யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/1/18

750 தனி ஊதிய முரண்பாடுகளை களைய முதல்வர் தனிப்பிரிவில் மனு

வருமான வரி கணக்கு உதவி மைய எண் மாற்றம்

ஆண்டு வருமான வரி கணக்கை, 'ஆன்லைன்' வாயிலாக தாக்கல் செய்வோருக்கான உதவி மைய எண் மாற்றப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கை, 'இ - பைலிங்' எனும், 'ஆன்லைன்' வழியில் தாக்கல்
செய்வோருக்காக, தனி உதவி மையத்தை வரித்துறை அமைத்துள்ளது. அதற்கு, புதிய எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வருமான வரித்துறையின்,www.incometaxindiaefiling.gov.inஎன்ற இணையளத்தில், ஆண்டு வரி கணக்கை தாக்கல் செய்வோர், 1800 103 0025 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் விளக்கம் பெறலாம். அது போல், 8049 612 2000 என்ற எண்ணிலும், 'இ - பைலிங்' தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அனுமதியின்றி சுற்றுலா : பள்ளிகளுக்கு தடை

தமிழகத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர, மற்ற வகுப்பு
மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கான பணிகளை, பல பள்ளிகள் துவக்கியுள்ளன.

இதையடுத்து, 'அனுமதியின்றி மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது' என, பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள அனுப்பியுள்ள கடிதம்: மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, முன்அனுமதி பெற வேண்டும்.
கல்வித்துறை வகுத்துள்ள விதிகளை பின்பற்றி, மாணவர்களின் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஆபத்தான இடங்களுக்கு, சுற்றுலா அழைத்து செல்லக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதிய உணவு திட்டத்தில் பால் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை!!

மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!
டெல்லி : அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்துடன் பாலையும் சேர்த்து வழங்க மத்திய வேளாண் அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையை போக்கும் விதமாக மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை அளித்துள்ளது.



அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் இலவச மதிய உணவுத் திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. ஏழை மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் கல்வி, கற்கவும், பசி இல்லாமல் கல்வியறிவு பெறவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


மதியஉணவுத் திட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்களுக்கு வாரம் இரு முறை சத்துணவில் முட்டை, காய்கறிகள், சுண்டல் மற்றும் கலவை சாதங்கள் என்று ஒரு பட்டியலையே ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.


குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

இந்நிலையில் நாடு முழுவதும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், குழந்தைகள் நல அமைச்சகம் ஆய்வு நடத்தியது. இதில் பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதால் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.




மாநிலங்களுக்கு கடிதம்

பால்வழங்க கடிதம்

இதன்அடிப்படையில் மத்திய வேளாண் அமைச்சகம் இன்று அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சத்துணவு வழங்கப்படும் மாநிலங்களில் மாணவர்களுக்கு பாலும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



சத்துணவில் பால்

சத்துணவோடு பால்

சத்துணவுடன் பாலையும் சேர்த்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக இதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மாநிலங்களை மத்திய வேளாண் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.




மதியஉணவுத் திட்டத்திலே குறை

மதியஉணவே சரியாக தரப்படுவதில்லை

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதிய உணவுத் திட்டமே சரியாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி ப்ரியா, அரசு மருத்துவமனையில் குடல்
வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 1500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளை பெற்று     வருகின்றனர். இந்நிலையில் உடல்நலக் குறைவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


தனக்கு அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்கு நேற்றிரவு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியராக உள்ளவர் தனியார் மருத்துவமனையில் சேராமல், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றது பாராட்டுகளை பெற்றுள்ளது.

அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

24/12/17

TRB : விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு? விசாரணையை துவக்கியது போலீஸ்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, ஆசிரியர் 
தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், முறைகேடு நடந்துள்ளதா என, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணிக்கு தேர்வு நடத்தி, நவ.,7ல் முடிவு வெளியிட்டது. தேர்ச்சி பெற்றவர்களில், இன்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, சிலர் ஆதாரங்களுடன், டி.ஆர்.பி.,க்கு புகார் மனுக்கள் அனுப்பினர். டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, பல தேர்வர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர், விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். போலீசார் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்ற, 1.33 லட்சம் பேர், இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது முதல், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.

குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும், டி.ஆர்.பி., அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு; முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.

புகார் மீது வழக்கு பதிவு செய்து, குற்றம் செய்தோரை கைது செய்து, சிறையில் அடைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

பிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்பு!!!

பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு, எத்தனை பக்கங்களில் விடைத்தாள் வழங்கப்படும் 
என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டுமே, பொதுத்தேர்வு நடந்தது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கும், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்படி, செய்முறை தேர்வு, அகமதிப்பீட்டு முறை, தேர்வுக்கான மொத்த மதிப்பெண் ஆகியவை குறித்து, ஏற்கனவே அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்ந்து, முதன்மை விடைத்தாள்களில் எத்தனை பக்கங்கள் இருக்கும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு, 90 மதிப்பெண்களுக்கு, 30 பக்கங்களில் கோடிட்ட விடைத்தாள்கள் வழங்கப்படும். உயிரியலில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு, தலா, 35 மதிப்பெண்களுக்கு, தனித்தனியாக எழுத, தலா, 22 பக்கங்களில், இரண்டு முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும்.

கணக்கியல் என்ற அக்கவுன்டன்சி பாடத்துக்கு, 90 மதிப்பெண்களுக்கு, தலா, 15 பக்கங்கள் கோடிட்டும், கோடிடப்படாமலும், மொத்தம், 30 பக்கங்கள் வழங்கப்படும். கணினி அறிவியல் உள்பட மற்ற பாடங்களுக்கு, 30 பக்கங்கள் கோடிடப்படாமல் வழங்கப்படும் என, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மாணவர் மன அழுத்தம் தீர 'ஹெல்ப் லைன்' அறிமுகம்!!

பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வி 
ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், '14417' என்ற, கட்டணமில்லா தொலைபேசி, அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.


ஆலோசனை மையம்

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், அவர்களுக்கு உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகளை விவரிக்கவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், கட்டணமில்லா தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட உள்ளது.
இனிமேல், '14417' என்ற எண்ணில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி ஊழியர்கள் தொடர்பு கொள்ளலாம்.

ரூ.1.98 கோடி

அவற்றில், உயர் கல்வி படிப்பதற்கான தகவல்கள், தேர்வு விபரங்கள், பாடத்திட்ட சந்தேகங்கள், பள்ளிகளின் கட்டமைப்பு பிரச்னைகள்... நலத்திட்டம் கிடைக்காமை, மன அழுத்த பிரச்னைகள் போன்றவை குறித்து, மாணவர், பெற்றோர், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்காக, தமிழக அரசு, 1.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், மாணவர்களுக்கு உடல்நலம், உளவியல் ஆலோசனைகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் விபரங்கள் குறித்த தகவல்களையும் வழங்க, திட்டமிடப்பட்டு உள்ளது.

செவிலியர்களுக்கு முறையான ஊதியம் தர வேண்டும்!

அரசு மற்றும் தனியார் 
மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கான முறையான ஊதியத்தைத் தருமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முறையான ஊதியம் தரப்படவில்லை என்று தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் செவிலியர் சங்கங்களின் சார்பில் சமீபகாலமாகப் போராட்டங்கள் நடைபெற்றன. ஏழாவது ஊதிய ஆணைக்குழு பரிந்துரையின்படி செவிலியர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இவர்களின் போராட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்நிலையில், மக்களவையில் நேற்று(டிசம்பர் 22) உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை முறைப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்திந்திய செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான ஊதியம் தொடர்பாக, தேவைப்பட்டால் மாநில அரசுகள் தனியாக சட்டம் இயற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.பி.நட்டா குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு யூனியன் வங்கியில் பணி!

                                   

யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 100

பணியின் தன்மை :: Forex Officer , Integrated Treasury Officer

சம்பளம்: ரூ.31,705 - 45,950

வயது வரம்பு: 23 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

கடைசி தேதி: 13.01.2018

மேலும் விவரங்களுக்கு யூனியன் வங்கி என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மாவட்டந்தோறும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது.தகுதியான பள்ளிகளை தேர்வு செய்ய தேர்வுக்குழு!!!

புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி10 ஆம் தேதி வெளியீடு!!!

விடைத்தாள் வெளிட்ட விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி கைது!!!

சென்னை: கடந்த 2015ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., விடைத்தாளை வெளிட்ட விவகாரத்தில் 
டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி பெருமாள் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விடைத்தாள் வெளியீடு தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இடைநிலை கல்வியில் பின் தங்கிய ஏழு மாவட்டங்கள்!!!

சேலம் DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும் பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்!!





விஸ்வரூபம் எடுக்கும் அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு : 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் 
மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் புகாரின் பேரில் 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, தேர்வு எழுதியோர் பலர், தேர்வு முடிவுகள் தொடர்பாக தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனுக்கள் கொடுத்தனர்.

டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் தேர்ச்சி பெற்ற 2000க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண்களில் முறைகேடு நடந்துள்ளது. முதலில் வெளியிட்ட மதிப்பெண் பட்டியலுக்கும் பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்களுக்கும் மாற்றம் இருக்கிறது என்று தெரிவந்தது. இதனால் தேர்வு முடிவு ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி அறிவித்தது.

இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் தேர்வு பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர். குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தீவிரவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களை மாற்ற கோர்ட் உத்தரவு!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாதத்திற்குள் தனியார் மருத்துவக் கல்லூரி 
மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரியை நிர்வகிப்பதில் நிர்வாகிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்களுடைய கல்வி பாதிக்கப்படுவதாக அக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 17 மாணவர்கள் தங்களை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் தலைமையில் நேற்று(டிசம்பர் 22) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்தபோது, வழக்கறிஞர் என்ற போர்வையில் சிலர் கல்லூரி நிர்வாகத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

வழக்கின் உத்தரவில் கூறியிருப்பது: "இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டால் அதற்கு அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க நேரிடும். மேலும் ஒரு கல்லூரி சரியாக இயங்கவில்லை என்றால் அந்தக் கல்லூரிக்கு அனுமதியளித்த அரசு தான் அங்குப் பயிலும் மாணவர்களின் கல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

தனியார் நிர்வாகத்தின் குளறுபடி காரணமாக இந்தக் கல்லூரியில் 2017-18, 2018-19 ஆகியஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு தடை விதித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அன்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 144 மாணவர்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கவேண்டும். இதற்கு ஏதுவாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை உயர்த்த ஒரு மாதத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மாணவர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லவில்லை என்பதால் அவர்களின் வருகைப்பதிவேட்டை கருத்தில் கொண்டு அவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.

மாணவர்களின் சான்றிதழ்களை அக்கல்லூரி நிர்வாகம் உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். மாணவர்களின் நலன் கருதி காணொலி காட்சி மூலமாக ஜனவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை ,தற்கொலைக்கு தூண்டப்பட்டு இறந்த போன மாணவ மாணவிகளின் விபரங்கள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

                                          

TNHB JUNIOR ASSISTANT RESULT 2017 TYPIST EXAM RESULT PUBLISHED

                                               


CLICK HERE TO CHECK YOUR RESULTS