அரசு பள்ளிகளில் தொடக்க கல்வியில் கூடுதல் சேர்க்கை இருக்க வேண்டும் : அமைச்சர் செங்கோட்டையன்
புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் மாவட்ட தலைமை கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு, 7 நாள் பயிற்சிக்காக 4 மையங்கள் அமைக்கப்படும்.
செப்டம்பர் மாதத்திற்குள் மாணவர்கள் எண்ணிக்கை சரியாக இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் தொடக்க கல்வியில் கூடுதல் சேர்க்கை இருக்க வேண்டும் எனவும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முன்பு தூய்மையாக வைத்திருக்க ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
மாற்றப்பட்ட பள்ளிச்சீருடைகள் வரும் 1-ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும் தனியார் பள்ளியில் கட்டணங்கள் வரைமுறைப்படுத்தப்படும். தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கட்டண வரைமுறை தொடர்பாக தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது குறித்து 2 நாள் சிறப்பு முகாம் அமைக்கப்படும். கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் சேர 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என அமைச்சர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக