யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/2/18

குரூப் 4 தேர்வு : விண்ணப்பித்த பிஎச்டி பட்டதாரிகள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11)நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த
சுமார் 20 லட்சம் பேரில் 992 பேர் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தமிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 9,351 பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியை மட்டுமே தகுதியாகக் கொண்ட குரூப் 4தேர்வுக்கு பிஎச்டி பட்டதாரிகள் 992 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும், எம்ஃபில். பட்டதாரிகள் 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதாகவும் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரூப் 4 தேர்வில் முதன்முறையாகத் தேர்வர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பெயர், படம், பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட தனித்துவமான விடைத்தாள்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயத் தேர்ச்சி முறையை மறுஆய்வு செய்ய வேண்டும்: நாடாளுமன்றக் குழு பரிந்துரை!!!

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கும்
நடைமுறையை மறுஆய்வு செய்யுமாறு பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தி மாணவர்களைத் திறனை மதிப்பிட்டால்தான் அவர்களது கல்வியறிவு மேம்படும் என்றும் அக்குழு கூறியுள்ளது.
ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான சட்டத் திருத்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின்படி, அந்த மசோதா மனிதவள மேம்பாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது
. பாஜக எம்.பி. சத்தியநாராயணன் ஜாட்டியா தலைமையிலான அக்குழு கடந்த சில மாதங்களை அதனை ஆய்வு செய்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தனது ஆய்வறிக்கையை அக்குழு சமர்ப்பித்துள்ளது.
 அதுதொடர்பான விவரங்கள் மாநிலங்களவைச் செயலர் அலுவலகத்தில் இருந்து திங்கள்கிழமை வெளியாகியுள்ளன
.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சியளிக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்று 6 மாநிலங்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளன.
 மீதமுள்ள மாநிலங்கள் அனைத்தும் அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது கட்டாயத் தேர்ச்சி முறையை மாற்றியமைப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆண்டுதோறும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி அவர்களது திறனை மதிப்பிடுவது அவசியம்.
 அதில் தோல்வியடைபவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கலாம். அதன் மூலம் அவர்கள் கல்வியறிவு செழுமையடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்லூரி தரவரிசை : யு.ஜி.சி., உத்தரவு

பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., மற்றும் தேசிய தர அங்கீகார அமைப்பான, 'நாக்' சார்பில், உயர் கல்வி நிறுவனங்களுக்கு, தரவரிசை அந்தஸ்து வழங்கப்படுகிறது.
எட்டு வகை, 'கிரேடு'களில், தரவரிசை தரப்படுகிறது. ஒவ்வொரு பல்கலையும், கல்லுாரியும், நாக் தரவரிசையை கட்டாயம் பெற வேண்டும். மாணவர் சேர்க்கையின் போது, தங்கள் கல்வி நிறுவனங்களின் தரவரிசை குறித்து, சில கல்லுாரிகள், மாணவர்களுக்கு தவறான தகவலை தருவதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதை தடுக்கும் வகையில், கல்லுாரிகளும், பல்கலைகளும், தாங்கள் பெற்ற, தரவரிசை குறித்த விபரத்தை, தங்கள் நிறுவன இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

பாலிடெக்னிக் விவகாரம்:ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு ::

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துக்கு எதிரான வழக்கில் 22-ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று  பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 200 பேருக்காக அனைவரையும் தண்டிப்பது ஏற்கக் கூடியதல்ல என சிவங்கை இளமதி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழக அரசில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு 1573 உதவியாளர் வேலை!

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 1573 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.
தற்போது தஞ்சாவூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமாரி, நீலகிரி, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, விருதுநகர், திருவாரூர் போன்ற மாவடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, விழுப்புரம், சேலம், திருப்பூர் மாவடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர்
மாவட்ட வாரியான காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
* தஞ்சாவூர் - 201
கடைசி தேதி: 26.02.2018
* கரூர் - 24
கடைசி தேதி: 22.02.2018
* திருவண்ணாமலை - 57
கடைசி தேதி: 26.02.2018
* வேலூர் - 67
கடைசி தேதி: 22.02.2018
* கன்னியாகுமாரி - 48
கடைசி தேதி: 26.02.2018
* நீலகிரி - 17
கடைசி தேதி: 21.02.2018
* ராமநாதபுரம் - 18
கடைசி தேதி: 21.02.2018
* தேனி - 34
கடைசி தேதி: 22.02.2018
* திருநெல்வேலி - 62
கடைசி தேதி: 23.02.2018
* விருதுநகர் - 43
கடைசி தேதி: 26.02.2018
* திருவாரூர் - 43
கடைசி தேதி: 27.02.2018
தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கால்நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:01.07.2015 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்தியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர் 35க்குள்ளும், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) 32க்குள்ளும், பொதுபிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அலுலவலகத்துக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.5க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் இணையதளங்களில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய தஞ்சாவூர் மாவட்டம் http://www.thanjavur.nic.in/pdf/AHA.pdf, கரூர் மாவட்டம் http://karur.tn.nic.in/departments/AH_Application.pdf, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.tiruvannamalai.tn.nic.in/aha.pdf, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://vellore.nic.in/edocs/Ah-asst%20Vacancy.pdf, கன்னியாகுமார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.kanyakumari.tn.nic.in/AH%20assistant.pdf, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://nilgiris.nic.in/images/ah.pdf, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.ramnad.tn.nic.in/pdf/animal_husbandry.pdf, தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.theni.tn.nic.in/pdfs/ahasst1.pdf, திருநெல்வேலி மாவட்டத்தை தேர்ந்தவர்கள் http://www.nellai.tn.nic.in/pdf/animhustnv.pdf, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.tiruvarur.tn.nic.in/documents/animal2018.pdf, http://virudhunagar.tn.nic.in/ என்ற அதிகார்ப்பூர்வ இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் இணையதளங்களில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

குருப் நான்கு 2018 தேர்வு சொல்வது என்ன ? சிவ ஆனந்த கிருஷ்ணனின் அலசல்

1. 20.80 லட்சம் பேர் விண்ணபித்து 17 லட்சம் பேர் எழுதியது பற்றி ?
எனக்கு தெரிஞ்சு அதிக மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசம்ல கூட இப்படி நடந்தது இல்ல.. காரணம் இளைஞர்கள் படிப்பறிவு விகிதம் கம்மி.. அதுவே கேரளால இந்த மாறி நடக்கும்... இப்ப எல்லாம் படிக்றதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை.. அப்டியே படிச்சாலும் வேலை கிடைக்கிறது இல்ல.. அதற்கான தகுதிகளை இன்றைய இளைஞர்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்வதும் இல்லை. பக்கோடா விற்பதே வேலைவாய்ப்பு என்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதால் இது போன்ற போட்டித் தேர்வுகள் இத்தனை பேர் விண்ணப்பிப்பது அதிசயம் இல்லை... அதைவிட முன் எப்போதும் இல்லாததை விட அதிக விழிப்புணர்வு கூடிருக்கு போட்டி தேர்வை பற்றி .... எத்தனை பேர் எழுதினாலும் முழுமையாக முயற்சி கொண்ட முழுமையாக அர்பணித்துக் கொண்ட தேர்வு அன்று முழுமையாக திறனை வெளிபடுத்திய நபருக்கு கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும் ....

2. இந்த தேர்வில் வட மாநில இளைஞர்கள் இங்கே எழுதியதாகவும் அதனால் பாதி வேலையே அவங்களே பறிச்சிட்டு போயிருவாங்க போலன்னு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதே ?
பொதுவா நம்ம தமிழ்நாட விட வட மாநில இளைஞர்களுக்கு கொஞ்சம் கூடுதலாவே போட்டி தேர்வு பற்றிய விழிப்புணர்வு இருக்கும்... யாரோ 5 பேரு நேரம் போகல போல.. இதுக்கு விண்ணப்பித்து எழுதி இருக்காங்க.. 5 வருஷம் உக்காந்து படிச்சவனே இங்க தள்ளாடுறான்.. இவங்க தமிழும் ஒன்னும் தெரியாம எப்படி பாஸ் பண்ண முடியும்.. ஒரு வேலை இங்கயே அவங்க குடும்பம் முன்னாடியே செட்டில் ஆயிருக்கலாம்... ஊடகம் எப்பவே இப்டித்தான் கிளப்பி விடும்... ஏய் இந்தா பாருடா தமிழ ஒழிக்க வந்துட்டாங்க ன்னு ... .. இது எப்டின்னா சீட்டு கட்டுல ஒரு சீட்டு ஜோக்கர் வந்தா எல்லாமே ஜோக்கரா மாறிரும் ன்னு சொல்ற மாறி இருக்கு .... சும்மா பீதிய கிளப்பி விடறதே இவங்க தான் ... அப்டியே அவங்க பாஸ் பண்ணாலும் தமிழ் எழுத படிக்க தெரியலன்னா பணி நீக்கம் செய்யபடுவார்கள்.. பொறுப்புள்ள ஊடகம் இந்த மாதிரி செய்திலாம் வெளியிடுவது வருத்ததற்குரியது.
3. கேள்வித் தாளில் ஓர் நகரத் தன்மை தெரிகிறதே,வாழ்வியல் குறித்த கேள்விகள் இடம்பெறவில்லை என்று ஒரு நாளிதழ் வெளியிட்டதே ?
கேள்வித்தாளில் என்னங்க நகரத் தன்மை ஊரகத் தன்மை ன்னு ... ? ஊரகத் தன்மை ன்னா ஜல்லிக்கட்டு எந்த விலங்கை கொண்டு விளையாடபடுகிறது னு கேக்கணுமா? இல்ல இந்தியா சுதந்திரம் பெற்றது எப்போது னு கேக்கணுமா ? போட்டித் தேர்வு என்பது ஒருவரை ஒருவர் முந்திக் கொள்வதற்கான தேர்வு.. இங்கே முந்துபவர் வெற்றி பெற்று வேலை பெறுகிறார்... பிந்துபவர் வாய்ப்பை இழக்கிறார்.. விழுமியங்கள் குறித்த கேள்விகள் இடம்பெற வில்லை என்ற கட்டுரையாளரின் ஆதங்கம் நியாயமாகவே இருந்தாலும் இதைதான் கேட்க வேண்டும் இதைத் தான் கேட்க கூடாது என்று பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒவ்வொருவரும் ஒரு ஆலோசனை வழங்கினால் கேள்விகள் எல்லா பாடத்தில் இருந்து சரி சமமாக இடம் பெற வாய்ப்பே இல்லை... மேலும் ஆணையம் ஒரு பாடத் திட்டத்தை மையமாக கொண்டு வினாத்தாள் வடிவமைக்குமே தவிர எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கேட்பதில்லை.. நடப்பு நிகழ்வுகள் பகுதி கேள்விகள் என்பது நாம் அன்றாடம் செய்தித்தாள் மற்றும் செய்திகளில் இருந்து இடம்பெறுவது.. இதில் ஒன்றும் வியப்பான வினாக்கள் கேட்கவில்லை... சாமானிய மனிதனுக்கு இதுவியப்பை தரலாம் .. ஆனால் முழுமையாக தயார் ஆகும் ஒரு தேர்வர் இதை எல்லாம் படித்தால் தான் தேர்வு பெற முடியும்... தகவல் நிறைந்த கேள்விகள் தான் எல்லா போட்டித் தேர்வுகளிலும் கேட்கப்படுகின்றன.. இங்கே விழுமியங்கள்,வாழ்வியல் பாடங்களை கேள்விகளாக வைக்க வேண்டும் என்றால் உயர் பதவிகளுக்கு உள்ள தேர்வான குருப் 1 தேர்விற்கு அது பொருந்தும்.. மற்றபடி குருப் நான்கு தேர்விற்கு அதை படிக்கும் அளவுக்கு யாருக்கும் வாய்ப்பும் இல்லை..அப்படிப்பட்ட கல்வி முறையும் இங்கே கற்பிக்கப்படவில்லை.... எனவே வயிற்றுபிழைப்பா வாழ்வியலா என்று தேர்வரிடம் கேட்டால் இன்றைய சூழ்நிலையில் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் கூற வேண்டுமா என்ன ? எனவே ஆணையத்தின் கேள்வித்தாள் தரத்தில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு புலப்படவில்லை
4. கேள்வித் தாளில் பிழை இருக்கிறதே ?
பிழையை தவிர்ப்பது தான் முக்கிய கூறாக இருந்திருக்க வேண்டும்... அனால் எப்படியும் எல்லா தேர்விலும் பிழையுள்ள வினாக்கள் தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது.. அது டைப் பன்னவரின் வேலையா கூட இருக்கலாம் ? இல்ல அச்சின் பிழையா இருக்கலாம்.. இல்ல எடுக்கும்போதே பிழையோடு இருந்திருக்கலாம்.. அதற்கு தேர்வாணையம் கண்டிப்பாக மதிப்பெண் வழங்கும்.. இந்த பிழையுள்ள கேள்விகளால் தேர்வாணையத்தின் தரமே போச்சு ன்னு சிலர் எழுதறப்ப தான் சிரிப்பு வருது... நீங்களே 200 கேள்விகள் எடுத்து பாருங்க.. ஒட்டு மொத்தமா வரும்போது ஒரு சில கேள்விகளில் நம்மளே தப்பு விட்டு இருப்போம்.. ஆணையம் இதை கொஞ்சம் கவனித்து இருக்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை
5. இறுதியாக இந்த தேர்வை பற்றி ?
ஒவ்வொரு வருஷமும் புது வண்டி மார்கெட்ல வந்துட்டே இருக்கு.. நீங்க ஆரம்பிக்கும்போது உங்க திறன் ஒரு டி வி எஸ் 50 அளவுக்கு இருந்து இருக்கலாம்... இன்னைக்கு பல்சர் ,KTM ன்னுகூடுதல் திறன் கொண்ட அதிக புதுபிக்கபட்ட வாகனங்கள் வந்தாகி விட்டது.. நீங்க அதே TVS50 வச்சிக்கிட்டு அடுத்த தேர்வையும் எதிர் கொண்டா அடுத்த வருஷம் குள்ள வேற ஒரு கூடுதல் திறன் கொண்ட ஒரு புது வண்டி முந்தி போயிட்டேஇருக்கும்.. ஆமா இது ஒரு ரேஸ்..ரேஸ் க்கு எவ்ளோ பிரயத்தனம் வேணும்.. வண்டிய எப்படி பராமரிக்கணும் ? எப்படி ஓட்டனும் ? கூட வரவங்களாம் என்ன மாதிரி வண்டி வச்சி ஓட்டறாங்கன்னு ளாம் பாக்கணும்.. அதனால அடுத்த பந்தயத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் உங்கள் நீங்களே திறன் கூட்டிய ஒரு நபரா மாறி தயாரா இருங்க... திருக்குற திருக்குல மத்தவங்க எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு முன்னாடி போய் நிக்கணும்...
அன்புடன்
வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்
ஒலிபரப்பு பொறுப்பாளர்
அகில இந்திய வானொலி

9/2/18

அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் 20 பேர் அண்ணா பல்கலைக்கு மாற்றம்

அண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அண்ணாமலை பல்கலையில், தற்போதுள்ள பணி தேவைகளை விட, 3,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர் உபரியாக இருப்பதாக, தமிழக அரசு கணக்கெடுத்துள்ளது.
பல்வேறு பிரிவு : இவர்களுக்கு, பல கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டியுள்ளதால், ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதால், அண்ணாமலை பல்கலையின் நஷ்டத்தை சரிக்கட்ட, தணிக்கை ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணாமலை பல்கலையில், உபரியாக உள்ளவர்களை, பல்வேறு அரசு பல்கலை மற்றும் கல்லுாரி களுக்கு மாற்றும் நடவடிக்கையில், தமிழக அரசு, தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில் பணியாற்றும், 20 ஊழியர்கள் நேற்று, அண்ணா பல்கலைக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டு, சென்னை அலுவலகத்தில், பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களால், அண்ணா பல்கலை உட்பட உயர்கல்வித் துறையின் பணியாளர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
முக்கிய முடிவு : இதுகுறித்து, அண்ணா பல்கலை ஊழியர் ஒருவர் கூறியதாவது:அண்ணா பல்கலையில், 100க்கும் மேற்பட்டோர், தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மற்ற பல்கலைகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து, சங்கங்கள் கூடி, முக்கிய முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்

விரைவில் டிஜிட்டல் சான்றிதழ்கள்!!

உயர்கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக, டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சோதனை முயற்சியாக 2019ம் கல்வியாண்டு முதல் இத்தகைய சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை ஐஐடி., டில்லி பல்கலை., கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்பட உள்ளது. 
நிதி ஆயோக்கின் கண்காணிப்பில் பேரில் இந்த சோதனை பணிகள் நடத்தப்பட உள்ளது. இத்தகைய டிஜிட்டல் சான்றிதழ்கள் உறுதித்தன்மை வாய்ந்தாகவும், இந்தியாவை இணைக்கும் சங்கிலியாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. சோதனை செயல்பாடு வெற்றி பெற்றால், நாடு முழுவதும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே இமெயில்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
கல்வித்துறை ஏற்கனவே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதால், அதில் இம்முறை அமல்படுத்துவது சிக்கலாக இருக்காது. கல்வி துறையை தொடர்ந்து நில பட்டாக்கள் தொடர்பான ஆவணங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல மாநிலங்கள் இன்னும் டிஜிட்டல் முறைக்கு மாறாமல் இருப்பதால் , இதனை நடைமுறைபடுத்த பல காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.

2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல்

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல் ஆகியவை 12.02.18 திங்கள் அன்று சென்னையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்குவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

சென்னையில் சி.இ.ஓ.,க்கள் கூட்டம்

பொதுத் தேர்வுகளை தில்லுமுல்லு இல்லாமல் நடத்துவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க் களுக்கு, இன்று வழிகாட்டுதல் கூட்டம், சென்னையில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத் தேர்வுகளை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்வுத் துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, இன்று காலை, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், வழிகாட்டுதல் கூட்டம் நடக்கிறது. இதில், பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், முதன்மை செயலர், பிரதீப் யாதவ், இயக்குனர்கள், இளங்கோவன், வசுந்தராதேவி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.

வருங்கால வைப்பு நிதி கையாடல் : தொடக்கக்கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்'

ஓசூர்: சூளகிரி ஒன்றியத்தில் பணியாற்றிய போது, வருங்கால வைப்பு நிதியில் கையாடல் செய்ததாக, ஓசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கணக்கு சரிபார்ப்புஓசூர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர், பிரேம் ஆனந்த், 58. இவர், சூளகிரி ஒன்றியத்தில், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய போது, ஆசிரியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியை கையாடல் செய்ததாக புகார் வந்தது.
இதையடுத்து, சூளகிரி உதவி தொடக்கக்கல்வி அலுவலராக உள்ள சுதா, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் முன்னிலையில் கணக்குகளை சரிபார்த்தனர். ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த, 29 லட்சம் ரூபாயை போலி ஆவணங்கள் தயாரித்து, சூளகிரி உதவி தொடக்கக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் பாலமுரளி என்பவரது வங்கி கணக்கில் செலுத்தியிருப்பதும் தெரிந்தது.
பணி ஓய்வுஇது தொடர்பான விரிவான அறிக்கை, சென்னை தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்புசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஓசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பிரேம் ஆனந்த் மற்றும் இளநிலை உதவியாளர் பாலமுரளி, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரேம் ஆனந்த், வரும், ஜூன் மாதம் பணி ஓய்வு பெற இருந்தார்.

வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு

வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இவற்றின் பலனைப் பெறுவதற்கு ஆதார் எண்களை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக இப்படி செய்யப்படுவதாக அரசு சார்பில் கூறப்படுகிறது. 
வங்கிக்கணக்கு, பான் கார்டு, இன்சூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் பண்ட், தபால் துறை திட்டங்கள், அலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு அடையாள ஆவணங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் பிரச்னையை தீர்க்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு பணிகள் வழங்க தடை தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கை

தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை தேர்வு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்வுத்துறை வாரியம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

பிளஸ்–2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து பிளஸ்–1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


இந்த நிலையில் கடந்த பொதுத்தேர்வுகளில் நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்பட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது தேர்வுத்துறை அது போன்ற பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து அந்த பள்ளிகளின் ஆசிரியர்களை தேர்வு பணிகளில் ஈடுபடுத்த கூடாது என்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றனர்.

தேர்வுத்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கடந்த காலங்களில் பொதுத்தேர்வில் முறைகேடு செய்த தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தேர்வு பணிகளோ, விடைத்தாள் திருத்தும் பணிகளோ கொடுக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், தேர்வு பணிகளில் எவ்வளவு ஆசிரியர்கள் ஈடுபட போகிறார்கள் என்பது குறித்து உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘இன்னும் பள்ளிக்கல்வி துறையில் இருந்து எத்தனை மாணவர்கள் தேர்வு எழுத இருக்கிறார்கள் என்ற முழுவிவரம் கிடைக்கப்பெறவில்லை. அது வந்ததும், அந்த எண்ணிக்கையை, 20 ஆல் வகுத்தால்(ஒரு அறைக்கு 20 மாணவர்கள் என்பதை வைத்து) எவ்வளவு ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுவார்கள் என்பது தெரியும்’ என்றார்.

குறைந்த மதிப்பெண் பெறுவோருக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்க ரேங்க் பட்டியல் வெளியிடாமல் புதிய முறையில் கடந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மேலும் ஒரு புதிய முறையை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிக்க இருக்கிறது.

அதாவது, தேர்வு முடிவு வெளியாகும் முதல் நாள் அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளின் மதிப்பெண்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் அப்படி கிடையாது. மாறாக தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் மதிப்பெண்களை ஆன்–லைனில் பார்த்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இதற்கிடையில் தேர்வு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதில் தேர்வுத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் பல எடுக்கப்பட இருக்கின்றன.

பள்ளியில் கண்டிக்கப்படாத மாணவர்களால் நல்ல சமுதாயம் சாத்தியமில்லை

நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் கடமை ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உண்டு. சுடர்விடும் பல சமுதாய சிற்பிகளை உருவாக்கும் புனித பணியில் உள்ள அவர்களால், சமீப காலமாக பணிச்சுமை, பணி பாதுகாப்பின்மை, மாணவரை நல்வழிப்படுத்த முற்சிக்கும் போது ஏற்படும் எதிர் வினைகளால் மனம் நொந்து,ஆசிரியர் பணியில் ஏன் இருக்க வேண்டும்,' என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதற்கு சிறந்த உதாரணம், வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் ஆபாச படம் பார்த்த மாணவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த நினைத்த தலைமையாசிரியருக்கு கிடைத்த பரிசு, கத்திக்குத்து. எந்த மாணவரை திருத்த நினைத்தாரோ அந்த மாணவரே அவரை குத்தியுள்ளார்.இச்சம்பவத்திற்கு பின் தவறான வழியில் செல்லும் மாணவரை தண்டிக்க எந்த ஆசிரியர்களாவது நினைத்து பார்ப்பார்களா என ஆசிரியர் சமுதாயம் கொதித்துக் கிடக்கிறது. ஒரு காலத்தில், கண்டிப்பு காட்டி, பிரம்பெடுத்த காலத்தில் மாணவர்கள் பணிவுடன் படித்து பிரகாசித்தனர். ஆனால் இன்று குறைந்தபட்சம் சொற்களால் கூட தண்டிக்க ஆசிரியர்களால் முடியவில்லை.அந்த அளவிற்கு மாணவர் - ஆசிரியர் உறவில் இந்த இடைவெளி ஏற்பட யார் காரணம்... கண்முன் தவறான வழியில் பயணிக்கும் மாணவர்களை திருத்துவதற்கு வழி என்ன... 
இது குறித்து ஆசிரியர், பெற்றோர் கூறுவது என்ன...
சீரழிக்கும் சினிமா : சந்திரன், மதுரை மாவட்ட செயலாளர், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்: மாணவருக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் முதலிடம் வகுப்பறை தான்.தாங்கள் பெற்ற பிள்ளையை போல் மாணவர்களையும் ஆசிரியர் நினைக்கின்றனர். அவர்கள் கெட்ட வழியில் போய் விடக்கூடாது என்பதால் தான் தண்டிக்க நினைக்கின்றனர். இன்றைக்கு சமுதாயம் சீர்கெட்டு போய் கொண்டுள்ளது. கை நுனியில் உள்ள அலைபேசியில் முன்னேற தேவையான நல்ல விஷயங்களும் உள்ளன. கெட்டு குட்டிச்சுவராக போக பல கெட்ட விஷயங்களும் கொட்டிக் கிடக்கின்றன.சினிமாக்கள் வன்முறை களங்களாக காட்டப்படுகின்றன. அரிவாள், துப்பாக்கி எடுப்பவர்களை ஹீரோக்களாகவும், ஆசிரியர், டாக்டர்களை ஜோக்கர்களாகவும் காட்டுகின்றனர். ஒழுக்கம் சார்ந்த கல்வியும், தவறு செய்யும் மாணவர்களை தண்டிக்கும் சுதந்திரத்துடன் பணிப் பாதுகாப்பும் ஆசிரியர்களுக்கு அவசியம்.
கண்டிக்காத பெற்றோர் : நடராஜன், மாநில துணை தலைவர், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம்: ஆசிரியர்களை மதிக்கும் எண்ணம் மாணவர்களிடம் குறைந்து வருகிறது. இதற்கு சமுதாயம் சார்ந்த பல விஷயங்களை கூறலாம். ஒன்பதாம் வகுப்பு வரை 'ஆல்பாஸ்' என்பதால் மாணவர் பலர் பள்ளிக்கே வருவதில்லை. இதை யாரிடம் நாங்கள் கூறுவது. பெற்றோரிடம் கூறினால் தற்கொலை செய்துகொள்ளுவோம் என எங்களை மாணவர்கள் மிரட்டுகின்றனர். கண்டித்தால் ஆசிரியர்களை தாக்குகின்றனர். பெற்றோரும் கண்டிப்பதில்லை. அப்படியென்றால் மாணவரை எப்படி தான் கண்டித்து திருத்துவது?தேர்ச்சி குறைந்தால் அதிகாரிகளுக்கும் ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களுக்கு இணையாக நல்லொழுக்க கல்வி அளிப்பதிலும் அக்கறை காட்டும் வகையில் சமுதாய மாற்றம் ஏற்பட்டால் தான் மாணவர் சமுதாயம் நல்ல நிலைக்கு வரும். எதிர்காலம் சிறக்கும்.
ஆசிரியர்களுக்கு முழு உரிமை : கிறிஸ்டோபர் ஜெயசீலன், தலைமையாசிரியர், மதுரை: மாணவர்களை கண்டிப்பதற்கும், அரவணைக்கவும் ஆசிரியர்களுக்கு முழு உரிமை அளிக்க வேண்டும். தண்டித்தார் என்பதற்காக ஒரு மாணவர் கத்தியால் குத்தும் மனநிலைக்கு ஆளாகிறான் என்றால் எங்கே போகிறது கல்வி முறை என்று தான் வேதனைப்பட வேண்டும். டீன் ஏஜ் மாணவர்களை ஆசிரியர்கள் மிக கவனமாக கையாள வேண்டும். அவர்களுக்கு அனுபவ அறிவை புகட்ட வேண்டும். மேல்நிலைக் கல்வியில் மாணவர், மாணவிகளுக்கு என தனித்தனி உடற்கல்வி இயக்குனர்கள் நியமிக்க வேண்டும். உளவியல் ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர் பணிச்சுமையை குறைத்தால் தான் மாணவர் நலனில் அவர்கள் முழு கவனம் செலுத்த முடியும். அவ்வப்போது ஆசிரியர்களை மாணவர்கள் போற்றும் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒரு சில ஆசிரியரால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறை சொல்லி விட முடியாது. ஆசிரியர்களால் கண்டிக்கப்படாத மாணவர்கள் சமுதாயம் ஆரோக்கியமானதாக இருக்காது. பெற்றோர் இதை உணர வேண்டும்.
ஆசிரியரை குறை கூறாதீர் : ராஜேஸ்வரி, பெற்றோர், மதுரை: ஆசிரியர்களை நம்பி தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஒரு சில ஆசிரியர்களை வைத்து ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறையாக சொல்லி விட முடியாது.சிறந்த ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதே நேரம் பெற்றோர் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கக் கூடாது. ஆசிரியர் தண்டித்தால் பிள்ளையின் எதிர்காலத்திற்கு தான் என நினைக்க வேண்டும். ஏன் தண்டித்தீர்கள் என அவர்களை அழைத்துக்கொண்டு ஆசிரியர்களிடம் சென்று நியாயம் கேட்கக் கூடாது. அப்படி செய்தால் ஆசிரியர்கள் மீது பிள்ளைகளுக்கு பயம் வராது. நல்ல சமுதாயம் உருவாக ஆசிரியர்கள் மீது பெற்றோர் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை ஆசிரியர்களும் கெடுத்து விடக்கூடாது.
பெற்றோர், ஆசிரியர்நட்பு அவசியம் : தீப், மனநல மருத்துவர், மதுரை: சினிமா, 'டிவி'., நிகழ்ச்சிகள் மற்றும் மேற்கத்திய கலாசாரம் சில மாணவரை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. இதை நன்கு உணர்ந்து பெற்றோர், வீட்டிலேயே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அப்போது தான் பள்ளியில் ஆசிரியர் கண்டித்தால், தனது நன்மை, வளர்ச்சிக்காகவே கண்டிக்கிறேன் என்பதை புரிந்து, படிப்பில் அக்கறை செலுத்துவர். மாணவரின் குணத்தை நல்வழிப்படுத்தும் அற்புத பணியில் ஆசிரியர்கள் உள்ளனர். இதை அவர்களும் உணர்ந்து செயலாற்ற வேண்டும். பள்ளியில் நடக்கும் கூட்டங்களில் பெற்றோர் பங்கேற்று மாணவர் செயலை கண்காணித்து, ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். முன்பெல்லாம் ஆசிரியர்கள், தம் வகுப்பில் படிக்கும் மாணவரின் குடும்பத்தோடு பழகி, அவர்களின் ஒழுக்த்தை கண்காணித்து, நல்வழிப்படுத்த பெற்றோருக்கு உதவினர். இன்று அந்நிலை இல்லை. பெற்றோரும் பணம், அந்தஸ்துக்காக இயந்திரம்போல் செயல்படுவதை தவிர்த்து, தம் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டும். ஆசிரியர்களும், மாணவரின் மனநிலையறிந்து கவனத்துடன் அவர்களை கையாண்டால் மட்டுமே, ஆசிரியர், மாணவர் இடையேயான மோதல் போக்கு தவிர்க்கப்படும்

தமிழகத்தில் 28 லட்சம் பேர் எழுதும் பொது தேர்வுகள் மார்ச்சில் துவக்கம்!!!

தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் 
தேர்வுகள், மார்ச் மாதம் துவங்க உள்ளன. இந்த தேர்வுகளில், 28 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 3,500 பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
தமிழக பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ல் பொது தேர்வு துவங்க உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒன்பது லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களில், 8.69 லட்சம் பேர், பள்ளிகளில் படிக்கும் மாணவ -- மாணவியர்.
தமிழகத்தில் இருந்து, 6,754 பள்ளிகளைச் சேர்ந்த, 8.52 லட்சம் மாணவ - மாணவியரும், புதுச்சேரியில், 147 பள்ளிகளைச் சேர்ந்த, 15,140 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.இத்தேர்வு எழுதுவோரில், 4.03 லட்சம் பேர் மாணவர்கள்; 4.64 லட்சம் பேர் மாணவியர். 5.48 லட்சம் பேர், அறிவியல் பாடப்பிரிவுகளில் தேர்வு எழுத உள்ளனர். வரலாறு பிரிவில், 14 ஆயிரம்; வணிகவியல், கணக்கு பதிவியல் பிரிவில், 2.42 லட்சம் பேரும் தேர்வு எழுதுகின்றனர். தொழிற்கல்வி பிரிவில் படிக்கும், 62 ஆயிரத்து, 751 பேரும், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவை தொடர்ந்து, இந்தாண்டு, 279 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மார்ச், 7ல் தேர்வுகள் துவங்குகின்றன. பிளஸ் 2 வகுப்புகள் அறிமுகமாகி, 40 ஆண்டு களில், பிளஸ் 1 மாணவர்கள், முதன் முறையாக பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த ஆண்டு, 8.62 லட்சம் பேர், பிளஸ் 1 தேர்வு எழுத உள்ளனர். இவர்களில், 4.60 லட்சம் மாணவியர் அடங்குவர்.இத்தேர்வுகளுக்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,790 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச், 16ல் துவங்கும் 10ம் வகுப்பு தேர்வில், 10.70 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களில், 5.10 லட்சம் பேர் மாணவியர்.

அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் 20 பேர் அண்ணா பல்கலைக்கு மாற்றம்

அண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள்,
அண்ணா பல்கலைக்கு, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அண்ணாமலை பல்கலையில், தற்போதுள்ள பணி தேவைகளை விட, 3,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர் உபரியாக இருப்பதாக, தமிழக அரசு கணக்கெடுத்துள்ளது.

பல்வேறு பிரிவு : இவர்களுக்கு, பல கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டியுள்ளதால், ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதால், அண்ணாமலை பல்கலையின் நஷ்டத்தை சரிக்கட்ட, தணிக்கை ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணாமலை பல்கலையில், உபரியாக உள்ளவர்களை, பல்வேறு அரசு பல்கலை மற்றும் கல்லுாரி களுக்கு மாற்றும் நடவடிக்கையில், தமிழக அரசு, தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில் பணியாற்றும், 20 ஊழியர்கள் நேற்று, அண்ணா பல்கலைக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டு, சென்னை அலுவலகத்தில், பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களால், அண்ணா பல்கலை உட்பட உயர்கல்வித் துறையின் பணியாளர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
முக்கிய முடிவு : இதுகுறித்து, அண்ணா பல்கலை ஊழியர் ஒருவர் கூறியதாவது:அண்ணா பல்கலையில், 100க்கும் மேற்பட்டோர், தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மற்ற பல்கலைகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து, சங்கங்கள் கூடி, முக்கிய முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

EMIS - Android App - ல் ID Card Entry செய்யும் முறை!

                                                        

1)உங்கள் ஆண்ட்ராய்டு 
போனில் உங்க பள்ளி மாணவர்களை வகுப்பு வாரியாக போட்டோ எடுத்துக்கொள்ளவும்.

2)மாணவர்களின் ஆதார்,ரத்த வகை,விலாசம் போன்றவற்றை அருகில் வைத்துக்கொள்ளவும்.      

3)உங்கள் போனில் நெட் கார்டு ,பேட்டரி சார்ஜ் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.                                    

4)போனில் மொபைல் டேட்டாவை ஆன் செய்யவும்.                              

5)போனில் play store க்குச் செல்லவும்.                                      

6)play store ல்"emis tamilnadu"என type செய்து search பண்ணி,அதை பதிவிறக்கம் செய்யவும்.                                            (ஒருசிலர் போனில் update செய்யச்சொன்னால் செய்து கொள்ளவும்).                                  

7)இப்போது உங்களுக்கு "அடையாள அட்டை செயலி"என்றொரு பக்கம் open ஆகி இருக்கும்.                               

8)இப்போது அப்பக்கத்தை touch செய்தால் ,username,password கேட்கும்.                                     

9)உங்க பள்ளியின் DISE code மற்றும் emis பதியும் போது நீங்கள் பயன்படுத்திய password பதியவும். 

10)இப்போது உங்க பள்ளியின் பெயர் &முகவரியுடன் புதிய பக்கம் open ஆகி இருக்கும்.                      

11)அப்பகுதியில் உள்ள.        "student ID card"ஐ touch செய்யவும்.       
                             
12)இப்போது புதிய பக்கம் open ஆகி அதில்.                               "data approval"&"Id approval"என்ற இரு பகுதிகள் வரும்.                                               

13)நீங்க இப்போ"data approval "ஐ touch செய்யவும்.                             

14)இப்போது உங்கள் பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை.                            (emis பதிவு செய்துள்ளபடி)வகுப்புவாரியாக காட்டப்படும்.                                  

15)இப்போது முதல் வகுப்பை touch செய்யவும்.                                     

16)இப்போது முதல்வகுப்பு மாணவர்களின் ஒவ்வொரு பெயரும் வரிசையாக emis எண்ணுடன் தெரியும்.                                         

17)நீங்க இப்போ வரிசையாகவோ,அல்லது நீங்க விருப்பப்பட்ட மாணவரையோ touch செய்யவும்                                       

18)இப்போ நீங்க தேர்வு செய்த மாணவனின் விபரம் திரையில் தெரியும்.                                        

19)அம்மாணவனின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்திற்கு மேல்"Edit"என இருக்கும்.              

20)அதை touch செய்யவும்.             

21)அம்மாணவனின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் உள்ள "camera"அடையாளத்தை touch செய்யவும்.                                       

22)இப்போது போட்டோ எடுக்க வேண்டுமா அல்லது போனில் உள்ள போட்டோவைத் தேர்வு செய்ய வேண்டுமா?என கேட்கும்.              

23)போட்டோ நமது போனிலேயே உள்ளதால் "Gallery "என touch செய்யவும்                                        

24)இப்போது உங்களது போனில் உள்ள அனைத்து போட்டோக்களும் open ஆகும்.                               

25)இப்போது உங்களுக்கு தேவையான மாணவனின் பகைப்படத்தினை touch செய்தால்,அப்படம் அம்மாணவனின் விபரங்கள் அடங்கிய (போட்டோ இருக்க வேண்டிய வட்டத்தில் சென்று சேர்ந்து விடும்,).                 

26) அம்மாணவனின் முகம் நன்கு தெரியும் படி அவ்வட்டத்தில் adjust செய்யவும்.                                        

27)அதன்பின்,அம்மாணவனின் போட்டோவுக்குக் கீழே உள்ள ரத்த வகை,ஆதார் விலாசம் ஆகியவற்றில் ஏதேனும் இல்லையெனில் பதிவு செய்யவும்.                                        

28)இறுதியாக அப்பக்கத்தின் அடியில் உள்ள "data approval "என்ற இடத்தை touc செய்தால் அம்மாணவனின் விபரம் பதியப்பட்டு விட்டதாக "successfully "என வரும்                                             

29)அதே போல் ஒவ்வொரு மாணவனுக்கும் பதிவு செய்யவும்.   

30) அனைத்து மாணவர்களுக்கும் பதிவிட்டவுடன் "செயலி"யை விட்டு வெளியேறவும்.                               

31)இப்போது உங்கள் பள்ளி மாணவர்களுக்கு "data approval "(35 மாணவர்களுக்கான பதிவு செய்துவிட்டோம்,வேறு எவரும் இல்லையென்றால் 35/0 என காட்டும்.                                           

32)இப்போது data approval க்கு கீழ் உள்ள "ID card "ஐ தேர்வு செய்தால் ,நீங்கள் தற்போது பதிவிட்ட மாணவர்கள் விபரம் போட்டோவுடன் வரும்.                   

33)அம்மாணவர்களின் விவரங்களுக்கு அடியில் தெரியும். "id card approval "என்பதை touch செய்தால் I'd card approval successfully "என வரும் .            

34)இதை ஒவ்வொரு மாணவனுக்கும் touch செய்யவும்.   

35)எல்லாம் முடித்து முதல் பக்கம் சென்று பார்த்தால் (eg. 35 students).    Data approval 35/0.     I'd card approval 35/0 என காட்டும்.                                             

36)இப்போது நாம் முடித்து விட்டோம் என அர்த்தம்.    

ஜே.இ.இ., நுழைவு தேர்வை குஜராத்தியில் எழுத சலுகை!!!

தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜி., படிப்பில் 
சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வை, குஜராத்தியிலும் எழுதலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்ட நிறுவனங்களில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்பில் சேர முடியும். இதற்கான, ஜே.இ.இ., எழுத்து தேர்வு, ஏப்., 8; ஆன்லைன் வழி தேர்வு, ஏப்.,15, 16ல் நடத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில், ஜே.இ.இ., தேர்வில், ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி மொழியிலும் வினாத்தாள்கள் இடம் பெற உள்ளன. குஜராத், டாமன், டையூ ஆகிய இடங்களில் உள்ள மையங்களில் மட்டும், 2013 முதல், குஜராத்தி மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டுள்ளது.ஜே.இ.இ., தேர்வின் அடிப்படையில், தரவரிசை தயாரிக்கப்பட்டு, குஜராத் மாநில கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடப்பதால், குஜராத்தியில், ஜே.இ.இ., எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை எந்த மாநிலம் பின்பற்றினாலும், அந்த மாநில மொழியில், தேர்வு எழுத அனுமதிக்கப்படும். 'தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதால், தமிழில், வினாத்தாள்கள் இடம் பெறாது; தமிழில், ஜே.இ.இ., தேர்வை எழுதும் வாய்ப்பை வழங்குவது சாத்தியமில்லை' என, மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

24 புதிய மருத்துவக் கல்லூரிகள், 248 செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!!


சென்னையில் சி.இ.ஓ.,க்கள் கூட்டம்

பொதுத் தேர்வுகளை தில்லுமுல்லு இல்லாமல்
நடத்துவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க் களுக்கு, இன்று வழிகாட்டுதல் கூட்டம், சென்னையில் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத் தேர்வுகளை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்வுத் துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இது குறித்து,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, இன்று காலை, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், வழிகாட்டுதல் கூட்டம் நடக்கிறது. இதில், பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், முதன்மை செயலர், பிரதீப் யாதவ், இயக்குனர்கள், இளங்கோவன், வசுந்தராதேவி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.