யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/9/18

ஆசிரியர் தினத்தையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை தொட்டு வணங்கிய மாவட்ட ஆட்சியர்!

சேலம் கோட்டை  மாநகராட்சி
 பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். 
பள்ளியின் மூத்த பெண் ஆசிரியை ஒருவரின் காலில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி விழுந்து ஆசி பெற்றார். மேலும், பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்து தனது ஆசிரியர் தின வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.
பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களுடைய வகுப்பறை ஆசிரியருக்கும் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியருக்கு பூங்கொத்து மற்றும் பரிசுகளை கொடுத்து வா
ழ்த்து தெரிவித்தனர்.





நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, ''மாணவ செல்வங்கள் ஒழுக்கத்தை கடைபிடித்து நன்றாக படிக்க வேண்டும் என்அறிவுரை கூறி அமர்ந்தார். அதையடுத்து பேசிய சேலம் கலெக்டர் ரோஹிணி, ''ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் நம்முடைய தவறுகளை சுட்டிக் காட்டும் போது கோபித்துக் கொள்ளாமல் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் நம்முடைய வளர்ச்சிக்கும் நன்மைக்குமே அக்கறையாக கண்டிக்கிறார்கள்'' என்று கூறினார்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்தம் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் விபரம்!!!

27 ஆண்டுகளாக வாங்கப்படாத மதிப்பெண் சான்றிதழ், பட்டய சான்று பெற்றுக்கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவிப்பு...!!

EMIS' பதிவேற்றப் பணிகளை ஆசிரியர் பயிற்றுநர்களிடம் ஒப்படைக்க கோரிக்கை!!!

6/9/18

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள் ..........

1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். (Maintain a good posture).


2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை  சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடலின் எடை தங்களுக்கு உள்ளதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.( Keeping a check on your weight ).

3.தொடர்ந்து ஒரேயிடத்தில்  நிற்பதினாலோ  அல்லது உட்கார்ந்து யிருப்பதினாலோ ஏற்படும்  கழுத்து வலி, முதுகு வலி வருவதை தவிர்க்க தங்களால் செய்யக்கூடிய சில உடற்பயிற்சி களை தொடர்ந்து செய்வதன் மூலம் கழுத்து வலியையும் முதுகு வலியையும் ( neck and pack pain )தவிர்க்க லாம்.

4.அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நிற்கும் நிலையை அல்லது அமர்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கைகால் களை நீட்டி உதைத்து சிறு பயிற்சியை மேற்கொள்ளுவது நலம். (Exercise regularly)

5. நாள் முழுவதும் தொடர்ந்து சத்தமாக பேசுவதினால் கற்றுக் கொடுப்பதினால் தொண்டை வறண்டு விடும். தொண்டை வலி தொண்டை புண் ஏற்படும். அதனால்
குரல் நாண்கள் (vocal chords)பாதிக்
கப்படும்.இதை தவிர்க்க அடிக்கடி தண்ணீரை சிறிதளவு உறிஞ்சி குடிக்க வேண்டும்( take a sip of water frequently ).

6. தொடர்ந்து அதிக சத்தமாய் பேசாமல் , கொஞ்ச நேரம் வாய்க்கு ஓய்வு தரும் போது குரல் தொடர்பான பிரச்சினை
களை தவிர்க்கலாம்.(not talking loudly and give rest to your voice will  avoid voice related problems).

7. ஒவ்வொரு ஆசிரியரும்/ஆசிரியையும் குறைந்த பட்சமாக எட்டு மணிநேரம் நன்கு தூங்கியெழும்போது அடுத்த நாள் அவர்கள் தாங்கள்  புத்துணர்ச்சியுடன் யிருப்பதை அவர்கள் உணருவார்கள்.( Getting sleep for eight hours so as to fresh for next day).

8. ஆசிரியர்கள்/ஆசிரியைகள் தங்களது கால்களுக்கு  ஏற்ற பொருத்தமான வசதியான செருப்புகளை, ஷூக்களை (Comfortable chappals /shoes ) அணிவதன் மூலமாக கணுக்கால் சுளுக்கு ,கால் வலி (ankle sprain & foot pain ) ஆகியவைகளை தவிர்க்கலாம்.

- இந்த பதிவு ஒரு  ஆங்கில செய்தித்தாளில் வந்த " Appreciating Mentors : Teachers, it is important to take care of yourselves " என்ற கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட தாகும்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் தவிப்பு!

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ரேஷன் பொருள் வாங்கக்கூடாது தேனி கலெக்டர் சுற்றறிக்கையால் பரபரப்பு!!!

ஆதார் இல்லாத மாணவர்களும் பள்ளியில் சேரலாம் : மத்திய அரசு

டில்லி.. ஆதார் இல்லாத மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுக்கக் கூடாது என பள்ளிகளுக்கு மத்திய அரசின் தனி நபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.


பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆதார் எண் அவசியம் என ஒரு சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. பல மாணவர்களிடம் ஆதார் எண் இல்லாததால் அந்த மாணவர்கள் பள்ளிகளில் சேர இயலாத நிலை ஏற்பட்டது. இது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதை மத்திய அரசின் தனி நபர் அடையாள ஆணையம் ஆய்வு செய்தது.

அதை ஒட்டி அந்த ஆணையம் இன்று அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் ஒரு சுற்றரிக்கை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில், "பல பள்ளிகளில் ஆதார் எண் இல்லாததால் மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த சுற்றரிக்கை மூலம் ஆதார் எண் இல்லாத மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பின்னர் ஆதார் எண்ணைப் பெற்று பிறகு அந்த எண்ணை இணைக்கலாம். அது வரை வேறு அடையாளங்களை பெற்று மாணவர்களை பள்ளியில் சேர்க்கலாம். தற்போது வங்கிகள், தபால் நிலையங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் ஆதார் முகாம்கள் நடைபெறுகின்றன. பள்ளிகள் இந்த முகாம்களின் உதவியுடன் மாணவர்களுக்கு ஆதார் பெற்றுத் தரலாம்" என குறிப்பிட்பட்டுள்ளது.

KVS - 8339 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.09.2018 :

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் இனி தேர்வு கிடையாது :

'பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, வழக்கமாக, செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டு முதல், இந்த தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும். 


தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூலையில் தேர்வு எழுதி, அதே ஆண்டில் கல்லுாரியில் சேரலாம். அரசு பள்ளிகளை தத்தெடுக்க அனுமதி கோரி, ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. இதற்காக, வட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர்.அவர்களின் தொடர்பு எண்கள், சில தினங்களில் வெளியிடப்படும். அதன் பின், பள்ளியை தத்தெடுக்க விரும்புவோர், நேரடியாக அவர்களை தொடர்பு கொள்ளலாம். பள்ளிகளை தத்தெடுக்கும் பணிக்கு, 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும்.பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்ட, 14417 என்ற எண்ணுக்கு, இதுவரை, 300 புகார்கள் வந்து உள்ளன. அவற்றின் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு:

பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான, செய்முறை தேர்வு, வரும், 18ல், துவங்குகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


இந்த மாதம் நடக்கும், 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு, விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு, 18 முதல், 20ம் தேதி வரை, அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.அறிவியல் செய்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், ஏற்கனவே நடந்த செய்முறை தேர்வில் பங்கேற்காத வர்கள், புதிய தேர் வர்கள் என, அனைவரும், இந்த செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இந்த தேர்வில் பங்கேற்க முடியாது. செய்முறை தேர்வு குறித்த விபரங்களை, மாவட்ட கல்வி அதிகரி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்துதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!

31/8/18

TNTET தகுதிதேர்விற்கானஅறிவிப்பு எப்போது?

TNTET தகுதிதேர்விற்கானஅறிவிப்பு எப்போது?
அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றிட
முதலில் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றிபெறவேண்டும். இந்தாண்டிற்கான தகுதிதேர்வு அக்.6 மற்றும் 7 (சனி,ஞாயிறு)  ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு தேர்வு அட்டவணையையும் வெளியிட்டார். 
ஆனால் தற்போது தேர்விற்கு 37 நாள் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எப்போதுமே தேர்விற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிப்பதற்கான செயல்பாடுகள் துவங்கும். பின் கடைசிதேதி, தேர்வு கட்டணம் செலுத்தும்தேதி  அறிவிக்கப்பட்டு இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படும். ஆனால் தேர்விற்கு குறுகிய அவகாசமே உள்ள நிலையில் இதுவரையில் தேர்வு குறித்த அறிவிப்பை அரசு அறிவிக்காததால் ஆசிரியராக ஆவதற்காக கனவு கண்டுகொண்டிருப்பவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குடைக்குள் சண்டை: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை!

பருவ மழைக்காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடர்பாடு மற்றும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக ஆய்வு அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இது தொடர்பாகப் பள்ளி கல்வித்துறை நேற்று (ஆகஸ்ட் 28) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவ, மாணவிகள் மிதிவண்டிகளில் வரும்போது சகதிகளில் சிக்கி வழுக்கி விழக்கூடிய அபாயம் மற்றும் குடை, மழைக் கோட்டு கொண்டு வருவது குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு குடையைக் கொண்டு வரும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைத் தவிர்க்க ஆலோசனை கூறவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மழையால் பாதிக்கப்படும் வகுப்பறையை மூடுவதுடன், மாணவர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழையால் பள்ளிச் சுற்றுச்சுவர் பாதிக்கப்படும் நிலையில், அதில் இருந்து 20 அடி தொலைவுக்கு மாணவர்கள் செல்லாமல் தடுக்க தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என்றும், பள்ளி வளாகங்களில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் நீர்தேக்கத் தொட்டிகளை மூடி பராமரிப்பதுடன், மாணவ, மாணவிகள் அருகில் செல்லாமல் பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி கட்டடங்களின் மேற்கூரையில் நீர் தேங்காதவண்ணம் அடிக்கடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் போது மாணவ, மாணவிகள் மழை மற்றும் கழிவுநீர்க் கால்வாய்கள் உள்ள இடங்களில் பாதுகாப்பாக கவனமாகச் செல்லவும் அறிவுரை வழங்க அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இடி, மின்னல் வரும்போது மரத்தின் கீழ் நிற்கக் கூடாது என அறிவுறுத்தவும் அதில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
பருவ கால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள், அவற்றுக்குக் காலதாமதமின்றி சிகிச்சை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு இணையான
 கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நாதியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஊராட்சிகளில் குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நல்லாசிரியர் விருதில் மீண்டும் பழைய முறையை கடைப்பிடித்து, 22 ஆசிரியர்களுக்கு விருது வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

'பயணிகளின் கனிவான கவனத்திற்கு..! இந்த குரலைத் தெரியும்... ஆளைத் தெரியுமா?

ரயில்வே ஸ்டேஷன் போனதும் நம்மையுமறியாமல்
ஒரு குரல் நம்மை ஈர்த்துக்கொள்ளும்..
                                  


சரளா சவுத்ரி குரல்:
"பயணிகளின் கனிவான கவனத்திற்கு..." இந்த குரலை கேட்டதும் ஸ்பீக்கரை திரும்பி பார்க்காத நபர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த குரல் நமது அன்றாட வாழ்வில் கலந்து விட்ட ஒன்று. ரயில் நிலையத்தில் பணிப்புரிபவர்களிடம் கேட்டு பாருங்கள் இந்த குரல் தான் எங்களுக்கு தாலாட்டு என்பார்கள்.
அப்படியொரு மென்மை, கம்பீரம் இரண்டுமே இருக்கும் அந்த குரலில். வெறும் 30 வினாடிகள் மட்டுமே அந்த குரலை அவ்வளவு எளிதாக பயணிகள் மறந்து விடமாட்கள்.நாள் ஒன்றுக்கு ஆயிரம் முறை ஒலிக்கும் "இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா..?
சரளா சவுத்ரி. 53 வயதாகும் இவர் 1982-ல் சென்ட்ரல் ரயில்வேக்கு அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் மேனுவல் தான். கம்ப்யூட்டர் கிடையாது. தற்செயலாய் இன்ஸ்பெக்சனுக்கு சென்றிருந்த ரயில்வே பொது மேலாளர் அட்ஸோத் பேனட்ஜி , இந்த குரலை கேட்டுவிட்டு உடனடியாக அதனை பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். மராத்தியில் ஒலிக்கு இவரது குரல் கணினி மூலம் எல்லா ரயில் நிலையங்களிலும் ஒலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆரம்பக காலத்தில் ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்து வந்த சரளா சவுத்ரி, மாருதி ட்ராபிக் தகவல்களை தினமும் காலையில் மக்களுக்கு அறிவிப்பார்.அதன் பின்பு தான், தனது தந்தையில் ஆசைப்படி ரயில்வே நிர்வாகத்தில் பணிப்புரிய தொடங்கினார்.
இவரின் குரலை பதிவு செய்த அன்று, அவருடன் பணிப்புரிந்த ஒட்டு மொத்த ஊழியர்களும் உன் குரலுக்கு நீ கண்டிபாக சுத்தி போட வேண்டும், கலாய்த்தார்களாம். சரளா தனது 49 ஆவது வயதில் சொந்த காரணங்களுக்காக ரயில்வே பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு துறைக்கு சென்றுவிட்டார்.
ஆனால், அவரின் குரல் இன்னமும் ரயில்வேக்கு பணியாற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது!!!

புதிதாக பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு 

முன் பிறந்திருக்க வேண்டும்). பெயர் நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடியில்  நடைபெறவுள்ளது.
* காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும்
* பெயர் சேர்க்க - படிவம் 6
* பெயர் நீக்க - படிவம் 7
* வாக்காளர் அட்டையில் திருத்தம் - படிவம் 8
* முகவரி மாற்றம் - படிவம் 8A.

"கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ? "கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு
பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.

    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது.சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.

நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.

 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.

ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குறிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.

   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375நாட்கள் சம்பளமும்
30ஆண்டுகள்பணி செய்திருந்தால்30×15=450நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.

   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு.அதிகப்பட்சம் 2000000(இருபது லட்சம்)மட்டுமே வழங்கப்படும்.

  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.

உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.

    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.

    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் சர்வீஸ் முடித்த பனிஷ்மென்ண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம்.(இப்போதைய DA 7%.)

  பேசிக்....................................40000
 DA7%(40000×7÷100)..............2800
மொத்தம்(40000+2800)........42800
26ஆல் வகுக்க=42800/26=1646ரூபாய்.

   இந்த1646தான் ஒருநாள் சம்பளம்.

15நாள் சம்பளம்=1646×15=24690ரூபாய்

35ஆண்டுசர்வீசுக்கு=24690×35=864150ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.

சுருக்கமாகச்சொன்னால்

(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்தஆண்டுகள்.இதுவே கிராஜூவிட்டி ஆகும்

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-31 "நகரும் சிலை" (30.08.2018) :



SEPTEMBER 2018 Diary:

1-Grievance day

5- Teachers Day

11-RL-Saamaupakarma

12-RL-Hijri new year


13-GH-Vinayagar chathurthi

21-GH-Moharam

17~22- I Term Exams

23~Oct 2- I Term holidays.