யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/17

பாடத்திட்டத்தில் பாரதியார் பாடல்கள் : துணை ஜனாதிபதி விருப்பம்!

சென்னை: ''பாரதியார் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்,''
என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.


வானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதி விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.
விழாவில், சி.பி.ஐ., முன்னாள் முதன்மை இயக்குனர், கார்த்திகேயனுக்கு, பாரதி விருதை, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வழங்கி பேசியதாவது: பாரதியாரின் பாடல்கள் அனைத்தும் கருத்துக்கள் செறிந்தவை. மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது என, அவர் வலியுறுத்தி உள்ளார். பாரதியாரின் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தமிழும், தமிழகமும் எனக்கு நெருக்கமானவை. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட போது, எனக்கு தமிழை கற்க நேரமில்லை. அனைவரும், அவரவர் தாய்மொழியில், பேசுவதே சிறப்பு. நான் தற்போது எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாம் முயற்சி கண்டால், பாரதி கண்ட புதுமை தேசத்தை அடையலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் பாண்டியராஜன், இல. கணேசன் எம்.பி., - ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்முறை தேர்வு : சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,
பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு செய்முறை தேர்வு, ஜன., 16 முதல் துவங்குகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 2009க்கு பின், முதல் முறையாக, 10ம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில் முடியும்.
இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, அறிவியல் செய்முறை தேர்வுகளை நடத்த, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன்படி, ஜன., 16ல் செய்முறை தேர்வு துவங்கி, 25ல் முடிகிறது.

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றம்!!!

                                             
வங்கி கிளைகளை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றுக்கு ‘ஐ.எப்.எஸ்.சி.’
குறியீடு தரப்பட்டுள்ளது. 11 இலக்க எண்களை கொண்ட இந்த ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு, ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி, தனது 1,300 கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடுகளை மாற்றி உள்ளது.

அதன்படி சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பாட்னா, லக்னோ என பல்வேறு இடங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ள வங்கி கிளைகளின் பட்டியல், பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் சார்பு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்துதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரேண்டம் முறையில் வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

மறுமதிப்பீடு,விடைத்தாள் நகல் வழங்கும் முறை அடுத்த ஆண்டில் அறிமுகம்-தொழில்நுட்ப கல்வித்துறை முடிவு!!!

முனைவர் மற்றும் பட்டதார்களுக்கு யுஜிசி சலுகை!!!

10,000 மீனவர்கள் மீது வழக்கு

கல்வி நிறுவனங்களில் கல்வி சாராத பிற நிகழ்ச்சிகளுக்கு ஐ கோர்ட் தடை!!!

கல்வி ஊழியர் போராட்டம்!!!

DSE - உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்துக்கு எவரேனும் பெயர் விடுபட்டால் சேர்க்க சொல்லி இயக்குநர் உத்தரவு!!!




EMIS ENTRY THROUGH YOUR SMARTPHONE"

ஓய்வூதியர்களுக்கு அதிர்ச்சி!

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT பயிற்சி!!!

6,7,8 பணியிடங்களை கையாளாத , அறிவியல் , ஆங்கிலம் , கணித பாடங்கள் படிக்காத , குறைவான தர ஊதியம் பெறும் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக தகுதி இல்லை ..வழக்கின் அபிடவிட்

10/12/17

உத்தர பிரதேசத்தில் அரசு துவக்க பள்ளிகளுக்கு காவி வர்ணம் பூச்சு!!!

                                               
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பதவி ஏற்றதில் இருந்து,
அங்குள்ள அரசு கட்டிடங்களுக்கு காவி வர்ணம் பூசப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில்,   மாநிலத்தில் உள்ள  100 தொடக்கப்பள்ளிகளுக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. பிலிபட் மாவட்டத்தில் உள்ள 100 துவக்க பள்ளிகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. போராட்டத்தையும் மீறி கிராம தலைவர்கள் காவி நிற வர்ணத்தை பூசியதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளிகளில் தாய் மொழியாம் தமிழில் எளிதில் மாணவர்கள் பேசுகிறார்கள். 
அதேநேரம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்-மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

எல்லா மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச அனைவருக்கும் கல்வி திட்டம் முன்வந்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது, அதன்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு எடுக்கப்பட்டது.

முதலில் 1-ம் வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் ‘லிப்ட் யுவர் ஹேண்ட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறினால் உடனே மாணவர்கள் தங்களின் கைகளை உயர்த்தவேண்டும். இதுபோல் சிறு சிறு வார்த்தைகளை மாணவர்களுக்கு கற்பிப்பார்கள். மேலும் பாட்டு மூலமும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஆங்கிலத்தை கற்பிப்பார்கள்.

இவ்வாறு தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி ஒரு நாள் நடத்தப்பட்டது. பயிற்சி முடிந்ததும் தலைமை ஆசிரியர்கள் அவர்கள் பெற்ற பயிற்சியை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிப்பார்கள். அந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் ஆங்கிலத்தில் பேச வைப்பார்கள்.

ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது குறித்து 90 வகையான புத்தகங்கள், 4 சி.டி.க்கள் ஆகியவை அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை புதிய பாடத்திட்டவரைவிலும் ஆங்கிலத்தில் மாணவர்களை எளிதில் பேச வைப்பது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரேஷன் அதிகாரிகளுக்கு லேப்-டாப்

                                        

12 நேரடி தேர்வுக்கு டிசம்பர் 11ல் பதிவு துவக்கம்!!!

சென்னையில் சர்வராகப் பணிபுரியும் ரோபோக்கள்!

                                        
இந்தியாவில் முதன்முறையாகச் சென்னையில் ரோபோக்கள் சர்வராகப்
பணிபுரியும் ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் செம்மஞ்சேரியில் 747 என்ற பெயருடன் ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஹோட்டலின் உரிமையாளர்கள் கார்த்திக் கண்ணன் மற்றும் வெங்கடேஷ் ராஜேந்திரன், இந்த ஹோட்டலை விமானம் போன்ற வடிவத்தில் வடிவமைத்துள்ளனர்.

இதுகுறித்து உரிமையாளர் கார்த்திக் கண்ணன் கூறுகையில், “சீனா போன்ற நாடுகளில்தான் இந்த மாதிரியான ஹோட்டல்கள் உள்ளன. இதுபோன்று இந்தியாவில் இல்லை. அதனால், ஜப்பான் மற்றும் சீனாவிலிருந்து ரோபோக்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டு, ஹோட்டல்களில் பயன்படுத்த முடிவு செய்தோம்.

வாடிக்கையாளர்களின் மேஜையில் டாப்லெட்டுகள் வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் அந்த டாப்லெட்டில் அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்யலாம். அந்த ஆர்டரை ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். ரோபோக்களுக்கு புரோகிராம் செய்யப்பட்ட சில வாக்கியங்களைக் கொண்டு வாடிக்கையாளரிடம் உரையாடும். இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ஹோட்டல் திறந்தவுடனே அதிகமான மக்கள் முன்பதிவு செய்தனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதுபோன்று, வேறொரு இடத்தில் இதனுடைய கிளை ஆரம்பிக்கப்படும். அதில் ரோபோக்கள், வாடிக்கையாளர்களை மேஜைக்கு அழைத்துச் செல்லுதல், அடிக்கடிவரும் வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் வசதிகளுடன் ரோபோக்கள் பணியமர்த்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

G.O 202 NEW HEALTH INSURANCE SCHEME- 2016

                                                 
                                                 

Click here more reads... Download pdf