யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/2/18

Pedagogy pilot schools book details.....

Pedagogy pilot schools book details*
👍 *முதல் வகுப்பு*
🌹தமிழ் பாடப்புத்தகம்
🌹பயிற்சிப் புத்தகம்
🌹English book with work book
🌹English book
🌹English work book.
*தமிழ் வழி*
🌹கணக்கு புத்தகம்
🌹கணக்கு பயிற்சிப் புத்தகம்
🌹சூழ்நிலையியல் புத்தகம்
🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்.
👍 *English medium*
🌹Mathematics book
🌹Work book
🌹EVS book
🌹EVS work book
🌹முதல் வகுப்பு ஆசிரியர் கையேடு.
🌹English medium
Teacher hand book

*இரண்டாம்வகுப்பு* 🌹தமிழ் பாடப்புத்தகம்
🌹பயிற்சிப் புத்தகம்
🌹English book with work book
🌹Enlish book
🌹English work book

*தமிழ் வழி*
🌹கணக்கு புத்தகம்
🌹பயிற்சிப் புத்தகம்
🌹சூழ்நிலையியல் புத்தகம்
🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்

*English medium*
🌹Mathematics book
🌹Mathematics work book
🌹EVS book
🌹EVS work book
இரண்டாம்வகுப்பு ஆசிரியர் கையேடு
English medium Teacher hand book

🌹 மூன்றாம் வகுப்பு ஆசிரியர் கையேடு
🌹English medium Teacher hand book

👍 *1&2 வகுப்புக்குரியது*

🙏 *New pedagogy pilot school இல் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருப்பின் கீழ்காணும் முறையில் வகுப்பறைச் செயல்பாடுகள் நடைபெறுதல் வேண்டும்*

🌷 *9.30 to 11. 00 - 90 நிமிடங்கள் முதல் பாடவேளை*

🌷 *9.30 to 10.00 - 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள்*

🌷 *10.00 to 10.30 - 30 நிமிடங்கள் இணைச்செயல் பாடுகள்*

🌷 *10.30 to 11.00 - 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள்*

🌷 *இது போன்றே முதல் 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள் அடுத்த 30 நிமிடங்கள் குழுச் செயல்பாடுகள், அடுத்த 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள் என வகுப்பறை யில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று பாடவேளை யும் நடைபெற வேண்டும்*

🌷 *11.10 to 12.40*
*இரண்டாம் பாடவேளை*

🌷 *2.00 to 3.30 மூன்றாம் பாடவேளை*

🙏 *ஒரு நாளைக்கு 3 பாடவேளை என 5 நாட்களுக்கு 15 பாடவேளை*

🌷 *தமிழ் 4 ஆங்கிலம் 4 கணக்கு 4 சூழ்நிலையியல் 3*
a

இடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி போன்றவற்றுக்கு சேர்த்து கணக்கீடு செய்யக்கூடாது -நிதித்துறையின் விளக்கக்கடிதம்



அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானம்:முன்னாள் தலைமை ஆசிரியை தாராளம்

பவானி, அரசுப்பள்ளி கட்டடம் கட்ட நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக தந்த முன்னாள் பெண் தலைமை ஆசிரியைக்கு
பாராட்டு விழா நடந்தது.ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.தற்போது ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை, 486 மாணவியர் படிக்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 2 வகுப்பு துவங்கவுள்ளது.

ஆனால்,போதிய இடவசதியில்லை.இந்நிலையில் சித்தோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பொன்மணிதேவி, 80, தன் சொந்த நிலம்ஒரு ஏக்கரை தானமாக வழங்கியுள்ளார். இதன் தற்போதைய மதிப்பு நான்கு கோடி ரூபாய்.இவர், 1964 முதல் ஆசிரியையாக பணிபுரிந்தார்.கோபி, மொடச்சூர் பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் 1996ல் ஓய்வு பெற்றார்.இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். ஒரே மகன் மயூரா கார்த்திகேயன் டாக்டருக்கு படித்தார். அவரும் எதிர்பாராதவிதமாக இறந்தார்.இதனால் தன்சகோதரி மாரத்தாள்அவரின் மகன்கள்அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.கடந்த 2006ல் பிற்
படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியருக்கு விடுதி கட்டடம் கட்ட 25 சென்ட் நிலம் வழங்கினார்.தற்போது சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாகஅளித்துள்ளார்.இவருக்கு நேற்று பாராட்டு விழாநடந்தது. விழாவில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிலத்தை தானம் செய்வதற்கான பத்திரத்தை பொன்மணி தேவி வழங்கினார்.

தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள்உருவாக்கப்படும் என்று பள்ளி
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கல்வி திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டம் போல் உருவாகியுள்ளதாக நாமக்கல்லில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 12-ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு என்ற வகையில் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

DEE - தொடக்கக் கல்வித் துறையில் 31.08.2017-ன் படி நிரப்பத் தகுந்த ஆசிரியர் பணியிடங்கள் விவரம் | ஒன்றியம் வாரியாக...

19/2/18

சொத்து கணக்குடன் வருவாய்க்கான ஆதாரத்தையும் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ‘லோக் பிரஹாரி’ என்ற தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து கணக்குகளை ஆய்வு செய்ததில், 26 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 257 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்து இருப்பதாக வருமான வரித்துறையும், மத்திய நேரடி வரிகள் வாரியமும் தெரிவித்துள்ளன. மேலும், 9 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 42 எம்.எல்.ஏ.க்களின் சொத்து கணக்கை ஆய்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
தகுதி இழப்பு

சொத்து கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறியபோதிலும், வருவாய்க்கான ஆதாரத்தை தெரிவிப்பதை கட்டாயம் ஆக்கவில்லை.

ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நேரடியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ வர்த்தக தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது அரசு ஒப்பந்தம் பெற்றிருந்தாலோ அத்தகைய வேட்பாளர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள் என்று முன்பு இருந்த 7டி பிரிவில் கூறப்பட்டு இருந்தது. அந்த பிரிவை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும். மேலும், அத்தகைய வர்த்தக தொடர்பு வைத்திருப்பவர்கள், அதை தங்களது பிரமாண பத்திரத்தில் தெரிவிக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

வருவாய் ஆதாரம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது சொத்து கணக்குடன், தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துகளை வாங்கியதற்கான வருவாய் எப்படி வந்தது? என்பதையும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதன்மூலம், அந்த சொத்துகள் சட்டரீதியாக வாங்கப்பட்டதா? இல்லையா? என்பதை வாக்காளர்களே தெரிந்து கொள்ள முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு சுற்றுலா திட்டம் :

கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க, இரு மாவட்டங்களின் சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் வலியுறுத்தி உள்ளனர்.

மலைவாழ் மாணவர்கள்உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகையில், தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது. ஆனாலும், தமிழக கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்கள், சுற்றுலா சார்ந்த விஷயங்களை 
அறியாதவர்களாக உள்ளனர். எனவே, கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை, நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்ல, கோவை, நீலகிரி மாவட்ட சுற்றுலா துறை திட்டமிட்டுள்ளது. 

முக்கியத்துவம்இதற்காக, கோவை மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ - மாணவியரை, வால்பாறை, ஆழியாறு, பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கும், நீலகிரி மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ - மாணவியரை, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம், மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தால், நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்திராத கிராமப்புற மாணவ - மாணவியர், அவற்றை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்தும், அவர்கள் அறிந்து கொள்வர். எனவே, 'சுற்றுலா துறையும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து, இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களும், பெற்றோரும்வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் மாற்றம் பதிவாளர் தகவல்

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்ட மேற்படிப்பு 
படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்வு மற்றும் 
மாணவர்களுக்கான பட்டமேற்படிப்பு முடித்ததற்கான 
பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் 
நேற்று நடந்தது. பதிவாளர் ஆர்.சீனிவாசன் தலைமை 
தாங்கி, மாணவர்களுடைய குறைகளை தீர்த்து 
வைத்ததுடன், பட்டங்களையும் வழங்கினார்.

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.சீனிவாசன், கூடுதல் 
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.டி.சந்தானகிருஷ்ணன் 
மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் 
பலர் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம்

பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:-

நவீன யுகத்துக்கு ஏற்றார் போன்று பல்கலைக்கழகத்தில் 
பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை எளிய முறையில் 
கொண்டு செல்வதற்காக தகவல் தொழில்நுட்பத்தை 
2018-2019-ம் கல்வியாண்டு முதல் முழுமையாக அறிமுகப்படுத்த
 திட்டமிட்டு உள்ளோம். குறிப்பாக தற்போது பாட திட்டங்கள் 
அனைத்தும் அச்சடித்த புத்தகங்களாக மாணவர்களுக்கு 
வழங்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் 
மாணவர்களுக்கு பல்கலைக்கழக இணையதள முகவரி
 மூலமும் பாடங்கள் வெளியிடப்படும்.

இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் 
போதிப்பதுடன், பல்கலைக்கழக இணையதளம்
 மூலமாக வெளியிடப்படும் பாடங்களை மாணவர்கள் 
தங்களுடைய வீடுகளில் உள்ள கணினி, செல்போன் 
மற்றும் டேப்-லெட் மூலமாகவும் எளிதாக படிக்க முடியும்.

பேராசிரியர்களுடன் நேரடி பேச்சு

அத்துடன் ‘ஸ்கைப்’ வசதி மூலம் பல்கலைக்கழக 
ஆசிரியர்களிடம், மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே 
பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து 
கொள்ள முடியும். இதற்காக குறிப்பிட்ட நாளில் பகல் 
2 மணி முதல் 4 மணி வரை ஆசிரியர்கள் தயார் நிலையில் 
இருப்பார்கள்.

மாணவர்கள் ‘ஸ்கைப்’ மூலம் பாடத்தில் உள்ள 
சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் 
வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 
அடுத்த தலைமுறைக்கான நவீன தொழில்நுட்ப வசதி 
பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கூடுதல் பாடம் படிக்கும் வசதி

மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தில் கூடுதலாக 
பிற பாடங்களையும் சேர்த்து படிக்க விரும்பும் தேர்வு 
சார்ந்த அமைப்பு (சாய்ஸ் பேஸ்ட்டு கிரெடிட் சிஸ்டம்) 
என்ற முறை கொண்டு வரப்பட உள்ளது. பி.எஸ்சி. 
பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படிக்கும் 
மாணவர்கள் பி.காம் பாடத்தில் கணக்குப்பதிவியலில் 
உள்ள ஏதாவது ஒரு பாடத்தை கூடுதலாக படிக்க 
விரும்பினால் அதனையும் சேர்த்து படிக்க முடியும்.

அவ்வாறு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடித்து பட்டம் வழங்கும் போது 4 அல்லது 6 ‘கிரெடிட்’ என்ற பெயரில் கூடுதலான மதிப்பெண் வழங்கப்படுகிறது. அவ்வாறு 3 ஆண்டுகளில் 140 ‘கிரெடிட்’ மதிப்பெண்கள் பெறும் பட்டதாரி படிப்பு மாணவர்களுக்கும் 91 ‘கிரெடிட்’ மதிப்பெண் பெறும் எம்.ஏ. படிக்கும் மாணவர்களுக்கும் கூடுதலாக பி.ஏ., மற்றும் எம்.ஏ. பட்டம் வழங்கப்படும். வரும் ஆண்டுகளில் பட்டப்படிப்புகளில் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது.

அஞ்சல் வழி கல்வியில் மாற்றம்

அதேபோன்று அஞ்சல் வழி கல்வி முறையிலும் சில மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. வேலை பார்த்துக் கொண்டே அஞ்சல் வழி மூலம் கல்வி பயின்று வருபவர்கள், வேலையை துறந்துவிட்டு கல்லூரியில் சேர்ந்து நேரடியாக (ரெகுலர்) வகுப்பில் சேர்ந்து படிக்கவும், நேரடியாக படித்து வருபவர்களுக்கு திடீரென்று வேலை கிடைத்து விட்டால், அவர்கள் அஞ்சல் வழியில் சேர்ந்து படிக்கவும் வசதி அளிக்கும் புதிய முறையும் கொண்டு வரப்பட உள்ளது.

இந்ததிட்டம் மூலம் மாணவர்கள் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு செல்லும் முறை தவிர்க்கப்படும். இந்த திட்டத்திற்கு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்த 3 திட்டங்களையும் 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதன்முறையாக இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

துப்பாக்கிச் சூடு: மாணவர்களைக் காப்பாற்றிய தமிழ்ப் பெண்!

                                 

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்களைக் காப்பாற்றிய தமிழ்ப் பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 14ஆம் தேதி திடீரென நுழைந்த முன்னாள் மாணவர் நிக்கோலஸ் க்ரூஸ் அங்கிருந்தவர்களை நோக்கி வெறித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தில் மாணவர்கள் உட்பட 17 போ் உயிரிழந்தனர். 50 போ் காயடைந்தனா். இந்தச் சம்பவம் ஃப்ளோரிடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பள்ளியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாந்தி விஸ்வநாதன் என்ற ஆசிரியை 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அல்ஜீப்ரா பாடம் எடுத்துவருகிறார். சம்பவத்தன்று பாடம் எடுத்துக்கொண்டிருந்த சாந்தி சுதாரித்துக்கொண்டு, தனது வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை மூடி, மாணவர்களை பெஞ்சிக்கு கீழே அமைதியாக அமருமாறு கட்டளையிட்டார். ஆசிரியர் சொன்னபடி மாணவர்களும் பெஞ்சுக்குக் கீழே அமர்ந்தனர்.

அப்போது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அந்த வகுப்பறை வழியே நிக்கோலஸ் க்ரூஸ் சென்றுள்ளார். கதவுகள் அடைக்கப்பட்டு அமைதியாக இருந்ததால் கண்டுகொள்ளாமல் வகுப்பறையைத் தாண்டிச் சென்றுள்ளார். இதனால் அங்கிருந்த இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தப்பினர்.

இந்நிலையில், பள்ளிக்கு வந்த அதிரடிப்படை போலீசார் மாணவர்கள் பதுங்கியிருந்த கதவைத் திறக்கக் கூறியுள்ளனர். கதவைத் திறக்க மறுத்த ஆசிரியர் முடிந்தால் கதவை உடைத்து உள்ளே வாருங்கள் என்று கூறியுள்ளார்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் மாணவர்களை மீட்டு வெளியே அனுப்பினர்.

துப்பாக்கிச் சூடு நடக்கும்போது அனைவரும் அலறியடித்து ஓடிய நிலையில் வகுப்பறையைப் பூட்டி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியருக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டுகள் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன. உயிரிழந்த மாணவர்களுக்கும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

12 லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி!

திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 12 லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கான இத்திட்டத்தின் முதல் ஆண்டில் 60,000 பேருக்கும், இரண்டாம் ஆண்டில் 1.5 லட்சம் இளைஞர்களுக்கும் முதற்கட்டமாகப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக இளைஞர்களில் சுமார் 59 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் கிராமப்புற இளைஞர்களை மையமாக வைத்து இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ரூ.800 கோடி வரையில் செலவிடப்படும் எனவும், இதற்கான நிதி மத்திய அரசு மற்றும் உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெறப்படும் என்று கூறப்படுகிறது.


இதுகுறித்து தமிழக மாநில தொழிலாளர் துறைச் செயலாளரான மங்கத் ராம் சர்மா கூறுகையில், “திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான மிகப்பெரிய திட்டம் ஒன்றை நாங்கள் செயல்படுத்துகிறோம். இப்பிரிவில் தமிழகம் எப்போதுமே முன்னிலையில் இருக்கிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி ஆண்டுக்கு ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்திற்கான செலவில் மத்திய அரசின் பங்கு 25 சதவிகிதமாக இருக்கிறது. மேலும், மாநில அரசின் சார்பாக இத்திட்டத்தில் செலவிடப்படும் தொகை குறித்த விவரங்கள் வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் வெளியிடப்படும்” என்றார்.

லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வீட்டீர்களா?.பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பள்ளி மாணவன்

மாணவர்களின் தேர்வு அச்சத்தை நீக்கி ஊக்குவிக்கும் வகையில் டில்லியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்தகொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது, பிளஸ் 1 மாணவர் கிரிஷ் சிங் பிரதமர் மோடியை நோக்கி ஒரு கேள்வி எழுப்பி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ''பள்ளி மாணவனாகிய எனக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா?' என கேள்வி எழுப்பினான்.
இதற்கு மோடி பதில் கூறுகையில், '' நான் தாமதமாகவே அரசியலுக்குள் நுழைந்தேன். அரசியல் சூழ்நிலையில் நான் இருந்தாலும் இயல்பாக நான் அரசியல்வாதி கிடையாது. அரசியலில் நான் அந்நியனாகவே உணர்கிறேன்.
1.25 கோடி மக்களின் ஆதரவு எனக்கு உள்ளது. எனது ஆற்றலை மக்களுக்கு செலவு செய்ய வேண்டும். உங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தான் பொதுத்தேர்வு. எனக்கோ 24 மணி நேரமும் தேர்வு தான்'' என்றார்.

கரும்பலகைக்கு டாட்டா ... கம்ப்யூட்டர் வழி கல்வியில் அசத்தும் அரசு பள்ளி

கரும்பலகையில் சொல்லி கொடுப்பதற்கு பதில் கம்ப்யூட்டரில் பாடம் நடத்தி வரும் நெல்லை அரசு பள்ளியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செல்கோ இந்தியா சோலார் நிறுவனத்தின் சார்பில் பாலமடை ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி, ராதாபுரம் ஒன்றியம் சிலந்திகுளம் நடுநிலைப்பள்ளிகளிலும் இலவசமாக சோலார் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன.
பாலமடை ஊராட்சி ஓன்றிய பள்ளியில் நடந்த விழாவில் ஆட்சியர் சந்தீப் தந்தூரி இந்த வகுப்பறைகளை திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமச்சீர் பாடத்திட்டம் வகையில் மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் கற்று கொடுக்கப்படுகிறது. இதற்கான மின்சாரம் சோலார் மூலம் கிடைக்கிறது. பாடங்கள் படங்கள் மூலம் நடத்தப்படுவதால் மனதில் எளிதாக பதியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறை வசதி சில பள்ளிகளில் இருந்தாலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
அதுவும் சோலார் வகுப்பறை இந்தப் பள்ளியில்தான் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எந்த நேரமும் கல்வி கற்பிக்க முடியும். மாணவர்கள் விரும்பிய பாடங்களை மின்சாரம் உபயோகிக்காமல் படிக்கலாம். இதனால் அவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

999/-க்கு ஒரு வருடம் அளவில்லா INTERNET - 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகள் - BSNL அதிரடி அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகளையும்
மேற்கொள்ள முடியும்.
தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில், அரசு துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் (லோக்கல், எஸ்டிடி) மேற்கொள்ள முடியும். 181 நாட்கள் முடிந்தபிறகு ஒவ்வொரு வாய்ஸ் கால் அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 60 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும.பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் ரூ.1,099 என்ற திட்டத்தை அறிவித்தது. இதில், 84 நாட்களுக்கு அளவில்லா டேட்டா சேவையும், அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

18/2/18

பட்டதாரி ஆசிரியர்களை +2 பொதுத்தேர்வில் பணியமர்த்தக் கூடாது!!!

தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் தமிழக அரசு CPS வல்லுநர் குழுவிற்கு மீண்டும் மீண்டும் மீண்டும் கால நீட்டிப்பு

ஜாக்டோ ஜியோ நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாக நியாமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியதால் நமது போராட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஏழாவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு தமிழக அரசிற்கு ஆணையிட்டது.  இருந்தாலும் 1.10.2017 முதல்தான் ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்துப்பட்டதால், 1.1.2016 முதல் கிடைக்க வேண்டிய ஊதியத்தினை இழந்து, 21 மாத கால ஊதியக் குழுவினை நிலுவைத் தொகையினை தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் இன்றும் பெற இயலாமல் உள்ளனர்.

ஜாக்டோ ஜியோ காலவரையற்ற போராட்டம் தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நேரில் வழக்கில் ஆஜரான அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற 110 விதியின்கீழ் 1.4.2003்க்கு்ப பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே தொடர்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையினை 30.11.2017க்குள் அளிக்கும் என்றும் அதன்மீது தமிழக அரசு மேல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்று எழுத்துப்பூர்வமாகவும் நீதிமன்றத்தில் விசாரணையின்போது நீதியரசர்கள் முன்பாகவும் தெரிவித்தார்.  ஆனால், இதுவரை நடந்து கொண்டிருப்பது என்ன?  தொடர்ந்து அந்த CPS வல்லுநர் குழுவிற்கு கால நீட்டிப்பு என்பது அளிக்கப்பட்டு வருகிறது.  தமிழக அரசு நீதிமன்றத்தில் தான் அளித்த வாக்குறுதியினைக் கூட மதிக்காமல் நீதிமன்றத்தினையே அவமதித்து வருகிறது. 

30.11.2017க்குப் பிறகு CPS வல்லுநர் குழுவிற்கு இருமுறை ஒரு மாதம் ஒரு மாதம் என்று நீட்டிப்பு வழங்கிய அரசு, இன்றைய தினம் இரண்டு மாதங்களுக்கு அந்த வல்லுநர் குழுவிற்கு, அதாவது 31.03.2018 வரை நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது  (அரசாணை எண் 51, நிதித் துறை, நாள் 15.02.2018), 

ஆனால் இந்த வல்லுநர் குழுவின் தலைவர் அவர்கள், குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்ததாக கடந்த வாரத்தில் இந்து தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.  தொடர்ந்து இந்த CPS வல்லுநர் குழுவிற்கு கால நீட்டிப்பு வழங்கி அரசு நம்மை வஞ்சித்து வருகிறது.

தோழர்களே நாம் இன்னும் பொறுமையாக இருந்தால், இந்த வல்லுநர் குழு என்பது எக்காலத்திலும் தமிழக அரசிடம் அறிக்கையினை தாக்கல் செய்யாமல் போய்விடக் கூடிய நிலை உருவாகும்.  இதனால்தான் ஜாக்டோ ஜியோ 6.9.2017 அன்றைய தினமே ஈரோட்டில் முடிவெடுத்து, அரசு எந்த கால அவகாசம் கொடுத்தாலும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதானல்தான், 7.9.2017 முதல் காலவரையற்ற போராட்டத்தினை மேற்கொள்வது என்று ஒருமித்த முடிவினை எடுத்து களம் கண்டோம்.  நமது போராட்டத்தினால் நீதிமன்றமே நமது கோரிக்கைகளுக்கான தலைமைச் செயலாளரை நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, காலக்கெடுவினை விதித்து, ஊதியக் குழுவினைப் பெற்றோம்.

நமது வாழ்வாதாரக் கோரிக்கையான அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற இலக்கினை நோக்கி ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்போடு இணைந்து தமிழகத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஓரணியில் மீண்டும் போராட்ட களம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முடிவின் அடிப்படையில், நமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வரும் 21.02.2018 முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.  நமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர் மறியலில் இருந்து மீளப் போவதில்லை என்ற நெஞ்சுறுதியோடு சபதம் மேற்கொண்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சென்னையில் வரும் 21.02.2018 முதல் நடைபெறவுள்ள தொடர் மறியலுக்கான ஆயத்தப் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். 

தோழர்களே, நமது வாழ்வாதாரக் கோரிக்கையினை வென்றெடுக்க தமிழகத்தின் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் நம்பிக்கைக் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவோடு இணைந்து நாமும் களம் காணத் தயாராவோம்.  இந்த வாய்ப்பினை நழுவ விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது-அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற கனி எட்டாமல் போய்விடும்.

எனவே, தோழர்களே இந்த இறுதி வாய்ப்பினைப் பயன்படுத்தி ஜாக்டோ ஜியோ சார்பாக வரும் 21.02.2018 முதல் சென்னையில் நடைபெறவுள்ள தொடர் மறியல் போராட்டத்தில் நாமும் சங்கமிப்போம்.  கோரிக்கைகளை வென்றெடுப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.999 ப்ரீ பெய்டு திட்டம் அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.
தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில், அரசு துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் (லோக்கல், எஸ்டிடி) மேற்கொள்ள முடியும். 181 நாட்கள் முடிந்தபிறகு ஒவ்வொரு வாய்ஸ் கால் அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 60 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும.பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் ரூ.1,099 என்ற திட்டத்தை அறிவித்தது. இதில், 84 நாட்களுக்கு அளவில்லா டேட்டா சேவையும், அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

கடந்த ஜூன் மாதம் தேர்வெழுதிய இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகலை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வெழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகலை scan.tndge.in என்ற இணையதளத்தில் 16-ம் தேதி (இன்று) முதல் 20-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.அதைத்தொடர்ந்து, விரும்பினால் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு பிப்ரவரி 21 முதல் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.205. மறுமதிப்பீட்டுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.505 செலுத்த வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிநிறுவனத்தில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்..

சிறப்பு ரயில் பெட்டிகள், சிறப்பு ரயில்களை இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம்♨

சிறப்பு ரயில்பெட்டிகளையோ, சிறப்பு ரயில்களையோ இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
▪திருமணக் குழுக்களுக்கோ, ஆன்மீகச் சுற்றுலாவுக்கோ ஒரு குழுவினரோ தனி மனிதர்களோ ஒட்டுமொத்தமாக ஒரு ரயில்பெட்டியையோ அல்லது அமைப்புகள் சார்பில் சிறப்பு ரயில்களையோ பதிவு செய்ய ரயில் நிலைய முன்பதிவுக் கண்காணிப்பாளரை அணுகி பயணவிவரங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு எழுத்துபூர்வமாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மார்ச் 15க்குள் 72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி – அமைச்சர் செங்கோட்டையன்♨

மார்ச் 15ஆம் தேதிக்குள் 72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணிணிகள் வழங்கி அனைத்து பாடங்களும் அதில் இணைக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
🎯நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மாணவர்கள் எந்தவிதமான தேர்வுகளையும் எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்

டி.எம்.சி” என்றால் என்ன தெரியுமா??

Thousand Million Cubic[TMC] ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.
ஒரு டிஎம்சி கணக்கெடுப்பு - 1 பில்லியன் கன அடி ஆகும்.
கன அளவு : ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணித அளவாகும். 
அப்படியெனில் ஒரு கன அடி என்பது 28.3 லிட்டர் நீருக்கு சமம்.
டிஎம்சி அளவிடும் முறை :
கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற அளவில் ஒரு மதகு மட்டும் இருக்கும், மதகை திறப்பதன் மூலம் ஒரு வினாடியில் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும். ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.
டிஎம்சியின் கணக்கீடு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் :

ஒரு டிஎம்சி எவ்வளவு லிட்டர் - 1 பில்லியன்(100 கோடி) கன அடி.
கடந்த முறை மற்றும் இம்முறை வழங்கப்பட்ட நீரின் அளவு என்ன? மற்றும் அவற்றின் நன்மை தீமைகள் :

கடந்த முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு - 192 டிஎம்சி.

இம்முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு  177.25 டிஎம்சி.

கடந்த முறையை விட குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சி நீரால் தமிழகத்திற்கு 41,767,34,87,232 (சுமார் 41,767 கோடியே 34 லட்சம்) லிட்டர் நீர் இழப்பு ஏற்படும்.

தமிழ் நாட்டின் மொத்த விவசாய விளை பரப்பளவு :
தமிழகத்தில் மொத்தம் 22.3 லட்சம் ஹெக்டேர் பாழ்பட்ட நிலம் இருப்பது வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

காவிரி நீரால் தமிழ்நாட்டில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 44,000 சதுர கி.மீ.

காவிரி நீரால் கர்நாடகாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 34,000சதுர கி.மீ.

காவிரி நீரால் புதுச்சேரி பாசனம் பெறும் நிலப்பரப்பு 148 சதுர கி.மீ.

காவிரி கேரளாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 2,800 சதுர கி.மீ.

நெல் பயிர் சாகுபடிக்கு இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 20,000 முதல் 40,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.