யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/8/18

SEPTEMBER 2018 Diary:

1-Grievance day

5- Teachers Day

11-RL-Saamaupakarma

12-RL-Hijri new year


13-GH-Vinayagar chathurthi

21-GH-Moharam

17~22- I Term Exams

23~Oct 2- I Term holidays.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: ராமதாஸ் அறிக்கை!

ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த ஊழல்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமே இந்த முறைகேடுகளை கண்டுபிடித்திருக்கும் போதிலும், வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இத்தகைய முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 815 பேர் எழுதிய இத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஆண்டு ஜூன்30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகளில் தகுதியில்லாத மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அனைத்து விடைத்தாள்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.இதைத் தொடர்ந்து அனைத்து விடைத்தாள்களும் கணினி மூலம் மறு மதிப்பீடு செய்யப்பட்டதில்200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சியளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதுடன், இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய இரண்டிலும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரு தேர்வுகளிலும் விடைத்தாள்களைத் திருத்திப் பட்டியலிடும் பணியை மேற்கொண்ட டேட்டாடெக் மெத்தோடெக் என்ற தனியார் நிறுவனம் தான் முறைகேடுகளைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.விரிவுரையாளர் பணிக்கான தேர்வுகளில் சில மாணவர்களின் மதிப்பெண்களைப் பட்டியலிடும் போது, கூடுதலாக சில மதிப்பெண்களை சேர்த்துப் பதிவு செய்ததன் மூலம் அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களுக்குப் பதிலாக சரியான விடை எழுதப்பட்ட வேறு விடைத்தாள்களை கணினியில் உள்ளீடு செய்து கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போட்டித்தேர்வுகளைப் பொறுத்தவரை மிக முக்கியமான பணி என்பது மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தான். இந்தப் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தான் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தனியார் நிறுவனத்திடம் இந்தப் பணி எந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது என்று தெரியவில்லை.ஒருவேளை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதற்காக அந்தப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் கூட, அந்தப் பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவால் கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் தேர்வு மதிப்பெண் முறைகேடுகள் நிச்சயமாக நடந்திருக்காது. ஆனால், அவ்வாறு செய்யப்படாததை எதேச்சையாக நடந்த, சாதாரண விஷயமாகக் கருதமுடியாது.
தேர்வு முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததைப் பொறுத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்போதைய தலைவர் ஜெயந்தியும், முன்னாள் தலைவர் ஜெகநாதனும் வெளிப்படையான முறையில் தான் நடந்து கொண்டனர்.
ஆனால், இவர்களைத் தாண்டிஇந்த ஊழலுக்கு ஆட்சியாளர்கள் நிலையிலோ, அதிகாரிகள் நிலையிலோ யாரோ துணை போயிருக்க வேண்டும். இந்த ஊழல்களுக்கு முகவர்களாக செயல்பட்ட சிலரையும், கடைநிலை ஊழியர்கள் சிலரையும் கைது செய்து விட்டு, இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டித்து விட்டோம் என ஆட்சியாளர்கள் திருப்தியடைந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகத் தான் அர்த்தமாகும். இது குற்றவாளிகளை ஊக்குவிக்கும்.அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த அனைத்து ஊழல்களிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அம்பலப்படுத்தி தண்டனைப் பெற்றுத்தர வேண்டியது மிகவும்அவசியமாகும்.எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு உட்பட ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்துத் தேர்வுகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் ஊழல் செய்து அதிக மதிப்பெண் பெற்றமாணவர்களை தமிழக அரசு தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளின் அடிப்படை வசதி மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்பிய அவலம்: பொதுப்பணித்துறையில் சர்ச்சை:

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு கருவூத்திற்கு திருப்பி அனுப்பியிருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1289 உயர்நிலை பள்ளி மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு ேதவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் ஆய்வு கூடங்கள், நூலக அறை, கழிவறை, சுற்றுச்சுவர் கட்டுதல், குடிநீர் வசதிஉள்ளிட்ட பணிகளை 1257 கோடி செலவில் ேமற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக, நிதி நபார்டு வங்கியின் கடனுதவியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2017-18ம் நிதியாண்டில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முதற்கட்டமாக 100 கோடி மதிப்பிலான பணிகளுக்கு மட்டுமே டெண்டர் விட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், ஒரு சில பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. அதே போன்று மற்ற 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அடிப்படை வசதி கட்டமைப்பு டெண்டர் விட வேண்டிய நிலையில் இருந்தது.இதற்கிடையே ஜிஎஸ்டி காரணமாக மீண்டும் திட்ட அறிக்கை தயாரிப்பது மற்றும் ஏற்கனவே டெண்டர் விட்ட பணிகளுக்கு ஜிஎஸ்டியால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதால் பணிகள் நிறுத்தி வைப்பு, ஆளும் கட்சியின் வற்புறுத்தலின் பேரில் கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் 150 கோடிக்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.kaninikkalvi அந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் மேற்கொள்ளாததால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஜெயசிங் தலைமையில் கோட்ட செயற்பொறியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அரசு ஒதுக்கீடு செய்த ₹150 கோடி நிதியை சரண்டர் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதாவது, நடப்பாணடில் நிதியை பயன்படுத்த தவறியதால், அந்த நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. வரும் நிதியாண்டில் மீண்டும் திட்ட அறிக்கை தயார் செய்து இதற்கான நிதியை பெற இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

வேலைவாய்ப்பு: பெசில் நிறுவனத்தில் பணி! Click Here To Download PDF Notification :

சென்னையில் உள்ள Broadcasting Engineering Consultants India Limited என்ற நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 பணி: தரவுப் பதிவு அதிகாரி காலியிடங்கள்: 20 
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் நிமிடத்திற்குள் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன். 
சம்பளம்: ரூ.17,498 வயது: 21 - 30 
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு 
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14/9/2018
அனுப்ப வேண்டிய முகவரி: Assistant General Manager (HR) BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 மேலும் விவரங்களுக்கு 
 CLICK HERE TO VIEW&DOWNLOAD THE NOTIFICATION 

நெஞ்செரிச்சலுக்கு மருந்து!

நம்மில் பலருக்கு நெஞ்சு எரிச்சல் தீராத உபாதையாக

இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகக் கார உணவு, துரித உணவை அடிக்கடி சாப்பிடுவது, காலை உணவைத் தவிர்ப்பது மற்றும் சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.

இததகைய நெஞ்செரிச்சலில் இருந்து தப்பிக்க மருந்து மாத்திரை உபயோகிப்பதை தவிர்த்து இயற்கையாகவே எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

நெஞ்செரிச்சலை குணப்படுத்த

நெஞ்சு எரிச்சலின் போது ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனனில் ஆப்பிளில் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளதால் இது நெஞ்சு எரிச்சலை குணப்படுத்தும்.
நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு துளசி நல்ல மருந்தாகும். இந்த பிரச்சனைகள் வந்தால் துளசி இலை சாறை அருந்தினால் உடனே நிவாரணம் கிடைக்கும்.
சோம்பு ஜீரண சக்தி அதிக அளவு கொண்டது. நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, வாயில் போட்டு சிறிது நேரம் மென்று தின்று வந்தால் உடனே சரியாகும்.
நன்கு அரைத்த பட்டையின் பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று எரிச்சல் முற்றிலும் அடங்கும்.

மோர் மிகவும் குளிர்ச்சியானது என்பதால் மோரில், சிறு துண்டு இஞ்சி, மற்றும் கருவேப்பில்லையை அரைத்து குடித்து வந்தால், வயிற்றுக்கு இதம் அளிக்கும்.மேலும் கிராம்பு பொடியை நீரில் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும்.
நெஞ்சு எரிச்சல் ஏற்படும் பொழுது அதிக அளவு தண்ணீர் அருந்துவதின் மூலம் சரி செய்யலாம்.
சிறிதளவு சுக்கு மற்றும் பனை வெல்லமும் சேர்த்து காபி தயாரித்து சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
தவிர்க்க வேண்டியவை

வயிற்றில் அதிக அளவு உணவு இருக்கும் போது அஜீரணப் பிரச்சனை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. எனவே அதிக உணவு உண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
இறுக்கமான உடைகளை அணிவதால் வயிற்றின் இயற்கையான ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி உண்ணும் போது ஜீரண மண்டலம் பாதிப்பு அடைந்து நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
அவசரம் அவசரமாக உணவை மென்று விழுங்கும் போது வயிற்றிற்கு வேலை அதிகமாவதால் அதுவும் நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே உணவை மெதுவாக மென்று விழுங்குவது மிகவும் நல்லது.
சிகரெட்டில் உள்ள நிகோடின் தொண்டை, உணவுக்குழாய் போன்றவற்றை பலம் இழக்கச் செய்து, உணவு ஜீரணம் முழுமை அடையாமல் போவாதால் நெஞ்சு எரிச்சல் உண்டாகிறது.எனவே புகைபழக்கத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதிரடியாக விலை குறைக்கப்பட்ட விவோ மொபைல்கள்

இந்தியாவில் விவோ ஸ்மார்ட் போன்களின் விலைகள் அதிரிடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய ஸ்மார்ட் போன்களுக்கு இணையாக விவோ நிறுவனத்தின் மொபைல் போன்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களான விவோ வி9, விவோ ஒய்83 மற்றும் விவோ எக்ஸ்21 ஆகியோ மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ம் தேதி முதல் இந்த விலைகுறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ரூ.22,990, ரூ.14,990 மற்றும் ரூ. 35,990 ஆக இருந்த விவோ வி9, விவோ ஒய்83 மற்றும் விவோ எக்ஸ்21 மாடல்களின் விலை தற்போது ரூ.18,990, ரூ. 13,990 மற்றும் ரூ.31,990 ஆக குறைந்துள்ளது.

எக்ஸ்சேஞ் ஆஃபரில் உங்களுக்கு இன்னும் குறைவான விலையிலும் கூட கிடைக்கும். பொதுவாக சொன்னால் இது செம்ம ஜாக்பாட்.

30/8/18

ஆசிரியர் குறித்து போலீஸ் விசாரணை வழக்கு இருந்தால் விருது கிடைக்காது



நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, போலீஸ் விசாரணை சான்றிதழ் கட்டாயம் என, தேர்வு கமிட்டிக்கு, அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.நாடு முழுவதும், ஆசிரியர் தின விழா வரும், 5ம் தேதி கொண்டாடப்படுகிறது


 இந்த நாளில், மத்திய அரசின் சார்பில், ஆசிரியர்களுக்கு தேசிய விருதும், மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட உள்ளது.இந்தாண்டு, மாநிலம் முழுவதும், 369 பேருக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது


இந்த விருதை பெற, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசின், கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளி நேரத்தில், 'கட்' அடித்து விட்டு, வகுப்பு நடத்தாதவர்கள்


பள்ளி கல்வி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் உள்ளிட்ட, பல்வேறு பிரிவினரின் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன


இந்நிலையில், நல்லாசிரியர் விருதுக்கானோரை தேர்வு செய்யும் இறுதிகட்ட பணியில், மாநில கமிட்டி ஈடுபட்டுள்ளது


பள்ளி கல்வி செயலர், பிரதீப் யாதவ் ஆலோசனைப்படி, திறமையான, மாணவர்களுக்கு வழிகாட்டியாக, ஒழுக்கமாக திகழும் ஆசிரியர்களை மட்டுமே, விருதுக்கு தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது


தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பாக, அவர்களின் வீடு, பணியாற்றும் பள்ளி உள்ள பகுதி போலீசாரிடம், கட்டாயம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது


 மேலும், ஆசிரியர்கள் மீது, கிரிமினல் வழக்குகள், புகார்கள், போராட்டம் தொடர்பான வழக்குகள், குடும்ப பிரச்னைகள் மற்றும் தீய பழக்கங்கள் இல்லை என்பதை, எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்


விசாரணை நடத்தப்படாத ஆசிரியர்களின் பெயர், விருது பட்டியலில் இருக்கக் கூடாது என, விருது தேர்வு கமிட்டிக்கு, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்

57 ஆயிரம் அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்ற நடவடிக்கை - செங்கோட்டையன்

தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நாதியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஊராட்சிகளில் குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நல்லாசிரியர் விருதில் மீண்டும் பழைய முறையை கடைப்பிடித்து, 22 ஆசிரியர்களுக்கு விருது வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

1-ந் தேதி முதல் ரெயில் பயணிகளின் விருப்பத்தை பொறுத்து இன்சூரன்ஸ் :

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில் பயணத்தின்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் சிக்கி இறப்பவர்களுக்கும், படுகாயமடைபவர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.


இதற்காக ரெயில்வே நிர்வாகம் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரூ.1 மட்டும் காப்பீடு தொகையாக வசூலித்து வருகிறது. இணையதளம் மூலம் பெறப்படும் இ-டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டு வருகிறது. ரெயில்வே கவுண்ட்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு காப்பீடு கட்டண திட்டம் நடைமுறையில் இல்லை.

இந்தநிலையில் வருகிற 1-ந்தேதி முதல் இணையதளம் மூலம் இ-டிக்கெட்டுகள் பெறுபவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் பேரிலேயே காப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்காக காப்பீடு வேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு பகுதி இடம்பெற்றிருக்கும். அதில் பயணிகள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

காப்பீடு செய்தவர்கள் விபத்து ஏற்படும் பட்சத்தில் இறக்க நேரிட்டால் ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.7.50 லட்சமும் இழப்பீடு தொகையாக வழங்கப்படும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும் நிகழ்ச்சி அழைப்பு!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல்:
கல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பேட்டி.

புதுக்கோட்டை,ஆக.29:  தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வ மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஆசிரியர்களை ஒன்று திரட்டி *கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும்* என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் 1 அன்று காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல் நிகழ்வானது நடைபெற உள்ளது.
இது குறித்து கல்வியாளர் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் தங்களுடைய தன்னார்வமிக்க பணிகளால் பள்ளிகளையும், மாணவர்களையும் ,
பள்ளிகளுடன் சேர்த்து சமூகத்தையும் வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள் வெளியில் தெரியாத விண்மீன்கள்போல எண்ணற்ற ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சங்கமிக்க செய்து அவர்களுடைய அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை கல்வியாளர்கள் சங்கமம்  தொடர்ந்து ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது..
அந்த வகையில் எதிர்வரும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 1 அன்று காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களின் சங்கமத்தினை ஏற்பாடு செய்துள்ளது..
இதில் ஆசிரியர்களுடன் மாணவர்களும் இணைந்து சிறப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வருமானவரித்துறை கூடுதல்  ஆணையர் V. நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் அவர்களும்,
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்
பொ. பொன்னையா அவர்களும்,தமிழ்நாடு மைக்ரோசாப்ட் நிறுவன மேலாளர்  ஆர்.ஹரிஹரன் அவர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்..
இந்நிகழ்வில் ஆளுமைத்திறன் மிக்க ஆசிரியர்களது கலந்துரையாடலும்,  தனித்திறன் மிக்க மாணவர்களது பங்கேற்பும் அரங்கேற உள்ளது..
அத்துடன் மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி, இலக்குகளை தீரமானிப்பது எப்படி, திட்டமிட்டு அவற்றை அடைவது எப்படி  என்பது சார்ந்த வழிகாட்டல் கருத்தாடல்களும்,
ஆசிரியர்கள் குழுவாக இணைந்து செயல்படுவது எப்படி, தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது, தன்னார்வலர்களை எவ்வாறு பள்ளியின் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வது என்பது குறித்த கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து தன்னார்வமிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
ஆசிரியர்கள் அனைவரும் இலவசமாக
பங்கேற்கும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்வியாளர் சங்கம மாநில அமைப்பும் காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன எனக் குறிப்பிட்டார்.
மேலும்  இது போன்ற நிகழ்வுகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதோடு,ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனப்பான்மையோடு ஒன்று சேர்ந்து நிற்கும் இது போன்ற நிகழ்வுகள் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்றார்..

அரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்,' என அதிருப்தியை வெளிப்படுத்திய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'துாத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்டவிரோதமாக ஒப்படைக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி சண்முகராஜ் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக டிரைவர் பணி தேர்வுக்கு அழைப்பு கடிதம் வந்தது. 2013 நவ.,7 ல் நேர்காணல் தேர்வில் பங்கேற்றேன். பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், எவ்வித காரணமும் தெரிவிக்காமல் என்னை பணியில் சேர அனுமதிக்கவில்லை. துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் என்னை பணியில் சேர்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். 
இவ்வாறு சண்முகராஜ் மனு செய்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கமிஷனர்,'மனுதாரரை 2013 நவ.,7 ல் டிரைவர் பணிக்கு தேர்வு செய்தோம். அன்று நியமன உத்தரவு தயாரிக்கும்போதுதான், பணிக்குரிய குறிப்பிட்ட வயது வரம்பை மனுதாரர் கடந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் அவரது நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆனால், 2013 நவ.,7 ல் தேர்வு செய்யப்பட்ட உத்தரவு நகலை எங்கள் அலுவலக கோப்புகளிலிருந்து மனுதாரர் சட்டவிரோதமாக பெற்றுள்ளார்,'என பதில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி: அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்.பணி நியமன உத்தரவு நகல் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படாதபட்சத்தில், தன்னிடம் உள்ள நியமன உத்தரவு நகல் அடிப்படையில் மனுதாரர் பணி உரிமை கோர முடியாது. பயணிகளை பாதுகாப்பாக அழைத்துவரும் முக்கியத்துவம் வாய்ந்தது டிரைவர் பணி. மனுதாரரை தேர்வுக்கு அழைத்தது, அவர் நேர்காணலில் பங்கேற்றது உண்மை. 
தேர்வு முடிந்து, பணி நியமன உத்தரவு தயாரிக்கும் போதுதான் அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு மனுதாரர் வயது வரம்பை கடந்துவிட்டார் என கண்டறிந்துள்ளனர்.
பணிக்குரிய தகுதியை இழந்ததால், மனுதாரருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால், சில தவறான நபர்கள் மூலம் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரர் கைப்பற்றியுள்ளார்.இதுபோல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அரசு ஆவணத்தை ஒப்படைப்பது சமூகத்திற்கு ஆபத்து. சம்பவத்தின் போது நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்தவர்கள் யார்? பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்ட விரோதமாக ஒப்படைக்கக் காரணமானவர்கள் யார்? என்பதை கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் விசாரிக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

M.Ed படிப்பு - செப். 3 வரை அவகாசம்

எம்.எட்., மாணவர் சேர்க்கைக்கு, வரும், 3ம் தேதி
 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துஉள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், எம்.எட்., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க, ஆன்லைன் வாயிலாக பதிவு நடந்து வருகிறது.
இந்த பதிவு, கடந்த வாரம் முடிவதாக இருந்தது. ஆனால், பல்வேறு விடுமுறை, மழை வெள்ள பாதிப்பு போன்றவற்றால், வரும், 3ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை :

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் 
தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
 பிறந்த தேதி, தவறாக, இருந்தால், பணி நீக்கம்
மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு திட்டங் கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆதாரம்
இந்த விஷயத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை ஆதாரமாகபயன்படுத்தி,
பிறந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, புதிய கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு உள்ளன.
தமிழக அரசின்தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவுப்படி, அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ள தாவது:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் பிறந்த தேதியில் தவறு உள்ளதாக, திருத்தம் கோரி விண்ணப்பித்தால், அதற்கான ஆதார ஆவணமாக, சம்பந்தப்பட்டவர்களின், 10ம் வகுப்பு சான்றிதழை ஆய்வு செய்யவேண்டும்.
பள்ளி சான்றிதழ்
பத்தாம் வகுப்பு முடிக்க, 1977 வரை, 15 வயதும்; 1978 முதல், 14 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
எனவே, 10ம் வகுப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே, வயதில் திருத்தம் செய்ய வேண்டும். வயது மாற்றமாக இருந்தால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், விசாரணை முடியும் வரை, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இறுதி விசாரணைக்கு பின், வயதில் தவறு இருந்தால், பணி நீக்கம் செய்வதுடன், அவருக் கான அரசு பலன்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பாரத ஸ்டேட் வங்கி : 1295 கிளைகளின் IFSC கோடு எண்கள் மாற்றம்

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி
தனது 1295 கிளைகளின் IFSC கோடு எண்களை மாற்றி உள்ளது.

வங்கிப் பரிவர்த்தனைகளுக்காக ஒவ்வொரு வங்கியின் கிளைகளுக்கும் அடையாள எண்ணான ஐ எஃப் எஸ் சி கோட் எண் கொடுக்கப்படுகிறது. முக்கியமாக இணைய தள பரிவர்த்தனைகள் இதன் மூலமே நடைபெறுகின்றன. நாட்டின் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் இணை வங்கிகள் கடந்த வருடம் இணைக்கப்பட்டன. அத்துடன் பாரத பெண்கள் வங்கியும் இணைக்கப்பட்டதால் நாட்டின் மிகப் பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.


அதை ஒட்டி தற்போது 1295 கிளைகளின் அடையாள எண்ணை பாரத ஸ்டேட் வங்கி மாற்றி உள்ளது. இந்த மாறுதல் குறித்த அறிவிப்பு வங்கியின் இணய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அந்த இணைய தளத்தினுள் சென்று தங்கள் வங்கியின் கிளையின் பெயரை பதிந்தால் புதிய எண்கள் தெரியவரும் என வங்கி அறிவித்துள்ளது.

10 வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பதை இனிமேல் ஒவ்வொரு வருடமும் விலைவாசி உயர்வு அடிப்படையில் கொண்டு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு?

TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பி.எட் கணினி அறிவியல் பட்டதரிகளுக்கு அனுமதி கோரிக்கை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது..

இனி TN SCHOOL ATTENDANCE APP மூலம் வருகை பதிவு - தலைமை ஆசிரியர்கள் App Download செய்ய உத்தரவு - CEO செயல்முறைகள் (27.08.2018)

மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது :

ஆசிரியர் தினத்தையொட்டி, மாவட்ட வாரியாக, 30 மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், மேற்கொள்ளப் பட்ட மாற்றங்களில் முக்கியமாக, பொது தேர்வுகளுக்கான, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களில், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதில், ஆங்கில வழி மாணவர்களுக்கே, அதிக உதவித்தொகை கிடைத்தது. இதனால், அரசு பள்ளி மாணவர்களும், தமிழ் வழி மாணவர்களும் பின்தங்கினர். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆர்வமும், படிப்பின் மீது குறைந்தது.இதை மாற்றும் வகையில், தமிழ் வழியில் படித்து, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டில், தமிழ் வழியில் படித்து, முன்னிலை இடம் பெற்ற திறமையான மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தலா, 15 மாணவர்கள் என, ஒவ்வொரு மாவட்டத்திலும், 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு, காமராஜர் பெயரில் விருது மற்றும் சான்றிதழ்; பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 2வுக்கு, 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி நடக்கும் ஆசிரியர் தின விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 1,550 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் 1,550 இடங்கள் கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 11 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1,450 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு 881 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 569 இடங்களும் அடங்கும். இதனிடையே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் வழங்க கோரி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
இதனிடையே மதுரையைச் சேர்ந்த சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கும், கோவையை சேர்ந்த கோவை மெடிக்கல் சென்டருக்கும் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இரு சுயநிதிக் கல்லூரிகளிலும் தலா 150 இடங்கள் அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதேபோன்று பனிமலர் மருத்துவக் கல்லூரிக்கும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கும் தலா 150 இடங்களை அதிகரிக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. இதுதவிர மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாணவர்களுக்காக மட்டுமில்லாமல், ஊராட்சிக்கும் நல்லதை செய்த நல்லாசிரியை!

இந்தாண்டு தமிழகத்திலிருந்து நல்லாசியர் விருதை கோவை, மலுமிச்சம்பட்டி தொடக்கப்பள்ளை தலைமை ஆசிரியை ஆர் ஸதி பெறுகிறார்.

கடந்தாண்டு தமிழகம் சார்பாக 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்தாண்டு மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருது எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் சார்பாக 6 ஆசிரியர்கள் மட்டும் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் ஆசிரியை ஆர் ஸதிக்கு விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆர் ஸதி கூறியதாவது:
23 ஆண்டுகளாக வாரலாறு ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன். கடந்த 2009ல் பணி உயர்வு பெற்று மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றேன்.
நான் பணியில் சேர்ந்த போது 146 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் பேசினேன். அரசு வழங்கும் உதவிகள், சலுகைகள் குறித்தும், படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசி மாணவர்களை சேர்க்கைக்கு முயற்சித்தேன். தற்போது 270 மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்கள் பாடத்தை நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் டேப்லெட் முறையில் பாடத்தை நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியை செயல்படுத்தி வருகின்றோம் என தெரிவித்தார்.
மேலும் மலுமிச்சம்பட்டி ஊராட்சியை ‘திறந்தவெளி மலம்கழிப்பிடமற்ற ஊராட்சி’ ஆக மாற்ற மாணவர்கள் பெரும் பங்காற்றினர். இதற்காக இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் எனக்கும், மாணவர்களுக்கும் விருது வழங்கி பாராட்டினார்.
2016ம் ஆண்டு கோவையில் சிறந்த பள்ளியாக ஆட்சியர் விருது பெற்றேன். 2017ல் , தமிழகத்தில் சிறந்த பள்ளி என டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அளிக்கப்பட்டது என நெகிழ்ச்சியாக ஆசிரியை ஆர் ஸதி தெரிவித்துள்ளார்.