யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/11/17

பள்ளிகளில் முடங்கிய உளவியல் கவுன்சிலிங் : தற்கொலையை தடுக்க தீர்வு தருமா?

மாணவர்களின் தற் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் முடங்கி உள்ள, உளவியல் கவுன்சிலிங் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நிபுணர்கள் நியமனம் : தமிழகத்தில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களுக்கு, கல்வி மாவட்டம் வாரியாக, உளவியல் கவுன்சிலிங் வழங்க, மூன்று உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், கூடுதலாக, ஏழு மனோதத்துவ நிபுணர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டது.
இதற்காக, உளவியல் கவுன்சிலிங் வாகனங்களும் வாங்கப்பட்டன.ஆனால், எந்த பள்ளியிலும், இந்த கவுன்சிலிங் நடத்தப்படவில்லை; மனோதத்துவ நிபுணர்களும் நியமிக்கப்படவில்லை.
'பேஸ் புக்' : பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களே தங்கள் பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு, உளவியல் கவுன்சிலிங் செய்கின்றனர். இந்நிலையில், சமீப காலமாக பள்ளி மாணவ - மாணவியர், மனதளவில் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சக மாணவர்களுடன் சகஜமாக பழகுவதில்லை. ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் போட்டி போடுவது, ஒழுக்க கல்வி கிடைக்காதது, 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' மற்றும், 'ஆன்லைன் கேம்ஸ்' என, படிப்பு நேரத்தை வீணடிப்பது என, பள்ளிகளில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.

'ஆசிரியர்கள், பெற்றோர் கண்டித்தால் தற்கொலை செய்வது என, விபரீதமான முடிவுகள் எடுக்கின்றனர். எனவே, மாணவர்களை பக்குவப்படுத்தவும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே, ஒருமித்த உணர்வை ஏற்படுத்தவும், கவுன்சிலிங் தேவை. அதனால், பள்ளிகளில் செயல்படாமல் முடங்கியுள்ள, உளவியல் கவுன்சிலிங் திட்டத்தை, உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

CPS ACCOUNT SLIP – PUBLISHED ONLINE :

தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்!

இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்) நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 27) அறிவிக்கப்பட்டுள்ளது.



நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40 ஆகவும் உள்ளது. இதனை இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (CISCE) மாற்றியுள்ளது. அதன்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 33 மதிப்பெண்களும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கான குறைந்த தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றம் வரும் 2018-19ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் நடத்திய பொதுத் தேர்வில், ஹச்சிங்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜில் பயின்ற புனேவைச் சேர்ந்த முஸ்கன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மாணவன் அஸ்வின் ராவ் ஆகியோர் 99.4% மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்தனர்.

4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'

வேலுார்: நான்கு மாணவியர் தற்கொலையை அடுத்து, அந்த பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த, பனப்பாக்கத்தில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 16 வயதுடைய நான்கு மாணவியர், பிளஸ் 1 படித்து வந்தனர். 
இவர்களை ஆசிரியர் திட்டியதால், நவ.,24ல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.மாவட்ட கல்வி அலுவலர், அமுதா, நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விசாரணை செய்தார். அதில் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியைகள், மாணவியரை மிகவும் அசிங்கமாகவும், சாதி பெயரை குறிப்பிட்டு திட்டுவதும் தெரியவந்தது.
பட்டியல் தயாரிப்பு : இதைடுத்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியைகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், பள்ளியில் பணியாற்றும், 48 ஆசிரியைகளில், 18 பேர் தற்காலிகமாக பணியாற்றி வருவது தெரியவந்தது.தற்காலிக ஆசிரியர்கள், 18 பேரையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நேற்று கூண்டோடு டிஸ்மிஸ் செய்தார். மேலும், இவர்கள் வேறு எந்த அரசு பள்ளியிலும் பணியாற்றவும் தடை விதித்துள்ளார்.மாணவியர் தற்கொலை விவகாரத்தில், தற்காலிக ஆசிரியர்கள் பலர் காரணமாக இருந்துள்ளதால், அவர்கள் பனப்பாக்கத்தை விட்டு செல்லவும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என, தனிப்படை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

வீடுகளில் டியூஷன் : இந்நிலையில், பள்ளியில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியைகள் சிலர், தங்கள் வீடுகளில், 'டியூசன்' எடுத்து வருவதாகவும், இதில், மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவியரை சேரும்படி கட்டாயப்படுத்துவதாகவும் விசாரணையில் மாணவியர் கூறினர்.
இதையடுத்து, 'பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், யாரும் தங்கள் வீடுகளில் டியூசன் நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, மாவட்ட கல்வி அலுவலர் அமுதா எச்சரித்துள்ளார்.வேலுார் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மன நல மருத்துவர் நேற்று பள்ளிக்கு சென்று, 10ம் வகுப்பு, பிளஸ், 1, பிளஸ் 2 மாணவியரை தனித்தனியாக அழைத்து 'கவுன்சிலிங்' செய்தார்.

தமிழக அரசில் இளநிலை ஆய்வாளர், தொல்பொருள் வேதியியலாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் மருத்துவம், தொழில் மற்றும் வர்த்தகம், தொல்பொருள் துறைகளில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர், இளநிலை வேதியியலாளர், தொல்பொருள் வேதியியலாளர் போன்ற 24 பணியிடங்களுக்கு வரும் பிப். 17, 18-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 2க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Analyst - 14

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800 (PB2) 4,400/- G.P]
பணி: Junior Chemist in Industries and Commerce Department - 06 
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800/- (PB2) 4,400/- G.P
பணி: Chemist in Industries and Commerce Department - 03 
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800/- (PB2) 5,100/-G.P
பணி: Archaeological Chemist in Archaeology Department - 01 
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100/- (PB2) 5,400/-G.P
எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிச. 20-ஆம் தேதி கடைசி நாள். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலமாக கட்டணம் செலுத்த டிச. 22 ஆம் தேதி கடைசி நாள்.

எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
பதிவு மற்றும் தேர்வுக் கட்டணங்கள்
அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கடந்த மார்ச்சில் ரூ.50-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாகப் பதிவு செய்வோர் மட்டுமே ரூ.150 செலுத்த வேண்டும்.

ஏற்கெனவே நிரந்தரப் பதிவுகளை வைத்திருப்போர் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதேபோன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதர பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய -
http://www.tnpsc.gov.in/notifications/2017_28_not_junior_analyst_chemist.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

சேலம் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளியில் சத்துணவு உண்ணும் காட்சி!

                                 

மதுரை மாவட்ட ஆட்சியருக்குக் குடியரசுத் தலைவர் விருது!

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவுக்குக் குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

                                          

மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றதிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், மறுவாழ்வு பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக இந்த விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது. 
வருகிற டிசம்பர் 3ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கவுள்ளார்.குடியரசுத் தலைவர் விருது பெறவுள்ள மாவட்ட ஆட்சியர்வீரராகவ ராவுக்குப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். இவர் ஏற்கனவே வாக்காளர் விழிப்புணர்வு, தூய்மை பாரதம் ஆகியவற்றுக்கான விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

29/11/17

பி.எப்.வட்டியை குறைக்க மத்தியரசு திட்டம்!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 'டெபுடேஷன் அலவன்ஸ்' உயர்வு

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், 'டெபுடேஷன் 
அலவன்ஸ்' இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

'டெபுடேஷன்' எனப்படும், அயல் பணிக்கு செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, அதற்கான படி வழங்கப்படுகிறது. உள்ளூரில், அயல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, அவர்களின் மாத அடிப்படை சம்பளத்தில், 5 சதவீதம் அல்லது அதிகபட்சம், 2,000 ரூபாய், டெபுடேஷன் அலவன்சாக வழங்கப்படுகிறது.
வெளியூரில், அயல் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவர்களின் மாத அடிப்படை சம்பளத்தில், 10 சதவீதம் அல்லது அதிகபட்சம், 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், டெபுடேஷன் அலவன்சை, இரு மடங்காக உயர்த்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உள்ளூர் அயல் பணிக்காக, அதிகபட்சம், 4,500 ரூபாயும், வெளியூர் அயல் பணிக்காக, அதிகபட்சம், 9,000 ரூபாய் வழங்கப்படும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்
, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


50 லட்சம் : தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பல பள்ளிகளில், ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை; பாடம் நடத்துவதில்லை; கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை; ஆசிரியர் - மாணவர் மோதல் என, பல புகார்கள் உள்ளன.இவை குறித்து, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவான, எஸ்.எம்.சி., ஆகியவை, ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும், ஆய்வுகள் நடத்தி, தீர்வு காண்பதில்லை.

உத்தரவு : அதனால் ஆசிரியர்களுக்கு, மாணவர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், தீர்வு காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன்படுத்தும் வகையில், புகார் பெட்டி வைக்க வேண்டும் என்ற விதியை, தலைமை ஆசிரியர்கள் பின்பற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை : புகார் பெட்டிகளை உடனடியாக அமைத்து, அதில் வரும் புகார்களை, எந்தவித பாரபட்சமும் இன்றி விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பின், அது தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கு, அறிக்கை அளிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

டி.ஆர்.பி., வழியே 482 சிறப்பாசிரியர் நியமனம்!!

சென்னை: கூடுதலாக ஏற்பட்டுஉள்ள, 482 
சிறப்பாசியர் பணியிடங்களையும், ஆசிரியர் தேர்வு

வாரியமான, டி.ஆர்.பி., வழியே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., சார்பில்,செப்., 23ல் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்; முடிவுகள் விரைவில் வர உள்ளது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் ஏற்பட்ட, 482 காலியிடங்களுக்கும் சேர்த்து, இந்த தேர்விலேயே பணி நியமனம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளிக்கல்வி அமைச்சர், முதன்மை செயலர், டி.ஆர்.பி., தலைவர், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோரிடம், சிறப்பாசிரியர்கள், சுப்ரமணி, லட்சுமிபதி மற்றும் காந்தி ஆகியோர் மனு அளித்துஉள்ளனர்.இதுகுறித்து மனு அளித்த ஆசிரியர்கள் கூறியதாவது:நடப்பு கல்வி ஆண்டில், சிறப்பு பாடப்பிரிவில், 482 காலி இடங்கள் ஏற்பட்டுஉள்ளன. அவற்றை, முக்கிய பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் இடங்களாக மாற்றப்பட உள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி மாற்றினால், போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.எனவே, சமீபத்தில் நடந்த போட்டி தேர்வின் அடிப்படையில், கூடுதலாக, 482 இடங்களை சேர்த்து, பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
மேலும், டி.டி.சி., என்ற ஆசிரியர் தொழில்நுட்ப சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே, சிறப்பாசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்
கூறினர்.

புதிய பாடத்தி்ட்டம் கருத்துகேட்பு : டிச.,4வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், புதிய பாடத்திட்டம் 
கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வரைவு பாடத்திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, நவ., 20ல் வெளியிட்டார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், tnscert.org என்ற இணையதளத்தில், நவ., 21ல், பாடத்திட்ட வரைவு பதிவேற்றம்செய்யப்பட்டது.இது குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள், ஒரு வாரம் வரை கருத்து கூறலாம் என, அறிவிக்கப்பட்டது.

இந்த அவகாசம், நாளை முடியும் நிலையில், கருத்து கூறுவதற்கு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த செய்தி,  நாளிதழில், நேற்று வெளியானது.இது தொடர்பாக, அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின், பாடத்திட்டத்துக்கான கருத்து கூற, இன்று முதல், ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப்படும் என, அறிவித்தார்.

இதன்படி, டிச., 4 வரை, பாடத்திட்ட கருத்துக்களை பெற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

TNPSC-யை கண்டித்து போராட அரசு ஊழியர்கள் முடிவு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 'குரூப் - 4 பதவிகளுக்கு 
வெளிமாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற கோரி, போராட்டத்தில் ஈடுபடுவது என, அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
துரோகம் : மதுரையில், சங்க மாநிலத் தலைவர், சுப்பிரமணியன் கூறியதாவது:காவிரி, ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்னைகளில், தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்படுகிறது.

பாலிடெக்னிக் கல்லுாரிகளில், விரிவுரையாளர் தேர்வுக்கு தமிழே தெரியாத பிற மாநிலத்தவர் சேர ஏதுவாக, விதிகளில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டது.அதை தொடர்ந்து, 'டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், வெளி மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும், இடஒதுக்கீடுக்கு இதுதடையாக இருக்காது எனவும், தமிழக அரசு சப்பைக்கட்டு கட்டுகிறது. தமிழகத்தில், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். அரசியல் ஸ்திரமற்ற நிலையால், பெரு நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க முன்வரவில்லை. பத்தாம் வகுப்பு படித்திருந்தால், குரூப் - 4 தேர்வு எழுதி, அரசு துறையில் சேர்ந்து விடலாம் என்ற தமிழக இளைஞர்கள் எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது. இதை, எம்.எல்.ஏ.,க்களும் எதிர்க்காதது வியப்பு அளிக்கிறது.

சட்டதிருத்தம் : முதல்வர், பழனிசாமி உடனடியாக தலையிட்டு, அரசு பணியாளர்கள் - பணி நிபந்தனைகள் சட்டம், 2016ல், தமிழக மாணவர்கள் நலன்கள் பாதிக்காத வகையில், உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். குரூப் - 4 பதவிகளுக்கான அறிவிப்பை திரும்ப பெற்று, உரிய சட்ட திருத்தம் செய்த பின், தமிழக இளைஞர்கள், 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்யும் வகையில், அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லை எனில், அரசு ஊழியர்சங்கம் போராட்டத்தில் ஈடுபட நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு: மத்திய அரசில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் இன்டலிஜென்ட் 
கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: கணக்காளர்

பணியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.18,000/-

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசித் தேதி: 04.12.2017

மேலும் விவரங்களுக்கு www.icsil.in என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

புலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்று வந்த ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும் பெற முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்-RTI

இன்று பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு! !!

                                         

டிசம்பர்1 முதல் வரபோகுதாம் கனமழை!!!

                                     

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பேச்சு!!!

                                              

பி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்

பணிப்பதிவேடு காணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள்(AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!!!