யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/2/18

ஆவின் நிறுவனத்தில் பணிகள்


கிருஷ்ணகிரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் 2018-ஆம் ஆண்டிற்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (Vety) - 01
பணி: Manager (Pur) - 01
பணி: Manager (Accounts) - 01
பணி: Manager (Mkg) - 012
பணி: Dy.Manager (Dairy)  - 01
பணி: Dy.Manager (DC) - 02
பணி: Dy.Manager (System) - 01
பணி: Executive (Office)  - 01
பணி: Executive (System) - 01
பணி: Executive (Lab) - 02
பணி: Extension Officer Gr.II - 04
பணி: Private Secretary Fr.II - 01
பணி: Jr.Executive (Office) - 01
பணி: Jr.Executive (Typing) - 01

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை கேட்பு வரைவோலையாக (டி.டி) பொது மேலாளர், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி என்ற பெயரில் கிருஷ்ணகிரியில் மாற்றத்தக்க வகையில் எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.co.in  என்ற முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
பொது மேலாளர்,

தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி-2.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com  அல்லது http://aavinmilk.com/hrdha190118.html  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

AIL நிறுவனத்தில் 382 காலியிடங்கள் Steel Authority of India Limited (SAIL) நிறுவனத்தில் பணிகள்



பணி: Management Trainee (Technical)

காலியிடங்கள்: 382

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள்:

Mechanical Engineering (ME)  

Metallurgical Engineering (MT)

Electrical Engineering (EE)

Chemical Engineering (CH)

Instrumentation Engineering (IN)

Mining Engineering (MN)

கல்வித்தகுதி: Mechanical, Metallurgy, Electrical, Chemical, Instrumentation, Mining ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் BE  முடித்திருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.sailcareers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.2.2018

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் உதவியாளர் பணிகள்


திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் 73 உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர் 

காலியிடங்கள் : 73

வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tiruppur.tn.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து  அதனுடன் அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல இணை இயக்குநர்,

4/583, பல்லடம் ரோடு,

வீரபாண்டி பிரிவு,

திருப்பூர் – 641 605

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 9.2.2018

கூடுதல் தகவல்களுக்கு http://tiruppur.tn.nic.in/dept_pdf/ahvs.pdf

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி


சென்னையில் இயங்கி வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் Chief Financial Officer  பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணி: Chief Financial Officer

பணியிடம்: சென்னை

கல்வித்தகுதி: CA தேர்ச்சி பெற்று 15 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டா, புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் secretarial@lvbank.in என்ற இமெயில் முகவரிக்கு அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Lakshmi Vilas Bank Limited Corporate Office,

Secretarial Department,

"LVB House",

No.4, Sardar Patel Road,

Guindy, Chennai - 600 032.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.2.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.lvbank.com/UserFiles/Post%20of%20CFO.pdf



டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிகள்


தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 88

பணி மற்றும் காலியிட விபரம்:

(SC/ST பிரிவினர்களுக்கு மட்டும்)

பணி: Asstt Manager/Finance

காலியிடங்கள்: 02

பணி: Asstt Manager/Corporate Communication

காலியிடங்கள்: 1

பணி: Asstt Manager/Legal

காலியிடங்கள்: 01

பணி: Asstt Manager/Safety

காலியிடங்கள்: 01

Section - ‘B’ - Regular-Non-Executive பிரிவு பணிகள்

பணி: Station Controller/ Train Operator (SC/TO)

காலியிடங்கள்: 50

பணி: Maintainer Electronic Mechanic

காலியிடங்கள்: 29

Section - ‘C’ - Non-Executive Category Posts

பணி: Stenographer

காலியிடங்கள்: 02

பணி: Account Assistant

காலியிடங்கள்: 01

பணி: Office Assistant

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்ள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.delhimetrorail.com  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில்  விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.250.  இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2018

கூடுதல் தகவல்களுக்கு https://www.digialm.com/EForms/pdf/onlineAppForm/form54967/DMRC_Notification2018.pdf 

விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பணிகள் விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


பணி: Management Trainees

சம்பளம்: 20,600 – 46,500

வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: BE/B.Tech முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

GATE 2018 மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500. SC/ST பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.vizagsteel.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் அனைத்து சான்றுகளையும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.2.2018

கூடுதல் தகவல்களுக்கு www.vizagsteel.com

விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பணிகள்

விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி: Management Trainees

சம்பளம்: 20,600 – 46,500

வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

GATE 2018 மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500. SC/ST பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.vizagsteel.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண

+2 தகுதிக்கு Balmer Lawrie நிறுவனத்தில் பணிகள்


Balmer Lawrie  நிறுவனத்தில் 42 Field Executive (Customer Clearance) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advt No : BA/TL/LS/FE(CC)/01

பணி: Field Executive (Customer Clearance)

காலியிடங்கள்: 42

கல்வித்தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: கொல்கத்தா & சென்னை

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.balmerlawrie.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.02.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.balmerlawrie.com/files/uploads/1517214629web_ad__apprentices_field_executive_customs_clearance.pdf




I Would like to share this with you. Here You Can Download This velai vaaippu (வேலை வாய்ப்பு )Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.akshayam.velaivaaippu
[7:07 PM, 2/3/2018] Tr.RajendranDindukal: தேசிய நியூட்ரிஷன் மையத்தில் பணிகள்
ஹைதராபாத்தில் உள்ள “National Institute of Nutrition”-ல் பணிகள்

Advt. No.: 58/Projects/2017

பணி: Research Assistant (Nutrition)

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: Food & Nutrition/ Home Science பாடப்பிரிவில் இளநிலை  பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 31,000

பணி: Research Assistant (Social Work/ Sociology)

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: Social Work/ Sociology பாடப்பிரிவில் இளநிலை  பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 31,000

பணி: Field Worker

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் MLT/PMW/Radiology/Radiography பாடப்பிரிவில் 2  வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DMLT முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 18,000

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 8.2.2018 

பணி: Data Entry Operator (DEO):

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DOEACC ‘A’ நிலை சான்று பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்திற்குள் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 18,000

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 9.2.2018

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு/ஸ்கில்டு தேர்வு/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது www.icmr.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க  வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Head of the Department of Social Work,

Gulbarga University,

Gulbarga – 585 106
[7:09 PM, 2/3/2018] Tr.RajendranDindukal: 
தேசிய நியூட்ரிஷன் மையத்தில் பணிகள் ஹைதராபாத்தில் உள்ள “National Institute of Nutrition”-ல் பணிகள்  Advt. No.: 58/Projects/2017  பணி: Research Assistant (Nutrition)  காலியிடங்கள்: 2  கல்வித்தகுதி: Food & Nutrition/ Home Science பாடப்பிரிவில் இளநிலை  பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: 31,000  பணி: Research Assistant (Social Work/ Sociology)  காலியிடங்கள்: 02  கல்வித்தகுதி: Social Work/ Sociology பாடப்பிரிவில் இளநிலை  பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: 31,000  பணி: Field Worker  காலியிடங்கள்: 02  கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் MLT/PMW/Radiology/Radiography பாடப்பிரிவில் 2  வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DMLT முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: 18,000  நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 8.2.2018   பணி: Data Entry Operator (DEO):  காலியிடங்கள்: 1  கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DOEACC ‘A’ நிலை சான்று பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்திற்குள் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.  வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: 18,000  நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 9.2.2018  தேர்ந்தெடுக்கப்படும் முறை:  எழுத்துத்தேர்வு/ஸ்கில்டு தேர்வு/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது www.icmr.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க  வேண்டும்.  நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:  Head of the Department of Social Work,  Gulbarga University,  Gulbarga – 585 106

INCOME TAX 2019 - சம்பளதாரர்கள் ரூ.40,000 வரிவிலக்கு பெற ஆவணம், ரசீது தாக்கல் செய்ய தேவையில்லை :

வருமானவரி விதிப்பு முறையில் நிலையான கழிவுத் திட்டம் கடந்த 1974-ம் ஆண்டுஅறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, மருத்துவம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நிலையான கழிவு என்ற அடிப்படையில் சம்பளதாரர்கள் வருமானவரி விலக்கு பெறலாம்.
எனினும், இந்தத் திட்டத்தை 2006-ல் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ரத்து செய்தார். இந்நிலையில் நிலையான கழிவுத் திட்டம் வரும் நிதியாண்டில் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் இதன்கீழ் ரூ.40 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில்சந்திரா நேற்று கூறும்போது, "சம்பளதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் நிலையான கழிவுத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவை குறிப்பிட்டு ரூ.40 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம். எனினும், இதற்கு ஆதாரமாக எந்தவித ஆவணத்தையோ ரசீதையோ தாக்கல் செய்யத் தேவையில்லை. மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்களையும் கறுப்பு பணம் பதுக்குபவர்களையும் கண்டறிய போதுமான தொழில்நுட்பம் வருமான வரித்துறையிடம் உள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தொழிற்பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தனியார் தொழிற் பள்ளிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 54 நீண்டகால தொழிற்பிரிவுகள், மற்றும் 35 குறுகிய கால தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.ஏற்கெனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் தொழிற்பள்ளிகளுக்கு அங் கீகார நீட்டிப்பு ஆணை வழங்கவும், ஒவ் வொரு ஆண்டும்ஜனவரி 2-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதிவரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.2017-18-ம் ஆண்டு முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மண்டல பயிற்சி இணை இயக்குநர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இணையதள முகவரியில் தற்போது 2018-19-ம் ஆண்டு தொழிற்பள்ளிகளுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் புதிதாக தொழிற் பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன.

புதிதாக அங்கீகாரம் கோரும் தொழிற்பள்ளிகள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் வழங்கும் முறையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள இணையதளம் வாயிலாகச் செயல்படுத்தப்படுவதால்தொழிற் பள்ளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

Annamalai University - 81st Annual Convocation 2018 - Notification ... ANNAMALAI UNIVERSITY | NOTIFICATION

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு - 2 முக்கிய குற்றவாளிகள் கைது :

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கணேசன் (வயது 38), சேக் தாவூத் நாசர்(32), ரகுபதி(34), சுரேஷ்பால்(34) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம் (32), சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த நாதன்(45) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​

தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வுஎன்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

 இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா? என்றால் முடியாது.

 இது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 'பாராமெடிக்கல்' படிப்பு துவக்கம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி வைத்தார்.
பின், நிருபர்களிடம் கூறியதாவது: ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்புக்கு, வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாத காலத்திற்குள், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 1,234 ஆய்வக உதவியாளர் பணியிடம், 353 மருந்தாளுனர் பணியிடம் மற்றும் 450 நர்சுகள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இந்தாண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 38 கோடி ரூபாய் மதிப்பில், 48 பாராமெடிக்கல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் முதன்முறையாக, 13 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், பட்ட மேற்படிப்பு துவங்கப்பட உள்ளது. 

'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு கேட்ட அனைத்து விபரங்களையும், தமிழக அரசு சமர்ப்பித்து விட்டது. தமிழகத்திற்கு, 'எய்ம்ஸ்' அறிவிக்கப்பட்ட ஒன்று. எனவே, இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்பதாம் வகுப்பு மாணவியை தன்னுடைய இருக்கையில் அமர வைத்து மாவட்ட ஆட்சி தலைவர் பாராட்டு !!

சுற்றுப்புற தூய்மை பற்றிய அக்கறை கொண்ட வேங்கிக்கால் , பொன்னுசாமி நகரைச் சேரந்த சந்திரவாசன், இளையசுதா என்பவர்களின் மகளான   ச.பூஜா என்ற   ஒன்பதாம் படிக்கும் மாணவியை பெருமை படுத்தும் விதமாக நம் மாவட்ட (திருவண்ணாமலை) ஆட்சித்தலைவர் அம்மாணவியை தம் இருக்கையில் அமர வைத்து பெருமை படுத்தினார்.

மாணவர்களுக்கு சலுகை திட்டங்கள் : கல்வி முறையை மாற்ற அதிரடி முடிவு!!!

புதுடில்லி: சிறப்பான தேர்ச்சி பெற்ற முதல், 1,000 பி.டெக்., மாணவர்கள்,
முனைவர் பட்டப் படிப்பில் சேர, 'பெல்லொஷிப்' திட்டம், 24 புதிய மருத்துவக் கல்லுாரிகள் கட்டுதல் உட்பட, பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.


'ஏகலைவா' பள்ளி : மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், கல்விக்கு, 85,010 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், 35,010 கோடி ரூபாய், உயர் கல்விக்கும், 50 ஆயிரம் கோடி ரூபாய், பள்ளி கல்விக்கும் ஒதுக்கப்பட உள்ளது. வரும், 2022க்குள், கல்வி முறையையும், கல்வி கட்டமைப்பையும் முற்றிலும் மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுஉள்ளதாக, ஜெட்லி கூறினார்.
எஸ்.டி., பிரிவினர், 50 சதவீதத்துக்கு கூடுதலாக வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும், குறைந்தபட்சம், 20 ஆயிரம் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும், நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு நிகராக, 'ஏகலைவா' பள்ளிகள் நிறுவப்படும் என, அவர் தெரிவித்தார்.

சன்மானம் : திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென பிரத்யேகமாக இயங்கும், இரு பள்ளிகளை நிறுவப்போவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்பக் கழகம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் கீழ், திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென, 18 பள்ளிகள் செயல்பட உள்ளன. பிரதமர் பெல்லோஷிப் திட்டத்தின் கீழ், சிறப்பாக தேர்ச்சி பெற்ற, முதல், 1,000 பி.டெக்., பட்ட மாணவர்கள், ஐ.ஐ.டி., மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மையத்தில், முனைவர் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மாணவர்களுக்கு, பெருந்தொகை சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு!!!

தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, 
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சேதமடைந்த அரசு பள்ளி கட்டடம் : விபரங்களை அனுப்ப உத்தரவு!!!

தேனி: மாநிலத்தில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்கள் குறித்த விபரங்களை
சேகரித்து மார்ச் 5க்குள் அனுப்ப அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 30 மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. 40 ஆண்டிற்கும் மேல் பயன்பாட்டில் உள்ள அரசு பள்ளிக் கட்டடங்கள் விபரம் சேகரிக்கப்பட்டது. அவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 2002 முதல் 2017 டிசம்பர் வரை மாநிலத்தில் இத்திட்டத்தில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள், மிக மோசமான நிலையில் சேதமடைந்த கட்டடங்கள் உள்ளிட்ட முழு விபரங்களை புகைப்படங்களுடன் மார்ச் 5க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, அனைவருக்கும் கல்விதிட்ட உதவி திட்ட அலுவலர்களை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்பின் தேவைப்படும் நிதி ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் : முறைகேடின்றி மதிப்பெண் தர உத்தரவு!!!

அரசு பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், பிளஸ் 2வுக்கான
, செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 7; 10ம் வகுப்புக்கு, மார்ச், 16லும் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2வுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. கணிதம், அறிவியல், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, பள்ளி ஆய்வகங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன. பல பள்ளிகளில் பெயரளவில், செய்முறை தேர்வு நடத்துவது வழக்கமாக உள்ளது. சில பள்ளிகளின் ஆய்வகங்களில், உபகரணங்கள் பெயரளவில் தான் உள்ளன. இந்த முறை, அனைத்து பள்ளிகளிலும், உபகரணங்களை முறையாக வாங்கி பயன்படுத்த வேண்டும். அவற்றை, மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இந்த தேர்வில், மாணவர்களுக்கு தோராய மதிப்பெண் வழங்காமல், சரியான மதிப்பெண் வழங்க வேண்டும். தங்களுக்கு பணிவிடை செய்யும் மாணவர்களுக்கு மட்டும், ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் வழங்குவது போன்ற முறைகேடுகள் இருக்கக் கூடாது என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. செய்முறை தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தனித்தேர்வர்களுக்கும், எந்தவித பாகுபாடுமின்றி, பள்ளி மாணவர்களை போன்றே தேர்வை நடத்தி, அவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 'பாராமெடிக்கல்' படிப்பு துவக்கம்!!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 
ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி வைத்தார்.


பின், நிருபர்களிடம் கூறியதாவது: ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்புக்கு, வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாத காலத்திற்குள், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 1,234 ஆய்வக உதவியாளர் பணியிடம், 353 மருந்தாளுனர் பணியிடம் மற்றும் 450 நர்சுகள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இந்தாண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 38 கோடி ரூபாய் மதிப்பில், 48 பாராமெடிக்கல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் முதன்முறையாக, 13 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், பட்ட மேற்படிப்பு துவங்கப்பட உள்ளது.
'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு கேட்ட அனைத்து விபரங்களையும், தமிழக அரசு சமர்ப்பித்து விட்டது. தமிழகத்திற்கு, 'எய்ம்ஸ்' அறிவிக்கப்பட்ட ஒன்று. எனவே, இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.