யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/7/18

வடமேற்கு வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வரும் 13ம் தேதி வலுப்பெறும் என்பதால் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 3 வாரங்களுக்குப் பின் மீண்டும் வலுவடைந்துள்ளது. கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய பருவமழையால், ஜூன் மாதம் முதல் 2 வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள பகுதிகளில் அதிக மழை கிடைத்தது. ஜூன் 1 முதல் நேற்று வரை தமிழகத்தில் 64 மி.மீ மழை இயல்பாக பெய்ய வேண்டும். ஆனால் இயல்பைவிட 28 சதவீதம் அதிகரித்து, 81.9 மி.மீ நேற்று வரை பதிவாகியுள்ளது.கடந்த 3 வாரங்களாக பருவமழை வலுவிழந்து காணப்பட்டது.
 தற்போது மீண்டும் பருவக்காற்று வலுவடைவதால் மழை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. அதன்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கோவை பொள்ளாச்சி, தேனி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் கடந்த 3 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சம் கோவை சின்னக்கல்லாரில் 110 மி.மீ, வால்பாறையில் 90 மி.மீ, வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 80 மி.மீ, பொள்ளாச்சியில் 60 மி.மீ, நீலகிரி தேவலாவில் 40 மி.மீ, தேனி பெரியார் பகுதியில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து நேற்றும் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில்,  வடமேற்கு வங்க கடலில் ஆந்திரா கடல் பகுதி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி நிலவி வருகிறது. இது வரும் 13ம் தேதி வலுப்பெறும் என்று இந்திய  வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் திடீர் மழைசென்னையில் நேற்று மாலை 6.15 மணி அளவில் திடீரென மழை பெய்தது.
 தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், திருவான்மியூர், மெரினா காமராஜர்  சாலை உள்ளிட்ட பல இடங்களில் மாலை லேசான மழை பெய்தது. பின்னர் இரவு 8 மணி  அளவில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாசாலை, அண்ணாநகர்,  ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில்  விட்டு, விட்டு சில நிமிடங்கள் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. வெப்பச் சலனத்தால் நேற்று மழை பெய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக