யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/1/18

வருமானவரி பிடித்தம் சார்ந்த சுற்றறிக்கை.!





அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், அரசாணை வெளியீடு, அதிகாரிகள் அதிர்ச்சி, கருணை தொகைக்கு முற்றுப்புள்ளி

இணையதள வசதிக்கு ரூ.200 ஒதுக்கீடு : தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி

மாணவர்களின் விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய, 200 ரூபாய்
மட்டுமே 
ஒதுக்கியுள்ளதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகள், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் படிக்கும் மாணவர்களின் விபரங்கள், கல்வி மேலாண்மை தொகுப்பு எனும், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு, இணையதள செலவாக, துவக்க பள்ளிகளுக்கு, 200 ரூபாய், நடுநிலை பள்ளிகளுக்கு, 400, உயர்நிலை பள்ளிகளுக்கு, 600, மேல்நிலை பள்ளிகளுக்கு, 800 ரூபாய், ஒருமுறை செலவினமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தற்போது, அலுவல் தொடர்பாக, அனைத்து விபரங்களை அனுப்புவது, பெறுவது, கணினி மூலம் நடக்கிறது. இதுமட்டுமின்றி, 'எமிஸ்' இணையதளத்தில், மாணவர்களின் விபரங்களை பதிவேற்ற, பல மணி நேரம் பிடிக்கிறது. சர்வர் கோளாறால், பல நாட்களை செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம், தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்தப்பணத்தை செலவழிக்க வேண்டியிருந்தது.
தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், ஒரு பள்ளிக்கு, 200 ரூபாய் ஒதுக்கியுள்ளனர். ஆண்டு முழுவதும் இணையதள பயன்பாடு தேவைப்படும்போது, 200 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும். துவக்கப்பள்ளிகளுக்கு கணினி வசதியும் இல்லை. இதனால், பிரவுசிங் சென்டர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், கணினி, இணையதள வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்குவதுபோல், மாதந்தோறும் இணையதள வசதிக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்

பள்ளி பஸ்கள் தயார்!! பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல அரசு அதிரடி ஏற்பாடு!!!

ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்

மார்ச் 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு உள்ளது.இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார்
அட்டை வழங்கப்பட்டுஇருக்கிறது.
ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும் அவரது புகைப்படம், பெயர் விவரம், முகவரி, கண் கருவிழி படலம், கை பெருவிரல் ரேகை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அதில் 12 இலக்கங்கள் கொண்ட எண்ணும் இடம்பெற்று இருக்கிறது.வங்கி கணக்கு தொடங்குவது, செல்போன் இணைப்புக்கான சிம்கார்டு வாங்குவது, சமையல் கியாஸ் இணைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்றவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.இதனால் இதுபோன்றவற்றுக்கு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை தெரிவிப்பது மிகவும் கட்டாயம் ஆகிறது.இப்படி பல இடங்களிலும் ஆதார் அட்டையை பயன்படுத்தும் போது, அந்த அட்டைதாரரை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் மூலம் வங்கி கணக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் திருடப்படுவதை தடுத்து, தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், ஆதார் அட்டைக்கு மாற்றாக அதேபோன்ற புதிய அடையாள அட்டைமுறையை (மெய்நிகர் ஆதார் அட்டை) இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (உதய்) நேற்று முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் இணையதள முகவரிக்கு சென்று இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை உருவாக்கி பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், பெயர் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் இப்புதிய அட்டையில் இடம் பெற்று இருக்கும்.ஆனால் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணுக்கு பதிலாக இந்த புதிய அடையாள அட்டையில் 16 இலக்க எண் இருக்கும். சம்பந்தப்பட்ட நபரே இந்த எண்ணை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஒருகுறிப்பிட்ட பணிக்காக அல்லது விரும்பும் குறிப்பிட்ட காலவரை வரை இந்த புதியஅட்டையை பயன்படுத்தலாம். தேவைப்படும் போதெல்லாம் இந்த அடையாள அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை மாற்றி புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அப்படி புதிய அட்டை பெறும் பட்சத்தில், ஏற்கனவே பெற்று இருந்த மெய்நிகர் ஆதார் அட்டை தானாக ரத்தாகிவிடும்.இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபரின் உண்மையான ஆதார் எண் மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படும்.

முக்கியமாக தனிநபர் ரகசியம் காக்கப்படுவதோடு, தகவல் திருட்டும் தடுத்து நிறுத்தப்படுகிறது.ஆதார் அட்டை எந்தெந்த இடங்களில் எல்லாம் தேவைப்படுமோ,அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாரும்இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை மோசடியாக தயாரிக்க முடியாது.வருகிற மார்ச் 1–ந் தேதி முதல் இந்த மெய்நிகர் ஆதார் அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வர இந்திய தனிநபர்அடையாள ஆணையம் தீர்மானித்து உள்ளது.


 மேலும் ஆதார் அட்டை எங்கெங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை ஜூன் 1–ந் தேதி முதல் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.மேற்கண்ட தகவல்களை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்து உள்ளது.

அரசாணை எண் :3-பொங்கலுக்காக ஜனவரி 12ம் தேதி தமிழகத்தின் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு விடுமுறை - தமிழக அரசு

TET - ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது: அரசு உயர்நிலை குழுவில் தீர்மானம்

ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது எனவும், மீண்டும் போட்டித் தேர்வு நடத்துவது அவசியமில்லை எனவும் தமிழக அரசின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வெயிட்டேஜ் முறையில்தரவரிசை பட்டியல் தயாரிப்பது குறித்து பள்ளிக் கல்வி உயர் நிலை குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதற்காக அந்தக் குழுவானது, அண்மையில் கூடியது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்:- ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு (பி.சி., பிசிஎம்., எம்பிசி., எஸ்.சி., எஸ்.டி.,) வழங்கப்பட்டு வரும் 5 சதவீத மதிப்பெண் சலுகைகளை தொடர்ந்து கடைபிடிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வானது ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் அடிப்படையிலான தர வரிசைப் பட்டியலில் உள்ள தேர்வர்களின் பெயர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நீக்கம் செய்யப்படும்.

தேர்வர்கள் தங்களது கல்வித் தகுதியை பொறுத்தவரை மதிப்பெண்கள் உயர்த்திக் கொள்வதற்கு வழிவகை இருப்பதால்அதன்படி தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளில் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களை அடுத்த தேர்வுகளில் உயர்த்திக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவின் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கப்படுகின்ற படிவத்தில் குறிப்பிடப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.

இதன்படி, அனைவரின் கல்விச் சான்றிதழ்களை தரவரிசைப் பட்டியலுக்காக சரிபார்க்கும் அவசியம் ஏற்படாது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது அவசியம் அற்றதாக கருதப்படுகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளது என்ற அடிப்படையிலோ அரசு வேலைக்கு உரிமை கோர முடியாது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தீர்மானங்களின்மீது நடவடிக்கைகள் ஏற்படுவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தீர்மான நகலை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ளார்.

இந்தத் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதுதொடர்பாக அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

Paediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)

Paediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)

1. ஏணிப்படி,அடைவுத்திறன் அட்டவணை இல்லை

2.ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்குரியது

3. நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு SALM method


4. முழுமையான பாடம் பல அலகுகளாக(Unit) பிரிக்கப்படுகிறது

5.ஒரு  பாடவேளைக்கு 90 நிமிடங்கள்.காலையில் இரண்டு பாடவேளைகளும்,மதியம் ஒரு பாடவேளையுமாக பிரித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

6.அட்டைகளை கற்பித்தல் துணைக்கருவிகளாக பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு குழந்தைக்கும் பயிற்சி ஏடுகளின் தொகுப்பாக ஒரு புத்தகம் கொடுக்கப்படும்

7.Low level,கம்பிப் பந்தல்,புத்தகப் பூங்கொத்து,வீட்டுப்பாடம்,காலநிலை அட்டவணை இவைகளில் மாற்றம் இல்லை

8.பொதுவாகக் குழந்தைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாலும்,வகுப்பறை நிலைமைக்கேற்ப மெதுவாகக் கற்போருக்காக ஒரு குழு,மீத்திறன் குழந்தைகளுக்காக ஒரு குழு ஆசிரியர் அமைத்துக் கொள்ளலாம்

9.Long leave முடிந்து குழந்தை வரும்போது குழந்தையின் கற்றல் திறனுக்கேற்ப அக்குழந்தையினை பொருத்தமான அலகிலிருந்து தொடங்கச் சொல்லலாம்

10.இரண்டாம் பருவத்திலேயே பரீட்சார்த்த முறையில் சென்னை,காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 16 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது

இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை கணக்கெடுக்க உத்தரவு: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் எம்எல்ஏ அபுபக்கர் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சி.பி.எஸ்.இ., தேர்வு மார்ச் 5ல் துவக்கம்

சென்னை: 'சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான தேதியை, சி.பி.எஸ்.இ., வாரியம், நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதன்படி, பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கி, ஏப்., 12ல் முடிவடைகின்றன. முதல் தேர்வாக, ஆங்கிலம் நடத்தப்படுகிறது. 10ம் வகுப்புக்கு பள்ளி அளவிலான தேர்வு, ரத்து செய்யப்பட்டு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு, மார்ச், 5ல் துவங்கி, ஏப்., 4ல் முடிவடையும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், விருப்ப பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு, சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில், மொத்தம், 20 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

பாலிடெக்னிக் தேர்வில் தோல்வியுற்றவர்கள் பட்டயத் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு

புதுச்சேரி:பாலிடெக்னிக் தேர்வில், சில பாடங்களில் தோல்வியுற்ற முன்னாள் மாணவர்களுக்கு, பட்டயத் தேர்வு எழுத மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாலிடெக்னிக் தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வித்துறை, வரும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதத்தில், பட்டய தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது.இத்திட்டத்தின்படி, இக்கல்லுாரியில் 2010ம் ஆண்டு வரை முழு நேர மூன்று ஆண்டு பட்டயப்படிப்பில் சேர்ந்து படித்த அனைவரும் தேர்வு எழுதலாம்.தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.500 தேர்வு கட்டணம், ரூ.30 மதிப்பெண் பட்டியல் கட்டணம், ரூ.25 பதிவு கட்டணமாக இக்கல்லுாரி மூலம் செலுத்த வேண்டும்.அபராதமின்றி கட்டணம் செலுத்த கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி. ரூ.100 அபராதத்துடன் செலுத்த கடைசி நாள் 14ம் தேதி. தட்கல் முறையில் ரூ.500 அபராதத்துடன் கட்டணம் செலுத்த கடைசி நாள் மார்ச் 9ம் தேதி ஆகும்.

நாளை முதல், 'லீவ்' மாணவர்களுக்கு, 'ஜாக்பாட்'

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு கூடுதலாக, ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல், 'லீவ்'  மாணவர்களுக்கு, 'ஜாக்பாட்'

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பொங்கல், மாட்டு பொங்கல் என கூறப்படும், திருவள்ளுவர் தினம் மற்றும் காணும் பொங்கல் என்ற உழவர் திருநாள் என, மூன்று நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
இந்த ஆண்டு, 14ல், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அரசின் விடுமுறை பட்டியலின்படி, ஜன., 14 முதல், 16 வரை, மூன்று நாட்களுக்கு, பள்ளிகள் விடுமுறை என, அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், பஸ் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால், குறித்த நேரத்தில், பொங்கல் 

பண்டிகைக்கு செல்ல முடியுமா என, பலர் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அவர்கள்முன்கூட்டியே ஊருக்கு செல்லும் வகையில், பள்ளிகளுக்கு, நாளை ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்த உத்தரவில், 'பள்ளி மாணவர்கள், பெற்றோருடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி, இளம் வயது முதல், தமிழர் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணி காக்கும் வகையில், சிறப்பு நிகழ்வாக, ஜன., 12ல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 29-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.


அப்போது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், தற்போது உள்ள உச்சவரம்பானது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரி விதிக்கவும். மேலும், பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத வரியும். 20 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 5 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இரண்டாவது பகுதி நடைபெறவுள்ளது.

6/1/18

சென்னை பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜெ.இ.இ பயிற்சி வகுப்பு தொடக்கம்

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நீட், ஜெ.இ.இ பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், சுப்பராயன் தெரு, சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோடம்பாக்கம் மண்டலம், 
சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று ஸ்பார்க் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் சென்னை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைக்கப்பட்டன.பின்னர், சுப்பராயன் தெரு சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய 120 படுக்கைகள் கொண்ட அறைகளும் திறந்து வைக்கப்பட்டன.இது பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது:''சென்னை பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க செயல்பாடாக, சுப்பராயன் தெரு சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி, சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கானஉண்டு உறைவிடப்பள்ளி என இரண்டு உண்டு உறைவிடப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.அதேபோன்று, சென்ற ஆண்டு ஸ்பார்க் ப்ரோகிராம் என்ற திட்டத்தின் வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 70 பள்ளிகளில் இருந்து 25 மாணவர்களும், 45 மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிப் பாடத்திலிருந்து அவர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் வாயிலாக மாணவ, மாணவிகளுடைய ஒட்டுமொத்த அடைவுத்திறன் அதிகரிக்கப்பட்டது.

இக்கல்வியாண்டில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் சேரும் விதமாக 60 மாணவர்கள் மற்றும் 60 மாணவியர்கள் திறனறிவுத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில்40 மாணவர்கள் மற்றும் 40 மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.மேலும், 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகளுக்கு ’ஜி மெயின் இங்கிலிஷ்’ ஆங்கில வழியில் மட்டும் இரண்டு பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியானது காலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கி திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது.காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாடத்திட்டத்திலும், சனி மற்றும் விடுமுறை நாட்களில் நீட் மற்றும் ஜெஈஈக்கு சிறப்புப்பயிற்சியாக புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தின் வாயிலாகவும், திங்கள் முதல் வெள்ளி வரை முறைப்படுத்தப்பட்ட அட்டவணையின்படி மாஸ்டர் அகாடமி என்ற நிறுவனத்தின் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இரண்டு மையங்களையும் கல்வித்துறையில் உள்ள கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து உதவிக்கல்வி அலுவலர்களும் சுழற்சி முறையில் மாணவர்களுடைய அடைவுத்திறன் மேம்படவும் மற்றும் சூநுநுகூ,துநுநு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும் மேற்பார்வையிடப்படுகிறது''.இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையார் கார்த்திகேயன் தெரிவித்தார்.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சிமையம் தொடக்கம்: ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள்

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மையத்தை தமிழக அரசு சென்னையில் தொடங்கியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயா கல்லூரி வளாகத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மைய தொடக்க விழா நேற்று நடைபெற்றது.


இந்த விழாவில், பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகளை வழங்கி மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:ரயில்வே பணியாளர் வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம், மத்திய வங்கி பணியாளர்களுக்கான தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.1.53 கோடி செலவில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மையத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கவுள்ளது. 3 மாதங்களுக்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள். பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். இந்தவாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்காலிகமாக தியாகராயா கல்லூரி வளாகத்தில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தர உண்டு, உறைவிட வசதிகளுடன் கூடிய பயிற்சி மைய கட்டிடம் வடசென்னையின் ஒரு இடத்தில் கட்டி முடிக்கப்படும். அடுத்தகட்டமாக கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இதே போன்று பயிற்சி மையங்களை தொடங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சித் துறை தலைவர் கே.ஞானதேசிகன், கூடுதல் இயக்குநர் ஏ.சண்முகசுந்தரம், பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் டாக்டர் எஸ்.ஸ்வர்ணா, சர் தியாகராயா கல்லூரியின் தாளாளர் பி.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Flash News : போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்புங்கள் - ஹைகோர்ட் உத்தரவு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர், நடத்துனர்கள் உடனடியாக பணிக்கு வராவிட்டால் பணிநீக்கம் உள்ளிட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊதியம் திருப்தி இல்லை என்றால் வேறு பணிக்கு செல்லலாம் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். மேலும் வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் பதில் அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜன.8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிரான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எகிறியது நீதிபதிகளின் சம்பளம்! - மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு

உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பளம் இருமடங்காக உயர
உள்ளது. இதற்கான மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
நீதிபதிகளுக்கான 7 வது சம்பள கமிஷனின் சிபாரிசு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. 7வது சம்பள கமிஷனை அமல்படுத்தி, நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அடுத்து குடியரசுத் தலைவரின் கையெழுத்தைப் பெற்று சட்டமாகிவிடும். இந்த மசோதாவின்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சம்பளம், தற்போதைய ரூ.1,00,000-லிருந்து ரூ.2 ,80,000-மாக உயரும். உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சம்பளம் ரூ.90,000-லிருந்து ரூ.2,50,000-மாக உயருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80,000-லிருந்து ரூ.2.25,000-மாக உயருகிறது.

2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய சம்பள உயர்வு அமலுக்கு வரும். ஓய்வு பெற்ற 2,500 நீதிபதிகளும் சம்பள உயர்வால் பலனடைவார்கள்.

TNPSC- ANNUAL RECRUITMENT PLANNER 2018



EMIS பணிகளை விரைந்து முடிப்பதற்காக (06.01.2018) பள்ளிகளுக்கு வேலை நாள் - CEO உத்தரவு :

PILOT கல்வி முறையில் வண்ணக் குறியீடுகளின் செயல்பாடுகள் :