, அதிக நிதிச்சுமை உள்ளதாலும், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ள வேண்டாம் என, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நிலையில், பல்கலைகளில் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாறாக செலவை அதிகரிக்க கூடாது என்றும், துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது!!!

சென்னை: 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்;
அரசு வேலைக்கும் தகுதியானது' என, பல்கலை அறிவித்துள்ளது.


இது குறித்து, பல்கலையின் பதிவாளர், விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திறந்தநிலை பல்கலை, தமிழக அரசின் பல்கலையாகும். பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், பட்டயம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நடத்தப்படுகிறது. இந்த பல்கலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின், இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் சேர, தகுதி உடையவர்கள் என, அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், 'திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டங்கள் செல்லாது' என, எதிர்மறையான தகவல்கள் பரவுகின்றன. திறந்தநிலை பல்கலை, 2003ல் துவங்கப்பட்டது. அதற்கு முன், திறந்தநிலை கல்வி முறையில், பல பல்கலைகள், அடிப்படை கல்வித் தகுதி இன்றி, நேரடியாக, முதுநிலை படிப்புகளை வழங்கியுள்ளன.
அதில், படித்தவர்களின் படிப்பு குறித்தே, தற்போது, சில வழக்குகள் உள்ளன. திறந்தநிலை பல்கலையால் நடத்தப்படும் படிப்புக்கும், இந்த வழக்கு
களுக்கும், எந்த தொடர்பும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 
மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான
அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.


இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.

9,351 பணியிடங்களுக்கு, 'குரூப் - 4' தேர்வு அறிவிப்பு : முதல் முறையாக வி.ஏ.ஓ., பதவியும் இணைப்பு

சென்னை: தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி.,
வழியாக தேர்வு நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பு தகுதியில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்கு, 'குரூப் - 4' வரிசையிலும், வி.ஏ.ஓ., பணியிடத்துக்கு, தனியாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால், மனித வளம் மற்றும் நிதி இழப்பு கருதி, இரு தேர்வுகளையும் ஒன்றாக நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்தது.

இதையடுத்து, வி.ஏ.ஓ., பதவியும் இணைக்கப்பட்ட, குரூப் - 4 தேர்வுக் கான அறிவிக்கையை நேற்று வெளியிட்டது. இதன்படி, 2018 பிப்., 11ல் நடக்கும் தேர்வுக்கு, நேற்று முதல், 'ஆன் - லைன்' பதிவு துவங்கியது; டிச., 13 வரை விண்ணப்பிக்கலாம்; கட்டணத்தை, டிச., 15 வரை செலுத்தலாம். இந்த தேர்வில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, 4,300 பேர் உட்பட, எட்டு பதவிகளில், 9,351 பேர் சேர்க்கப்பட உள்ளனர். வி.ஏ.ஓ., பதவிக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வயது வரம்பில், எந்த மாற்றமும் இல்லை. ஒருவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே பதிவு செய்யலாம். தேர்வு முடிவு வரும் போது, தரவரிசை அடிப்படையில், தகுதியான, விருப்பப்பட்ட பதவியை தேர்வு செய்யலாம். முதற்கட்டமாக, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில், தங்கள் சுயவிபரங்களை, ஒரு முறை பதிவாக, ஆன் -- லைனில் பதிவு செய்ய வேண்டும். அதன் வழியாக, குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே, ஒரு முறை பதிவு செய்தவர்கள், மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
குரூப் - 4 தேர்வுக்கு, 12 லட்சம் பேரும், வி.ஏ.ஓ.,தேர்வுக்கும், 15 லட்சம் பேரும், இதுவரை விண்ணப்பித்து வந்தனர்.
வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - 4 தேர்வையும் எழுதி வந்தனர். தற்போது, குரூப் - 4 தேர்வில், வி.ஏ.ஓ., பணியிடமும் சேர்க்கப்பட்டதால், 18 லட்சம் பேர் போட்டியிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், 'இந்து அறநிலையத் துறை செயல் அதிகாரி பதவியில், நான்கு காலியிடங்களை நிரப்ப, 2018 ஜன., 20, 21ல் தேர்வு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
இதற்கான, ஆன் - லைன் பதிவு, நேற்று துவங்கியது. டிச., 13 வரை விண்ணப்பிக்கலாம்; டிச., 15 வரை தேர்வு கட்டணம் செலுத்தலாம். கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

15/11/17

BIG BREAKING NEWS-2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

BIG BREAKING NEWS

2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலைஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான
செய்தி



1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்தபோராட்டத்தில் அரசு எழுதி கொடுத்த உத்திரவாதPROCEEDINGS கடிதத்தை தாண்டி எதுவும்செய்யக்கூடாது
(ஊதியமுரண்பாடுகளை சரி செய்ய பரிந்துரைசெய்யப்படும்)

01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர் வழக்கு உத்தரவு நகல் வெளியீடு.அடுத்து வழக்கு 11.12.2017 அன்று விசாரனைக்கு வர உள்ளது

DEE PROCEEDINGS- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சுயநிதி பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்தல்- திருத்தம் வெளியிடுதல் சார்பு

திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்; அரசு வேலைக்கும் தகுதியானது' 
என, பல்கலை அறிவித்துள்ளது. இது குறித்து, பல்கலையின் பதிவாளர், விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திறந்தநிலை பல்கலை, தமிழக அரசின் பல்கலையாகும். பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், பட்டயம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரைநடத்தப்படுகிறது. இந்த பல்கலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின், இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் சேர, தகுதி உடையவர்கள் என, அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், 'திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டங்கள் செல்லாது' என, எதிர்மறையான தகவல்கள் பரவுகின்றன. திறந்தநிலை பல்கலை, 2003ல் துவங்கப்பட்டது. அதற்கு முன், திறந்தநிலை கல்வி முறையில், பல பல்கலைகள், அடிப்படை கல்வித் தகுதி இன்றி,நேரடியாக, முதுநிலை படிப்புகளை வழங்கியுள்ளன.அதில், படித்தவர்களின் படிப்பு குறித்தே, தற்போது, சில வழக்குகள் உள்ளன. திறந்தநிலை பல்கலையால் நடத்தப்படும் படிப்புக்கும், இந்த வழக்குகளுக்கும், எந்ததொடர்பும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சொந்த வீடு வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்வு

சொந்த வீடு வாங்க மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் அல்லது கட்டும் சொந்த வீட்டுக்கான முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
இதற்கான உத்தரவை பிறப்பித்து மத்திய அரசு நேற்று முன்தினம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதிலும் மத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கோ அல்லது விலைக்கு வாங்குவதற்கோ ‘HBA (House Building Advance)’ எனப்படும் முன்தொகை, கடனாக அளிக்கப்பட்டு வருகிறது. இது ரூ.7.50 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த முன்தொகை பெறுவதற்கு ரூ.30 லட்சமாக இருந்த சொந்த வீட்டின் மதிப்பு ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்தொகை கடனுக்கு 9.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இத்துடன் இந்த வட்டிவிகிதம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணவன் - மனைவி இருவரும் மத்திய அரசுப் பணியாளர்களாக இருந்தால் அவர்களில் ஒருவருக்கு மட்டும் கடன் அளிக்கப்பட்டு வந்தது. இதை சற்று தளர்த்தி இருவரில் ஒருவர் பெயரில் அல்லது இருவரது பெயரிலும் கடன் வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சொந்த வீட்டுக்காக ரூ.1 கோடி வரை செலவு செய்யும் பணியாளர்கள், முன்தொகையான ரூ.25 லட்சம் அன்றி வங்கியிலும் கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக அவர்கள் தங்கள் வீடுகளின் பத்திரங்களை அடமானமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

இது குறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் 'தி இந்து' விடம் கூறும்போது, ''மத்திய அரசுப் பணியாளர்கள் சொந்தமாக வீடு வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக அவர்கள் அரசிடம் பெறும் கடனுக்கான தவணைத் தொகை, தனியார் வங்கிகளை விடக் குறைவு என்பதே அதற்கானக் காரணம்.சொந்த வீடு வாங்குவதற்கான முன்தொகை பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்தது. எனவே தற்போது சந்தை நிலவரத்துக்கு ஏற்றபடி உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.

சொந்த வீடு வைத்திருப்பவர்கள் அதை விரிவுபடுத்த அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 34 மடங்கு அல்லது அதிகபட்சம் ரூ.10 லட்சம் கடனாக அளிக்கப்படுகிறது. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் அதில் வீடுகட்ட அதன் விலையில் 80 சதவீதம் வரை முன்தொகை அளிக்கப்படுகிறது. இதில் கட்டப்படும் வீடு கிராமப்புறத்தில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம் அதிகரிப்பு!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும்பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது
அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.

TN 7th PAY - ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம் - அரசு அறிவிப்பு.

Letter No.57907 Dt: November 13, 2017 Tamil Nadu Revised Pay Rules, 2017 – Fixation of Pay with reference to Tamil Nadu Revised Pay Rules, 2017 - Certain clarification – Regarding

01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு.

கற்றல் விளைவுகள் பயிற்சி அட்டவணை!!!

உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் :

தமிழ் & ஆங்கிலம் : நவம்பர் 15 & 16


அறிவியல் & கணக்கு : நவம்பர் 20 & 21

சமூக அறிவியல் : நவம்பர் 22 &23


தொடக்கநிலைஆசிரியர்கள்:

50% : நவம்பர் 22 முதல் 25 வரை


50% : நவம்பர் 27 முதல் 30 வரை

சி.பி.எஸ்.இ., அவகாசம்!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.
இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.

அறிவியல் கண்காட்சி முடிவு குறித்து மழுப்பல்!ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்தி!!!

மதுரை;மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு நடந்த அறிவியல் கண்காட்சி போட்டிகளின்
முடிவுகள் அறிவிப்பில் சர்ச்சை எழுந்துள்ளது.அறிவியல் ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த ஆண்டுதோறும் இக்கண்காட்சி நடத்தப்படும்.
சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்படும். இந்தாண்டு 'நிலையான வளர்ச்சியில் அறிவியலின் பங்கு' என்ற தலைப்பில் கண்காட்சி நடந்தன.குறுவள மையம் அளவில் நடந்த கண்காட்சியில் தலா 10 முதல் 15 துவக்க, நடுநிலைப் பள்ளிகள் படைப்புக்களை காட்சிப்படுத்தின.

இதில் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி அறிவியல் பாட ஆசிரியர் நடுவர்களாக இருந்து முதல் 3 பரிசுக்கான பள்ளிகளை தேர்வு செய்து அறிவித்தனர்.இதன்படி துவக்க
பள்ளிகளுக்கு முதல் பரிசு 400 ரூபாய், இரண்டாவது 300, மூன்றாம் பரிசாக 200 ரூபாயும், உயர் மற்றும் நடுநிலைக்கு முதல் பரிசு 600, இரண்டாவது 500, மூன்றாம் பரிசாக 400
ரூபாயும் வழங்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு மையத்திற்கும் 16ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நடுவர்கள் தேர்வு செய்ததிலும், பள்ளிகள் பங்கேற்க வைத்ததிலும் பல ஒன்றியங்களில்
குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: நடுவர்களாக பங்கேற்ற ஆசிரியர் பணியாற்றும் பள்ளிகளே பல இடங்களில் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு குறுவள மையத்திலும் நடுநிலை பள்ளிக்கு முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் காத்திருந்தன.
ஆனால் 2 அல்லது 3 நடுநிலை பள்ளிகளே பங்கேற்றன. வேறு வழியின்றி மூன்று பரிசுகளும் பங்கேற்ற பள்ளிகளுக்கே வழங்க நேர்ந்தது.மேலும் ஒவ்வொரு மையங்களுக்கும் நடுநிலை பள்ளிகளை பிரித்து அனுப்புவதில் கல்வி அதிகாரிகள் சரியான வழிகாட்டுதல் வழங்கவில்லை.
ஒன்றியம் வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டிருந்தால் அதிக பள்ளிகள் பங்கேற்றிருக்கும். பரிசு வழங்கும்போது தான் இப்பிரச்னையே வெளியானது, என்றனர்.