யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/5/18

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று பிற்பகலில் வினியோகம்

பிளஸ் 2 தேர்வு எழுதி யோருக்கான மதிப்பெண் சான்றிதழ், இன்று பிற்பகலில், பள்ளிகளில் வழங்கப்படுகிறது. ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் முதல், ஏப்., வரை நடந்தது.இதில், 8.60 லட்சம் மாணவர்களும், 40 ஆயிரம் தனித்தேர்வர்களும் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், ஏப்., 16ல், தேர்வர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்பட்டன. அதிலேயே மதிப்பெண் விபரமும் அனுப்பப்பட்டது.

பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்வியில் சேர வசதியாக, அவர்களுக்கு இன்று, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட உள்ளன.மாணவர்கள், தங்கள் பள்ளிகளிலும், தேர்வர்கள், தேர்வு எழுதிய மையங்களிலும், இன்று பிற்பகல் முதல் சான்றிதழை பெறலாம்.

'பள்ளிக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக