யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/1/18

Flash news : NEET Exam - மே 6 ந்தேதி நடைபெறும் - CBSC இணை ஆணையர் அறிவிப்பு :

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 2018 ம் ஆண்டிற்கான நீட் தேர்வுகள் மே 6 ம் தேதி நடைபெறுகிறது. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு,

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் சித்திரவேலு என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், பேருந்து கட்டணம் 67 விழுக்காடு உயர்த்தப்பட்டு இருப்பது, பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக எந்தவித அறிவுப்பும் இல்லாமல் இந்த கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதாகவும், கட்டண உயர்வு தொடர்பாக அரசு பொதுமக்களிடம் எந்த கருத்துக்களையும் கேட்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு தொடர்பாக அரசிதழில் வெளியிடப்படவில்லை என்றும், எனவே இந்த கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

2009க்குப்பின் பணியேற்ற பிஜி ஆசிரியர்களின் ஊதியம் மிகக்குறைவு!உண்மையில் வருத்தமான விசயமே!

நமது மாநில பொதுச் செயலாளர் பேச்சில் பலமுறை நான் கேட்ட வாக்கியம் "அளவு மாற்றமே குண மாற்றம்".அதாவது எண்ணிக்கையே வெற்றியைத் தீர்மானிக்கிறது.உண்மையில் நாங்களும் உங்களுடன் சேர்ந்து இருந்திருப்போம் நான் பணியேற்பு 2004, காலமுறை ஊதியம் 1.6.06. Pay commission effect date 1.1.06 முதலில் எங்களுக்கு 1.86 factor multiply கிடையாது என்று தான் அரசாணையில் இருந்தது அதாவது basic 9300. இதை சொன்னபோது 2009யில் ஜுனில் நாங்கள் பெற்ற ஊதியத்தை விட குறைவாக ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டது. எதிர்ப்புகள் , எண்ணிக்கை அதிகம். என்பதால் clarification letterல் 1.1.06 முதல் 31.5.09 வரை பணியேற்றவர்களுக்கும் 1.86factor multiplication வழங்கப்பட்டது.இது தான் 2009 முன் 2009பின் என்ற நிகழ்வினை ஏற்படுத்தியது.அப்போது 2009 பின் பணியேற்றார் ஆட்கள் இல்லை. இப்போது 2012,13,14,15,17 என நியமனம் , எண்ணிக்கை அதிகமாகிறது நிச்சயமாக நல்ல முடிவு ஏற்படவேண்டும். உண்மையில் கடுமையான பாதிப்பு நமக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் தான்.2009 pay commission(1.1.6) இல் clarification letter மூலம் பல பலன்களை பெற முடிந்தது (கிட்டத்தட்ட 50-60  clarification letter).இந்த பே(ய்) கமிஷனின் வேறும் 2 clarification letter தான் அதுவும் உப்பு சப்பில்லாத விளக்கம்.ஓர் எச்சரிக்கையை பதிவு செய்கிறேன்.... 
1.1.16 முதல் 11.10.17 வரை பணியேற்றவர்களுக்கு 2.57 factorஇல்லை. இன்றுவரை இது மறுக்கப்பட்டுள்ளது.நன்றி நண்பர்களே

SCHOOL CERTIFICATE ,COLLEGE CERTIFICATE, ID CARD தொலைந்து விட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று காணாமல் போனதற்கான உறுதி சான்று பெற தேவையில்லை .அதனை www.eservice.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.


வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்தலாம் பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை*

நிதி மந்திரி அருண்ஜெட்லி வருகிற 1–ந் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி பட்ஜெட்டுக்கு முன்னதாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய அளவு உயர்த்தப்பட்டு உள்ளதால், இப்போது அமலில் இருக்கும் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் உயர்த்தி ரூ.3 லட்சமாக அதிகரிக்கலாம், இந்நகர்வில் 75 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோன்று வீட்டுக்கடனுக்கு வட்டி செலுத்துவதிலும் விலக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வீட்டுக் கடனாக ரூ.2 லட்சம் பெற்றவர்களுக்கும் வட்டி செலுத்துவதி்ல் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை ரூ.2.50 லட்சமாக உயர்த்துவதால் வீட்டு கடன் வாங்கிய 75 லட்சம் பேர் பயனடைவார்கள் இதில் அரசுக்கு செலவு ரூ.7,500 கோடியாவே இருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் சேமிப்புகள், வைப்புத் தொகை வைத்து இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் வரை டி.டி.எஸ்.லிருந்து விலக்கு இருக்கிறது. இந்த தொகையையும் உயர்த்தப்படலாம், பட்ஜெட்டில் விவசாயம், சிற மற்றும் குறுந்தொழில்கள், அடிப்படை கட்டமைப்பு, அனைவருக்கும் வீடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இந்திய தொழிற் கூட்டமைப்பினர் (சி.ஐ.ஐ.) தெரிவித்த தகவல்கள் வருமாறு:–

தற்போதுள்ள வருமான உச்சவரம்பு அளவான ரூ.2½ லட்சம், ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படலாம். பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது போல இந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயராது. இதுதவிர, வருமான வரி செலுத்துவதில் உள்ள அடுக்கில் (சிலாப்) மாற்றம் செய்ய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது நடுத்தர வருவாய் ஈட்டுவோருக்கு, குறிப்பாக சில்லரை விலையில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாதச் சம்பளதாரர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக அமையும்.

கடந்த ஆண்டு வருமான வரி அடுக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரம், ரூ.2½ முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் தனி நபர்கள், சிறு அளவில் நிவாரணம் பெறும் விதமாக 10 சதவீத வருமான வரி என்பது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படலாம் (இது தற்போது 20 சதவீதம்). இதனால் மாதச் சம்பளம் பெறுவோர் பெரும் பயன் அடைவார்கள்.

இதேபோல் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் ஈட்டும் தனிநபருக்கு மட்டும் 20 சதவீத வரி விதிக்கப்படலாம் (தற்போது 30 சதவீதம்). ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 30 சதவீத வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான நாடுகளில் இந்த பிரிவினருக்கு இதைவிடவும் அதிக சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.

தற்போது ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி அடுக்கு இல்லை என்பதும், மாதச் சம்பளம் பெறுவோர் ரூ.10 லட்சத்துக்கு மேலாக ஆண்டு வருமானம் ஈட்டினாலே அவர்கள் 30 சதவீத வரி செலுத்தும் அடுக்கிற்குள் சென்று விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் வருமான பிரிவுகளில் தொகையை அதிகரித்து அதன் மூலம் மாதச்சம்பளம் பெறுவோரின் வருமான வரிச்சுமையை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

அதே நேரம், தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக விதிக்கப்படும் 30 சதவீத வரியை 25 சதவீதமாக குறைக்க கோரும் இந்திய தொழிற் கூட்டமைப்பின் கோரிக்கையை கடும் நிதி பற்றாக்குறை காரணமாக மத்திய நிதி அமைச்சகம் ஏற்காது என்றே கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வேகமெடுக்கும் பள்ளிச் சீருடை தயாரிப்புத் துறை!!!

நாடு தழுவிய அளவில் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில்,
மாணவர்களுக்கான பள்ளிச் சீருடை தயாரிப்புத் துறையின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக, அத்துறையின் சந்தை மதிப்பு சந்தை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் ரூ.25,000 கோடியாக அதிகரிக்கும் என்கிறார் சோலாப்பூர் ஆயத்த ஆடை தொழிற் கூட்டமைப்பின் துணைத் தலைவர் நிலேஷ் ஷா.

மத்திய மாநில அரசுகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், நகர்புற மாணவர்கள் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களிடமும் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதன் பயனாக, மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்து வருவதையடுத்து, பள்ளிச் சீருடை தயாரிப்பு துறை சந்தை ராக்கெட் வேக வளர்ச்சியை கண்டு வருகிறது.
தற்போதைய நிலையில், பள்ளிச் சீருடைகளுக்கான சந்தையின் மதிப்பு ரூ.18,000 கோடி என்ற அளவில்தான் உள்ளது. அதில், அமைப்பு சார்ந்த துறை நிறுவனங்களின் பங்களிப்பு 10,000 கோடி. எஞ்சிய பங்களிப்பை அமைப்பு சாரா துறை நிறுவனங்கள்தான் வழங்கி வருகின்றன.
நாடு முழுவதும் கல்விக்கு கிடைக்கும் வரவேற்பையடுத்து வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் பள்ளிச் சீருடை சந்தை ரூ.25,000 கோடியாக அதிகரிக்கும். பள்ளிச் சீருடைத் தயாரிப்பில் மஹாராஷ்டிராவின் சோலப்பூர் மாவட்டம் முக்கிய கேந்திரமாக விளங்கி வருகிறது.
தற்போதைய நிலையில், இங்கு சுமார் 1,000 நிறுவனங்கள் பள்ளிச் சீருடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் மேலும் கூடுதலாக 2,000 நிறுவனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்கிறார் அவர்.

அரசுப் பள்ளிகளுக்கு 4 ஆண்டுகளாக விநியோகிக்கப்படும் தரமற்ற அறிவியல் உபகரணங்கள்!

திண்டுக்கல்: தரம் மட்டுமின்றி பயனில்லாத அறிவியல் உபகரணங்களை 4ஆவது ஆண்டாக 
ரூ.25ஆயிரத்திற்கு வழங்குவதால், அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி வீணாவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுக் கூடத்திற்கான உபகரணங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அறிவியல் பாடம் தொடர்பான மாதிரிகள்(மாடல்ஸ்) வாங்குவதற்காக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் பள்ளிக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் இந்த தொகை, அறிவியல் உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்திற்கு காசோலையாக வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக செலவிடப்படும் இந்த நிதி, பெரும்பாலான இடங்களில் முறையாக பயன்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. மாணவர்களுக்கு தேவையான புதிய உபகரணங்களுக்கு பதிலாக, ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவியல் உபகரணங்களே கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கண், மூளை, டெஸ்ட் டியூப், பிப்பட், பியூரட், எடை இயந்திரம் உள்பட 25க்கும் மேற்பட்ட பொருள்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் உபகரணங்களை அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்கள் வாங்கி வந்த நிலையில், வாங்கப்பட்ட பொருள்களை பல பள்ளிகளில் ஆய்வு செய்து உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், நிறுவனத்திடமிருந்து பொருள்களைப் பெற்றுக் கொண்டு, காசோலை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டத்தின் மூலம் தரமில்லாத மற்றும் தேவையில்லாத உபகரணங்கள் வழங்கப்படுவதால், அரசு நிதி வீணடிக்கப்படுவதோடு, மாணவர்களுக்கு பயனற்ற நிலையில் இருப்பதாகவும் தலைமையாசிரியர்கள் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிகழாண்டுக்கான அறிவியல் உபகரணங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்ட அதே பொருள்களே மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அறிவியல் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,
பள்ளியின் தேவை குறித்து யாரும் கேட்பதில்லை. தனியார் நிறுவனம் வழங்கும் உபகரணங்களையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. 10 முதல் 20 மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், ஒரே மாதிரியான 5 உபகரணங்கள் தேவையில்லை. அதற்கு பதிலாக பள்ளி ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் பொருள்களை வழங்கினால், ஆய்வுக் கூடத்திற்கு தேவையான அனைத்து வகையான உபகரணங்களும் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.இதனை கருத்தில் கொண்டு, உபகரணங்கள் தேர்வு செய்யும் பொறுப்பினை சம்பந்தப்பட்ட பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரிர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
-நங்கையார் மணி
தலைமையாசிரியர்களுக்கு ரூ.2ஆயிரம்
அறிவியல் உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தின் முகவர்கள் காசோலை சேகரிப்பதற்காக பள்ளிகளுக்குச் செல்லும் போது, பள்ளியின் தலைமையாசிரியருக்கு ரூ.2ஆயிரம் வீதம் பணம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக் கொள்ளாவிட்டாலும், தங்கள் பெயரில் வரவு வைக்கப்படும் என்பதால், அதனை பள்ளி மாணவர்களின் நலனுக்காக செலவிடுவதாகவும் சில தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர். தரமான உபகரணங்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்தால், தலைமையாசிரியர்களுக்கு ரூ.2ஆயிரம் எதற்காக கொடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தூய்மை விருதுக்கு பள்ளிகள் தேர்வு!!!

மத்திய அரசின் துாய்மைப்பள்ளி விரு துக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட
பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், கடந்தாண்டு முதல், தேசிய துாய்மைப்பள்ளி விருது வழங்கப்படுகிறது. நாடு முழுக்க, 118 பள்ளிகளுக்கு, கடந்தாண்டு, இவ்விருது வழங்கப்பட்டது.


தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. இதேபோல், நடப்பாண்டிலும், ஆன்லைன் வாயிலாக, அனைத்து வகை பள்ளிகளும், இவ்விருது பெற விண்ணப்பிக்குமாறு, அழைப்பு விடுக்கப் பட்டது. மாவட்ட வாரியாக சிறந்த, 42 பள்ளிகள், மாநில அளவிலான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இப்பள்ளிகளை, நேரில் ஆய்வு செய்ய, அனைவருக்கு கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் தலைமையில், பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.இதில், இணை இயக்குனர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட, 17 பேர் இடம்பெற்றுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பள்ளிகளை ஆய்வு செய்ய, இக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Details of Number of Important Questions in +2

SSLC- SECOND REVISION COMMON EXAMINATIONS 2018 (TIME TABLE)

DEE PROCEEDINGS-Teacher Profile-பதிவிடப்பட்ட விவரங்களை பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்க AEEO க்களுக்கு உத்தரவு!!!

கட்டாயக்கல்வி சட்டத்தின்படி இனி 8 ஆம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி கிடையாது!!!

வரும் கல்வியாண்டில் புதிய முடிவு 
அமலுக்கு வருகிறது - பள்ளி கல்வித் துறை

"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி 8ஆம் வகுப்பில் மட்டும் கட்டாய தேர்ச்சி கிடையாது"

* இதுவரை 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்து வருகிறது

ரூ 20 லட்சம் டெபாசிட் செய்த 2 லட்சம் பேருக்கு நோட்டீஸ்!!!

பஸ்கட்டண உயர்வு மாணவ -மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.-பஸ் சிறைபிடிப்பு-மறியல்!!!



DSE PROCEEDINGS-EMIS மாணவர்கள் விவரங்களை 29-01-2018 க்குள் பதிவேற்றம் செய்யும் பணியினை நிறைவு செய்தல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்




JACTTO GEO - ஆசிரியர்கள் போராட்ட காலத்திற்கு ஈடு செய்யவேண்டிய நாட்கள் - சிவகங்கை மாவட்ட DEEO உத்தரவு!!!

19/1/18

பள்ளி மாணவர்களின் EMIS விவரங்களை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவம் : இங்கு கிளிக் செய்யவும்



17.01.2018 ) மாலை 4.00 மணியளவில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலர் அவர்களும் , மதிப்புமிகு அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குநர் அவர்களும் காணொலிக் காட்சி மூலம் சில தகவல்களை நமக்குத் தந்துள்ளார்கள் அவற்றின் விபரம்..

1, மொபைல் அப்ளிகேசன் மேம்படுத்தப்பட்டு மாணவர் அடையாள அட்டை        (STUDENT SMART CARD ) எளிதில் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ளது.. மேலும் இப்பணியைத் துரிதப்படுத்த மொபைல் அப்ளிகேசனுடன் கணினி மற்றும் லேப்டாப் மூலமும் பதிவேற்றவும் வசதி செய்யப்பட உள்ளது..
2, ஆதார் எண் இணைக்கும் பகுதியில் ஆதார் எண் இல்லாதவர்களுக்கு E I D நம்பர் இணைக்கும் வசதி மொபைல் அப்ளிகேசனில் மட்டும் இருந்தது. தற்போது கணினி மற்றும் மடிக்கணினி மூலமும் E I D நம்பர் இணைக்க வசதி செய்யப்பட உள்ளது..
3, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் பொதுக்குழுமத்தில் உள்ள மாணவர்கள் விபரங்கள் எக்செல் வடிவில் நமக்கு நாளை கிடைத்துவிடும் . அதனை வைத்து மாணவர்களை எளிதில் கண்டறிந்து விரைவில் நம் பள்ளிக்கு ஈர்க்க வழிவகை கிட்டும் வகையில் வசதி செய்யப்படும்..

4, ஒரே மாணவனின் ஆதார் எண்ணை பல பள்ளிகளில் இணைப்பதாக எழுந்த புகாரையடுத்து மாநிலம் முழுதும் உள்ள எமிஸ் பதிவுகளில் , கண்டறியப்பட்ட டூப்ளிகேட் ஆதார் எண்கள் திரட்டப்பட்டு , எக்செல் வடிவில் நமக்கு நாளை அனுப்பப்படும், அதனை வைத்து சரியான ஆதார் விபரங்களை உறுதி செய்து மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது..

5, எமிஸ் மாணவர் விபரங்களின் எண்ணிக்கை தற்போதைய வருகைப்பதிவேட்டில் உள்ள எண்ணிக்கைக்குச் சமமாக இருக்குமாறு சரி செய்யவேண்டும்..

6, வேறு ஒன்றியம் , மாவட்டப் பள்ளிகள் அனுப்பாத விபரங்களை எளிதில் ஈர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுளது ( மேலும் விபரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அணுகவும்)

7, எமிஸில் ஆதார் இணைத்தது போக மீதமுள்ளவை ஆதார் புகைப்படம் எடுக்காத மாணவர்கள் விபரங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அளவுக்கு பணிகளை முடித்திட வேண்டும்.

6, எல்லாவற்றிற்கும் முதன்மையாக அனைத்துப் பணிகளையும் வரும் 25.01.2018 மாலைக்குள் முடித்திட வேண்டும் என்று மதிப்புமிகு முதன்மைச் செயலர் அவர்கள் கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள்

01.01.2018 முதல் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் :