யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/2/18

கரும்பலகைக்கு டாட்டா ... கம்ப்யூட்டர் வழி கல்வியில் அசத்தும் அரசு பள்ளி

கரும்பலகையில் சொல்லி கொடுப்பதற்கு பதில் கம்ப்யூட்டரில் பாடம் நடத்தி வரும் நெல்லை அரசு பள்ளியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செல்கோ இந்தியா சோலார் நிறுவனத்தின் சார்பில் பாலமடை ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி, ராதாபுரம் ஒன்றியம் சிலந்திகுளம் நடுநிலைப்பள்ளிகளிலும் இலவசமாக சோலார் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன.
பாலமடை ஊராட்சி ஓன்றிய பள்ளியில் நடந்த விழாவில் ஆட்சியர் சந்தீப் தந்தூரி இந்த வகுப்பறைகளை திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமச்சீர் பாடத்திட்டம் வகையில் மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் கற்று கொடுக்கப்படுகிறது. இதற்கான மின்சாரம் சோலார் மூலம் கிடைக்கிறது. பாடங்கள் படங்கள் மூலம் நடத்தப்படுவதால் மனதில் எளிதாக பதியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறை வசதி சில பள்ளிகளில் இருந்தாலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
அதுவும் சோலார் வகுப்பறை இந்தப் பள்ளியில்தான் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எந்த நேரமும் கல்வி கற்பிக்க முடியும். மாணவர்கள் விரும்பிய பாடங்களை மின்சாரம் உபயோகிக்காமல் படிக்கலாம். இதனால் அவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

999/-க்கு ஒரு வருடம் அளவில்லா INTERNET - 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகள் - BSNL அதிரடி அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகளையும்
மேற்கொள்ள முடியும்.
தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில், அரசு துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் (லோக்கல், எஸ்டிடி) மேற்கொள்ள முடியும். 181 நாட்கள் முடிந்தபிறகு ஒவ்வொரு வாய்ஸ் கால் அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 60 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும.பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் ரூ.1,099 என்ற திட்டத்தை அறிவித்தது. இதில், 84 நாட்களுக்கு அளவில்லா டேட்டா சேவையும், அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

18/2/18

பட்டதாரி ஆசிரியர்களை +2 பொதுத்தேர்வில் பணியமர்த்தக் கூடாது!!!

தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் தமிழக அரசு CPS வல்லுநர் குழுவிற்கு மீண்டும் மீண்டும் மீண்டும் கால நீட்டிப்பு

ஜாக்டோ ஜியோ நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாக நியாமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியதால் நமது போராட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஏழாவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு தமிழக அரசிற்கு ஆணையிட்டது.  இருந்தாலும் 1.10.2017 முதல்தான் ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்துப்பட்டதால், 1.1.2016 முதல் கிடைக்க வேண்டிய ஊதியத்தினை இழந்து, 21 மாத கால ஊதியக் குழுவினை நிலுவைத் தொகையினை தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் இன்றும் பெற இயலாமல் உள்ளனர்.

ஜாக்டோ ஜியோ காலவரையற்ற போராட்டம் தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நேரில் வழக்கில் ஆஜரான அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற 110 விதியின்கீழ் 1.4.2003்க்கு்ப பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே தொடர்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையினை 30.11.2017க்குள் அளிக்கும் என்றும் அதன்மீது தமிழக அரசு மேல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்று எழுத்துப்பூர்வமாகவும் நீதிமன்றத்தில் விசாரணையின்போது நீதியரசர்கள் முன்பாகவும் தெரிவித்தார்.  ஆனால், இதுவரை நடந்து கொண்டிருப்பது என்ன?  தொடர்ந்து அந்த CPS வல்லுநர் குழுவிற்கு கால நீட்டிப்பு என்பது அளிக்கப்பட்டு வருகிறது.  தமிழக அரசு நீதிமன்றத்தில் தான் அளித்த வாக்குறுதியினைக் கூட மதிக்காமல் நீதிமன்றத்தினையே அவமதித்து வருகிறது. 

30.11.2017க்குப் பிறகு CPS வல்லுநர் குழுவிற்கு இருமுறை ஒரு மாதம் ஒரு மாதம் என்று நீட்டிப்பு வழங்கிய அரசு, இன்றைய தினம் இரண்டு மாதங்களுக்கு அந்த வல்லுநர் குழுவிற்கு, அதாவது 31.03.2018 வரை நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது  (அரசாணை எண் 51, நிதித் துறை, நாள் 15.02.2018), 

ஆனால் இந்த வல்லுநர் குழுவின் தலைவர் அவர்கள், குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்ததாக கடந்த வாரத்தில் இந்து தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.  தொடர்ந்து இந்த CPS வல்லுநர் குழுவிற்கு கால நீட்டிப்பு வழங்கி அரசு நம்மை வஞ்சித்து வருகிறது.

தோழர்களே நாம் இன்னும் பொறுமையாக இருந்தால், இந்த வல்லுநர் குழு என்பது எக்காலத்திலும் தமிழக அரசிடம் அறிக்கையினை தாக்கல் செய்யாமல் போய்விடக் கூடிய நிலை உருவாகும்.  இதனால்தான் ஜாக்டோ ஜியோ 6.9.2017 அன்றைய தினமே ஈரோட்டில் முடிவெடுத்து, அரசு எந்த கால அவகாசம் கொடுத்தாலும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதானல்தான், 7.9.2017 முதல் காலவரையற்ற போராட்டத்தினை மேற்கொள்வது என்று ஒருமித்த முடிவினை எடுத்து களம் கண்டோம்.  நமது போராட்டத்தினால் நீதிமன்றமே நமது கோரிக்கைகளுக்கான தலைமைச் செயலாளரை நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, காலக்கெடுவினை விதித்து, ஊதியக் குழுவினைப் பெற்றோம்.

நமது வாழ்வாதாரக் கோரிக்கையான அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற இலக்கினை நோக்கி ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்போடு இணைந்து தமிழகத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஓரணியில் மீண்டும் போராட்ட களம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முடிவின் அடிப்படையில், நமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வரும் 21.02.2018 முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.  நமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர் மறியலில் இருந்து மீளப் போவதில்லை என்ற நெஞ்சுறுதியோடு சபதம் மேற்கொண்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சென்னையில் வரும் 21.02.2018 முதல் நடைபெறவுள்ள தொடர் மறியலுக்கான ஆயத்தப் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். 

தோழர்களே, நமது வாழ்வாதாரக் கோரிக்கையினை வென்றெடுக்க தமிழகத்தின் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் நம்பிக்கைக் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவோடு இணைந்து நாமும் களம் காணத் தயாராவோம்.  இந்த வாய்ப்பினை நழுவ விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது-அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற கனி எட்டாமல் போய்விடும்.

எனவே, தோழர்களே இந்த இறுதி வாய்ப்பினைப் பயன்படுத்தி ஜாக்டோ ஜியோ சார்பாக வரும் 21.02.2018 முதல் சென்னையில் நடைபெறவுள்ள தொடர் மறியல் போராட்டத்தில் நாமும் சங்கமிப்போம்.  கோரிக்கைகளை வென்றெடுப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.999 ப்ரீ பெய்டு திட்டம் அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.
தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில், அரசு துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் (லோக்கல், எஸ்டிடி) மேற்கொள்ள முடியும். 181 நாட்கள் முடிந்தபிறகு ஒவ்வொரு வாய்ஸ் கால் அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 60 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும.பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் ரூ.1,099 என்ற திட்டத்தை அறிவித்தது. இதில், 84 நாட்களுக்கு அளவில்லா டேட்டா சேவையும், அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

கடந்த ஜூன் மாதம் தேர்வெழுதிய இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகலை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வெழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகலை scan.tndge.in என்ற இணையதளத்தில் 16-ம் தேதி (இன்று) முதல் 20-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.அதைத்தொடர்ந்து, விரும்பினால் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு பிப்ரவரி 21 முதல் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.205. மறுமதிப்பீட்டுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.505 செலுத்த வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிநிறுவனத்தில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்..

சிறப்பு ரயில் பெட்டிகள், சிறப்பு ரயில்களை இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம்♨

சிறப்பு ரயில்பெட்டிகளையோ, சிறப்பு ரயில்களையோ இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
▪திருமணக் குழுக்களுக்கோ, ஆன்மீகச் சுற்றுலாவுக்கோ ஒரு குழுவினரோ தனி மனிதர்களோ ஒட்டுமொத்தமாக ஒரு ரயில்பெட்டியையோ அல்லது அமைப்புகள் சார்பில் சிறப்பு ரயில்களையோ பதிவு செய்ய ரயில் நிலைய முன்பதிவுக் கண்காணிப்பாளரை அணுகி பயணவிவரங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு எழுத்துபூர்வமாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மார்ச் 15க்குள் 72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி – அமைச்சர் செங்கோட்டையன்♨

மார்ச் 15ஆம் தேதிக்குள் 72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணிணிகள் வழங்கி அனைத்து பாடங்களும் அதில் இணைக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
🎯நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மாணவர்கள் எந்தவிதமான தேர்வுகளையும் எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்

டி.எம்.சி” என்றால் என்ன தெரியுமா??

Thousand Million Cubic[TMC] ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.
ஒரு டிஎம்சி கணக்கெடுப்பு - 1 பில்லியன் கன அடி ஆகும்.
கன அளவு : ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணித அளவாகும். 
அப்படியெனில் ஒரு கன அடி என்பது 28.3 லிட்டர் நீருக்கு சமம்.
டிஎம்சி அளவிடும் முறை :
கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற அளவில் ஒரு மதகு மட்டும் இருக்கும், மதகை திறப்பதன் மூலம் ஒரு வினாடியில் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும். ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.
டிஎம்சியின் கணக்கீடு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் :

ஒரு டிஎம்சி எவ்வளவு லிட்டர் - 1 பில்லியன்(100 கோடி) கன அடி.
கடந்த முறை மற்றும் இம்முறை வழங்கப்பட்ட நீரின் அளவு என்ன? மற்றும் அவற்றின் நன்மை தீமைகள் :

கடந்த முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு - 192 டிஎம்சி.

இம்முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு  177.25 டிஎம்சி.

கடந்த முறையை விட குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சி நீரால் தமிழகத்திற்கு 41,767,34,87,232 (சுமார் 41,767 கோடியே 34 லட்சம்) லிட்டர் நீர் இழப்பு ஏற்படும்.

தமிழ் நாட்டின் மொத்த விவசாய விளை பரப்பளவு :
தமிழகத்தில் மொத்தம் 22.3 லட்சம் ஹெக்டேர் பாழ்பட்ட நிலம் இருப்பது வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

காவிரி நீரால் தமிழ்நாட்டில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 44,000 சதுர கி.மீ.

காவிரி நீரால் கர்நாடகாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 34,000சதுர கி.மீ.

காவிரி நீரால் புதுச்சேரி பாசனம் பெறும் நிலப்பரப்பு 148 சதுர கி.மீ.

காவிரி கேரளாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 2,800 சதுர கி.மீ.

நெல் பயிர் சாகுபடிக்கு இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 20,000 முதல் 40,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிளஸ்2 படித்தவுடன் வேலை! : அமைச்சர் செங்கோட்டையன்!

புதிதாகத் தொடங்கப்படவுள்ள பாடத்திட்டங்களினால், பிளஸ்2 முடித்தவுடன்மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலைமை உண்டாகும் எனத் தெரிவித்துள்ளார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இன்று (பிப்ரவரி 17) ஈரோடு மற்றும் திருப்பூரில் நடந்த சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திருப்பூரில் உள்ள பள்ளியொன்றில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தை, அவர் இன்று திறந்துவைத்தார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியதோடு, அப்பள்ளி நூலகத்திற்காக புத்தகங்களையும் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன்,இன்னும் நான்கு மாதத்தில் தமிழகக் கல்வித்துறையில் மாற்றம் உண்டாகும் என்று தெரிவித்தார்.”உலகத் தரத்தில் தமிழகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவுள்ளது.

 சீருடைகளும் மாறவுள்ளது. அதன்பின், தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப்பள்ளிகளில் தேடி வந்து சேரும் நிலை உண்டாகும்” என்றார்.இந்த நிகழ்வுக்குப் பிறகு, ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது, பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப் லைன் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பாடத்திட்டங்களினால், பிளஸ்2 முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலைமை உண்டாகும் எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழக பள்ளிக்கல்வித் துறையில் மாற்றம் செய்து, புதிதாக 72 பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார் செங்கோட்டையன்.

அரசுப்பள்ளியின் இன்றைய நிலை பற்றி ஒரு கவிதை - வினோதன்

நீர் குடிக்கப் பயமா ?
ஆம், குடித்தால்
சிறுநீரகத் தொட்டி
கொள்ளளவு எட்டியதும்
விடுதலை கேட்கும்
மூத்திரத்திற்கு
விடையென்ன சொல்வேன் ?



ஆணைப் போல
அவசரத்திற்கு
திறந்துவிடப்படமுடியாத
உடல் வாகைவிட
நின்று சீறுநீர் கழித்தால்
ஒருத்தியை சமூகம்
எப்படி எடைபோடும்
என நினைக்கும்போதே
அடைத்துக் கொள்கிறது
அத்தனை துவாரங்களும் !

கழிவறைகள் ?

நீங்கள்
அரசுப் பள்ளி
பெண்கள் கழிப்பறையை
கண்டிருக்க வாய்ப்பில்லை,
கண்டபின் இப்படிக் கேட்கவும் தான் !

ஒரு ஆணின் சிறுநீரகத்தைவிட
ஒரு பெண்ணின் சிறுநீரகத்தில்
ஒரு பேக்டீரியப் படையெடுப்பு
எத்தனை இலகுவானதும்
இரக்கமற்றதும் தெரியுமா ?

நீவிர் கண்டறிந்த
எந்த மருந்தையும்
மயிருக்கும் மதிக்காத
எத்தனை பேக்டீரியாக்கள்
ஜனித்திருக்கின்றன தெரியுமா ?

ஒரு முறை தொற்றினால்
வலியென்ற சொல்லின்
உச்சபட்ச அர்த்தத்தை
நொடிக்கொரு முறை
நினைவூட்டிக் கொல்லும்,
மீண்டுவரத் தயங்காமல் !

சரி தீர்வு ?

நுழையும் படியான
ஒரு கழிவறை ?!

அன்றி
சிறுநீர்த் தொட்டியின்
கொள்ளளவு கூட்டல்
சாத்யமில்லை என்பதால்
அருந்தப் பயந்து சாதல் !

நீரின்றி‌ அமையுமாம்
அரசுப்பள்ளி
மாணவியின் உலகம் !

- வினோதன்

இணைய வழி பத்திரப் பதிவுக்கு அமோக வரவேற்பு

தமிழக அரசின் இணைய வழி பத்திரப் பதிவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் (பிப்.13) இணைய வழி மூலம் பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை வரை (பிப்.15), 24,819 பயனாளிகள் இணையத்தை பயன்படுத்தி உள்ளதுடன், 48,422 வரைவு ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். இதில், 13,557 ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சார் பதிவாளர்களுக்கு முன் சரிபார்ப்புக்காக அனுப்பப்பட்டு, 11, 680 ஆவணங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 7,875 ஆவணங்கள் அச்சுப் பிரதி எடுக்கப்பட்டு பதிவு தாக்கல் செய்யப்பட்டன என்று பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்தே வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்யலாம்: ஜூன் மாதம் வருகிறது புதிய செயலி

புது தில்லி: வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்யும் வகையில் புதிய செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.
டிஜிட்டல் மயத்தை நோக்கி முன்னேறும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இணையதளம் மூலம் செயல்படும் வகையில் இந்த செயலியை உருவாக்கவும், இதன் மூலம் ஒரு வாக்காளர் மாநிலம் விட்டு வேறு மாநிலம் சென்றால் கூட தேர்தல் அலுவலகம் அல்லது வாக்கு மையத்துக்குச் செல்லாமலேயே தனது வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
'எலக்டோரல் ரோல்ஸ் சர்வீசஸ் நெட்' (ERONET - Electoral Rolls Services NeT) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த செயலி மூலமாக எந்த நேரத்திலும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்து கொள்ளலாம். இதுவரை 22 மாநிலங்கள் இந்த செயலியில் இணைக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் கூறியுள்ளார்.
தேர்தல் நடைபெறும் அல்லது நடைபெற்று முடிந்த குஜராத், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தில் இதுவரை இணைக்கப்படவில்லை.
அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டு வரும் ஜூன் மாதத்தில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த செயலியின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்ய, வாக்காளரின் செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அதைப் பயன்படுத்தி திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

புதிய முகவரியை பதிவு செய்ததும், தானாகவே பழைய முகவரி அழிக்கப்பட்டு, புதிய முகவரி பதிவேற்றம் செய்யப்படும். இவை அனைத்தும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

17/2/18

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாத அதாவது நேரடி சேர்க்கை மாணவர்களை இன்று முதல் EMIS ல் சேர்க்கை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாத அதாவது நேரடி சேர்க்கை மாணவர்களை இன்று முதல் EMIS ல் சேர்க்கை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பணியினை சிறப்பாக விரைந்து முடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*EMIS பதிவேற்றம், புதிய சேர்க்கை மற்றும் ஆதார் எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் இன்னும் ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

பிப்ரவரி 21 முதல் சென்னையில் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் போஸ்டர் மற்றும் ஜாக்டோ ஜியோ வின் மனு

தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-வழித்தட அலுவலர்களுக்கான கடமைகள்!!!

யாரையும் நம்பி கையேழுத்து போடாதீங்க-உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் கதறல்.(பத்திரிக்கைச் செய்தி)

பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடதிட்டம்-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!!

விரைவில் 5ஜி நெட்வொர்க் சேவை!

5ஜி நெட்வொர்க் சேவைக்கான அரசின் செயல்திட்டங்கள் ஜூன் மாதத்துக்குள்
வெளியிடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

இதுபற்றி அசோசெம் கூட்டமைப்பு சார்பாக பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளரான அருணா சுந்தரராஜன், “இந்தியாவின் 5ஜி நெட்வொர்க் சேவை தொடர்பான அரசின் செயல் திட்டங்கள் ஜூன் மாதத்துக்குள் வெளியிடப்படும். சர்வதேச அளவில் 5ஜி சேவைக்கு இந்தியாவைத் தயார்படுத்தும் விதமாக அதிசிறந்த ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 5ஜி தொழில்நுட்ப சேவையை மக்களிடம் எடுத்துச் செல்வது, 5ஜி சேவைக்கான இலக்குகளை நிர்ணயிப்பது ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கும்.

இதன்மூலம், 2020ஆம்ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 5ஜி சேவை அமலாகும்போது இந்தியாவும் 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் சிறந்து விளங்கும். 5ஜி சேவையில் இயந்திர வழி தொலைத் தொடர்புக்காக புதிய எண் வரிசைகள் அறிமுகப்படுத்தப்படும். 5ஜி தொழில்நுட்பம் வாயிலாகக் கார்களில் சென்சார் உதவியுடன் விபத்துகளைத் தடுக்க முடியும்” என்றார். 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுப் பணிகளுக்காக ரூ.500 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி பட்டங்கள் தமிழக கல்வித்துறையில் ஊக்க ஊதிய உயர்விற்கு தகுதியற்றது . முதல்வர் தனிப்பிரிவில் பதில் !!!