யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/2/18

100 சதவீத தேர்ச்சி பெற மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தலைமையில் மாவட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட ஆய்வாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மார்ச் மாதம் தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை வழக்கம்போல நேர்மையான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கண்காணிக்க வேண்டும்.

மாற்றுச்சான்றிதழ்

சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள சரியாக படிக்காத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் (டி.சி.) கொடுத்து அனுப்புவது வழக்கமாக உள்ளது. அந்த மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்து விடுவார்கள் அல்லது தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவார்கள்.

அவ்வாறு மாற்றுச்சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும். எந்த பள்ளியிலாவது அப்படி மாற்று சான்றிதழ் கொடுத்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்க முதலில் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறினார். 

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் : ஊழியர்கள் கொந்தளிப்பு

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் 8 நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலான சம்பளம் பிடித்து போக்குவரத்து கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்திருந்த நிலையில் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சம்பள உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 4-ம் மாலை முதல் ஜனவரி 11-ம் தேதி வரை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இல்லாமல் தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் தலையிட்டு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. அப்போது, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்திய 8 நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தில் 8 நாட்களுக்கான ஊதியம் விடுப்பு எடுத்ததாகக் கூறி பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு; தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி சுமையாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் பிளஸ்2 ரிசல்ட் என்பதாலும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. பிளஸ் 2 விடைத்தாள்கள் முழுமையாக திருத்தப்பட்டு விட்டது. தனித்தனியே மார்க் போடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டன. எந்த நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வி துறை தயாராகவே உள்ளது. 


தேர்வு முடிவுகளை, அ.தி.மு.க., தன் தேர்தல் பிரச்சாரத்துக்கு எடுத்து கொள்ள கூடும். அதிக சதவீத மாணவ, மாணவியர் வெற்றி பெறுதல், அதிக மதிப்பெண் பெறுதல் போன்றவற்றை, தன் அரசின் சாதனைகளாக கூறி பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளது. 

எனவே தேர்தலுக்கு பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி துறையினர் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 17 ம் தேதி வெளியாகும்; எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள், வரும், 25ம் தேதி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 17 ம் தேதி அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பால் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 

வரும், 16ம் தேதி தான், தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தான் சார்ந்த தொகுதியில் ஆசிரியர்கள் இருக்க கூடாது என விதிமுறை உள்ளது. எனவே, தேர்தல் அதிகாரிகள் ஆசிரியர்களை வெவ்வேறு பகுதிக்கு, தேர்தல் பணிக்கு அனுப்பி வைத்து விடுவர். தேர்தல் முடிந்த பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களை, சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகள், ஓட்டு சாவடி மையங்களுக்கு வந்து பெற்று கொள்ளும் வரை, ஆசிரியர்கள் அந்தந்த மையங்களிலேயே இருக்க வேண்டும். 

அதன் பின்னரே வீட்டுக்கு கிளம்பி செல்ல முடியும். நள்ளிரவு அல்லது அதிகாலையில் தான் ஆசிரியர்கள், வீட்டுக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. தேர்வு முடிவுகளை பெற சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு மற்றும் பாடப்பிரிவு ஆசிரியர்கள், சி.இ.ஓ. அலுவலகத்துக்கு காலை, 8 மணிக்குள் வர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும். முதல் நாள், தேர்தல் பணியை விடிய, விடிய மேற்கொண்ட நிலையில், மறுநாள் எவ்வாறு தேர்வு முடிவுகளுக்கான பணியை மேற்கொள்ள முடியும். 

எனவே, பள்ளி கல்வி துறை தேர்வு முடிவுகளுக்கான தேதியை மாற்றி அமைக்க வேண்டும். ஆசிரியர்கள் நிலையை எண்ணி பார்த்து, தேர்வு முடிவு வெளியிடும் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நுழைவுதேர்வு கட்டாயம்; சுப்ரீம் கோர்ட்

தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது. அதே நேரத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது.

இந்த நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும் என, தொடரப்பட்ட வழக்கில், மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது.

இதனிடையில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள், இந்த ஆண்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலமே மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்தன.

தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்த முறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டுமென, தமிழக அரசும் மனு தாக்கல் செய்தது.இந்த மனுக்கள் மீது, நீதிபதிகள், ஏ.ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று நடந்த விசாரணைக்குப் பின், சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள தாவது: தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமே நடத்தப்படவேண்டும்.

குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறைகளிலேயே மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்வது குறித்து, மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். மே, 1ல், நடந்த முதல்கட்ட தேர்வை எழுதியவர்கள், ஜூலை, 24ல் நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்வையும் எழுத அனுமதிப்பது குறித்தும் விளக்க வேண்டும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளது. வழக்கு விசாரணை, 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடரும் குழப்பம்: 

அரசு மருத்துவக் கல்லுாரி களில், 15 சதவீத இடங்களுக்காக, இதுவரை, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடந்து வந்தது.

தமிழகத்தில், பொது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசை தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு முறை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தமிழக மாணவர்கள்தள்ளப்பட்டிருந்தனர்.

தற்போது, இதற்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் கல்லுாரிகளில் சேர்வதற்கு, நுழைவுத் தேர்வை எழுதியாக வேண்டிய நிலையில் மாணவர்கள் உள்ளனர். போதிய கால அவகாசம் இல்லாததால், தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையின்போது வழக்கறிஞர்களின் வாதம்:

மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான்: தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தினால், 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை. இது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார்: மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்னை தொடர்பாக, இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசிக்க, மத்திய அரசு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

சி.பி.எஸ்.இ., சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த்: முதல் கட்ட நுழைவுத் தேர்வை எழுதியவர்கள், இரண்டாம் கட்டத் தேர்வையும் எழுத அனுமதித்தால், 9.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை ஏற்படும்.

அதே நேரத்தில், முதல் கட்டத் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுதாத, 40 ஆயிரம் மாணவர்களை மட்டும், இரண்டாம் கட்டத் தேர்வை எழுத அனுமதிக்கலாம். இதனால், நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு போதிய மையங்கள் ஏற்பாடு செய்ய முடியும்.

தேர்வு முடிவில் தாமதம்; ஆசிரியர்கள், பெற்றோர் அதிருப்தி

பிளஸ் 2 தேர்வு முடிவை மே, 17ம் தேதி வெளியிடப்போவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி முடிவில் ஏற்பட்ட தாமதத்தால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தி நிலவுகிறது. 


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலுக்கு பின், மே, 17ம் தேதி வெளியாகும் என, அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் தயார் நிலையில் இருந்தும், தாமதமாக வெளியிட, அரசு எடுத்துள்ள முடிவு, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 

பொதுவாக, மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியானால், அதன் தொடர்ச்சியான பணிகள், ஒரு வாரம் வரை பள்ளிகளில் நீடிக்கும். அவற்றை முடித்துவிட்டு, கோடை விடுமுறையில், குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவது ஆசிரியர்கள் வழக்கம். 

இந்த முறை மே, 16ம் தேதி வரை தேர்தல் பணிகள், 17ம் தேதிக்கு பின் பிளஸ் 2 தேர்வு முடிவு, அதன்பின், 25ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, அதன் தொடர்ச்சியான பணிகள் என பார்த்து முடிப்பதற்குள், அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கிவிடும். 

மதிப்பீடு அனைத்தும் முடிவடைந்து, தயார் நிலையில் இருந்தும், தேர்வு முடிவு வெளியிட தாமதிப்பது ஏன் என தெரியவில்லை. ஏற்கனவே, இன்ஜினியரிங் மற்றும் கலைக்கல்லூரி விண்ணப்பங்கள் வழங்கப்படும் நிலையில், தேர்வு முடிவு வெளியீடு தாமதம், பெற்றோரையும் ஏமாற்றியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் 2016-2017ம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கையை கலந்தாய்வு மூலம் நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் ஆக்கப்பூர்வமாக அறிவித்துள்ளது.


தேசிய நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், நுழைவுத்தேர்வு இல்லாமல் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கு மாநில சட்டப்பேரவையில் தனிச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேசிய நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ள சட்டத்தின்படி மாணவர் சேர்க்கையை நடத்த இந்த ஆண்டு மட்டும் அனுமதிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு 6-ம் தேதிக்குள் (இன்று) பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்க்கலாம் என்றும், நடப்பாண்டில் பிற மாநில அரசு கல்லூரிகளுக்கு அந்தந்த மாநிலங்கள் நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது.

மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகள் தேர்வு நடத்த அனுமதிக்கக்கூடாது. அனைத்து மாணவர்களையும் இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்க முடியாது. மாநில அரசு கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர் தெரிவித்தார்.

விரைவில் அனைத்து பள்ளிகளிலும் யோகா கட்டாயமாகிறது

அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், இந்த உத்தரவு வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வர உள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யாசோ நாயக் தெரிவித்துள்ளார்.


லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நாயக் கூறுகையில், அனைதஅது பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. 

வரும் கல்வி ஆண்டு முதலே இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வரலாம். அதே சமயம் யோகா கட்டாயமாக கற்பிக்கப்படாது. மாணவர்கள் விரும்பினால் அதை கற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அந்த சமயத்தில் உடற்பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படும்.


போலீசார் அனைவருக்கும் யோகா கட்டாயமாக்கப்பட உள்ளது. பாதுகாப்புத்துறை வீரர்களுக்கும் இது கட்டாயமாக்கப்படுவது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது. போலீஸ் படையினருக்கு வழங்கப்படும் யோகா பயிற்சிக்கு, போலீஸ் யோகா பயிற்சி என பெயரிடப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 

இந்தியா மட்டுமின்றி 192 நாடுகளிலும் இது கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் 21ம் தேதியன்று 2வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

பள்ளி வாகனங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்

தாராபுரத்தில் நேற்று நடந்த, பள்ளி வாகனங்களுக்கான சோதனை முகாமில், தகுதியற்ற நிலையில் இருந்த, 21 வாகனங்களின் குறைபாடுகளை சரிசெய்ய, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


தாராபுரம் வட்டார போக்குவரத்து கழகம் மூலமாக, தாராபுரம், மூலனூர் சுற்றுப்பகுதியில் உள்ள, பள்ளி வாகனங்களுக்கான தகுதி தணிக்கை சோதனை முகாம் நேற்று நடந்தது. மகாராஜா கல்லூரி வளாகத்தில் நடந்த இம்முகாமில், வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணி தலைமையிலான குழுவினர், வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

மொத்தம், 74 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், 21 வாகனங்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டது. மீதியுள்ள, 53 வாகனங்களுக்கு, தகுதிச்சான்று வழங்கப்பட்டது. பள்ளி வாகன சோதனை பணியை, கலெக்டர் ஜெயந்தி ஆய்வு செய்தார். தேர்தல் பார்வையாளர் நித்யானந்த மண்டல், ஆர்.டி.ஓ., சரவணமூர்த்தி உடனிருந்தனர்.

ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் 100 சதவீத தேர்ச்சி

கோவை மாவட்டத்தில், ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் தேர்வில் பங்கேற்ற பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.


ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த பிப்., - மார்ச் மாதங்களில் நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள், நேற்று மதியம், 3:00 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கோவை மாவட்டத்தில், ஈஷா மற்றும் ஸ்டேன்ஸ் பள்ளிகளை சேர்ந்த 90 மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள ஸ்டேன்ஸ் பள்ளி, இரண்டாவது ஆண்டாக, பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்துள்ளது. இதில், 55 மாணவர்களுடன், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. ஈஷா பள்ளியில், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 இருபிரிவு மாணவர்களும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தனியார் பள்ளியில் 'சீட்' பெற இரவு முழுவதும் காத்திருப்பு

புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில், தனியார் பள்ளிகளில், சீட் பெறுவதற்கு, இரவு முழுவதும் கண்விழித்து, பள்ளி வாசலில் தவம் கிடந்து விண்ணப்பம் பெறும் படலம் காஞ்சிபுரத்திலும் துவங்கி உள்ளது.


தமிழகத்தில், 2015 - 16ம் கல்வியாண்டு முடிந்து, அரசு, தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளிலும், 25 சதவீதம் ஏழை குழந்தைகளுக்கு, சீட் வழங்கப்படும். இதற்காக, விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளில் பெறலாம் என, மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. 

இந்நிலையில், பிரபல தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளுக்கு, சீட் வாங்க, இரவு, பகலாக பெற்றோர் காத்திருக்கும் அவல நிலை, காஞ்சிபுரத்தில் காணப்படுகிறது. காஞ்சிபுரம், மாமல்லன் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், நேற்று காலை, 8:00 மணிக்கு, எல்.கே.ஜி.,க்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டதால், நேற்று முன்தினம் இரவே, பள்ளி முன் பெற்றோர் குவிந்தனர். 

இரவு முழுவதும், பள்ளி வாசலில், வரிசை கட்டி அமர்ந்து, நேற்று விண்ணப்பங்களை பெற்றனர். சென்னை மற்றும் சில நகரங்களில், இதுபோன்ற செய்திகள் கேள்விப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்திலும் நடந்துள்ளது ஆச்சர்யத்தையும், பெற்றோரின் ஆவலையும் வெளிப்படுத்துகிறது.

31/1/18

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின், ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)பெற:

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்
( pay slip ) நகல் எடுக்க!!

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர்

வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்


*ஊதியப்பட்டியல் (Pay Slip)

*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து  
தரவிறக்கம்செய்து கொள்ளலாம்


இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *Tpf கணக்கு எண் &  
பிறந்ததேதி*யைக் குறிப்பிட வேண்டும்.

கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு PTPF-ம்
Cps தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல்(SUFFIX) ஆகும்மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்தசுருக்கச் சொற்களை இடவும்தொடக்க கல்வி துறை 
 PTPF என இடவும்

```🔹Pay Slip🔹```

*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின்  
வழியேதரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத்  
தரவிறக்கஇயலும்.

```🔹Annual income statement🔹```

*இதில்கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காதுஆனால் 
 ஊதியப்பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும்.

*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவைஒப்படைப்பு ஊதியம் 
உள்ளிட்டவை 
OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின்அவ்விபரங்களை மேற்கண்ட 
 இணைப்பில் காண இயலாது.

எனவேஅதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும்  
இணையஇணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை  
உள்ளீடுசெய்துதங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம்.

ஊக்க ஊதிய உயர்வு -M.Phil உயர் கல்வி தகுதிக்கு பட்டதாரி ஆசிரியர் (தமிழ் ) இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் குறித்த தெளிவுரை!



BREAKING NEWS: நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு: மத்திய அரசு அறிவிப்பு: தலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு அளித்து மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு அளித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாத சம்பளம் ரூ 1 லட்சத்திலிருந்து ரூ 2.80 லட்சமாக உயர்வு.
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ 90 ஆயிரத்திலிருந்து ரூ 2.50 லட்சமாக உயர்வு - மத்திய அரசு.

ஏ .டி .எம் இயந்திரத்தில் தவறுதலாக வந்த பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர் -கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது:

கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை??

அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால், இன்று நாங்கள் படித்த பி.எட்., படிப்பு எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்புகளி ல் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் பி.எட்., படித்தோம்.

            ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இவைகள் மாணவர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. மேலும், பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் குடோனிலேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

            தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதிப்பணமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

            அரசு பள்ளிகளில் தான் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால், தனியார் பள்ளிகளிலும் கூட எங்களுக்கென பணி வாய்ப்புகள் இல்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுபற்றி அரசு செவி சாய்க்கவில்லை.

            அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும், அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் காத்திருந்து, காத்திருந்து மிஞ்சியது ஏமாற்றமே. கணினி ஆசிரியர் வேலையை நம்பி பல இளைஞர்கள் திருமண வயதைக் கடந்துவிட்டனர். அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பியே பல யுவதிகள் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம்.

            அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆ ந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் இன்று ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் “கணினி அறிவியல்” பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப் போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

            தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்து முடித்துவிட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். படித்தது முதல் இன்றுவரையில் இவர்கள் சொல்லவண்ணா துயரங்களை அடைந்துள்ளார்கள். கசாப்புக் கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை கணினி ஆசிரியர்களின் துயரச் சித்திரம் நீண்டுகொண்டேதான் செல்கிறது. எங்களுக்கான விடியல் என்றுதான் கிடைக்கும்..??

            தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-லிருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2011-லிருந்து 2017-வரை 6 00 கணினி ஆசிரியர்கள் மட்டுமே அரசு தரப்பிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; ஆனால், இலட்சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன்?? தற்போது பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் உள்ளீடு செய்யப்பட்ட விரலியை (Pendirve)  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

            மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியும், விரலியும் கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழு பயனை அளிக்கும்..?? கணினி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்..??

            எட்டு வருடங்களுக்கும் மேலாக, கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக கணினி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கென எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

கணினி அறிவியலின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களும் செய்யப்பட்டன...
வரும் கல்வியாண்டிலாவது விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் கணினி ஆசிரியர்கள் காத்துள்ளனர்...
2018 பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...
கல்வி மானியக் கோரிக்கையில் கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா தமிழக அரசு??                                                                                                                         
G. RAJKUMAR, MCA., BEd.,
96983 39298
மாநில இணைய ஆசிரியர்
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 
பதிவு எண் ® 655/2014.

குரூப் 4 தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் செய்ய வேண்டியது என்ன?

                                                       



தமிழக அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி-IV) ல் 
அடங்கிய பணிகளுக்கு 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ, 14.11.2017 அன்று வெளியிட்டது. இந்த பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 11.02.2018 அன்று தமிழகத்தின் 301 தாலுக்கா மையங்களிலும் நடைபெறவுள்ளது.


சுமார் 20.8 லட்சம் பேர் எழுதவுள்ள இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in-ல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண்/பயனாளர் குறியீடு (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அல்லது தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்

மேலும் விண்ணப்ப கட்டணம் கிடைக்க பெறாதவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்திய லானுடன் contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் இமெயில் முகவரிக்கு 06.02.2018 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இவ்வாறு தமிழக அரசின் தேர்வுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

20 லட்சம் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் : 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்

                                             

சென்னை: தமிழகம் முழுவதும், பள்ளி மாணவர்கள், 20 லட்சம்
பேருக்கு, வேலை வாய்ப்புக்கான தொழிற்கல்வி கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.


20 லட்சம் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் : 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்

மாணவர்களை தயார்படுத்துவதற்காக, 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தொழிற்கல்வி பயிற்சி நேற்று துவங்கியது. தமிழகத்தில், பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்படி, பிளஸ் 2 முடித்ததும், அரசு பள்ளி மாணவர்கள், வேலைவாய்ப்புக்கு தகுதி பெறும் வகையில், தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்களை தயார்படுத்தும்,

ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று துவங்கியது.

தொழிற்கல்வி பயிற்சி



'லெண்ட் அஹேண்ட் இந்தியா' என்ற, பிரபல தனியார் நிறுவனத்தினர், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியைதுவக்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
பள்ளி மாணவர்கள், படிப்பை முடிக்கும் போது, வேலை வாய்ப்புக்கு தகுதி பெறும் வகையில், 20 லட்சம் மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, மாணவர்களை தயார்படுத்த வசதியாக, ஒன்பது முதல், பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பயிற்சி தரப்படுகிறது.

260க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி


வேலைவாய்ப்புக்கான தொழிற்கல்வி பயிற்சியில், விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்; கட்டாயமில்லை. வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், சிறு வணிகம், ஆட்டோ மொபைல்ஸ், அழகு, உடல்நல பராமரிப்பு கலை என, 260க்கும் மேற்பட்ட தொழிற்கல்விகளில்


Advertisement
ஒன்றை, மாணவர்கள் தேர்வு செய்யலாம்.
இந்த திட்டத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து, மூன்று கோடி ரூபாய் நிதி உதவி கிடைக்கிறது. மேலும், 30 கோடி ரூபாய் வரை நிதி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான, 'நீட்' தேர்வு எழுத, அரசு பள்ளி மாணவர்கள், 2,000 பேருக்கு, சென்னையில் உள்ள கல்லுாரிகளில், சிறப்பு பயிற்சி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மாநில இயக்குனர், ராமேஸ்வர முருகன், இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முத்தான 'மூன்று' நிலா! வானில் ஒரு அதிசயம்

                                                     


சந்திரகிரகணத்து அன்று பெரிய நிலா, ரத்த நிலா, நீலநிற நிலா என மூன்றுவித
நிலாவும் வானில் தோன்றும் அதிசயம்நாளை (ஜன., 31), அரங்கேற உள்ளது.ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன்(பெரிய நிலா) ஏற்படுவது வழக்கம்.
நாளைய சிறப்பம்சம் என்னவெனில், சந்திரகிரகணத்துடன் ரத்த நிலா மற்றும் நீலநிற நிலாவும் தோன்ற உள்ளது.

சூப்பர் மூன்

பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான சராசரி தொலைவை விட, குறைவாக இருக்கும் போது 'சூப்பர் மூன்' தோன்றுகிறது. அப்போது சாதாரணமாக தெரியும் நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும்.* பூமிக்கும் - நிலவுக்குமான சராசரி துாரம் 3,84,400 கி.மீ. 'சூப்பர் மூன்' அன்று, இதைவிட குறைவான துாரத்தில் நிலா இருக்கும்.* சூரியனை பூமி சுற்றி வர 365.26 நாட்கள் ஆகிறது. அதே போல நிலவு, பூமியைச் சுற்ற 29.32 நாள் ஆகும். இந்தக் கணக்கீட்டு முறையில் பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது 'சூப்பர் மூன்' நிகழ்வு ஏற்படுகிறது.

சந்திர கிரகணம்

நிலவுக்கு தானாக ஒளி வெளியிடும் சக்தி கிடையாது. சூரிய ஒளியைத் தான் அது பிரதிபலிக்கிறது. சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது ஏற்படுகிறது. இதனால் சூரிய ஒளி, நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது. பூமியின் நிழல் தான், நிலவில் படுகிறது.


ரத்த நிலா


சந்திர கிரகணத்தன்று 'சூப்பர் மூன்' ஏற்படும் போது, நிலா, பூமிக்கு அருகில் வருகிறது. இதனால் சூரிய ஒளி, பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால், அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் 'ஆரஞ்சு' நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இது 'ரத்த நிலா' என அழைக்கப்படுகிறது.


நீலநிற நிலா


மாதம் தோறும் ஏற்படும் இரண்டாவது பவுர்ணமி, 'நீலநிற நிலா' என அழைக்கப்படுகிறது. இது நீல நிறத்தில் தெரிவதில்லை. அறிவியல் வரலாற்று ரீதியாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

32
சுமார் 152 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது என கூறப்படுகிறது. இது அமெரிக்காவுக்கு மட்டுமே பொருந்தும். உலகம் முழுவதற்குமானது அல்ல. ஆசியாவில் கடைசியாக இந்நிகழ்வு 1982 டிச., 30ல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 32 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது.எங்கு தெரியும்இந்தியாவில் நாளை(ஜன.31) மாலை 5 : 18 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. 6:21 முதல் இரவு 7:37 வரை முழு கிரகணம் இருக்கும்.இரவு 7:37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8: 41 மணிக்கு முழுமையாக விலகி விடும். இரவு 9:38 மணிக்குப்பின் நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.

எப்படி பார்ப்பது

இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்.

சந்திர கிரகணம் பரிகாரம் யாருக்கு

நாளை (ஜன., 31) சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி யார் யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பின் பரிகார பூஜை செய்யப்பட்டு கோயில்களில் நடை திறக்கப்படும். நாளை மாலை 5:16 மணிக்கு ஏற்படும் இந்த கிரகணம் இரவு 8:40 மணி வரை நீடிக்கிறது. கிரகணம் முடிந்த பின் நீராடி சந்திரனை தரிசனம் செய்வது நன்மையளிக்கும்.புதன் கிழமையில் பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் பரிகார அர்ச்சனை செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பு: மத்திய நீர் ஆணையத்தில் பணி!

                                            
                                             

மத்திய நீர் ஆணையத்தில் காலியாக உள்ள ஸ்கில்டு வொர்க் அசிஸ்டன்ட்
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Skilled Work Assistant.

காலியிடங்கள்: 21

ஊதியம்: ரூ.18,000.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி / ஐடிஐ.

கடைசித் தேதி ; 23.2.2018

மேலும் விவரங்களுக்கு http://www.cwc.nic.in/என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

TNOU-BEd ADMISSION -NO ENTRANCE EXAM-NEW METHOD FOR The Selection of candidates will be on the basis of the marks secured in the qualifying UG / PG Degree examination.