யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/2/18

10,+2.வகுப்பில் கேள்விகள் குறைப்பு!!!

அரசின் பணியிடங்களை தனியாருக்கு விட முடிவு-ஊழியர்கள் கடும் அதிர்ச்சி!!!

அண்ணா பல்கலை"யில் பட்டதாரிகளுக்கு வேலை!!!

Power Gridல் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!!!

RTE சட்டப்படி ஆண்டு முழுவதும் BLO election duty செய்ய வழிவகை உள்ளதா?

கள ஆய்வில் ஈடுபடும் பெண் ஆசிரியர்கள் தங்கள் பணி
முடித்து செல்ல இரவு ஆகிவிடுவதால் அவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகிறது.*

*✍BLO பணி , ஆசிரியர் பணி , வீட்டில் உள்ள பணிகள் இம்மூன்றும் ஒரு சேர இணைந்து ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்து அடுத்த நாள் பள்ளியில் நடத்தப்பட வேண்டிய பாடங்கள் திட்டமிடுதல் பணி பாதிக்கப்படுவதுடன்...*

*✍கற்றல் இருந்தால் கற்பித்தல் பணி சிறக்கும் என்பார்கள் ..*....

*✍இங்கு திட்டமிடவே நேரம் இல்லை என்கிற பொழுது ஆசிரியர்களுக்கு புதிய வகைகளை கற்க ஏது நேரம்....*

*✍13 வகை பணியாளர்கள் BLO பணிக்கு உட்படுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை தந்துள்ளது....*

1. சத்துணவு அமைப்பாளர்
2. தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள்
3. கிராம நிர்வாக அலுவலர்
4. ஊராட்சி செயலாளர்
5. மின் கணக்கீடு செய்பவர்
6 அஞ்சலக ஊழியர்
7. துணை செவிலியர் & பேறு கால உதவியாளர்
8. சுகாதார பணியாளர்கள்
9. மதிய உணவு பணியாளர்
10. மாநாகராட்சி தண்டர்
11. கிராம பணியாளர்கள்
12. மேல்நிலை/ கீழ்நிலை எழுத்தர்
13. ஆசிரியர்கள்

*✍ஆனால் மேற்கண்ட பட்டியலில் ஆசிரியர்களை மட்டுமே இந்த மாவட்டத்தில் பயன்படுத்தி வருகிறது மாவட்ட நிர்வாகம்..*..

*✍தென் மாவட்டங்கள் முழுவதும் கல்வி நலன் பாதிக்கப்படாதவாறு....அம்மாவட்டங்களில் ஆசிரியர்களை தவிர்த்து ஏனையினோர்க்கு இப்பணியினை வழங்கி , அம்மாவட்டங்களின் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை காத்துள்ளனர்...*..

வன அதிகாரி பணிக்கு UPSC தேர்வு அறிவிப்பு!!!

24 ல் TNPSC தேர்வு-ஏற்பாடுகள் தீவிரம்!!!

அரசு உதவித் தொகை மீண்டும் தபால்துறை மூலம் வழங்க நடவடிக்கை!!!

தவறான தகவல் வதந்தி செய்தியை நம்ப வேண்டாம் ஏர்செல் நிறுவனம் அறிவிப்பு​!!!

BRTE'S Seniority List-22.12.2017

அரசுப் பள்ளிக்கு வேன் வழங்கிய கிராம மக்கள்!!!

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளி
மாணவர்களின் சிரமத்தைக் குறைக்க இளைஞர்கள் , கிராம மக்கள் ஒன்றிணைந்து வேன் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராமத்தில் 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் பல துறைகளிலும் சாதித்துவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதோடு மாணவர்கள் பள்ளிக்கு நடந்து சென்றுவருவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் அக்கிராம மக்களும், முன்னாள் மாணவர்களும் ஒன்றிணைந்து பள்ளி மாணவர்களுக்கு வேன் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளி மாணவர்கள், வேன் மூலம் சென்றுவருவதை அரசுப் பள்ளி மாணவர்கள் ஏக்கத்துடன் பார்க்கின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவரவும் அரசுப் பள்ளியைத் தரம் உயர்த்தவும் திட்டமிட்டு முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம மக்கள் இணைந்து வேனை இலவசமாக வழங்கியுள்ளனர்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரனிடம் பொதுமக்கள் வேன் சாவியை வழங்கினர். அவர் பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திராவிடம் சாவியை வழங்கினார்.

ஒவ்வொரு நாளும் 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து மாணவர்களும் வேனில் வந்துசெல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கென தனி ஓட்டுநர் நியமிக்கப்பட்டு அவருக்கான சம்பளத்தையும் டீசலையும் கிராம மக்களே வழங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரா, “ மாணவர்கள் மீது இளைஞர்களும், கிராம மக்களும் அதிக அக்கறையும் அன்பையும் கொண்டு பல உதவிகளைச் செய்துவருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமம் குறைந்துள்ளது. அவர்கள் மேலும் மேலும் சாதனை படைத்துவருகின்றனர் “ என்று கூறினார்.

இதற்கு முன்பு பள்ளியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கல்விக்காகவும் பள்ளிக்குக் கணினி வாங்கிக் கொடுத்து, கணினிக்குச் சிறப்பு ஆசிரியர், ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் என மூன்று ஆசிரியர்களைப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமித்துள்ளனர்.

இது தவிர 5ஆம் வகுப்பு வரை 19 சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து அவர்கள் எளிதாகப் பள்ளிக்கு சென்றுவர சைக்கிள்களையும் வழங்கியுள்ளனர்.

அரசின் உதவியை எதிர்பார்க்காமல், இந்தப் பள்ளியை தனியாருக்கு இணையாகத் தரம் உயர்த்திவருகின்றனர் அக்கிராம மக்கள்

நம்ம போன் நம்பர் மாறாது!

சிறிது நேரத்தில் அனைவரையும் கவலைக்குட்படுத்திய 13 இலக்க 
செல்போன் எண்கள் அறிமுகம் என்ற செய்தி தவறானது எனத் தெரிவ்யவந்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் மொபைலில் இருந்து மொபைலுக்கு (M2M) தானியங்கி மூலம் செய்திகளைப் பரிமாறும் எண்கள் 13 இலக்கமாக மாற்றப்படும் எனத் தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. அதனால், 10 இலக்க எண்கள் கொண்டவர்களுக்கு எந்தவிதப் பிரச்சனையும் இல்லை.

எம்2எம் எண்கள் என்பவை ஸ்வைப் இயந்திரங்கள், கார்கள், மின்சார மீட்டர் ஆகியவற்றிற்கான சிம் கார்டுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இதை இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ , டெலிகாம் தொழில்துறை ஆகியவை உறுதிப்படுத்தியுள்ளன. எம்2எம் சிம் எண்கள் மாறும்போது அது எந்த வகையிலும் செல்போன் எண்களைப் பாதிக்காது என்று உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த 13 இலக்க எண் மாற்றம் என்பது எம்2எம் தொடர்புக்குத்தான் என்று இந்த மாத ஆரம்பத்தில் தொலைத்தொடர்புத் துறை தொலைபேசி நிறுவனங்களுக்குத் தெரிவித்திருந்தது.

இது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ”வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 13 இலக்க எண்கள் அறிமுகம் செய்யப்படும். அக்டோபர் 1ஆம் தேதி எம்2எம்மின் அனைத்து எண்களும் 13 இலக்கமாக மாற்றப்படும். இந்தப் பணி டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும்” என்று கூறின.

எம்2எம் என்பது வெவ்வேறு இடங்களில் இருந்து வயர்லஸ் மூலம் பேசும்போது உதவுகிறது. போக்குவரத்து மேலாண்மைத் தீர்வு, வாகனத் தணிக்கை, மின்சார மீட்டர்கள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்கு இந்த எண் சேவையை ஒதுக்குவதாகக் கூறப்படுகிறது.

எம்2எம் என்றால் என்ன?

இணையத்தில் இணைக்கப்பட்ட சாதனங்கள் மூலம் தகவல் பரிமாறிக்கொள்வது. இந்தச் சாதனங்களை இணையத்துடன் இணைக்க M2M சிம் கார்டு அவசியமாகிறது. இதனை வழக்கமான மொபைல்களிலும் பயன்படுத்தலாம்.

21/2/18

தமிழக அரசுப் பணியிலும் வருகிறது அவுட் சோர்ஸ் முறை... பணிகளை சீரமைக்க முன்னாள் ஐஏஎஸ் தலைமையில் குழு!

சென்னை : தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 6 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணிகளை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகச் செலவுகளை குறைக்கும் வகையில் எந்தெந்த பணிகளை நீக்கலாம் என்று குழு கண்டறிந்து அறிக்கை அளிக்கும். தனியார் நிறுவனம் மூலம் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பதையெல்லாமும் ஆய்வு செய்ய குழுவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவுட்சோர்ஸ் ஒப்பந்த முறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் குழு கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும். அரசுப் பணியாளர்களுக்காக செலவுசெய்யப்படும் தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது ஆய்வு அறிக்கையை 6 மாதத்தில் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

தேவையற்ற அரசு பணியிடங்களை குறைக்க குழு அமைப்பு

                                                 

சென்னை: தேவையற்ற அரசு பணியிடங்களை கண்டறிந்து குறைப்பது குறித்து பரிந்துரைக்க அரசு குழு அமைத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியாக அரசு பணியிடங்களில் தேவையற்றது என்னென்ன என்பதை கண்டறிய குழு அமைக்கப் பட்டுள்ளது. முன்னாள் முதன்மை செயலாளர் ஆதிசேஷைய்யா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து குறைக்கவும், எந்தெந்த பணியிடங்களை அவுட் சோர்ஸ் ஒப்பந்த முறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தரலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கையை 6 மாதத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடத்த கல்வித்துறை ஏற்பாடு அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் திறன் ஆய்வு

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 37,201 அரசு பள்ளிகளும், 8402 அரசு நிதி உதவி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. 

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோருக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் கற்றல் திறன் குறைபாடு உள்ளதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்தது. குறிப்பாக தமிழ் பாடத்தை படிக்கவும், எழுதவும் தெரியாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.

மொழி இலக்கணம் குறித்து எவ்வித புரிதலும் இல்லாமல் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் சூழல் மாணவர்களிடம் காணப்படுகிறது. இதனால் தேர்வில் தோல்வியை சந்திப்பது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த புதிய செயல்வடிவ திட்ட பாடங்களை கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கென தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வி இயக்குநரக உயரதிகாரிகள் குழுவினர் இம்மாதம் 27ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எளிமையான செயல் திறன் பாடத்திட்டம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களின் அடிப்படையை விரிவாக எடுத்துக் கூறி அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. 100 மதிப்பெண்களில் 60 மதிப்பெண்கள் தேர்வு மூலமாகவும் 40 மதிப்பெண்கள் கற்றல் திறன், பொது அறிவு மற்றும் தனித்திறமைகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும். 

அதன்படி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை ஆய்வு செய்ய தமிழகம் முழுவதும் அரசு, அரசு நிதியுதவி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வி இயக்குநரக உயரதிகாரிகள் குழுவினர் இம்மாதம் 27ம் தேதி ஆய்வு செய்ய உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளியில் புகுந்து மர்ம நபர் துணிகரம் : தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, அரசு பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர், தலைமை ஆசிரியை அணிந்திருந்த, 8 சவரன் தாலி செயினை பறித்து தப்பியோடினான்.
அவனை பிடிக்க முயன்ற மாணவன் மீதும் தாக்குதல் நடத்தினான்.திருவள்ளூர் மாவட்டம், மேல்நல்லாத்துாரைச் சேர்ந்த கிரிதரன் மனைவி சுஜாதா, 42. குண்ணத்துார், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை.இவரும், இவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியையும், நேற்று முன்தினம் மாலை, பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.குறும்படம் : அப்போது, டிப் - டாப்பாக உடையணிந்து, பள்ளிக்கு வந்த மர்ம நபர், நேராக தலைமை ஆசிரியை சுஜாதா, பாடம் நடத்திக் கொண்டிருந்த வகுப்பறைக்கு சென்றான். அவனை பார்த்த சுஜாதா, 'யார் நீங்கள்... என்ன வேண்டும்?' எனக்கேட்டார். அதற்கு, அந்த நபர், 'நான், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அனுமதியுடன் வந்துள்ளேன். மாணவர்களுக்கு கல்வி குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில், பள்ளியில் குறும் படம் திரையிட வேண்டும்'என்றான். அத்துடன், 'குறும் படம் திரையிட, 'டிவி' எடுத்து வர வேண்டும்; அதற்கு, 150 ரூபாய் கொடுங்கள்' என, கேட்டுள்ளான்.சந்தேகம் : அவனின் பேச்சில் சந்தேகமடைந்த தலைமை ஆசிரியை, பள்ளியில் உள்ள தன் அறைக்கு வேகமாக சென்றார்.

அவரை பின்தொடர்ந்த மர்ம நபர், 'மேடம், என் மொபைல் போன் எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்' என கூறியபடியே, சுஜாதா அணிந்திருந்த, 8 சவரன் தாலி செயினை, திடீரெனபறித்தான். சுதாரித்த தலைமை ஆசிரியை சுஜாதா, நகையை தன் கைகளால் பிடித்தபடி, 'திருடன் திருடன்...' என, கூச்சலிட்டார். அவரின் அலறலைக்கேட்ட, 4ம் வகுப்பு மாணவன், விஷ்ணு, மர்ம நபரின் சட்டையை பிடித்து இழுத்து, கீழே தள்ள முற்பட்டான்.உடன் ஆத்திரமடைந்த மர்ம நபர், மாணவனை எட்டி உதைத்து, சுஜாதாவின் செயினை பறித்து வெளியே ஓடி, அங்கு நிறுத்தி வைத்திருந்த, இரு சக்கர வாகனத்தில் தப்பினான்.அவன் இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற போது, தடுத்த ஒரு பெண்ணையும் கடுமையாக தாக்கினான். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, மப்பேடு போலீசில், தலைமை ஆசிரியை சுஜாதா, நேற்று புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். வருத்தமாக உள்ளதுபள்ளிக்கு வந்த மர்ம நபர், தலைமை ஆசிரியையிடம் பேசிக் கொண்டிருந்தான். திடீரென ஆசிரியை சத்தம் போடவே, மர்ம நபரை பிடிக்க முயன்றேன். என்னை உதைத்து தள்ளி, தப்பிவிட்டான்.

அவனை பிடிக்க முடியாதது வருத்தமாக உள்ளது. எஸ்.விஷ்ணு 4ம் வகுப்பு மாணவன், குண்ணத்துார்ஆசிரியைகளுக்கு பாதுகாப்பில்லைதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு, உரிய பாதுகாப்பு இல்லை. பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும், செயின் பறிப்பு திருடர்களால் பாதிக்கப்படுகிறோம். தற்போது, பள்ளிக்குள்ளேயே திருடர்கள் வந்துள்ளது, எங்களின் அச்சத்தை அதிகரித்துள்ளது.பெயர் தெரிவிக்க விரும்பாத ஆசிரியைதொடரும் வழிப்பறி : திருவள்ளூர் அருகே, வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்டது, திருமணம் கிராமம்.

இங்குள்ள அரசு பள்ளிக்குள், 2017 டிச., 18ல், புகுந்த மர்ம நபர், ஆசிரியை ருக்மணி என்பவரிடம், ஐந்தரை சவரன் நகையை பறித்து சென்றான். அந்தக் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் திணறும் நிலையில், இரண்டாவது முறையாக, இச்சம்பவம் நடந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149 கோடியில் கட்டடங்கள் திறப்பு

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149.58 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி மூலம் கட்டடங்களைத் திறந்து வைத்தார். 
நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் திருவாரூர் வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களைத் திறந்து வைத்தார். 
ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.46.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். 
சென்னை சைதாப்பேட்டையில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்துக்கான கூடுதல் கட்டடம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 58 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.97.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என மொத்தம் ரூ.149.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார். 
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் -மாணவர் உறவில் விரிசல் அதிகரிப்பை தடுப்பது அவசியம்'

                                

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் -மாணவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வரும் போக்கைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் என்று தனலட்சுமி பொறியியல் கல்லூரி தலைவர் பேராசிரியர் ராமூர்த்தி கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. 
இந்த விழாவில் அவர் பேசியதாவது: 
ஆசிரியர்கள் சொந்த விருப்பு வெறுப்பின்றி அவர்களது கடமைகளை உணர்ந்து செயல்படும்போது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், 
அனைவராலும் சிறந்த ஆசிரியர் என்று பாராட்டும், நன்மதிப்பு, மரியாதையையும் பெற முடியும். மாணவர்களின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், நன்நடத்தை, ஒழுக்கம் ஆகியவற்றையும் மேம்படுத்த உறுதுணையாக இருந்துவரும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றார் ராமமூர்த்தி. 
விழாவில், சேலையூர் சீயோன் மெட்ரிக் பள்ளி தாளாளர் என்.விஜயன், குரோம்பேட்டை எஸ்.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி முதல்வர் எஸ்.பேபி சரோஜா, செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதல்வர் எம்.அஞ்சனாதேவி, மார்க் மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன், ஏகனாம்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியை என்.சுதா உள்ளிட்ட 30 பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன.
கல்லூரி தாளாளர் வி.ஆர்.தனலட்சுமி, இயக்குநர் ஏ.ராஜலட்சுமி, முதல்வர் கே.எல்.சண்முகநாதன், டீன் ஆர்.கே.நடராஜன், பேராசிரியர் கே.செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம் : பொது தேர்வு மாணவர்கள் அச்சம்

                                       Image result for sslc hall ticket 2018

சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் சிலருக்கு, ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம், பெயர் இடம் பெற்றுள்ளதால், தேர்வு எழுத முடியுமா என, அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு மார்ச், 7 மற்றும் பத்தாம் வகுப்புக்கு, மார்ச், 16ல், பொது தேர்வுகள் துவங்குகின்றன.
இந்தத் தேர்வுகளில், மொத்தம், 27 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, 30 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோரிக்கை : இந்நிலையில், பொது தேர்வு மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில், சில மாணவர்களின் ஹால்டிக்கெட்டில், புகைப்படம், தந்தையின் பெயர் உள்ளிட்டவை தவறாக இடம் பெற்றுள்ளன. எனவே, தவறை சரி செய்து தரும்படி, மாணவர்கள் தரப்பில், தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில தலைவர், ரா.இளங்கோவன் கூறியதாவது: பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில், எழுத்துப் பிழை மற்றும் புகைப்படம் மாறி இருப்பதை சரி செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை அவகாசம் அளித்தது. சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உரிய காலத்தில் தவறுகளை கண்டுபிடிக்காமல், கவனக்குறைவாக இருந்து விட்டனர். இதனால், மாணவர்கள் சிலரின், ஹால் டிக்கெட்டுகளில் உள்ள தவறுகள் சரிசெய்யப்படவில்லை. இதை, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.'தற்போது பிழைகளை திருத்த முடியாது.

மாணவர்கள், தேர்வு மையத்துக்கு சென்று, ஹால் டிக்கெட்டுடன், தங்களது புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டையை இணைந்து, தேர்வை எழுதி கொள்ளலாம். 'தேர்வு முடிவுகள் வந்த பின், பிழைகள் சரிசெய்யப்படும்' என, தெரிவித்து உள்ளனர்.சிக்கல் : இதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், புகைப்படம் மாறிய மாணவர்கள், தங்களால் தேர்வு எழுத முடியுமா என, அச்சம் அடைந்துள்ளனர். எனவே, தேர்வுக்கு முன், ஹால் டிக்கெட் மற்றும் விடைத்தாளின் முகப்பு சீட்டில் உள்ள, தவறுகளை சரிசெய்து, புதிய ஹால் டிக்கெட் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

CPS நண்பர்களின் கவனத்திற்கு....

                                        

ஓய்வூதிய வல்லுநர் குழுவின் 
அறிக்கையை தமிழக அரசிடம்  தாக்கல் செய்யக்கோரி  திண்டுக்கல் எங்கெல்ஸ் அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று 21.02.2018  விசாரணைக்கு  வருகிறது.*

For order
வரிசையில் 52வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது