மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை போக்குவதற்காக 1098 என்ற இலவச
தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அவலூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்து வந்த ரேவதி, சங்கரி, தீபா மற்றும் மனிஷா ஆகிய 11ஆம் வகுப்பு மாணவிகள் நவம்பர் 24ஆம் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சமீப காலமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. எனவே அவர்களின் தற்கொலைக்கு தீர்வு காண குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எம்.பி. நிர்மலா, “
பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏதோ ஒருவகையில் அவமானம் அடைந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் இருக்கின்றனர். பெற்றோர் திட்டினால் கூட அவமானமாகக் கருதி தற்கொலை செய்து கொள்கின்றனர். மற்றவர்கள் முன்னால் கண்டிக்கப்படுவதைத்தான் பெரும்பாலான மாணவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோரோ அல்லது ஆசிரியர்களோ, தனியாக அழைத்துக் கண்டிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு அவமான உணர்ச்சி, தற்கொலை செய்யும் அளவுக்கு எழாது. மேலும் அவர்களைக் கண்டிக்கும் வார்த்தைகளிலும் பெற்றோரும் ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி, இது போல் செய்யக்கூடாது என அவர்களை சமாதானம் செய்து சிரித்து அனுப்பவேண்டும். ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதைக் கண்டறிந்து அந்த வழியில் அவர்களை நடத்த வேண்டும். பள்ளிக்கூட தேர்வில் தோற்றுவிட்டால் உலகத்தில் வாழவே முடியாது என்பதெல்லாம் இல்லை. எனவே தோல்வி அடையும் குழந்தைகளை ஆசிரியர் மற்றும் பெற்றோரே தேற்ற வேண்டும். இவ்வாறு பள்ளி மாணவர்களைக் கையாளும் விதம் குறித்து சில புதிய பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிக்க பள்ளிக் கல்வித் துறையிடம் பேசி வருகிறோம். குழந்தைகளுக்குப் புரியும்படி படிப்பைச் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று ஆசிரியர்களை இலவச கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது.பொதுவாக, குழந்தைகள் ஏதாவது தவறு செய்துவிட்டால், அதைக் கண்டித்து பெற்றோரிடம் சொல்வேன் என்று ஆசிரியர்கள் கூறுவது வழக்கம். இது அந்த மாணவர்களிடம் மிகுந்த பயத்தையும், மனபாரத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. பெற்றோரிடமும் சொல்லி நிவாரணம்தேடும் மனநிலை அந்தக் குழந்தைகளுக்கு அப்போது இருக்காது. எனவே இதற்கு நிவாரணம் பெறுவதற்காக ‘1098’ என்ற இலவச தொலைப்பேசி எண்ணை அறிவித்து இருக்கிறோம். இந்த எண்ணைப் பயன்படுத்தி மாணவர்கள் தீர்வு பெறலாம். பெற்றோரோ அல்லது ஆசிரியரோ கண்டித்து அவமானப்படுத்திவிட்டால், தற்கொலையை நாடாமல் முதலில் இந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும். அதற்கு பதிலளிக்க 24மணிநேரமும் ஆட்கள் இருப்பார்கள். படிப்பு, நட்பு என்று எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட குழந்தைகள் நேரடியாக சொல்லிவிட்டால், அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து, அவமான உணர்ச்சியை நீக்குவதுடன், தேவையான பாதுகாப்பும் அளிப்போம்.தற்கொலை என்பது தீர்வே அல்ல” எனக் கூறியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தால் அல்லது எதிர்பார்த்த அளவு மதிப்பெண் கிடைக்காமல் குறைந்தால் தற்கொலையில் ஈடுபடும் மனநிலை அதிகரித்து வருகிறது எனக் கூறி, அதைத் தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் சமூக பாதுகாப்புத்துறை இணைந்து ஆசிரியர்கள் மூலம் பள்ளி அளவில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அந்தந்த மாவட்டத்திலேயே, மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி, தற்கொலை எண்ணம் வராமல் தடுக்கும் வழிமுறை என்ன என்பதைக் குறித்து மனவளக்கலை பயிற்சி அளிக்கப்படும் என்றும், பயிற்சி பெறும் ஆசிரியர்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் அளிப்பார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஆசிரியர்களுக்கான பயிற்சி விரைவில் அளிக்கப்படும் எனத் தெரிவித்தனர். ஆனால், அந்த நடைமுறை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக