யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/5/18

ஜீன் மாதம் 4ந் தேதி முதல்ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு துவங்கப்படும்: கல்வி அமைச்சர்

ஆரவாரம், கொண்டாட்டமின்றி வீடு தேடி வந்த, 'ரிசல்ட்'

பொதுதேர்வு முடிவுகளில், பாராட்டு, வாழ்த்து, கேக் ஊட்டுவது என்ற ஆரவாரத்துக்கு, அறவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.


 பரபரப்பான பொது தேர்வு முடிவுகள், மிகவும் அமைதியாக வெளியிடப்பட்டதால், ஆசிரியர் களும், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.


பாராட்டு மழை


தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்பிற்கு, தமிழக அளவிலான நுழைவு தேர்வு ரத்தான பின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்பு களுக்கு சேர்க்கை நடந்தது. இதனால், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கும், அதன், 'கட் ஆப்' மதிப் பெண்ணுக்கும், அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது.

மாநில அளவில், எந்த பள்ளி, 'டாப்' மதிப்பெண் பெறுகிறது; பள்ளி அளவில், முதல் மதிப்பெண் பெறும் மாணவ - மாணவியர் யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. தேர்வு முடிவை வெளியிடும் போது, மாநில அளவில், 'டாப்பர்' ஆக வரும் மாணவர்கள், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு அமைச்சர் களும், அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.



அவர்கள், 'டாப்பர்' ஆக வர, என்ன முயற்சி எடுத்தனர் என, ஊடகங்களில் பேட்டி எடுக்கப்படும். பெரும்பாலானவர்கள், 'டாக்டர் ஆக வேண்டும்; கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம்' என, தெரிவிப்பர்.இப்படி கூறிய பல மாணவர்கள், உயர்கல்வியை முடித்ததும், முதல் ஆளாக, வெளிநாடுகளிலும், பெருநகரங்களிலும்

பணியில் சேர்வதோடு, கிராமங்களை கண்டுகொள்வதில்லை. பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணவர்களை, மற்ற மாணவர்கள், தோளில் துாக்கி வைத்து கொண்டாடுவர். அவர்களின், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள், கேக் ஊட்டி, போட்டோவுக்கு, 'போஸ் கொடுப்பர்.

இரண்டு ஆண்டுகளாக, 'டாப்பர்' என்ற, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆரோக்கிய மற்ற கொண்டாட்டங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இதே போல, தேர்வு முடிவை, தனியார் இணைய தளங் களில்வெளியிடும் நிலையும் படிப்படியாக மாற்றப் பட்டு, தேர்வுத் துறையே தங்கள் இணைய தளத்தில், நேரடியாக தேர்வு முடிவுகளை வெளியிட துவங்கியது.


புதுமைகள்


இந்தமுறை, மாணவர்களுக்கு எளிதாக இருந்தா லும், கிராமப்புற மாணவர்கள் அல்லது கோடை விடுமுறையில், வெளியூர்களில் உள்ள மாணவர் கள், இணையதள இணைப்பு உள்ள பகுதியை தேடி வந்து, தேர்வு முடிவை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த அலைச்சலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர் களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக, தேர்வு முடிவை வெளியிடும் முறை, 2017 முதல் அறிமுகம் ஆகியுள்ளது.

இதனால், மாணவர்கள் இருக்கும் இடத்திலேயே, தேர்வு முடிவை, மதிப்பெண்ணுடன் அறியும் வசதி கிடைத்துள்ளது. மொத்தத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன உளைச்சல் மற்றும் அலைச்சலுக்கு கல்வி துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.




வெறிச்சோடிய தேர்வுத்துறை வளாகம்


மாநில, மாவட்ட அளவில், மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேடிப்பிடித்து, அவர்களிடம் ஊடகத்தினர் பேட்டி எடுப்பர். இதற்கு, இரண்டு ஆண்டுகளாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்வுமுடிவுகள், தேர்வுத் துறை அலுவலகத்தில் ஊடகத்தினருக்கு வழங்கப்படும். இந்த தகவல்களை பெற, செய்தியாளர்கள், கேமரா, மைக் சகிதமாக, காலை முதல் தேர்வுத்துறை வாயிலில் காத்திருப்பர்.


தேர்வு முடிவு வெளியிடும் நேரத்தில், பட்டியலை பெற்று, முதலில் யார், 'பிரேக்கிங் நியூஸ்' வழங்குவது என, போட்டி ஏற்படும். அதனால், பட்டியல் வினியோகத்தின் போது, தள்ளு முள்ளு ஏற்படும். இதற்கும், இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொது தேர்வு முடிவின் போது, கேமராக்கள் குவிந்திருக்கும், தேர்வுத்துறை அலுவலக வளாகம் நேற்று, ஆள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்


பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வேண்டும் என, கருதுவோர், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்கு சென்று, இன்று முதல், வரும், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீடு தேவைப்படுவோர், முதலில், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முடிவு நேற்று அறிவிக்கப் பட்ட நிலையில், மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 21ம் தேதி முதல், பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். மேலும்,www.dge.tn.nic.in என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்

தாமதமாகும் பணியிட மாறுதல் கலந்தாய்வு

அரசு பள்ளிகள் சார்பில் நடைபெறும் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது, தொடக்க கல்வி இயக்குனர் புதிய உத்தரவு

அரசு பள்ளிகள் சார்பில் நடைபெறும் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது, தொடக்க கல்வி இயக்குனர் புதிய உத்தரவு

அரசு பள்ளிகள் சார்பில் நடைபெறும் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது, தொடக்க கல்வி இயக்குனர் புதிய உத்தரவு

மே 18 தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினமலர் செய்தி

மே 18 தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினமலர் செய்தி

12/5/18

10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப திட்டம் :

தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்1, 2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு நோட்டீஸ் போர்டில் ஒட்டுவதற்கான நடைமுறையை பின்பற்ற அரசுத் தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது. 
தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் துறை பள்ளிகளுக்கு சிடி வழங்கி நோட்டீஸ் போர்டில் தேர்வு முடிவுகளை ஒட்டுதல், செய்தித்தாளில் பிரசுரம் செய்தல், இணையதளங்களில் வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வெளியிட்டு வந்தது.
அதைத்தொடர்ந்து, மாணவர்கள் அளித்துள்ள செல்போன் எண்களுக்கு, தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் நடைமுறையும் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை பள்ளிகளில் ஒட்டும் நடைமுறையையும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு இணையதளம், எஸ்எம்எஸ் தவிர இ-மெயில் மூலமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. 
தேர்வு முடிவு வெளியாகும் நேரத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும், அந்த பள்ளியில் படித்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இ-மெயில் மூலம் அனுப்பப்படும். அவற்றை பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் ஒட்ட உத்தரவிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள் வரும் 23-ம் தேதி இணையத்தில் வெளியீடு

1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnscert.org  என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.

சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnscert.org  என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்..

ANNAMALAI UNIVERSITY-DDE - MAY - 2018 EXAMINATIONS HALL TICKET:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் B.Ed (distance Education) 2018-2020 சேர்க்கை!!!

இந்த கல்வியாண்டில் சுமார் 3000 ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கும் 25% கட்டாயக்கல்வி சட்டம்!!!

இலவச கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% இலவசகல்வி பயில இன்றுவரை சுமார் 80,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்த கல்வியாண்டில் மட்டும் சுமார் 3000 ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கும் என ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

11-ம் வகுப்பு புதிய தமிழ் பாடப் புத்தகத்தில் பிழை... இளையராஜா குறித்து தவறான தகவல்!

புதிய தமிழ் பாடப்புத்தகங்களில் இளையராஜா குறித்த பாடத்தில் பிழைகள் இருக்கின்றன. இசைத்தமிழர் இருவர் என்ற பெயரில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் குறித்த பாடம் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் இளையராஜா 1995-ம் ஆண்டில் கேரளம்-நிஷாகந்தி சங்கீத விருது வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 2013-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட அந்த விருதை 2016-ம் ஆண்டு இளையராஜா வாங்கியுள்ளார். 1998-ல் லதா மங்கேஷ்கர் வாங்கிய விருது 1988-ம் ஆண்டு வாங்கியதாக பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜா தேசிய விருது வாங்கிய ஆண்டுகளிலும் குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.பாடப்புத்தகங்கள் பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றி போட்டி தேர்வுக்கு தயாராகுவோருக்கும் அடிப்படையாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ள பாடப்புத்தகம், மாணவர்களுக்கு பல வகையில் உதவும் முறையில் உள்ளதாக பல பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பள்ளிகளுக்கு இன்னும் புத்தகம் விநியோகம் செய்யப்படவில்லை. ஆதலால் தவறுகளை திருத்துக் கொண்டு புத்தகங்களை விநியோகம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி 12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை - அரசாணை வெளியீடு*





*FLASH:*

*32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி 12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை - அரசாணை வெளியீடு*

*20 பள்ளிகளில், பயிற்சி நிலையங்களாக மாற்றம் - மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு நடவடிக்கை*

*மொத்த மாணவர் சேர்க்கை இடம் 3,000-லிருந்து, 1050 ஆக குறைப்பு - தமிழக அரசு.*

21/4/18

அதிகமான பாடங்களை கற்பிக்க வற்புறுத்தவில்லை: நீதிமன்றத்தில் என்சிஇஆர்டி பதில்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், 'ஒருபோதும் அதிகமான பாடங்களை கற்பிக்க வேண்டுமென பள்ளிகளை வற்புறுத்தவில்லை'
என என்சிஇஆர்டி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் எட்டுப் பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகப் பைகளைச் சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, என்சிஇஆர்டி விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 
தரமான புத்தகங்கள்: இதையடுத்து, என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹர்ஷ் குமார் பதில்மனு தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குழந்தைகள் மத்தியில் எந்தவிதமான கல்வி பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தவொரு குழந்தைக்கும் கல்வி மனஅழுத்தத்தையும் தரக்கூடாது என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடப் புத்தகங்களை நாங்களே வடிவமைத்து வழங்கி வருகிறோம். ஆண்டுதோறும் குறைவான கட்டணத்தில் 364 தலைப்புகளில் தரமான புத்தகங்களை வெளியிடுகிறோம். ஒரு குழந்தை எவ்வளவு நேரம் படிக்க வேண்டும், எவ்வளவு நேரம் கற்பிக்க வேண்டும் என்பதை வரையறுத்துதான் பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆரம்ப கல்வியில் இருந்து இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. 3 -ஆம் வகுப்பிலிருந்து 5-ஆம் வகுப்பு வரை வாரத்துக்கு 2 மணி நேரம் வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டும். 8 -ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் வீதம், வாரத்தில் 5 முதல் 6 மணி நேரமும், 9 -ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை தினமும் 2 மணி நேரம் வீதம் வாரத்தில் 10 முதல் 12 மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் கொடுக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வற்புறுத்தவில்லை: புத்தகச் சுமையைக் குறைக்க முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு மொழிப்பாடம், கணிதம் ஆகிய இரண்டு பாடங்களையும், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொழிப்பாடம், சூழ்நிலையியல், கணிதம் ஆகிய 3 பாடங்களை மட்டுமே கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர பொது அறிவுப் பாடமும் கொடுக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி ஒருபோதும் அதிகமான பாடங்களை கற்பிக்க வேண்டுமென வற்புறுத்தவில்லை. அதே போன்று, பள்ளியில் விநியோகிக்கும் புத்தகங்களை வாங்க வேண்டும் என மாணவர்களை ஒருபோதும் நிர்பந்திக்கக் கூடாது. இதுகுறித்து பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்துடன் பேச வேண்டும். 
அதே வேளையில் எல்லா பாடங்களையும் ஒரே நாளில் கற்பிக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது. வாழ்க்கைக்குத் தேவையான அறிவை போதிக்கும் இடமாக திகழ வேண்டிய பள்ளிகள் தரமான கல்வியை மட்டுமே கற்பிக்க வேண்டும். கல்வி ஒருபோதும் சுமையாக இருக்கக்கூடாது என்பதை தாரகமந்திரமாக வைத்து என்சிஇஆர்டி செயல்பட்டு வருகிறது. மேலும் மின்னணு வடிவிலான இ-புத்தக திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். இதனை கைபேசி செயலி வழியாகவும் பெற முடியும் என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைநிலைக் கல்வியிலிருந்து கல்லூரிக்கு மாறும் வசதி: இந்த ஆண்டு முதல் சென்னைப் பல்கலை. அறிமுகம்

தொலைநிலைக் கல்வி முறையிலிருந்து கல்லூரிக்கும், கல்லூரி படிப்பிலிருந்து தொலைநிலைக் கல்வி முறைக்கும் மாணவர்கள் மாறிக் கொள்ளும் வகையில் புதிய வசதியை வரும் கல்வியாண்டு முதல் (2018-19) சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 முடித்து தொலைநிலைக் கல்வி அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டங்கள், கல்லூரியில் சேர்ந்து பெறும் பட்டத்துக்கு இணையானது எனவும், அனைத்து வகை வேலைவாய்ப்புகளுக்கும் இந்தப் பட்டப் படிப்புகளையும் தகுதியானதாக கருத வேண்டும் எனவும் யுஜிசி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 
யுஜிசி-யின் இந்தக் கருத்தை மேலும் ஒருபடி உயர்த்தி, தொலைநிலைப் பட்டப் படிப்புகளை முழுமையாக, கல்லூரி பட்டப்படிப்புக்கு இணையானதாக மாற்றும் நடவடிக்கையை சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியதாவது:
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனப் படிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், இதன் பாடத் திட்டங்கள் அனைத்தும், நேரடி பட்டப் படிப்புக்கு இணையானதாக மாற்றப்பட்டுள்ளன. வருகிற கல்வியாண்டு முதல் இந்தப் புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மேலும் தேர்வு முறையும், பருவத் தேர்வு முறையாக மாற்றப்பட உள்ளது.
இதன் மூலம், தொலைநிலைக் கல்வி மாணவர் இரண்டாம் ஆண்டில் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினால், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை நடைமுறையின் அடிப்படையில் அவர் கல்லூரியில் சேர்ந்துகொள்ள முடியும்.
அதுபோல, கல்லூரியில் படித்து வரும் மாணவர் அல்லது மாணவி தவிர்க்க முடியாத சூழலில் படிப்பைத் தொடர இயலாமல் போனால், அவர் தொலைநிலைக் கல்வி முறைக்கு மாறிக் கொள்ள முடியும். இந்த வசதி வரும் கல்வியாண்டு (2018-19) முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றார் அவர்.

எம்.பி.ஏ., நுழைவு தேர்வு அறிவிப்பு

சென்னை, சென்னை பல்கலையின், எம்.பி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு, ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையில், இரண்டு ஆண்டு, எம்.பி.ஏ., எக்ஸ்கியூட்டிவ் படிப்பு நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் சேர, ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, நேற்று முன்தினம் துவங்கியுள்ளது. ஜூன், 18 வரை,www.unom.ac.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, பல்கலை அறிவித்துள்ளது

திறந்தநிலை பல்கலைக்கு 2020 வரை யு.ஜி.சி., அனுமதி

சென்னை, மத்திய அரசின், 'நாக்' தரமதிப்பீடு இல்லாமல், 2020 வரை படிப்புகளை நடத்த, அனுமதி கிடைத்து உள்ளதாக, தமிழ்நாடுதிறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பல்கலையின் பதிவாளர், கே.எம்.சுப்ரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மரபார்ந்த பல்கலைகளுக்கு மட்டுமே, தொலைநிலை படிப்பை நடத்த, நாக் தரமதிப்பீடு கட்டாயம்.ஆனால், திறந்தநிலை பல்கலை போன்றவற்றுக்கு, நாக் தரமதிப்பீடு, இன்னும் கட்டாயம் ஆகவில்லை.எனவே, நாக் தரமதிப்பீடு இல்லாமல், 2020ம் ஆண்டு வரை, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்பு நடத்த, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.மேலும், நேரடி,'ரெகுலர்' கல்வி முறையில், பிஎச்.டி., - எம்.பில்., ஆராய்ச்சி படிப்பை நடத்தவும், திறந்தநிலை பல்கலைக்கு,யு.ஜி.சி., அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.