யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/1/18

February 2018 Calendar

                                                             

களமிறங்கிய பிஎஸ்என்எல்: 8 அதிரடி திருத்தங்கள்....

                                                                               
 பிஎஸ்என்எல் நிறுவனம் சில கால இடைவெளியில் சலுகைகள் வழங்காமல்
இருந்து வந்த நிலையில், தற்போது தனது 8 ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடி திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.109 திட்டம்:
ரூ.109 ரீசார்ஜ் மொத்தம் 25 நாட்களுக்கு செல்லுபடியாகும். 1536 எம்பி அளவிலான 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது.


பிஎஸ்என்எல் ரூ.198 திட்டம்:
ரூ.198 ரீசார்ஜ் 1 ஜிபி தினசரி டேட்டா, 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.291 திட்டம்:
ரூ.291 ரீசார்ஜ் நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை 25 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.333 திட்டம்:
ட்ரிபிள் ஏஸ் திட்டம் என்று அழைக்கப்படும் இது தினசரி 1.5 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இது 41 நாட்கள் செல்லுபடியாகும்.

பிஎஸ்என்எல் ரூ.444 திட்டம்:
ரூ.444 என்கிற டேட்டா ரீசார்ஜ் திட்டமானது வரம்பற்ற இணைய தரவை 60 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி அதிவேக இண்டர்நெட் வரம்பை கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.549 திட்டம்:
ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம், 60 நாட்களுக்கு செல்லுபடியகும். நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

பிஎஸ்என்எல் ரூ.561 திட்டம்:
ரூ.561 ரீசார்ஜ், தினசரி 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 80 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.821 திட்டம்:
ரூ.821 திட்டம் மொத்தம் 120 நாட்களுக்கு செல்லுபடியாகும். நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இலவச சேவைகளை நிறுத்திய பிஎஸ்என்எல்: காரணம் என்ன??
ரூ.200-க்கும் குறைவான விலையில் சிறந்த ரிசார்ஜ் ப்ளான் எது?
பிஎஸ்என்எல் டாப் டக்கர் ரீசார்ஜ் திட்டங்கள்: விவரங்கள் உள்ளே!!
ஃபேஸ்புக் மூலம் இலவச இணைப்பு; பி.எஸ்.என்.எல் அறிவிப்பு
பி.எஸ்.என்.எல் சேவையால் நாட்டிற்கே ஆபத்தா? அதிர்ச்சி தகவல்

அரசை நம்பும் மக்கள்: இந்தியா 3ஆவது இடம்!!!

அரசு மீது அதிகம் நம்பிக்கை உடைய மக்களைக் கொண்ட நாடுகளின்

பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளதாக உலக நம்பிக்கைக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. முதலிடத்திலிருந்து தற்போது மூன்றாவது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது.

உலக நம்பிக்கைக் கழகம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 74 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 67 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருந்த சீனா தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தோனேசியா 71 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 68 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 72 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.,

இந்தியாவைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 66 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் , சிங்கப்பூர் 58 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன.

பணமதிப்பழிப்பு, மானியம் ரத்து, ஆதார் கட்டாயம், ஜிஎஸ்டி என போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் அரசு மீது அதிகம் நம்பிக்கையுடைய மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு கட்டணம் உயர்வு!

தமிழ்நாட்டில் பொதுமக்களின் பிறப்பு, இறப்புகளைப் 
பதிவு செய்வது இலவசமாகச் செய்யப்பட்டும், சில சேவைகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டும்வருகிறது. இந்நிலையில் தற்போது பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்வதில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைச்சாமி தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. மேலும் ஆன்லைனிலும் பதிவு செய்யக் கட்டணம் கிடையாது.

மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் நலம்பெற்று வீட்டிற்குச் செல்லும்போது பிறப்புச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஒரு மாதம் வரைக்கும் பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்யாமல் அதன் பிறகு பதிவு செய்பவர்களுக்கு கட்டணம் ரூ.2இல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

30 நாட்களுக்கு மேல் ஒரு வருடம் வரை பதியாமல் இருப்பவர்களுக்கு ரூ.5இல் இருந்து ரூ.200 ஆகவும், ஒரு வருடத்திற்கு மேல் பதியாமல் இருப்பவர்களுக்கு ரூ.10இல் இருந்து ரூ. 500 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கு மேல் பெயரைப் பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கான கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

சிலர் பிறந்த தேதியை மாற்றிப் பதிவு செய்வதாலும், பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்யும்போது, முறைகேடுகளில் ஈடுபடுவதாலும் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு ஒப்புதலுடன் கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டண உயர்வு நடைமுறையில் இருக்கிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தக் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது" என்று குழந்தைச்சாமி தெரிவித்துள்ளார்.

TNPSC CCSE-4 HALL TICKET PUBLISHED


Click here
https://www.tnpsconline.com/tnpscadmitcarden232017live/FrmLogin232017.aspx

+2 மாணவர்களுக்கு இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வு-கல்வித்துறை!!!

SSA - PINDICS & QMT Regarding SPD Proceedings..



24/1/18

அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருள்கள்: மாதஇறுதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நாற்காலி, மேசை, 'பெஞ்ச்-டெஸ்க்' போன்ற பொருள்களை இந்த மாத இறுதிக்குள் பழுது நீக்கிப் பயன்படுத்த வேண்டும்என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நாற்காலி, மேசை, பெஞ்ச், 'டெஸ்க்' போன்றவை உபரியாக இருந்தால், அவற்றை தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் தேவைப்படும் வேறு அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி வழங்குதல் வேண்டும்; இது தொடர்பாக இருப்புப் பதிவேட்டில் இரண்டு பள்ளிகளுமே பதிவு மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான உத்தரவினை முதன்மைக் கல்வி அலுவலர்களே வழங்கலாம். பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ள மேசை-நாற்காலி, மாணவர்கள் அமரும் 'பெஞ்ச்- டெஸ்க்' உள்ளிட்ட பொருள்களை பழுது நீக்கம் செய்து பயன்படுத்தலாம். இதற்கான செலவினத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பள்ளி மானிய நிதியிலிருந்து (நஸ்ரீட்ர்ர்ப் எழ்ஹய்ற்) மேற்கொள்ளலாம்.

ஏலம் மூலம் விற்பனை செய்யலாம்: முற்றிலும் பழுது நீக்கம் செய்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருள்களைப் பிரித்தெடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அந்தப் பொருள்களைஅரசு விதிகளின்படி குறைந்தபட்ச விற்பனை மதிப்பை நிர்ணயம் செய்து அதற்கு குறையாத வகையில் ஏல முறையில்விற்பனை செய்து அரசுக் கணக்கில் செலுத்தலாம்.

இந்த நடைமுறையைப் பின்பற்றி பள்ளியில் வகுப்பறை, வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் இந்தப் பணியினை ஜனவரி மாதத்துக்குள் முடிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

சர்வர் பழுதால் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவெண் திருத்த ஒரு வாரம் கெடு நீட்டிப்பு

INSPIRE AWARD 2017 - 18 Selected Students List Published ( All District )

அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் கணினி கல்வியை இலவசமாக கற்று கொடுக்க முதல்வர் தனிபிரிவுக்கு- மனு!!!

அரசு அலுவலகங்களில் பொது மக்கள் கொடுக்கும் தபாலுக்கு கீழ்கண்டவாறு ஒப்புதல் அளிக்க வேண்டும்!!!

மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம்!!!

ALM-படைப்பாற்றல் கற்றல் நிலைகள் பாடவாரியாக ஒப்பீட்டு படிவம்!!!

13 ஆயிரியர்கள் விரைவில் நியமனம்!!!(பத்திரிகை செய்தி)

23/1/18

Flash news : NEET Exam - மே 6 ந்தேதி நடைபெறும் - CBSC இணை ஆணையர் அறிவிப்பு :

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 2018 ம் ஆண்டிற்கான நீட் தேர்வுகள் மே 6 ம் தேதி நடைபெறுகிறது. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு,

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் சித்திரவேலு என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், பேருந்து கட்டணம் 67 விழுக்காடு உயர்த்தப்பட்டு இருப்பது, பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக எந்தவித அறிவுப்பும் இல்லாமல் இந்த கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதாகவும், கட்டண உயர்வு தொடர்பாக அரசு பொதுமக்களிடம் எந்த கருத்துக்களையும் கேட்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு தொடர்பாக அரசிதழில் வெளியிடப்படவில்லை என்றும், எனவே இந்த கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

2009க்குப்பின் பணியேற்ற பிஜி ஆசிரியர்களின் ஊதியம் மிகக்குறைவு!உண்மையில் வருத்தமான விசயமே!

நமது மாநில பொதுச் செயலாளர் பேச்சில் பலமுறை நான் கேட்ட வாக்கியம் "அளவு மாற்றமே குண மாற்றம்".அதாவது எண்ணிக்கையே வெற்றியைத் தீர்மானிக்கிறது.உண்மையில் நாங்களும் உங்களுடன் சேர்ந்து இருந்திருப்போம் நான் பணியேற்பு 2004, காலமுறை ஊதியம் 1.6.06. Pay commission effect date 1.1.06 முதலில் எங்களுக்கு 1.86 factor multiply கிடையாது என்று தான் அரசாணையில் இருந்தது அதாவது basic 9300. இதை சொன்னபோது 2009யில் ஜுனில் நாங்கள் பெற்ற ஊதியத்தை விட குறைவாக ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டது. எதிர்ப்புகள் , எண்ணிக்கை அதிகம். என்பதால் clarification letterல் 1.1.06 முதல் 31.5.09 வரை பணியேற்றவர்களுக்கும் 1.86factor multiplication வழங்கப்பட்டது.இது தான் 2009 முன் 2009பின் என்ற நிகழ்வினை ஏற்படுத்தியது.அப்போது 2009 பின் பணியேற்றார் ஆட்கள் இல்லை. இப்போது 2012,13,14,15,17 என நியமனம் , எண்ணிக்கை அதிகமாகிறது நிச்சயமாக நல்ல முடிவு ஏற்படவேண்டும். உண்மையில் கடுமையான பாதிப்பு நமக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் தான்.2009 pay commission(1.1.6) இல் clarification letter மூலம் பல பலன்களை பெற முடிந்தது (கிட்டத்தட்ட 50-60  clarification letter).இந்த பே(ய்) கமிஷனின் வேறும் 2 clarification letter தான் அதுவும் உப்பு சப்பில்லாத விளக்கம்.ஓர் எச்சரிக்கையை பதிவு செய்கிறேன்.... 
1.1.16 முதல் 11.10.17 வரை பணியேற்றவர்களுக்கு 2.57 factorஇல்லை. இன்றுவரை இது மறுக்கப்பட்டுள்ளது.நன்றி நண்பர்களே

SCHOOL CERTIFICATE ,COLLEGE CERTIFICATE, ID CARD தொலைந்து விட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று காணாமல் போனதற்கான உறுதி சான்று பெற தேவையில்லை .அதனை www.eservice.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.


வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்தலாம் பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை*

நிதி மந்திரி அருண்ஜெட்லி வருகிற 1–ந் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி பட்ஜெட்டுக்கு முன்னதாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய அளவு உயர்த்தப்பட்டு உள்ளதால், இப்போது அமலில் இருக்கும் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் உயர்த்தி ரூ.3 லட்சமாக அதிகரிக்கலாம், இந்நகர்வில் 75 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோன்று வீட்டுக்கடனுக்கு வட்டி செலுத்துவதிலும் விலக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வீட்டுக் கடனாக ரூ.2 லட்சம் பெற்றவர்களுக்கும் வட்டி செலுத்துவதி்ல் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை ரூ.2.50 லட்சமாக உயர்த்துவதால் வீட்டு கடன் வாங்கிய 75 லட்சம் பேர் பயனடைவார்கள் இதில் அரசுக்கு செலவு ரூ.7,500 கோடியாவே இருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் சேமிப்புகள், வைப்புத் தொகை வைத்து இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் வரை டி.டி.எஸ்.லிருந்து விலக்கு இருக்கிறது. இந்த தொகையையும் உயர்த்தப்படலாம், பட்ஜெட்டில் விவசாயம், சிற மற்றும் குறுந்தொழில்கள், அடிப்படை கட்டமைப்பு, அனைவருக்கும் வீடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இந்திய தொழிற் கூட்டமைப்பினர் (சி.ஐ.ஐ.) தெரிவித்த தகவல்கள் வருமாறு:–

தற்போதுள்ள வருமான உச்சவரம்பு அளவான ரூ.2½ லட்சம், ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படலாம். பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது போல இந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயராது. இதுதவிர, வருமான வரி செலுத்துவதில் உள்ள அடுக்கில் (சிலாப்) மாற்றம் செய்ய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது நடுத்தர வருவாய் ஈட்டுவோருக்கு, குறிப்பாக சில்லரை விலையில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாதச் சம்பளதாரர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக அமையும்.

கடந்த ஆண்டு வருமான வரி அடுக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரம், ரூ.2½ முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் தனி நபர்கள், சிறு அளவில் நிவாரணம் பெறும் விதமாக 10 சதவீத வருமான வரி என்பது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படலாம் (இது தற்போது 20 சதவீதம்). இதனால் மாதச் சம்பளம் பெறுவோர் பெரும் பயன் அடைவார்கள்.

இதேபோல் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் ஈட்டும் தனிநபருக்கு மட்டும் 20 சதவீத வரி விதிக்கப்படலாம் (தற்போது 30 சதவீதம்). ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 30 சதவீத வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான நாடுகளில் இந்த பிரிவினருக்கு இதைவிடவும் அதிக சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.

தற்போது ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி அடுக்கு இல்லை என்பதும், மாதச் சம்பளம் பெறுவோர் ரூ.10 லட்சத்துக்கு மேலாக ஆண்டு வருமானம் ஈட்டினாலே அவர்கள் 30 சதவீத வரி செலுத்தும் அடுக்கிற்குள் சென்று விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் வருமான பிரிவுகளில் தொகையை அதிகரித்து அதன் மூலம் மாதச்சம்பளம் பெறுவோரின் வருமான வரிச்சுமையை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

அதே நேரம், தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக விதிக்கப்படும் 30 சதவீத வரியை 25 சதவீதமாக குறைக்க கோரும் இந்திய தொழிற் கூட்டமைப்பின் கோரிக்கையை கடும் நிதி பற்றாக்குறை காரணமாக மத்திய நிதி அமைச்சகம் ஏற்காது என்றே கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.