யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/11/17

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 25.11.2017 சனிக்கிழமை பள்ளி வேலை நாள்:


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கும் அரசாணையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
தான் அரசு பாலிடெக்னிக் விரைவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த நிலையில், முதுநிலை வரை தமிழில் படித்த தன்னை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவில்லை என்றும், எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரியும் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு 2010ல் வெளியான அரசாணையை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, மனுதாரர் செந்தில்குமாரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

TNPSC : MODEL QUESTIONS :

VAO EXAM STUDY MATERIALS :

கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை: வேலூர் அருகே சோகம் :

கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை: வேலூர் அருகே சோகம்
வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் தீபா, சங்கரி, மணீஷா, ரேவதி ஆகிய நான்கு மாணவிகள் ராமாவரத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது தொடர்பான தகவலறிந்ததும் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீபா, சங்கரி ஆகியோரின் உடல்களை மீட்டனர்.


மணிஷா மற்றும் ரேவதி உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப்பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலியான மாணவிகளின் சடலங்களை கண்டு பெற்றேர்கள் மற்றும் உறவினர்கள் அழுதது நெஞ்சை கரைய வைக்கும் விதமாக இருந்தது.

ஆசிரியர்கள் திட்டியதாலும், பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறியதாலும் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

24/11/17

பள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்பு கருதி, இரவில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு,
பள்ளிநேரம் போக, காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சிறப்பு வகுப்புகளின் போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சுண்டல், பிஸ்கட் போன்றவை வழங்கப்படுகின்றன. சில பள்ளிகளில் காலையில் சிற்றுண்டி, மாலையில் தேனீர் வழங்கப்படுகிறது. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்களே மாலை நேர சிற்றுண்டி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், கிராமங்களை உள்ளடக்கிய நகர பள்ளிகளில், மாலை நேர சிறப்பு வகுப்பு, இரவு, 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. அதே போல், அதிகாலையில், 6:00 மணிக்கு சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன.இதனால், மாணவர்களின் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படுகிறது. மாணவியர், அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வருவதும், மாலை இருள் சூழ்ந்த பின், பள்ளியிலிருந்து பஸ்களில் வீட்டுக்கு வருவதும், பாதுகாப்பு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளை காலையில் சூரிய உதயத்திற்கு பின்னரும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் முடித்துக் கொள்ள, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். சில மாவட்டங்களில் மட்டும் இந்த உத்தரவு உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் இதை அமல்படுத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வால் நூலகர் பதவி உயர்வு பாதிப்பு

மாவட்ட நுாலக அலுவலரை டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், 30 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி பதவி உயர்வை எதிர்பார்த்த நுாலகர்களுக்கு, அந்த வாய்ப்பு பறி போயுள்ளது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் 4200-க்கும் மேற்பட்ட நுாலகங்கள் உள்ளன. இவற்றில் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு, ஊர்புற நுாலகர், 3-ம் நிலை நுாலகர், 2-ம் நிலை நுாலகர், இருப்பு சரிபார்ப்பு அலுவலர், முதல் நிலை நுாலகர், நுாலக ஆய்வாளர் என்ற நிலையில் அளிக்கப்பட்டு, பின்பு மாவட்ட நுாலக அலுவலர் பதவி வழங்குவது 1984 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.சமீப காலமாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட நுாலகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பதவி உயர்வு பெற்றனர். இந்நிலையில் திடீரென 6 மாவட்ட நுாலக அலுவலர் பதவிக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலம் போட்டி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பதவி உயர்வை எதிர்பார்த்துள்ள நுாலகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்கநிர்வாகிகள்

உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததற்காக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகி, மன்னிப்பு கேட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, நீதிபதி கிருபாகரன் கண்டித்தார். இதையடுத்து, சமூக வலைதளங்களில், நீதிபதியை விமர்சித்து, செய்திகள் வந்தன. ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சிலரும், நீதிபதியை விமர்சித்தனர். இவ்வாறு விமர்சிப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, வழக்கறிஞர்கள், செந்தில்குமார், சூரியபிரகாசம் உள்ளிட்டோர் முறையிட்டனர்.


இந்த வழக்கு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நீதிமன்றத்தில், நிர்வாகிகள் ஆஜராகும்படி, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று சங்க முன்னாள் தலைவர், மாயவன், தலைவர், பக்தவத்சலம், பொதுச்செயலர், கோவிந்தன், முன்னாள் பொருளாளர், சொர்ணலதா ஆகியோர் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். 'நீதிமன்றத்தை அவதுாறு செய்யும் நோக்கம் இல்லை' எனவும், அவர்கள் தெரிவித்தனர்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, கூடுதல் அட்வகேட் - ஜெனரல், வெங்கட்ரமணி தெரிவித்தார். 'தற்போதைய நிலையில், இந்த வழக்கை முடிக்கக் கூடாது' என, வழக்கறிஞர், செந்தில்குமார் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, 'அவசரப்பட்டு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை' எனக் கூறிய, நீதிபதி கிருபாகரன், விசாரணையை, டிச., ௬க்கு தள்ளிவைத்தார்.

என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த 1,070 பேராசிரியர்களுக்கு தடை

விடைத்தாள் திருத்தும்பணியில் மெத்தனமாக செயல்பட்டதால், என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தம் செய்ய 1,070 பேராசிரியர்களுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 518 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பருவத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த விடைத்தாள்களை பேராசிரியர்கள் சரியாக திருத்துவதில்லை என்றும், மெத்தனமாக செயல்படுவதாகவும் புகார் எழுந்தது.குறிப்பாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த பருவத்தேர்வு விடைத்தாள்களை சரிவர திருத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா ஆகியோரிடம் சிலர் புகார் செய்தனர். இதற்கிடையே பல மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யக்கோரி விண்ணப்பித்து இருந்தனர்.


இதனையடுத்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் ஏற்கனவே மதிப்பீடு செய்த பேராசிரியர்களிடம் கொடுக்கப்படவில்லை. வேறு பேராசிரியர்களை கொண்டு இந்த விடைத்தாள்கள் திருத்தப்பட்டது. மறுமதிப்பீட்டில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் பழைய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் கிடைத்தது.முதலில் விடைத்தாள்களை திருத்திய பேராசிரியர்கள் சரியாக திருத்தாததால் மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து போட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த பேராசிரியர்களுக்கு தண்டனை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.அதன்படி 1,070 பேராசிரியர்கள் 1 முதல் 3 வருடங்கள் வரை விடைத்தாள்களை திருத்தம் செய்ய தடை விதித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் உமா உத்தரவிட்டுள்ளார். இதில் சென்னை மண்டலத்தில் 680 பேர், திருச்சி மண்டலத்தில் 271 பேர், கோவை மண்டலத்தில் 119 பேர் அடங்குவர்.

SSA - VIDEO CONFERENCE FOR BLOCK LEVEL "EMIS" - CO - ORDINATORS:

முதல்வருக்கு இரட்டை இலை சின்னம்:

எடப்பாடி -ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்*
அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் மதுரை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அடுத்து தலைமை தேர்தல் ஆணையர் அக்சல்குமார் ஜோதி மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் அமர்வில் கடந்த மாதம் 6, 16, 23, 30, நவம்பர் 1, 6 மற்றும் 8-ம் தேதிகளில் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அதாவது சுமார் 300க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட வரைவு உத்தரவு தயார் செய்யப்பட்டு, அது ஆணையர்களுக்கு முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் வரைவை சரிபார்த்து சில திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் அந்த திருத்தங்களை செய்யும் பணி நடைபெற்று வந்தது.


இது முடிந்து, பின்னர் மறுபடியும் மூன்று தேர்தல் ஆணையர்களின் பார்வைக்கும் வரைவு உத்தரவானது அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் முழு ஒப்புதல் கையெழுத்திற்கு பின்னர் உடனடியாக இரட்டை இலை வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் தீர்ப்பு தற்போது வெளியாகி, ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

7வது ஊதியக்குழு பட்டியல் அனுப்புவதில் தாமதம்-கட்டாய வசூல் என பரபரப்பு குற்றச்சாட்டு!

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!
🌻பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.
🌻ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்:
1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது
2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.
🍊 வட்டி வீதம்:
🌻கடன் தொகையில்
முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %
50,001 முதல் 1,50,000 வரை : 7%
1,50,001 முதல் 5,00,000 வரை: 9%
5,00,000க்கு மேல் : 10%
🌻இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.
🍊கடன் வரம்பு:
🌻அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. 
🌻கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம்.
🌻 அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும்.
🍊யாரெல்லாம் கடன் பெறலாம்?:
🌻சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
🍊கடனின் பல்வேறு பிரிவுகள்:
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.
2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.
3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.
4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.
5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.
6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.
7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.
8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.
9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.
10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.
🍊விண்ணப்பம்:
🌻வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.
* மனை வரைபடம்
* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )
* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு
* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று
* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )
* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று
* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்
🍊கடன் ஏற்பளிப்பு:
🌻மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும்.
🌻முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும்.
🌻இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும்.
🌻ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.
🍊கடன் பிடித்தம்:
🌻ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும்.
🌻 இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்.
🌻இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும்.
🍊காப்பீடு:
🌻வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
🍎சிறப்பு குடும்ப நலத்திட்டம்:
🌻வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும்.
🌻 கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும

23/11/17

FLASH NEWS-2009&TET ஊதியமீட்பு போராட்டக்குழு தொடுத்த வழக்கில் 10.11.2017 அன்றைய விசாரணையின் நீதிமன்ற இடைக்கால ஆணை....!!! ( Original Order)




3,500 ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை

அரசுமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 63 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு பள்ளி களிலும், 37 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவி பள்ளிகளிலும் பணியாற்றுகின்றனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர், ஆசிரியர்கள் விகிதத்தில், அதிக முரண்பாடுகள் உள்ளன. மாணவர்களை விடஆசிரியர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது.


இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், போதிய மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை மட்டும் நியமித்து, தில்லுமுல்லு நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,500 ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்குனரக அனுமதியின்றி, மாவட்ட கல்வி அதிகாரிகள், புதிய நியமனங்கள் செய்வதோ, இடமாறுதல் வழங்குவதோ கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

JACTO-JEO CASE DETAILS

No automatic alt text available.

01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்-அரசாணை வெளியீடு!!!

ஆதார் இல்லாமல் சொத்து பத்திரங்களை இனி பதிவு செய்ய முடியாது!!!

ஆதார் கசிவை தடுக்க டம்மி எண் வழங்க திட்டம்.!!

New Draft Syllabus 2017 - 11th & 12th Standard தாவரவியல் பற்றி ஆய்வு செய்த போது

1.பாடத்திட்டம் CBSE  போலவே அமைக்கப்பட்டுள்ளது .
2. கல்லூரிகளில் உள்ள பாடப்பகுதிகளும் அதைத் தவிர்த்து இணைக்கப்பட்டுள்ளன.
3.நமது பழைய பாடத்திட்டத்தில் உள்ள பகுதிகள் தவிர பல பகுதிகள் சேர்க்கப்படுள்ளன.
4.சுருக்கமாக சொன்னால் கல்லூரியில் உள்ள 3 ஆண்டு பாடங்கள் 70% இரண்டாண்டுகளுக்கு வைக்கப்பட்டுள்ளது . ஆசிரியரை பொருத்தமட்டில்  நடத்திவிடலாம்.
5. மாணவர்களை பொறுத்தவரை 6 பாடங்கள் (கல்லூரியில் ஒவ்வொரு பாடத்திற்கும் 3 ஆண்டுபாடங்கள்   (6X 3=18  ஆண்டுகள்) ) பாடத்தை 2 வருடங்களில் படிக்கவேண்டும்.

6. வினாத்தாள் வடிவமைப்பு வெளியிடப்படவில்லை  தற்போது XI வகுப்பிற்கு  100 மதிப்பெண்ணுக்கு  கொடுக்கப்பட்டுள்ளது . எந்த வகையிலும் போட்டித் தேர்வுகளுக்கும் பயன் தராது .ஏனென்றால் அது  பழைய முறைப்படியே உள்ளது . அதை வெளியிட வேண்டும்.
7. மொத்தத்தில் பாடம் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஓகே.
அறிவியல் பாடங்களை பார்த்து மாணவர்கள்  சராசரி,  மிகக்சராசரி மாணவர்கள்  சேர யோசிப்பர்.
By Mr.Venkatesh Alagappan