யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/7/18

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப்போகும் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி திட்டம்! என்னவென்று தெரியுமா?

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி யைமங்களை உருவாக்கும் செங்கோட்டையனின் திட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்க உள்ளது.

தற்போது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள்மாநிலம் முழுவதிலும் இருந்து சென்னை வந்தே தங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களும் புற்றீசல் போல் உருவாகி, மாணவர்களிடம் இருந்து ஏராளமாக பணம் கறந்து வருகின்றன.இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து திறமையான மாணவர்களுக்கு அவர்களின் மாவட்டங்களிலேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தைசெங்கோட்டையன் அறிமுகம் செய்ய உள்ளார்.இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாகும் நிலை இருக்கிறது.


இது குறித்த சென்னையில் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.இந்த மையங்களில் திறன் வாய்ந்த 100 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் அதிக அளவில் மாவட்ட நூலகங்களுக்கு வாங்கப்படும்.

இந்த பயிற்சி மையங்கள் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும். இந்த மையங்களில் கிராமப்புறமாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நல்ல முறையில் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார்

Matric School Teachers க்கு - புதிய பாடநூல் குறித்த பயிற்சி

இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்? 21ம் தேதி வெளியாகிறது அறிவிப்பு

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கோரும் வழக்கை, நாளை, உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளதால், பொது கவுன்சிலிங் அறிவிப்பு, 21ம் தேதிக்கு 
மாற்றப்பட்டுஉள்ளது.சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, 1.73 லட்சம் இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தள்ளி வைப்புசிறப்பு பிரிவினர், தொழிற்கல்வி மாணவர்கள், விளையாட்டு பிரிவினர் உள்ளிட்டோருக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் மட்டும், இந்த ஆண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை, 31க்குள், கவுன்சிலிங்கை நடத்தி முடித்து, ஆகஸ்டில் வகுப்புகளை துவங்க வேண்டும்.ஆனால், 'நீட்' தேர்வு பிரச்னையால், மருத்துவ கவுன்சிலிங் நடக்கவில்லை. இதனால், இன்ஜி., பொது பிரிவு கவுன்சிலிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கிற்குப்பின் அல்லது ஜூலை, 31க்கு பின், கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்றம்
இந்த வழக்கு, ஜூலை, 16ல் விசாரணைக்கு வந்து, நேற்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.நேற்று இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில், கூடுதல் விபரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை, நாளைக்கு தள்ளி வைத்து உள்ளது.இதனால், பொது பாடப்பிரிவுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பை, வரும், 21ம் தேதிக்கு, இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி மாற்றியுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைத்தால், கவுன்சிலிங் தேதியை நேற்று அறிவிக்கலாம் என, தமிழக அரசு முடிவு செய்திருந்த நிலையில், வழக்கின் விசாரணை தள்ளிப்போனதால், அறிவிப்பு வெளியாகவில்லை

19/7/18

Tab பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி! தேதிகள்அறிவிப்பு

தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட்பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள்பயிற்சி : 30, 31ம் தேதிகளில் நடக்கிறது.
தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட் கணினிகளை பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வரும் 30ம் தேதி
தொடங்குகிறது.


அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குனர் அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18ம் கல்வியாண்டில் உயர் தொடக்க நிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்காக புவியியல், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கான காணொலிகள் உருவாக்கப்பட்டு அவற்றை டேப்லெட் (கையடக்க கணினி) மூலமாக காண்பதற்கென ஒவ்வொரு நடுநிலைப்பள்ளிக்கும் ஒரு டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு வழங்கப்பட்டு இருக்கும் டேப்லெட்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ள ஆப் களை பயன்படுத்துவதற்காக மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி, மாவட்ட அளவிலான பயிற்சி 4 மண்டலங்களில் நடந்தது.


  இதில் 32 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வட்டார வள மையத்திலிருந்து 2  ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்இதன் தொடர்ச்சியாக வட்டார வளமைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக இரு பிரிவுகளாக வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் 2 நாட்கள் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட வேண்டும்இப்பயிற்சியில் 50 சதவீத நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 30ம் தேதியும், மீதமுள்ள ஆசிரியர்கள் 31ம் தேதியும் பங்கேற்க வேண்டும்வட்டார அளவிலான பயிற்சி எல்சிடி மற்றும் வைபை இணைப்பு இருக்கும் வகையில் அமைத்திட வேண்டியது அவசியம்.

இந்தபயிற்சியின்போது ஆசிரியர்களிடம் டேப்லெட் வழங்கப்பட்டு பயிற்சி நடத்தப்பட வேண்டும்2வது பிரிவில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களிடம் அந்தந்த பள்ளிக்குரிய டேப்லெட்டை உரிய பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டு வழங்க வேண்டும்பின்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளி பார்வையின்போது, பள்ளி இருப்பு பதிவேடு மற்றும் கால் பதிவேட்டில் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்எனவே மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிற்சியினை பெற்ற ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்களை கருத்தாளர்களாக பயன்படுத்தி வட்டார வள மைய பயிற்சிகளை சிறப்பாக நடத்த அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்மேலும் வட்டார வளமையங்களுக்கு டேப்லெட் வழங்கப்பட்டதற்கான பதிவேட்டின் நகல் ஒன்றினை தவறாமல் மாநில திட்ட இயக்குனரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் குறைந்தால் Deployment உறுதி : செப்.30க்குள் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை
குறைந்தால் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு தற்காலிக

பணிமாற்றம் செய்யப்படுவர்," என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் எச்சரித்தார்
சி.இ.ஓ., அலுவலகத்தில் மதுரை, மேலுார் கல்வி மாவட்டங்களின் அரசு உயர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கூட்டம் கோபிதாஸ் தலைமையில் நடந்தது. டி.இ.ஓ.,க்கள் அமுதா, ஜமுனா, நேர்முக உதவியாளர் சின்னதுரை பங்கேற்றனர்
சி.இ.ஓ., பேசியதாவது: ஜூலை 31க்குள் 'எமிஸ்' பணிகளை முடிக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2வில் ஒரு குரூப்பில் குறைந்தது 15 - 20 மாணவர் இருக்க வேண்டும்
செப்., 30க்குள் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் அதிக மாணவர் உள்ள பள்ளிக்கு மாற்றுப்பணிக்கு அனுப்பப்படுவர்.பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
ஆக.,14க்குள் வாசிப்பு திறனை அதிகரித்து, 'இன்ஸ்பயர்' விருதுக்கு அதிக மாணவர்களை தயார்படுத்த வேண்டும்
உரியநேரத்தில் ஆசிரியர் பள்ளிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும், என்றார்.தலைமை ஆசிரியருக்கு '34'ஒவ்வொரு மாதமும் தலைமையாசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 34 காலங்கள் கொண்ட படிவம் அளிக்கப்பட்டது
அதில் ஆசிரியர் வருகை விபரம், வருகை பதிவை முடிக்கும் நேரம், மருத்துவ விடுப்பு எடுத்த ஆசிரியர் விபரம், ஆசிரியர் கற்பித்தல் திறனை மதிப்பிடுதல் உட்பட விபரங்கள் கேட்கப்பட்டிருந்தது
இதைநிரப்பி சி.இ.ஓ.,விடம் நேரடியாக தலைமையாசிரியர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது
இதுபோன்ற படிவம் வழங்கி அறிக்கை விபரம் கேட்பது முதல்முறை," என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்

ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு!!!

புதுச்சேரி: 'அரசுபள்ளிகளில் கல்வித்தரத்தினை மேம்படுத்த மானிய தொகை 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உயர்த்தி அளிக்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்திற்கு
பதிலளித்து அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல் சூழலை மேம்படுத்திடவும், கல்வித் தரத்தினை மேம்படுத்திடவும், இந்த ஆண்டு பள்ளி மானியம், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு 25 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரை உயர்த்தி அளிக்கப்படஉ ள்ளது. இந்த நிதியை பள்ளியின் பராமரிப்பு, பயன்பாட்டு பொருட்கள், ஆய்வுக்கூடப் பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை வாங்க பயன்படுத்தி கொள்ளலாம். மாணவர் எண்ணிக்கை 1 முதல் 100 வரை- 25 ஆயிரம் ரூபாய், 100க்கு மேல் 250 வரை - 50 ஆயிரம் ரூபாய், 250க்கு மேல் 1000 வரை 75 ஆயிரம் ரூபாய், 1000க்கு மேல் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.பயோ மெட்ரிக் வருகைப் பதிவுஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க கைரேகை அடிப்படையிலான மின்னணு வருகை பதிவு இயந்திரம் அனைத்து அரசு பள்ளிகளிலும் பொருத்தப்படவுள்ளது.
காரைக்கால் பிராந்தியத்தின் பெருகிவரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, மத்திய மின் தொகுப்பில் ஒதுக்கியுள்ள மின்சாரத்தை பெறுவதற்கு, புதிதாக ஒரு தானியங்கி துணை மின் நிலையம் ரூ.48.17 கோடி செலவில் அமைக்க உத்தேசித்து, அதற்கான பணிகள் பவர் கிரிட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. துணைமின் நிலைய பணி செப்டம்பர் மாதம் முடிவடையும்.தொண்டமாநத்தத்தில் புதியதாக ஒரு துணைமின் நிலையம் ரூ.11.75 கோடி செலவில் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இத்துணைமின் நிலையம் இம்மாதம் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இந்ததுணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகத்திற்காக ரூ.5 கோடி செலவில் 22 கிலோ வோல்ட் மின்னுாட்டிகள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.பாகூர் தீயணைப்பு நிலையத்திற்கு இந்த ஆண்டு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும். தீயணைப்பு துறையில் நிலுவையிலுள்ள உபகரணங்கள் வாங்கவும், அத்தியாவசிய உபகரணங்கள் வாங்கவும், தற்போது உள்ள வாகனங்களை சரி செய்யவும் கூடுதல் நிதியாக ரூ.2 கோடி இந்த ஆண்டு வழங்கப்படும்.கடந்த 2015-16 கல்வியாண்டில் சுமார் 3427 இடங்கள் அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லுாரிகளில் இருந்தன. 2016-17 மற்றும் 2017-18 ம் ஆண்டுகளில் கூடுதலாக 1507 இடங்கள் உயர்த்தப்பட்டன. 2018-19ல் மேலும் 240 இடங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது மொத்தம் 5174 இடங்கள் உள்ளன.
அனைத்து கல்லுாரிகளிலும் வை-பை மற்றும் காணொலிக் காட்சிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.வரும் 2018-19 கல்வியாண்டில் காரைக்காலில் பட்டமேற்படிப்பு மையம் தொடங்கப்படும். காரைக்கால் பஜான்கோ கல்லுாரியிடம் இருந்து பெறப்பட்ட நிலத்தில், காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு அரசு மற்றும் சொசைட்டி கல்லுாரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த நிதியாண்டிற்குள் அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
துாய்மை இந்தியா திட்டத்தை பாகூர் பகுதியில் செயல்படுத்த 109.99 கோடியும், திருநள்ளார் பகுதியில் செயல்படுத்த 116.38 கோடி வரைவு திட்டத்திற்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'

சமூக வலைதளைங்களில்
பதிவாகும் தகவல்களை கட்டுப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை' என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர், எஸ்.எஸ்
. அலுவாலியா தெரிவித்தார்.'வாட்ஸ் ஆப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், கலவரத்தை துாண்டுதல், பயங்கரவாதத்தை பரப்புவது போன்ற, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய தகவல்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன. புதிய அமைப்பு

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை சேகரித்து ஆய்வு செய்யவும், அவற்றை கண்காணிக்கவும் 'சமூக வலைதள தகவல் தொடர்பு மையம்' என்ற புதிய அமைப்பை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. பேச்சு சுதந்திரம் இது தொடர்பாக, லோக்சபாவில் நேற்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர், எஸ்.எஸ்.அலுவாலியா அளித்த பதில்: மக்களின் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தையும், ரகசியங்களையும் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது.
சமூகவலைதளங்களில் பதியப்படும் கருத்து களை, கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ அரசு விரும்பவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை தேசத்துக்கு விரோதமாக வெளியாகும் தகவல்களை, பாதுகாப்பு அமைப்புகள் ஆய்வு செய்து, சட்டப்படி விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்.
சமூகவலைதளங்கள், இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டன. தங்கள் கருத்துகளை, எண்ணங்களை தெரிவிக்க, இதை ஒரு சாதனமாக, மக்கள் பயன்படுத்துகின்றனர்; சிலர், அதை தவறாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

5, 8ஆம் வகுப்புகளுக்கு 'அனைவரும் தேர்ச்சி' திட்டம் ரத்து!

Flash News : "No Work No Pay" வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவு - GOVT LETTER

12/7/18

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா..?



🍅 பதறாதீர்..!மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ..!

🌷ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால், என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப்போட்டு விட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள்.

🌷இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்..? யாரை அணுகவேண்டும்..?
இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா..?
இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன..?

ஏ.டி.எம். ஃபிட் கரன்சி,,!

🌷ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி. எம்.-ல் ரூபாய்த்தாள்களை லோடு செய்வதற்குமுன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM Fit Currency) மாற்றப்படுகின்றன.

🌷இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுவிடும். ஆர்.பி. ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின் பற்றியாக வேண்டும்.

🌷அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. 

🌷கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தா ல் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.

எப்படி வருகிறது..?

🌷எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது.

🌷Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்துவருகின்றன.

🌷இவர்களின் பணிவங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.

யாரை அணுகுவது..?

🌷வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ளநோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப்படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம்.

🌷ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

🌷பின்னர் ஏ.டி.எம்.லிங்டுபேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி. எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள்.

🌷அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

வங்கி நடைமுறைகள்..!

🌷ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம்.

🌷ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ளநோட்டுதானா என பரிசோதிப்பார்கள். அது கள்ளநோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். 

🌷கள்ள நோட்டு தான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள்.

🌷உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த்தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள்.

🌷இந் த விசாரணையில் கள்ளநோட்டை கொண்டு வந்தவர்மீது சந்தேகம் வந்தால் அவர்மீது வங்கியானது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.

எஃப்.ஐ.ஆர். ஃபைல்..!

🌷பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த்தாள்கள் கள்ளநோட்டுகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களின்மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும்.

🌷அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும்.

🌷தனது ஏ.டி. எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும்.

🌷வாடிக்கை யாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.

ஆர்.பி.ஐ.-ன் உதவி..!

🌷வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ளநோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென் று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

🌷அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம்.

🌷இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு,

www.rbi.org.in
www.paisabolthahai.rbi.org.in

என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.”

🌷இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்

1முதல்‌ 3ம் வகுப்பு வரை பாடத்திட்டம் எழுத தேவை இல்லை.

*ஒன்றா ம்வகுப்பு புதிய பாடநூல் சார்ந்த கருத்தாளர்களுக்கான பயிற்சியின் போது வழங்கப்பட்ட சில தகவல்கள்

*  1.புதிய கற்பித்தல் முறையில் 1-3 வகுப்புகளுக்கு Lesson plan எழுத
தேவையில்லை.

 2.Work done register தேவையில்லை, விரும்பினால் ஆசிரியர் எழுதி பராமரிக்கலாம் .

3.கம்பிப்பந்தல், கீழ்மட்ட கரும்பலகை, காலநிலை அட்டவணை, ஆரோக்கிய சக்கரம், சுயவருகைப்பதிவேடு ஆகியன பயன்படுத்த வேண்டும்

 4.CCE RECORD உண்டு

 5.இந்த ஆண்டுமுதல்  SKILLS ACHIEVEMENT RECORD or CHART என்ற ஒன்றை உருவாக்கி பயன்படுத்தவேண்டும்

6. புதிய கற்பித்தலுக்கென எந்தவொரு குழு அட்டைகளும் பயன்படுத்த  தேவையில்லை.

7.நான்கு & ஐந்து வகுப்புகளுக்கு SALM முறையில் கற்பித்து Lesson plan எழுதவேண்டும்

 மற்ற பிற செய்திகள், பயிற்சிகள், நிகழ்வுகள் வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியில் BRT & கருத்தாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும்.. *அதுவரை ஆவலுடன் காத்திருங்கள் காத்திருப்போம்.*

பிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் !!

*பயிற்சி தேதி மாற்றம்* பிரைமரி ஆசிரியர்களுக்கான இரண்டுநாட்கள்
பயிற்சி...
கட்டம்1: 16.07.2018, 17.07.2018),( திங்கள்,செவ்வாய்)

கட்டம் 2 ;
18.07.2018, 19.07.2018,(புதன்,வியாழன்)
அனைத்து ஒன்றியங்களுக்கும் பயிற்சி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பல வண்ண சீருடை : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசுபள்ளிகளில், பல வண்ண சீருடைகள் வழங்கப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன்
நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, 9, 10ம் வகுப்புகளுக்கு, ஒரு வகை நிறத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வேறு வகையான நிறத்திலும், சீருடைகளின் நிறம் மற்றும் உடை வடிவங்கள் மாற்றப்பட்டு உள்ளன.

அதேபோல், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், இந்த ஆண்டு, பச்சை நிறத்தில் சீருடைகள் மாற்றப்பட்டன.இந்நிலையில், மீண்டும் சீருடைகள் மாற்றப்படும் என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:தற்போதுள்ள சீருடை, ஒரே வண்ணத்தில் உள்ளதால், அவற்றுக்கும், தனியார் பள்ளி சீருடைக்கும் இடையே, பெரும் வித்தியாசம் உள்ளது.

இந்தவித்தியாசம் தெரியாத வகையில், பல வண்ணங்களில் இருக்குமாறு, சீருடைகள் மாற்றப்படும். வரும் கல்வி ஆண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு: சேமூரில் உள்ள அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வரும் முகமது யாசின் என்ற சிறுவன் சாலையோரம் கிடந்த ரூ.50,000-த்தை எடுத்து பள்ளியின் ஆசிரியர் மூலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தார்

Image may contain: 6 people, people standing and people sitting

திருவண்ணாமலை மாவட்ட அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்

Image may contain: 2 people

வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆரணிஅருணகிரிசத்திரம் பூந்தோட்டம் பகுதி கண்ணப்பன் தெருவில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.61 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய
அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கட்டடங்களை திறந்து வைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
ஜிஎஸ்டி வரியை எதிர்கொள்ளும் வகையில், 25 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் (சார்டர்டு அக்கவுன்டன்ட்) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது பிளஸ் 2 பயின்று வரும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் அவர்களுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும்.
1, 6, 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தின் மூலம் கணினி வழியில் பயிலும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படுகின்றன. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.500 கோடியில் இணையதள வசதியுடன் முற்றிலும் கணினிமயமாக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு அனைத்துப் பாடங்களும் புதிய பாடத் திட்டங்களாக மாற்றப்பட உள்ளது. ஆகையால், சுமார் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் இருந்து 600 பயிற்சியாளர்களை வரவழைத்து ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கிலத்தை சரளமாக பேசக்கூடிய வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்துகிறது.
பள்ளிகளில் கழிப்பறையை சுத்தம் செய்ய ஜெர்மனி நாட்டிலிருந்து 1,000 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எத்தகைய தேர்வுகளையும் எதிர்கொள்ள பாடத்திட்டம்'

மத்திய அரசின், எத்தகைய தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், புதிய
பாடத்திட்டம் அமையவிருக்கிறது,'' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அரசு பள்ளி கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், கோபியில், 2,500 மாணவர்களுக்கு, தணிக்கையாளர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மத்திய அரசின் ஜி.எஸ்.டி., புதிய வரி திட்டத்தின் மூலம், தமிழகத்தில், தகுதி வாய்ந்த தணிக்கையாளர்கள் தேவைப்படுகின்றனர். அடுத்தாண்டு முதல், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. அலைபேசி, ஸ்மார்ட் கணினிகளிலும் பாட திட்டங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மத்திய அரசின் எத்தகைய தேர்வுகளையும், மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும், ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினர்.

கிராமத்தினரே நடத்தும் பள்ளி; 25 குழந்தைகள்... ஒரே ஆசிரியர்!

சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்குப்பட்டி ஊராட்சி வி.புதுப்பட்டியில்தன்னார்வ நிறுவனம் கைவிட்ட பள்ளியை கிராமத்தினரே
நடத்துகின்றனர். இங்கு5 வகுப்புகள், 25 குழந்தைகள் படிக்கின்றனர். ஒரே ஆசிரியர் விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறார்.

மலையடிவார பகுதியான இங்கு 1986 ல் 'அசேபா' தன்னார்வ நிறுவனம் சார்பில் தொடக்கப் பள்ளி துவக்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. அந்நிறுவனம் பள்ளியை நடத்த முடியாமல் 2014 ல் கைவிட்டது. இதனால் 100 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து கிராமத்தினரே பள்ளியை நடத்துகின்றனர். தன்னார்வ நிறுவனத்தில் பணிபுரிந்த ஆசிரியர் வள்ளியம்மை விடுப்பு எடுக்காமல் 5 வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
அவர்கூறுகையில், ''துவக்கத்தில் ஐந்து ஆசிரியர்கள் இருந்தனர். பள்ளியை கைவிட மனமில்லாமல் தொடர்ந்து நடத்துகிறேன். தற்போது ஐந்து வகுப்புகள் உள்ளன. விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறேன்,'' என்றார்.
முன்னாள் ஊராட்சித் தலைவர் பழனி கூறியதாவது: இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். இரு ஆண்டுகளுக்கு முன், 50 குழந்தைகள் இருந்தனர். பள்ளி தொடர்ந்து நடக்குமா என்ற பயத்தில் சிலர் பக்கத்து ஊர்களில் குழந்தைகளை சேர்த்தனர். ஏழு கட்டடங்கள், ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. 'குறைந்தது 25 மாணவர்கள் இருந்தாலே அரசு பள்ளி துவங்கலாம்' என விதிமுறை உள்ளது.
தற்போது ஒரு ஆசிரியருக்கு தொகுப்பூதியம் தருவதாக அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். பள்ளியை அரசு ஏற்று நடத்தினால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், என்றார்.

ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் இயங்கும் பள்ளி: தொடக்கக் கல்வி இயக்குநர் ஆஜராக உத்தரவு

ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் பள்ளி இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் வரும் 18 - ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சின்ன கொடுங்கையூரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னையை அடுத்துள்ள புழல் அருகே கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு பாதுகாப்பான கட்டடங்கள் இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் இந்த பள்ளிக்கூடம் குறித்து திருவள்ளூர் மாவட்ட தலைமை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' எனக் கோரியிருந்தார்.

இந்தமனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பள்ளிக்கூடத்தின் தற்போதைய நிலை தொடர்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. புகைப்படங்களை பார்த்த நீதிபதி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல் மற்றொரு சம்பவம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன்கூடிய பள்ளிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? மேலும் இந்த பள்ளிக்கு எப்படி ஆண்டுதோறும் அங்கீகாரம் நீட்டிக்கப்படுகிறது? எனக் கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் வரும் 18 -ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

ஆசிரியர்கள் இன வேறுபாட்டுடன் செயல்படக்கூடாது - NCERT

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதியதாக
பள்ளிகளை துவக்குவதோடு, பள்ளிகளில் நிலவும் மத மற்றும் பண்பாடு ரீதியிலான பிரச்னைகளை களையும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட
வேண்டும்' என்று, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (என்.சி.இ.ஆர்.டி.,) பரிந்துரைத்துள்ளது!

'பொதுவாக, பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களை சிறுபான்மையின குழந்தைகள் சந்திப்பது ஒருபுறம் இருக்க, பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளிலேயே கலாசார மற்றும் மத ரீதியான வேறுபட்ட பிரச்சனைகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர். சில நேரங்களில், அவர்களது உணவு பழக்கமுறை கூட குற்றமாக கருதப்படும் சூழல் நிலவுகிறது. சில பிரிவினரால் வேறுபட்ட சீருடை பின்பற்றப்படுவதும் விரும்பத்தக்கதல்ல.
'சிறுபான்மையினரது கலாசார ரீதியான பண்டிகைகள் பள்ளிகளில் கொண்டாடப்பட வேண்டும். சிறுபான்மையினர் சந்திக்கும் இன பாகுபாடு மற்றும் பல்வேறு சவால்களை, பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்' என்றும் என்.சி.இ.ஆர்.டி., பரிந்துரைத்துள்ளது