யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/17

DSE PROCEEDINGS-தமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு பயிற்சி மையங்கள் அமைத்தது-2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்புகள் -விவரம் அனுப்புதல் சார்பு!!!

11 லட்சம் போலி வாக்காளர்கள்; தேர்தல் கமிஷன் நீக்க முடிவு!!!

                                              
தமிழகம் முழுவதும், 11 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்களை, 
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது; ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும், 30 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், ஆண்டு தோறும், அக்டோபர் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடத்தப்பட்டு, ஜனவரி, 5ல், இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படும்.

சிறப்பு முகாம்

அதன்படி, இந்தாண்டு அக்டோபரில், தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி துவங்கியது. இரண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன; ஆன் - லைனிலும் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.


0:00

இதன்படி, ஒரு மாதத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 4.60 லட்சம்; நீக்கக்கோரி, 1.58 லட்சம்; முகவரி மாற்றக் கோரி, ஒரு லட்சம்; திருத்தம் கோரி, 51 ஆயிரத்து, 84 என, மொத்தம், 7.69 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர், 30 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். தேர்தல் கமிஷன் இணையதளத்தில், ஆன் - லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், 'சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள, 40 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில், மனு அளிக்கப்பட்டது. இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், 30 ஆயிரத்து, 495 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.

விசாரணை:

தமிழகம் முழுவதும், ஒன்றுக்கும் மேற்பட்டஇடங்களில் உள்ள பெயர்கள், இடம் மாறிசென்றவர்கள், இறந்தவர்கள் என, 9.45 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அக்டோபரில், பெயர் நீக்கக் கோரி, 1.58 லட்சம் விண்ணப்பங்கள் பெறபட்டுள்ளன. இவற்றையும் சேர்ந்து, மொத்தம், 11.03 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளன.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''11.03 லட்சம் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர். நீக்க வேண்டியவை என, உறுதி செய்து, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்,'' என்றார்.

2100 க்குள் சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம் !!!

அடுத்த வாரம் 2 புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

வி.ஏ.ஓ.க்கள் நூதன போராட்டம் அறிவிப்பு!!!

இலவச 'லேப் டாப் 'கள் பழையது மாணவர்கள் முற்றுகை!!!

முடிந்துபோன பணிக்கு டெண்டர் அதிகாரிகள் துணையோடு முறைகேடு!!!

தேசிய திறனாய்வு தேர்வு 1.59 லட்ச மாணவர்கள் எழுதுகின்றனர்!!!

மாணவர்களுக்கு ஸ்டேஷனில் பாடம்!!!

குரூப் 4 தேர்வு: இலவச பயிற்சி!!!

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு SABL - LESSON PLAN எழுத தேவை இல்லை - DATE : 06/07/2015

1-4 வகுப்பு ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து அரசாணைகள் உள்ளதா??? RTI பதில்

*அரசாணை அறிவோம் : 34 தொடக்கக்கல்வி - M.Phil., P.hd மேற்படிப்புகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அனுமதி அளிக்கலாம். தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் : 023458 / இ1 / 2014

7வது ஊதிய கமிசனில் பாரபட்சம் ஊதிய நிர்ணய விருப்ப கடிதத்தை திரும்ப பெறும் இடைநிலை ஆசிரியர்கள்!!!

நம் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் !

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு

2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்

6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு

8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்

16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு

26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு

31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு

36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை

41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )

46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு

52.நலத்திட்டப் பதிவேடுகள்

செல்போன் டவரில் ஏறி போராட்டம்!

                                               
மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அண்ணா சாலையில்
உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடலூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற இளைஞர் சென்னை அண்ணா சாலையில் உள்ள செல்போன் டவரில் ஏறி இன்று (நவம்பர் 18) காலை போராட்டம் நடத்தியுள்ளார். சுமார் 100 அடி உயரத்தில் இருந்து கொண்டு மேலே இருந்து கீழே குதிக்கப்போவதாக மிரட்டியுள்ளார். இதைகண்ட சிலர் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் இளைஞரைக் கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதனை மறுத்த ரவிச்சந்திரன் மேலே இருந்து சில துண்டு பிரசுரங்களை கீழே போட்டுள்ளார். அதில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பா.ஜக தலைவர் டாக்டர் தமிழிசை ஆகியோர் பதவி விலக வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். ரேசன் கடைகளில் அனைவருக்கும் ரூ.10 விலையில் சர்க்கரை வழங்க வேண்டும். எழும்பூர் கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ், மாணவி அனிதா ஆகியோர் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தது தெரியவந்தது.


இதனிடையே செல்போன் டவரில் ஏறிய தீயணைப்புத் துறை வீரர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரவிச்சந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரைக் கீழே அழைத்து வந்துள்ளார்.

செல்போன் டவரில் இருந்து இறங்கியதும் அவரைக் கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவர் இதற்கு முன்னதாக நான்கு முறை செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களிடம் வசூல் வேட்டை அரசு உத்தரவை மீறுவதாக புகார்!!!

DA Rates For Employee From 01.01.2006 To Till Date

DA Rates For Employee From 01.01.2006 To Till Date

*1.1.2006=0%*
*1.7.2006=2%*
*1.1.2007=6%*
*1.7.2007=9%*
*1.1.2008=12%*
*1.7.2008=16%*
*1.1.2009=22%*
*1.7.2009=27%*
*1.1.2010=35%*
*1.7.2010=45%*
*1.1.2011=51%*
*1.7.2011=58%*
*1.1.2012=65%*
*1.7.2012=72%*
*1.1.2013=80%*
*1.7.2013=90%*
*1.1.2014=100%*
*1.7.2014=107%*
*1.1.2015=113%*
*1.7.2015=119%*
*1.1.2016=125%*
*1.7.2016=132%*
*1.1.2017=136%*
*1.7.2017=139%*