யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/17

வேலைவாய்ப்பு: மத்திய அரசில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் இன்டலிஜென்ட் 
கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: கணக்காளர்

பணியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.18,000/-

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசித் தேதி: 04.12.2017

மேலும் விவரங்களுக்கு www.icsil.in என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

புலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்று வந்த ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும் பெற முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்-RTI

இன்று பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு! !!

                                         

டிசம்பர்1 முதல் வரபோகுதாம் கனமழை!!!

                                     

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பேச்சு!!!

                                              

பி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்

பணிப்பதிவேடு காணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள்(AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!!!


வாக்காளர் பட்டியலில் சேரணுமா? இனி பேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும்!!!

18வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர 
வேண்டும் என்றால் இனிமேல் நகராட்சி, மாநாகராட்சி அலுவலங்களுக்கு சென்று கால்கடுக்க நின்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும், எளிதில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும்தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் சமீபத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இனிமேல் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் உள்ள 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவருக்கும் அவர்களது பிறந்த நாள் அன்று வாழ்த்துக்கள் வருவதுடன் வாக்காளர் பட்டியலில் ஆன்லைனில் இணைவதற்கான லிங்க்கும் அனுப்பப்படும். அந்த லிங்க்க்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டால் போதும், உடனே உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைந்துவிடும்

இந்த புதிய முறையால் வாக்காளர் பட்டியலில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருப்பதால் வாக்காளர் பட்டியலில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்கொலை எண்ணத்தைப் போக்க தொலைப்பேசி எண்!!!

மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை போக்குவதற்காக 1098 என்ற இலவச 
தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அவலூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்து வந்த ரேவதி, சங்கரி, தீபா மற்றும் மனிஷா ஆகிய 11ஆம் வகுப்பு மாணவிகள் நவம்பர் 24ஆம் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சமீப காலமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. எனவே அவர்களின் தற்கொலைக்கு தீர்வு காண குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எம்.பி. நிர்மலா, “

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏதோ ஒருவகையில் அவமானம் அடைந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் இருக்கின்றனர். பெற்றோர் திட்டினால் கூட அவமானமாகக் கருதி தற்கொலை செய்து கொள்கின்றனர். மற்றவர்கள் முன்னால் கண்டிக்கப்படுவதைத்தான் பெரும்பாலான மாணவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோரோ அல்லது ஆசிரியர்களோ, தனியாக அழைத்துக் கண்டிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு அவமான உணர்ச்சி, தற்கொலை செய்யும் அளவுக்கு எழாது. மேலும் அவர்களைக் கண்டிக்கும் வார்த்தைகளிலும் பெற்றோரும் ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி, இது போல் செய்யக்கூடாது என அவர்களை சமாதானம் செய்து சிரித்து அனுப்பவேண்டும். ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதைக் கண்டறிந்து அந்த வழியில் அவர்களை நடத்த வேண்டும். பள்ளிக்கூட தேர்வில் தோற்றுவிட்டால் உலகத்தில் வாழவே முடியாது என்பதெல்லாம் இல்லை. எனவே தோல்வி அடையும் குழந்தைகளை ஆசிரியர் மற்றும் பெற்றோரே தேற்ற வேண்டும். இவ்வாறு பள்ளி மாணவர்களைக் கையாளும் விதம் குறித்து சில புதிய பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிக்க பள்ளிக் கல்வித் துறையிடம் பேசி வருகிறோம். குழந்தைகளுக்குப் புரியும்படி படிப்பைச் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று ஆசிரியர்களை இலவச கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது.பொதுவாக, குழந்தைகள் ஏதாவது தவறு செய்துவிட்டால், அதைக் கண்டித்து பெற்றோரிடம் சொல்வேன் என்று ஆசிரியர்கள் கூறுவது வழக்கம். இது அந்த மாணவர்களிடம் மிகுந்த பயத்தையும், மனபாரத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. பெற்றோரிடமும் சொல்லி நிவாரணம்தேடும் மனநிலை அந்தக் குழந்தைகளுக்கு அப்போது இருக்காது. எனவே இதற்கு நிவாரணம் பெறுவதற்காக ‘1098’ என்ற இலவச தொலைப்பேசி எண்ணை அறிவித்து இருக்கிறோம். இந்த எண்ணைப் பயன்படுத்தி மாணவர்கள் தீர்வு பெறலாம். பெற்றோரோ அல்லது ஆசிரியரோ கண்டித்து அவமானப்படுத்திவிட்டால், தற்கொலையை நாடாமல் முதலில் இந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும். அதற்கு பதிலளிக்க 24மணிநேரமும் ஆட்கள் இருப்பார்கள். படிப்பு, நட்பு என்று எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட குழந்தைகள் நேரடியாக சொல்லிவிட்டால், அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து, அவமான உணர்ச்சியை நீக்குவதுடன், தேவையான பாதுகாப்பும் அளிப்போம்.தற்கொலை என்பது தீர்வே அல்ல” எனக் கூறியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தால் அல்லது எதிர்பார்த்த அளவு மதிப்பெண் கிடைக்காமல் குறைந்தால் தற்கொலையில் ஈடுபடும் மனநிலை அதிகரித்து வருகிறது எனக் கூறி, அதைத் தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் சமூக பாதுகாப்புத்துறை இணைந்து ஆசிரியர்கள் மூலம் பள்ளி அளவில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அந்தந்த மாவட்டத்திலேயே, மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி, தற்கொலை எண்ணம் வராமல் தடுக்கும் வழிமுறை என்ன என்பதைக் குறித்து மனவளக்கலை பயிற்சி அளிக்கப்படும் என்றும், பயிற்சி பெறும் ஆசிரியர்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் அளிப்பார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஆசிரியர்களுக்கான பயிற்சி விரைவில் அளிக்கப்படும் எனத் தெரிவித்தனர். ஆனால், அந்த நடைமுறை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த கல்லூரிகள்: அகமதாபாத் ஐஐஎம் முதலிடம்!

                                       
எம்பிஏ பட்டப் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்களில் 
அகமதாபாத் ஐஐஎம் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக இன்று (நவம்பர் 28) அறிவிக்கப்பட்டுள்ளது.

க்யூ.எஸ். குளோபல் ரேங்கிங் 2018 பட்டியலில் உலக அளவில் எம்பிஏ படிப்பு வழங்கும் சிறந்த 50 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஹார்வேர்டு (Harvard) மேலாண்மை முதலிடத்தில் உள்ளது. இன்சீட் (INSEAD)இரண்டாவது இடத்திலும், ஹெக் (HEC)மூன்றாவது இடத்திலும் உள்ளன. யேல் பல்கலைக்கழகம் 18ஆவது இடத்திலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 19ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவிலிருந்து ஒரே ஒரு கல்லூரிக்கு மட்டும் இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் நிறுவனம் 49ஆவது இடத்தைப் பிடித்து இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 50ஆவது இடத்தில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் உள்ளது. 100 இடங்களுக்குள் இரு இந்திய நிறுவனங்கள் உள்ளன. ஐஐஎம் பெங்களூர் 58ஆவது இடத்திலும் இந்திய மேலாண்மைப் பள்ளி 93ஆவது இடத்திலும் உள்ளன.

தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்!

                                                   
        
இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (கவுன்சில் ஃபார் தி இந்தியன் 
ஸ்கூல் சர்டிஃபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்) நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 27) அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40 ஆகவும் உள்ளது. இதனை இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (CISCE) மாற்றியுள்ளது. அதன்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 33 மதிப்பெண்களும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கான குறைந்த தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றம் வரும் 2018-19ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் நடத்திய பொதுத் தேர்வில், ஹச்சிங்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜில் பயின்ற புனேவைச் சேர்ந்த முஸ்கன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மாணவன் அஸ்வின் ராவ் ஆகியோர் 99.4% மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்தனர்.

ஆசிரியர்க்ள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறையால பள்ளிகள் தவிப்பு !

தமிழ்நாடில் பள்ளி கல்வி முக்கியமானது. நாளைய பாரதம் யாரதன் காரணம் என்றால் அதற்கான 
விடை மாணவர்கள்தான என்பதை நாம் படித்திருக்கிறோம் அப்படிப்பட்ட எதிர்கால தலைவர்களை உருவாக்கும் இன்றைய பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிகுள்ளாகுகின்றனர்.


நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ மதுரை ஊராட்சி கூங்கூர் மூலமா மேல்நிலைப்பள்ளியில் 520 மாணவர்கள் பயில்கின்றனர்.இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மிகுந்த சிக்கலில் உள்ளனர். ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் வெறும்  மாணவர்களை கொண்ட  வகுப்பறை வெறுமையில் உள்ளது. மாணவர்கள் இதன் பொருட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் வேதியியல், தமிழ், அறிவியல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்றி மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். இதனை அரசு கவனித்து மாணவர்கள் தேவையை பூர்த்தி செய்து தர வேண்டும்.

தலை ஆசிரியர்கள் இல்லாத அரசு பள்ளிகள்:
கோவை மாவட்டத்தில் 17 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் கற்ப்பித்தல் மற்றும் நிர்வாகப்பணிகள் பாதிப்படைகின்றனர். தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இல்லாமல் மாநிலம் முழுவதும் 900 பணியிடங்கள் காலியாகவுள்ளன அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 17 பள்ளிகள் தத்தளிக்கின்றன.

தலைமை ஆசிரியர் வாரத்தில் பத்து  வகுப்புக்களை கையாள்வதுடன் நிர்வாகப்பணிகளை கண்காணிக்க வேண்டும். தற்பொழுது அப்பணியை தலைமை துணை ஆசிரியர் மேற்கொள்வதால் பணிச்சுமை பெருகுகின்ற்து, இவ்வாண்டு கல்வியாண்டு தொடங்கி ஆறுமாத காலங்களை தொட்டுவிட்டன. அத்துடன் இன்னும் நான்கு மாதத்தில் பொதுத்தேர்வு நெருங்கவுள்ள நிலையில் மாணவர்களை தேர்வில் படிக்க வைக்க வேண்டும் அத்துடன் தேர்வரைகள் , கண்காணிப்பு பணிகள் , போன்ற பல்வேறு பணிகளை நடத்த வேண்டிய பொருப்புகள் இருப்பதால் அரசு இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு ஆசிர்யர்களை நியமிக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் தேவை இன்றியமையாமை ஆகும். இதனை உணர்ந்து  பள்ளிக்கல்வித்துறை செயல்பட வேண்டியது அவசியமாகும்.

28/11/17

அரையாண்டு தேர்வு கால அட்டவணை!!





பி.எப்.வட்டியை குறைக்க மத்தியரசு திட்டம்!!!

நியாவிலைக் கடைகளில் விற்பனையாளர், உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!!

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுச் 
சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து டிசம்பர் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நியாயவிலைக் கடை விற்பனையாளர்

காலியிடங்கள்: 26

சம்பளம்: தொகுப்பு ஊதியம் ஒரு ஆண்டுக்கு ரூ.5,000 அதனைத் தொடர்ந்து ஊதிய விகிதம் ரூ.4,300 - 12,000

தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி(+2) பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: கட்டுநர்

காலியிடங்கள்: 09

சம்பளம்: தொகுப்பு ஊதியம் ஒரு ஆண்டுக்கு ரூ.4,250, அதனைத் தொடர்ந்து ஊதிய விகிதம்.

மேற்கண்ட பணியிடங்கள் நேரடி நியமனத்தின் போது அரசுப் பணிக்கு இனச் சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது.

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்

தகுதி: பள்ளி இறுதி வகுப்பு, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை  முப்படி செலான் சங்க செலான் மூலமாக நீலகிரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் எந்த கிளையிலும் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு மையத்தின் சேமிப்புக் கணக்கில் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், பிளாக்-IV, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் - 643 006

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 15.12.2017

நிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா? - போராட தயாராகிறது ஜாக்டோ ஜியோ :

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு அறிக்கையை, நவ., 30க்குள் வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும், பங்களிப்பாக செலுத்திய பணம் கூட கிடைக்கவில்லை என்றும், ஆசிரியர், அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமாறு, அரசு ஊழியர், - ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த கூட்டமைப்பு, செப்டம்பரில் நடத்திய, தொடர் வேலை நிறுத்த போராட்டம்,உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது. அப்போது, நவ., 30க்குள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து,நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. 'குறித்த நாட்களுக்குள் நிபுணர் குழு அறிக்கை வெளியிட வேண்டும்; இல்லாவிட்டால், போராட்டம் நடத்தப்படும்' என, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்தபடி, நிபுணர் குழுவின் அறிக்கை, நவ., 30ல் வெளியிடப்பட வேண்டும். அதன்படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யப்படும் என, எதிர்பார்க்கிறோம். அறிக்கை வராவிட்டால், டிச., 4ல், உயர்மட்டக்குழு கூடி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு செய்யப்படும். இது குறித்த வழக்கு, டிச., 8ல் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, தமிழக அரசு தாமதிக்காமல், கோரிக்கையை நிறைவேற்றமுன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம் :

பிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம் பிளஸ் 1 செய்முறை தேர்வு குழப்பங்களை போக்கும் வகையில், சரியான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அடுத்த ஆண்டில், பிளஸ் 2 எழுத உள்ள தனித்தேர்வர்களும், பிளஸ்1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 தனித்தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எழுத்து தேர்வு மட்டும் உள்ள பாடங்களையே தேர்வு செய்ய முடியும். பள்ளி மாணவர்களை பொறுத்தவரை, 100 மதிப்பெண்களில், 20 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வும், 10 மதிப்பெண் அகமதிப்பீடாகவும், 70 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வும் நடத்தப்படும். இந்நிலையில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டே செய்முறை தேர்வு நடக்குமா அல்லது முந்தைய அரசாணையில் கூறியபடி, பிளஸ் 2வில் சேர்த்து நடத்தப்படுமா என, குழப்பம் இருந்தது. இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'பிளஸ் 1க்கு, இந்த ஆண்டே செய்முறை தேர்வு நடத்தப்படும்' என, அக்டோபரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், செய்முறை தேர்வு எப்போது நடத்தப்படும்; அதற்கான வழிமுறைகள் என்ன; இதுவரை நடத்தப்பட்டது போல், பெயரளவில் நடத்தப்படுமா அல்லது மற்ற பள்ளி ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக அமர்த்தப்பட்டு, முழு கட்டுப்பாட்டுடன் நடக்குமா என, பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.தமிழக பள்ளிக் கல்வித் துறை இது குறித்து ஆலோசித்து, பிளஸ் 1 செய்முறை தேர்வு குறித்து, குழப்பங்கள் இல்லாத சரியான வழிகாட்டுதலை, விரைவில் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளியில் பாலியல் தொல்லை தடுக்க அரசு புதிய திட்டம்

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்க,மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டம் தயாரித்து வருகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில்நேற்று கூறியதாவது:
பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதை தடுக்க,பல்வேறு சட்டம், விதிகள் அமலில் உள்ளன. இருப்பினும், நாடு முழுவதும்பல்வேறு இடங்களில், பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்கள்நடப்பது குறித்த புகார்கள் வந்தபடி உள்ளன.எனவே, குழந்தைகளுக்கு, நல்ல தொடுதல், தீய தொடுதல் எது என்றபாடத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்களை தடுக்க, பல அரசு சாராஅமைப்புகளுடனும், சமூக ஆர்வலர் குழுக்களுடனும், பேச்சு நடந்து வருகிறது.பள்ளி மட்டத்தில், பாலியல் அத்துமீறல்கள், பலாத்காரங்களை தடுக்க,விரைவில் சிறப்பான திட்டம் வகுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கைகளை 'கட்டியதால்' சாத்தியமில்லை... நூறு சதவீத தேர்ச்சி! ஆசிரியர்கள் குமுறல்

'வேலுார் பனப்பாக்கத்தில், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, ஆசிரியர்கள் 'வாட்ஸ்-ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் - மாணவர் உறவை வலுப்படுத்த, உளவியல் ஆலோசனை வழங்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது. அத்தோடு, மாணவர்களை எந்த வகையிலும், கண்டிக்க அனுமதிக்காமல், நுாறு சதவீத மதிப்பெண் பெற வலியுறுத்துவது சாத்தியமில்லை என்பதையும், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி, மாணவர்களை மனம் புண்படும்படி திட்டவோ, அடிக்கவோ கூடாது. இதை, கல்வியாண்டு துவங்கும் போதே, ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளில், ஆண்டுதோறும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், மதிப்பெண்கள் பெறாத மாணவர்களை கண்டிக்குமாறு, பெற்றோரே ஆசிரியரிடம் முறையிடுவதும் உண்டு. ஆசிரியரின் கண்டிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.வேலுார், பனப்பாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாதாந்திர கணிதத்தேர்வில் தோல்வியை தழுவிய காரணத்திற்காக, பெற்றோரை அழைத்து வரும்படி கூறியதால், நான்கு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவத்திற்காக, தலைமையாசிரியர் ரமாமணி, வகுப்பு ஆசிரியர் மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகிய இருவரும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'பள்ளிக்கு தாமதமாக வரும், மாணவர்களை எதுவும் கூறாமல் இருந்தால், ஒழுக்கம், கீழ்படிதல் ஆகிய, நற்பண்புகள் எப்படி வளரும், தோல்வியை தழுவிய மாணவிகளின், கற்றல் நிலையை, பெற்றோரிடம் எடுத்து கூற, அழைத்து வரும்படி உத்தரவிட்டது, ஆசிரியரின் கடமையல்லவா, இப்படி எல்லா நிலைகளிலும், ஆசிரியரின் கைகள் கட்டப்பட்ட பின், நுாறு சதவீத தேர்ச்சியை எதிர்பார்ப்பது நியாயமா' என, அடுக்கடுக்கான கேள்விகணைகளை தொடுத்து, ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.தோல்வியை எதிர்கொள்ளவும், கண்டிப்பை ஏற்கவும் கூட, முடியாத அளவுக்கு, தற்போதைய கல்விமுறை இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.

இது சார்ந்து, அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைத்து, சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பயம்,பதட்டமில்லாமல், தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வது, தற்கொலை எண்ணங்களை தவிர்க்க, மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டுவது அவசியம் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சாமி. சத்தியமூர்த்தி கூறியதாவது:ஆசிரியர்-மாணவர் உறவில், விரிசல் இருப்பதை,உறுதி செய்யும் சம்பவங்கள், அடிக்கடி நடக்கின்றன.

இதுபோன்ற தருணங்களில், சம்பவத்தின் உண்மைத்தன்மை ஆராயப்பட்ட பின், நடவடிக்கை எடுப்பது அவசியம். மாணவர்களை வழிநடத்தும் விதம் குறித்து, ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்பு, நடத்த வேண்டும். தேர்ச்சி சதவீதத்தை மட்டும் இலக்காக முன்னிறுத்தி, பணிபுரியும் ஆசிரியர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். பள்ளி சூழலை ஆரோக்கியமானதாக்க, ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். இதை உருவாக்க வேண்டியது, கல்வித்துறையின் முக்கிய கடமையாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது?

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆண்டுதோறும், மே மாதம், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டுக்கு, ஏப்ரலில், இந்த தேர்வு நடத்தப்படலாம் என, கூறப்படுகிறது.இது தொடர்பாக ஆலோசிக்க, சி.பி.எஸ்.இ.,யின், நீட் தேர்வு கமிட்டி, விரைவில் கூடுகிறது. டிச., மூன்றாம் வாரம் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு, தமிழக மாணவர்கள், முழுமையாக, நீட் தேர்வில் பங்கேற்க உள்ளனர். அதனால், நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை, 11.35 லட்சத்திலிருந்து, 13 லட்சத்துக்கும் மேல் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.