யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/12/17

ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு வேலை!!!

இதில், பல்வேறு, ’கார்ப்பரேட்’ நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று,
மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி, வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த வகையில், சென்னை ஐ.ஐ.டி.,யில், முதல் கட்ட கேம்பஸ் முகாம், டிச., 1ல் துவங்கி, நேற்று முடிந்தது.
இதில், 763 பேருக்கு, அதிகபட்சமாக, ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தில், வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம், 211 நிறுவனங்களில், சிட்டி வங்கி, இ.எக்ஸ்.எல்., பிலிப்கார்ட், ஹெச்.சி.எல்., ஆகிய நிறுவனங்கள், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிஉள்ளன.

மாணவர்களின் அடையாள அட்டை பள்ளிகளில் வடிவமைக்க புது செயலி!!!

கோவை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட, பிரத்யேக செயலி மூலம், தலைமையாசி
ரியர்களே மாணவர்களின் அடையாள அட்டையை, உருவாக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தனியார் பள்ளிகளை போல, அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும், அடையாள அட்டை வழங்கும் நோக்கில் 2012ல், பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளம் (எமிஸ்) உருவாக்கப்பட்டது.தொழில்நுட்ப குளறுபடிகளால், பள்ளிகள் சார்பில், இணையதளத்தில் உள்ளீடுசெய்த, தகவல்களை திரட்டுவதில், சிக்கல் நீடித்தது.
இதற்காக நடப்பாண்டில்,மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணைய பக்கம் உருவாக்கி, தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு, தீர்வு காணப்பட்டு வருகிறது.இதில், கடந்த செப்., 1ம் தேதி நிலவரப்படி, அனைத்து வகை பள்ளிகளும், மாணவர் வருகை சார்ந்த தகவல்களை, உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதோடு, நலத்திட்ட உதவிகள், உதவித்தொகை திட்டங்களை இணைக்க, ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு, பிரத்யேக மையங்கள் அமைத்து, பதிவு செய்யுமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இப்பணிகள் முடித்த பின், தகவல்களை ஒட்டுமொத்தமாக திரட்டுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே, மாணவர்களின் அடையாள அட்டை வடிவமைக்கும் வகையில், புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறுகையில்,”அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே, அடையாள அட்டை வடிவமைக்கும் வகையில், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
”ஸ்மார்ட் போன்களில், மாணவர்களை புகைப்படமெடுத்தால் போதுமானது. ஏற்கனவே வடிவமைத்த லே-அவுட்டில், புகைப்படத்திற்கான இடத்தில், மாணவர்களின் படம் பொருந்தி கொள்ளும். மாணவரின் பெயர், பள்ளி பெயர், முகவரி, ரத்தவகை உள்ளிட்ட, தகவல்களை மட்டும் உள்ளீடு செய்தால், அடையாள அட்டை தயாராகிவிடும்.
”இதுசார்ந்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, விரைவில் பணிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.

குமரியில் முதல்வர்-நிவாரணம் அறிவிப்பு!!!

ஓகி புயலினால் உயிரிழந்த மீனவர்
குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று, கன்னியாகுமரியில் இன்று (டிசம்பர் 12) அறிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு, காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் நிவாரண உதவிகள் பெறும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஓகி புயலினால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ரப்பர், வாழை, தென்னை மரங்கள் சாய்ந்ததால், அந்தப் பகுதி முழுவதும் விவசாயம் நசிந்தது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்களில் பலர் இன்னும் மீட்கப்படவில்லை; அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால், குமரி மாவட்ட மீனவர் குடும்பங்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களாக, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட சில அமைச்சர்கள் கன்னியாகுமரியில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் சென்றிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டவர், மீனவர் சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது, கடைசி மீனவர் கிடைக்கும்வரை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்களைத் தேடும் பணி தொடரும் என்றும், குமரி மாவட்டத்தில் ஹெலிபேட் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

”ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கான நிவாரணத்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வீடிழந்த மீனவர்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், மீனவர்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவரது கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்.

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் நிவாரணம் பெறும் வகையில், சட்டவிதிகள் தளர்த்தப்படும். புயலில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்; உலகவங்கி உதவியுடன் மீனவர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு, புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் செய்த ஆய்வின் அடிப்படையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதனை அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இவற்றில் பல அம்சங்கள், பத்து நாட்களுக்கு முன்பு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிவிப்பை நினைவூட்டுகிறது.

இணைய வேகத்தில் இந்தியா பின்னடைவு!!!

சர்வதேச அளவில் அதிவேக இணையச்
சேவையில் மொபைல் பிரிவில் 109ஆவது இடத்தையும், பிராட்பேண்ட் பிரிவில் 76வது இடத்தையும் பிடித்துள்ள இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இணைய வேகம் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ள ஊக்லா நிறுவனம், நவம்பர் மாதத்திற்கான சர்வதேச அளவிலான மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவையில் அதிவேக இணையச் சேவை பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 122 நாடுகள் அடங்கிய மொபைல் சேவையில் இந்தியா 109வது இடத்தையும், 133 நாடுகள் அடங்கிய பிராட்பேண்ட் சேவையில் இந்தியா 76வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தச் சோதனையின் முடிவில் இந்தியாவில் அக்டோபர் மாதம் வரை 8.83 Mbps வேகம் கொண்ட மொபைல் இணையச் சேவையானது நவம்பர் மாதம் 8.80 Mbps ஆகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கம் முதல் சராசரியாக கிடைத்த வேகத்தை (7.65 Mbps) விட அதிகமாகும். இந்தப் பட்டியலில் 62.66 Mbps மொபைல் இணைய வேகத்துடன் நார்வே முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து 53.01 Mbps வேகத்துடன் நெதர்லாந்து இரண்டாம் இடத்திலும், 52.78 Mbps வேகத்துடன் ஐஸ்லாந்து மூன்றாம் இடத்திலும், 51.50 Mbps வேகத்துடன் சிங்கப்பூர் நான்காவது இடத்திலும், 50.46 Mbps வேகத்துடன் மால்டா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

பிராட்பேண்ட் இணையச் சேவையில் இந்தியா 18.82 Mbps வேகத்துடன் 76வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 153.85 Mbps வேகத்துடன் சிங்கப்பூர் முதலிடத்திலும், 147.51 Mbps வேகத்துடன் ஐஸ்லாந்து இரண்டாம் இடத்திலும், 133.94 Mbps வேகத்துடன் ஹாங்காங் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மாநில அரசுப் பணியில் வெளிமாநிலத்தவர்: பின் வாங்கிய அரசு!

                                            
தமிழகத்திலுள்ள அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) 
காலியாக இருக்கும் 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்படுவது இதுவே முதன் முறையாகும்.

பல வகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த 16.06.17 அன்று வெளியிடப்பட்டது. அப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 13.08.2017 அன்று எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, 07.11.2017 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நவம்பர் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இத்தகைய சூழலில் தான் தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதுடன், தேர்வில் பங்கேற்ற 1,33,567 மாணவர்களின் விடைத்தாள்களும், தேர்வுக்கான சரியான விடைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் விடைத்தாள் சரியாக திருத்தப்பட்டிருக்கிறதா? என்பதை விடைகளுடன் ஒப்பிட்டு, ஏதேனும் தவறு இருந்தால் அதை வரும் 18

ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன்பின் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இன்று (டிசம்பர் 12) அறிக்கை வெளியிட்டிருக்கும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி,. ‘’அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டதில் இன்னொரு நன்மையும் நடைபெற வாய்ப்பிருக்கிறது. இப்பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் 107 பேர் ஆந்திரம், தெலுங்கானா, கேரளம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வில் பிற மாநிலங்களும் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 107 தொழில்நுட்ப ஆசிரியர் பணியிடங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் கல்வி கற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகமாகும்.

தேர்வு முடிவுகள் இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், புதியப் பட்டியல் தயாரிக்கும் போது வெளிமாநிலத்தவரை தவிர்த்து விட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் சேர்க்கப்பட வேண்டும். இதன்மூலம் தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்டிருந்த சமூக அநீதி சரி செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, புதிய பட்டியல் எந்த வித குளறுபடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் வாய்ப்பளிக்காமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

TNPSC வி.ஏ.ஓ.தேர்வு மாதிரி வினா-விடை!!!

தொடர் வாசிப்பு திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி???

எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான 1,581 கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் 
வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அரசியல்வாதிகளுக்கு எதிரான 1,581 கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்க 12 சிறப்பு நீதிமன்றங்களை முடிக்க திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய நிதி அமைச்சகம் ரூ. 7.8 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.

2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 8 மாநில சட்டசபைத் தேர்தல்களின் போது அரசியல்வாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்ட வழக்குகள்தான் இவையாகும். சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பான மத்திய அரசின் திட்டம் தொடர்பாக இரு பக்கங்கள் அடங்கிய அபிடவிட்டை மத்திய சட்ட அமைச்சக கூடுதல் செயலாளர் ரீட்டா வசிஷ்தா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளார். சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய நிதி அமைச்சகம் ரூ. 7.8 கோடியை ஒதுக்கி உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

தேவை ஏற்பட்டால் சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணையை வியாழன் கிழமைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து உள்ளது.


*வழக்கு தொடர்பான முந்தைய விபரம்*

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா தண்டனை பெற்ற எம்.பி., எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என பொதுநல மனுவகை தாக்கல் செய்தார். இவ்வழக்கில் தங்களையும் சேர்க்குமாறு பிறர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ஜூலை 12-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்ற போது அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பாக தெளிவான நிலையை எடுக்காதது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தது.

மத்திய அரசு தாக்கல் செய்த அபிடவிட்டில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை என்ற மனுதாரரின் கோரிக்கையானது ஏற்கப்பட முடியாதது, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தொடர்ச்சியான விசாரணை கடந்த மாதம் ஒன்றாம் தேதி நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நாவின் சின்கா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணை நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் அரசியல்வாதிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகள் மற்றும் அவற்றில் எத்தனை விசாரணை முடிந்தது என்பது தொடர்பாக விபரங்களை அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் உத்தரவிட்டது. 1,581 வழக்குகளில் கடந்த ஒரு வருடங்களில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டது, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது மற்றும் விடுவிக்கப்பட்டது தொடர்பாக விபரங்களை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்றது.

ஆறு வாரங்களில் இதுதொடர்பான விபரங்களை கோர்ட்டில் வழங்க வேண்டும் எனவும் டிசம்பர் இரண்டாவது வாரம் அடுத்தக்கட்ட விசாரணை எனவும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விரைவாக முடிக்க மத்திய அரசு விரும்புகிறதா? எனவும் கேள்வியை எழுப்பி இருந்தது. இப்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமில்லாமல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களாக உள்ளனர் - The New Indian Express-trichy Edition


ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமில்லாமல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களாக உள்ளனர் - The New Indian Express-trichy Edition

12/12/17

TRB மூலம், சிறப்பாசிரியர் தேர்வினை (2017) பாடவாரியாக எழுதியவர்கள் விபரம் RTI பதில்




வானிலை, 'லைவ்' இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது!

ஆறு மாதங்களுக்கு பின், சென்னை வானிலை மையத்தின், 'லைவ்' 
தகவல் இணையதளம், மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னையில் செயல்படுகிறது. இங்கு செயற்கை கோள் வழி கண்காணிப்பு, மழை, வெப்பநிலை கண்காணிப்பு மையம், ரேடார் ஆய்வு மையம் ஆகியவை செயல்படுகின்றன. சென்னை துறைமுக கட்டடத்தில், ரேடார் அமைக்கப்பட்டுள்ளது. இது, சென்னையின், 500 கி.மீ., சுற்றளவை கண்காணித்து, தகவல்களை அளிக்கும்.

'வர்தா' புயலின் போது, ரேடார் தொழில்நுட்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. அதை, இந்திய வானிலை மையம், சில மாதங்களில் சரி செய்தது. ஆனாலும், சென்னைக்கான, 'லைவ்' வானிலை தகவல் அளிப்பதில், சில சிக்கல்கள் இருந்தன. அதனால், ஆறு மாதங்களாக, சென்னை வானிலை மையத்தின், சென்னை, 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்படாமல் இருந்தது.

தற்போது, தொழில்நுட்ப பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும், 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் வழியே, ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் முந்தைய வெப்ப நிலை, பனி, காற்றில் உள்ள ஈரப்பத அளவு, மழை அளவு, காற்றின் வேகம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு இன்று பதிவு!

சென்னை: பிளஸ் 2 பொது தேர்வில், நேரடியாக பங்கேற்க விரும்பும் 
தனித்தேர்வர்களுக்கான பதிவு, இன்று துவங்குகிறது. இந்த ஆண்டே கடைசியாக, நேரடி தேர்வு எழுத முடியும்.
வரும் மார்ச்சில் நடக்கவுள்ள பிளஸ் 2 பொது தேர்வில், தனித்தேர்வர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுத, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதன் விபரங்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு நிறைந்தவர்கள், இந்த தேர்வை எழுதலாம். இந்த ஆண்டில் இருந்து, பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், அடுத்த ஆண்டில் இருந்து, தனித்தேர்வர்களும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 தேர்வை எழுத முடியும். எனவே, 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 2 வை நேரடியாக எழுத, இந்த ஆண்டே கடைசி வாய்ப்பு என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ள சேவை மையங்களில், இன்று முதல் வரும், 16 வரையிலும், பின், 18 முதல், 20ம் தேதி வரையில், அபராத கட்டணத்துடனும் விண்ணப்பிக்கலாம்.

பாடத்திட்டத்தில் பாரதியார் பாடல்கள் : துணை ஜனாதிபதி விருப்பம்!

சென்னை: ''பாரதியார் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்,''
என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.


வானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதி விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.
விழாவில், சி.பி.ஐ., முன்னாள் முதன்மை இயக்குனர், கார்த்திகேயனுக்கு, பாரதி விருதை, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வழங்கி பேசியதாவது: பாரதியாரின் பாடல்கள் அனைத்தும் கருத்துக்கள் செறிந்தவை. மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது என, அவர் வலியுறுத்தி உள்ளார். பாரதியாரின் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தமிழும், தமிழகமும் எனக்கு நெருக்கமானவை. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட போது, எனக்கு தமிழை கற்க நேரமில்லை. அனைவரும், அவரவர் தாய்மொழியில், பேசுவதே சிறப்பு. நான் தற்போது எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாம் முயற்சி கண்டால், பாரதி கண்ட புதுமை தேசத்தை அடையலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் பாண்டியராஜன், இல. கணேசன் எம்.பி., - ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்முறை தேர்வு : சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,
பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு செய்முறை தேர்வு, ஜன., 16 முதல் துவங்குகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 2009க்கு பின், முதல் முறையாக, 10ம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில் முடியும்.
இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, அறிவியல் செய்முறை தேர்வுகளை நடத்த, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன்படி, ஜன., 16ல் செய்முறை தேர்வு துவங்கி, 25ல் முடிகிறது.

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றம்!!!

                                             
வங்கி கிளைகளை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றுக்கு ‘ஐ.எப்.எஸ்.சி.’
குறியீடு தரப்பட்டுள்ளது. 11 இலக்க எண்களை கொண்ட இந்த ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு, ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி, தனது 1,300 கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடுகளை மாற்றி உள்ளது.

அதன்படி சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பாட்னா, லக்னோ என பல்வேறு இடங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ள வங்கி கிளைகளின் பட்டியல், பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் சார்பு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்துதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரேண்டம் முறையில் வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

மறுமதிப்பீடு,விடைத்தாள் நகல் வழங்கும் முறை அடுத்த ஆண்டில் அறிமுகம்-தொழில்நுட்ப கல்வித்துறை முடிவு!!!

முனைவர் மற்றும் பட்டதார்களுக்கு யுஜிசி சலுகை!!!

10,000 மீனவர்கள் மீது வழக்கு