யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/7/18

கிராமத்தினரே நடத்தும் பள்ளி; 25 குழந்தைகள்... ஒரே ஆசிரியர்!

சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்குப்பட்டி ஊராட்சி வி.புதுப்பட்டியில்தன்னார்வ நிறுவனம் கைவிட்ட பள்ளியை கிராமத்தினரே
நடத்துகின்றனர். இங்கு5 வகுப்புகள், 25 குழந்தைகள் படிக்கின்றனர். ஒரே ஆசிரியர் விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறார்.

மலையடிவார பகுதியான இங்கு 1986 ல் 'அசேபா' தன்னார்வ நிறுவனம் சார்பில் தொடக்கப் பள்ளி துவக்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. அந்நிறுவனம் பள்ளியை நடத்த முடியாமல் 2014 ல் கைவிட்டது. இதனால் 100 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து கிராமத்தினரே பள்ளியை நடத்துகின்றனர். தன்னார்வ நிறுவனத்தில் பணிபுரிந்த ஆசிரியர் வள்ளியம்மை விடுப்பு எடுக்காமல் 5 வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
அவர்கூறுகையில், ''துவக்கத்தில் ஐந்து ஆசிரியர்கள் இருந்தனர். பள்ளியை கைவிட மனமில்லாமல் தொடர்ந்து நடத்துகிறேன். தற்போது ஐந்து வகுப்புகள் உள்ளன. விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறேன்,'' என்றார்.
முன்னாள் ஊராட்சித் தலைவர் பழனி கூறியதாவது: இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். இரு ஆண்டுகளுக்கு முன், 50 குழந்தைகள் இருந்தனர். பள்ளி தொடர்ந்து நடக்குமா என்ற பயத்தில் சிலர் பக்கத்து ஊர்களில் குழந்தைகளை சேர்த்தனர். ஏழு கட்டடங்கள், ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. 'குறைந்தது 25 மாணவர்கள் இருந்தாலே அரசு பள்ளி துவங்கலாம்' என விதிமுறை உள்ளது.
தற்போது ஒரு ஆசிரியருக்கு தொகுப்பூதியம் தருவதாக அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். பள்ளியை அரசு ஏற்று நடத்தினால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக