யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/5/18

பள்ளி மாணவர்கள் சீருடை : பெற்றோர் குழப்பம்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1ல் மீண்டும் துவங்க உள்ளன. அரசு, உதவிபெறும் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சீருடைகள் வண்ணமும், அமைப்பும் 
மாற்றப்பட்டுள்ளன. ஆனால் 1முதல் 8 வரை படிக்கும் மாணவர்களின் சீருடை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் அவர்களின் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.அவர்கள் கூறுகையில், 'சீருடை வண்ணம் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு முறையான தகவல் இல்லாததால் எங்களிடம் தெளிவாக கூற முடியவில்லை. புதிய சீருடை வாங்குவதில் குழப்பம் நீடிக்கிறது,' என்றனர்.

890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை

10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகளை இயங்காமல் நிறுத்தி வைப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. குழந்தைகளின் தொடக்கக்கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணி போன்ற திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது.

எனினும் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக்கல்வி இயக்கம் ஆகியவை ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் படிக்கிறார் கள்? எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்? எத்தனை சத்துணவு ஆயாக்கள் இருக்கிறார்கள்? போன்ற விகிதாச்சார விவரங்களை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கணக்கில் எடுத்தது.

அரசு நடத்திய ஆய்வில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. 29 பஞ்சாயத்து யூனியன் தொடக் கப்பள்ளி, 4 நகராட்சி தொடக் கப்பள்ளி என 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவ- மாணவி கூட படிக்கவில்லை என்பதும், அங்கு ஆயாக்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.

பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை இருந்தது தெரிய வந்தது. இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளில் படிக் கும் மாணவ-மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்த்துவிட அரசு முடிவு செய்துள்ளது.

அப்படியே அந்த மாணவர் கள் அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று விட்டாலும், இயங்காமல் இருக்கும் இந்த பள்ளிக்கூடங்களை, மாணவர்கள் அங்கு வந்து படிப்பதற்கு நன்கு வசதி உள்ள இடங்களாக மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் 32 மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் 10-க்கும் குறைவான மாணவ-மாணவிகள் படிக்கும் 890 தொடக்கப்பள்ளிகளில் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே 890 தொடக்கப்பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர்கள் பணியிடங்களை குறைக்கக் கூடாது என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்படுகிறது

ஆசிரியர்கள் ஸ்டிரைக் என்று சொன்னால் மக்கள் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று கேட்கிறார்–்கள். 365 நாட்கள் பணி நாட்கள் உள்ள நிலையில் 210 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. அதிலே தேர்வுக்காக குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் 170 முதல் 175 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. புதிய பாடங்களை நடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது

பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வசதியாக தொடக்கப் பள்ளிகள்  30 பள்ளிகளாக பிரிக்கப்பட்டு  அவர்கள் ஆண்டுக்கு 2 முறையாவது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்

மேலும், பள்ளிகள் மீது குற்றம் குறைகள் மற்றும் புகார்கள் வந்தால் அடுத்த 1 மணி நேரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதில் கொடுத்தாக வேண்டும். அதற்கான தீர்வுகளையும் அவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய அனுமதியும் வழங்கப்படுகிறது. வேகமாக பணி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு

அரசுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையில், ஒரு நபர் கமிட்டியிடம் ஆசிரியர்கள் அலுவலர்கள் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்நிலையில் பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்

அதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ஆசிரியர்கள் உண்ணா விரதம் போன்ற போராட்டங்களை கைவிட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட ஒத்துழைக்க வேண்டும்

கட்டாயகல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 32 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன

இரண்டு நாட்களில் குழு அமைத்து அவற்றுக்கு தீர்வு காணப்படும். தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றை பள்ளி தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்

கூடுதல் கட்டணம் கேட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி ஒன்றில் 29 மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது

அங்கு தெலுங்கு மொழி ஆசிரியர் இல்லை. அதனால் இந்த நிலை. எனவே அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ஜூன் 25ம் தேதி நடக்க உள்ள தேர்வில் தேர்ச்சி பெற ஏற்பாடு செய்யப்படும்

பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஜூன் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறிப்பிட்ட நாளில் வெளியாகும்


பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

காலமுறை ஊதியம் கேட்டு மாற்றுத்திறன் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்

                              


காலமுறை ஊதியம் கேட்டு மாற்றுத்திறன் ஆசிரியர்கள் திங்களன்று (மே 21) சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் (டிபிஐ) காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.2012ம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கு ஓவியம், இசை, தையல் உள்ளிட்ட கலைப்


பாடங்களை கற்பிக்க சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். இவர்களில் 200 பேர் மாற்றுத் திறனாளிகள். 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தியில் நிர்ணயிக்கப் பட்ட இந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு தற்போது 7 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படுகிறது.தமிழக அரசின் துறைகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க 2008ம் ஆண்டு அரசாணை 151 வெளியிடப்பட்டது. இதற்கு தடையாக உள்ள விதிகளை நீக்கிக் கொள்ளும் அதிகாரத்தையும் துறையின் தலைவருக்கு வழங்கப் பட்டுள்ளது. இந்த அரசாணை பள்ளிக்கல்வித்துறையில் அமலாகவில்லை.அரசாணை 151ஐ செயல்படுத்தகோரி பள்ளிகல்வித் துறை அமைச் சர், தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உள்ளிட்ட உயர்அதிகாரிகளிடம் மாற்றுத்திறன் ஆசிரியர்கள் மனு அளித்துள்ளனர். அதேசமயம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரும் அரசாணையை செயல்படுத்துமாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதன் பிறகும் அரசாணை அமலாக்கப்படவில்லை.இந்நிலையில் அரசாணை 151ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணிவரன் முறை செய்ய வேண்டும், 6 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் கலைப் பாடங்களை கற்பிக்கும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப்போராட்டம் நடைபெறுகிறது.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிளை அமைப்பான பகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரியர்கள் சங்கம் இந்தப்போராட்டத்தை நடத்தி வருகிறது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர்.

ஆய்வுப்பணி செலவுக்கு திண்டாட்டம், கல்வித்துறை அதிகாரிகள் கவலை


பணிநிரவல் பட்டியல் படி அரசுப் பள்ளி ஆசிரியர்களை மாற்ற நடவடிக்கை?

RMSA 26 Model School Post Continuation Order

7079 Teaching and Non Teaching Post Continuation Order

22/5/18

890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை!!!






 10 -க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு
பள்ளிகளை இயங்காமல் நிறுத்தி வைப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை,
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது.



 குழந்தைகளின் தொடக்கக்கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணி போன்ற திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது.

எனினும் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக்கல்வி இயக்கம் ஆகியவை ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் படிக்கிறார் கள்? எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்?

 எத்தனை சத்துணவு ஆயாக்கள் இருக்கிறார்கள்? போன்ற விகிதாச்சார விவரங்களை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கணக்கில் எடுத்தது.

அரசுநடத்திய ஆய்வில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது.

 29 பஞ்சாயத்து யூனியன் தொடக் கப்பள்ளி, 4 நகராட்சி தொடக் கப்பள்ளி என 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவ- மாணவி கூட படிக்கவில்லை என்பதும், அங்கு ஆயாக்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர் என்ற அதிர்ச்சி
...

ஊதிய_முரண்பாடு_களைய_களமிறங்கிய_காக்கிகள்-ஒரு_நபர்_குழுவுக்கு_மனுவாக_பறந்த_மனக்குமுறல்கள்

No automatic alt text available.

33 தொடக்க பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை - அதிர்ச்சி தகவல்

தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது.


குழந்தைகளின் தொடக்கக்கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணி போன்ற திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது.


எனினும் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக்கல்வி இயக்கம் ஆகியவை ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது.


இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் படிக்கிறார்கள்? எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்?


எத்தனை சத்துணவு ஆயாக்கள் இருக்கிறார்கள்? போன்ற விகிதாச்சார விவரங்களை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கணக்கில் எடுத்தது.




அரசுநடத்திய ஆய்வில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது.


29 பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, 4 நகராட்சி தொடக்கப்பள்ளி என 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவ- மாணவி கூட படிக்கவில்லை என்பதும், அங்கு ஆயாக்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.


பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை இருந்தது தெரிய வந்தது.




இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்த்துவிட அரசு முடிவு செய்துள்ளது.


அப்படியே அந்த மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று விட்டாலும், இயங்காமல் இருக்கும் இந்த பள்ளிக்கூடங்களை, மாணவர்கள் அங்கு வந்து படிப்பதற்கு நன்கு வசதி உள்ள இடங்களாக மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

மரக்கன்று பராமரித்தால் மாணவர்களுக்கு, 'மார்க்

கோபி, மே 21- : ''மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி, பராமரிப் போருக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம், அரசு பரிசீலனையில் உள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.


அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டம் கோபியில், டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு நேற்று நடந்தது.ஒளிபரப்பை துவக்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசிய தாவது: கல்வியில் புரட்சி ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜூன் மாதத்தில் வழங்கப்படும் புத்தகத்தில், இதை உணரலாம். 

பாட புத்தக காகிதத்தின் தரம், 70 எம்.எம்., ஆக முன்பிருந்தது. தற்போது, 80 எம்.எம்., அளவில், உறுதியாக தயாரிக்கப்பட்டுள்ளது. கறுப்பு, வெள்ளை நிறத்தை மாற்றி, பல வண்ணத்தில் உருவாக்கியுள்ளோம்.ஒரு குழந்தை, பிளஸ் 2 முடிக்கும் வரை, கல்விக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி காட்டுவோம். அதை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில், பி.இ., முடித்து விட்டு, 1.60 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர். பிளஸ் 2 முடித்தாலே, வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும், 'ஸ்கில் டிரெயினிங்' பயிற்சி அளிக்கப்படும்.தமிழகத்தில் பயிலும், 81 லட்சம் மாணவர்களுக்கு, தலா ஐந்து மரக்கன்று வழங்கப்படும். பராமரிக்கும் மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்கும் முறையை, அரசு பரிசீலித்து வருகிறது.

இத்திட்டத்தை அறிவித்தால், நாடே திரும்பி பார்க்கும். நடப்பாண்டில், அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள்கூடுதலாக சேர்வார்கள் என தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளை மாற்ற முடிவு?

புதுடில்லி : ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்த, அரசு ஆலோசித்து வருகிறது.


யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது. தற்போது, இந்த தேர்வாளர்களுக்கு, முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுவோருக்கு, பிரதான தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகளின் அடிப்படையில், மதிப்பெண் கணக்கிடப்பட்டு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணியிடங்கள் ஒதுக்கப்படும். இதற்கு பின், மூன்று மாத அடிப்படை பயிற்சி அளிக்கப்படும் நடைறை, தற்போது பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், இந்த நடைமுறையில் மாற்றங்கள் செய்ய, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன்படி, இனிமேல், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும், மூன்று மாதம், அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் அவர்கள் பெறும் தர மதிப்பீடு, சிவில் சர்வீஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் ஆகிய இரண்டின் அடிப்படையில், அவர்களுக்கு, பணி ஒதுக்கீடு செய்வது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு, மத்திய பணியாளர் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அடிப்படை பயிற்சியில் அளிக்கப்படும் தர மதிப்பீட்டிற்கு முக்கியத்துவம் தருவதற்கான சாத்தியம் பற்றி ஆராயும்படி, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதற்கிடையில், 'சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை, மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிரியர் பணியிட கலந்தாய்வு: மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல்

                                           

தமிழக தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆண்டுதோறும் மே மாதம் தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான கலந்தாய்வு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும். 
இவர்கள் பள்ளி திறக்கும் ஜூன் முதல் தேதி பணியில் சேர வேண்டும். தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஜூன் முதல் தேதி பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வருவார்கள். அல்லது வேறு ஊர்களில் இருந்து மாற்றல் சான்றிதழ் பெற்று புதிய பள்ளிகளில் மாணவர்கள் சேருவார்கள். மேலும், கல்வித் துறை பல புள்ளி விவரங்களைக் கேட்கும். விலையில்லா பொருள்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிர்வாக வேலைகளை தலைமை ஆசிரியர்கள் பார்த்து வருகிறார்கள்.
கடந்த கல்வியாண்டில் (2017-18), முதல் கலந்தாய்வு நடைபெற்ற பின்னர் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. பொதுவாக இரண்டாவது கலந்தாய்வு நடைபெற்று, காலி பணியிடங்கள் நிரப்பப்படும். சில தலைமை ஆசிரியர்களின் விருப்ப ஓய்வு அல்லது மரணம் காரணமாக ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ளன. 
ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் சுமார் 1,000 தலைமை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஓய்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மையான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், ஒரே ஆசிரியர் இருந்து பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு முயற்சிகளை மேற்கொள்வது இயலாத காரியம். வரும் மாணவர்களை வகுப்பறைகளில் அமர வைக்கத்தான் அவர்களால் இயலும். தலைமை ஆசிரியர் இருந்து ஆலோசனைகள் வழங்கி, ஆசிரியர்களுடன் இணைந்துதான் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.
தலைமை ஆசிரியர்கள் நியமிக்காத நிலையை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.
தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை மே 31-ஆம் தேதிக்குள் நிரப்பி, புதிய தலைமை ஆசிரியர்கள் ஜூன் 1-ஆம் தேதி பள்ளியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு 90% இல்லாமலே போய்விட்டது. அதாவது ஒவ்வொரு ஒன்றியத்திலும் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து, கூடுதல் ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது காலியாக உள்ள ஒரு சில இடங்களில் கூடுதல் ஆசிரியர்களை பணி நிரவலில் பணி அமர்த்தினாலும், கூடுதலாகவே ஆசிரியர்கள் உள்ளனர்.
எனவே, இவர்களுக்கான பணியிட மாறுதலுக்கு வாய்ப்பு மிகவும் குறைவே. பணிநிரவல் மூலம் காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களே செய்து முடித்துவிடுவார்கள். தொடக்க கல்வித் துறையில் நடுநிலை மற்றும் தொடக்க நிலையில் உள்ள தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசு உடனே நிரப்பி, கிராமப்புற அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடக்க கல்வித் துறை தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பத்தைக் கூட இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கோ. ஜெயக்குமார்

ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் மகிழ்ச்சி...அமைச்சர்

அனைத்து வகை பள்ளிகளை CEO, DEO க்களே நிர்வகிப்பார்கள், தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை திரட்டுகிறது ஒரு நபர் சீராய்வு குழு | நாளைக்குள் பட்டியல் அனுப்ப அனைத்து துறைகளுக்கு கடிதம்!

முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்

திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், 20172018ம் கல்வி ஆண்டில் 13,631 மாணவர்கள், 14,866 மாணவிகள் உள்பட மொத்தம் 28,497 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், 25,069 பேர் தேர்ச்சி பெற்றனர். 2,097 மாணவர்கள், 1,331 மாணவிகள் உள்பட 3,428 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளில் பெரும்பாலானவர்கள், ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் மட்டுமே தேர்ச்சி தவறியுள்ளனர். அவ்வாறு தேர்ச்சி பெற தவறிய பாடங்களுக்கான முதுநிலை பாடப்பிரிவு ஆசிரியர்கள், கடந்த கல்வி ஆண்டு முழுவதும் இல்லாதது, தேர்ச்சி குறைய முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

அதிகபட்சமாக 860 கிராம ஊராட்சிகளையும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும் உள்ளடக்கியது திருவண்ணாமலை மாவட்டம். இந்த மாவட்டத்தில், மொத்தம் 4 நகராட்சிகள் மட்டுமே உள்ளன. இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 24.64 லட்சத்தில், 19.69 லட்சம் மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். அதேபோல், இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 221 மேல்நிலைப்பள்ளிகளில், 133 அரசு மேல்நிலைப்பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 28,497 மாணவர்களில், 19,879 மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்தவர்கள். 8,618 மாணவர்கள் மட்டுமே தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். மாவட்டத்தின் மொத்த பிளஸ் 2 மாணவர்கள் எண்ணிக்கையில் 70 சதவீதம் பேர் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்.

விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு அரசு பள்ளிகள் மட்டுமே புகலிடம். அதை நம்பியே தங்களுடைய எதிர்காலத்தை அமைக்கின்றனர். தனியார் பள்ளிகளில் பணம் செலுத்தி படிக்கும் வசதியும், வாய்ப்பும் இல்லாத லட்சக்கணக்கான குழந்தைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறையால், இப்பள்ளிகளை நம்பி வரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிறது. கடந்த 2017-2018ம் கல்வி ஆண்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 114 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. குறிப்பாக, கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற மாணவர்கள் சுயமாக படிக்க சிரமப்படும் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.

இளநிலை பட்டதாரி ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் மதிப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும், முதுநிலை வகுப்புகளுக்கு பாடம் கற்பித்தனர். அதனால், ஓரளவு பிளஸ் 2 தேர்ச்சி காப்பாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிய அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 1,265. மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதலாக தேவைப்படும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம். மேலும், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில்லை. அவசியம் மிகுந்த காலிப்பணியிடங்களை நிரப்பாமல், கூடுதல் பணியிடங்களை அனுமதிக்காமல் அரசு கைவிரித்ததால், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2016-2017ம் கல்வி ஆண்டில் 89.03 சதவீதம் தேர்ச்சி பெற்ற இம்மாவட்ட அரசு பள்ளிகள், இந்த கல்வி ஆண்டில் 84.16 சதவீதம் மட்டுமே தேர்ச்சியடைந்திருக்கிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட கல்வித்துறையும் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டன. ஆசிரியர்களும் தங்களின் அதிகபட்ச அக்கறையையும், ஒத்துழைப்பையும் அளித்தனர். ஆனாலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, வரும் 2018-2019ம் கல்வி ஆண்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலையை மாற்ற அரசு முன்வர வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்யும் தவறான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது இம்மாவட்டத்துக்கு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல்

அரசு பள்ளிகளில் தொடக்க கல்வியில் கூடுதல் சேர்க்கை இருக்க வேண்டும் : அமைச்சர் செங்கோட்டையன்


புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயில விரும்பும் ஆர்வமுள்ள  ஆசிரியர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று சென்னை  கோட்டூர்புரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது குறித்து  சென்னையில் மாவட்ட தலைமை கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர்  ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம்  குறித்து பயிற்சி வழங்கப்பட்டு, 7 நாள் பயிற்சிக்காக 4 மையங்கள்  அமைக்கப்படும்.

செப்டம்பர் மாதத்திற்குள் மாணவர்கள் எண்ணிக்கை சரியாக இருப்பதை  ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும்  மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். அரசு பள்ளிகளில்  தொடக்க கல்வியில் கூடுதல் சேர்க்கை இருக்க வேண்டும் எனவும், கோடை  விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முன்பு தூய்மையாக வைத்திருக்க  ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மாற்றப்பட்ட பள்ளிச்சீருடைகள் வரும் 1-ம் தேதி முதல் வழங்கப்படும்.  மேலும் தனியார் பள்ளியில் கட்டணங்கள் வரைமுறைப்படுத்தப்படும்.  தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.  கட்டண வரைமுறை தொடர்பாக தனியார் பள்ளிகளில் ஆய்வு  மேற்கொள்வது குறித்து 2 நாள் சிறப்பு முகாம் அமைக்கப்படும்.  கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் சேர 1.32 லட்சம் பேர்  விண்ணப்பித்துள்ளனர் என அமைச்சர் கூறியுள்ளார். 

ஜூன் மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்