யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/9/18

தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை விண்ணப்பம் & விண்ணப்பம் அனுப்பும் போது பின்பற்ற வேண்டியவைகள்!!!

பள்ளிகளில் பிளாஸ்டிக் தடை எவர்சில்வர் வாட்டர் பாட்டில் விற்பனை அதிகரிப்பு :

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5 ஆயிரம் பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5,000-க்கும் மேற் பட்ட அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி யாக உள்ளதால் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த மையங் களை அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நிர்வகித்து வரு கின்றனர். அங்கன்வாடி பணியாளர் கள், உதவியாளர்கள் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வியை வழங்கி வருகின்றனர்.விழிப்புணர்வு பணிஇதுமட்டுமின்றி, வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட் டும் தாய்மார்களுக்குஇணை உணவு வழங்குவதுடன், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

5,000 அங்கன்வாடி பணியாளர்கள்

ஆனால், அங்கன்வாடி மையங் களில் ஏற்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப நட வடிக்கை எடுக்காததால் இந்தப் பணிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்படி, தமிழகம் முழுவதும் சிவகங்கை, திருவா ரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5,000-க் கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

5 மையங்கள் வரை...

காலிபணியிடங்கள் உள்ள மாவட்டங்களில், ஒரு அங்கன்வாடி பணியாளர், 5 மையங்கள் வரை நிர்வகிக்க வேண்டியுள்ளது. இத னால், அங்கன்வாடி மையங்களின் பலன்களை முழுமையாகப் பெற முடியாமல் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பாலூட்டும் தாய் மார்கள்பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டெய்சி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சிவகங்கை, திண்டுக்கல், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 5,000-க் கும் மேற்பட்ட அங்கன்வாடி பணி யாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.இதுதவிர, குறிப்பிட்ட கால இடைவேளியில் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றிய 2,000-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், இந்தப் பணியிடங்களும் அவ்வப்போது நிரப்பப்படவில்லை.இதனால், ஒரு அங்கன்வாடி பணியாளர் 5 மையங்கள் வரை நிர் வகிக்க வேண்டியுள்ளது. அன்றாடப் பணிகளை மேற்கொள்ளக்கூட சிரம மாக உள்ளது. எனவே, காலி பணியிடங்கள் அனைத்தையும்உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் பொறுப்பு

இதுகுறித்து , ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு. எனவே, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களும் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்றவர்களின் காலிப்பணி யிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும், தற்போது பணியில் இருக்கும் பணியாளர்களைக் கொண்டு அங்கன்வாடி மையங் களைச் சிறப்பாகவே நிர்வகித்து வருகிறோம். எந்த பாதிப்பும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்

மாணவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும் - ஆசிரியர்களுக்கு I.A.S அதிகாரி அட்வைஸ்:

போக்குவரத்துக் காவலராய் உருவெடுத்தப் பள்ளி ஆசிரியை!

ஒரு காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்பது மாலாவின் சிறுவயதுக் கனவு. இருப்பினும், தன் பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப, தன் கனவை விட்டுக்கொடுத்து, ஒரு ஆசிரியையாக மாறினார். காக்கியை ஒரு நாளும் அணிய இயலாது, தன்னுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது என எண்ணினார் மாலை.  ஆனால் விதி வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது.“2006 ஆம் ஆண்டில், தான் வேலை செய்த பள்ளிக்கு, தமிழ்நாடு போலீஸ் போக்குவரத்து பாதுகாவலர் அமைப்பிடமிருந்து, ஆசிரியர்களை, போக்குவரத்து பாதுகாவலர்களாக, தன்னார்வப் பணி செய்வதற்கு அழைப்பு விடுத்து, சுற்றறிக்கை ஒன்று வந்தது. நான் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக விருப்பப்பட்டது, எனது பள்ளிமுதல்வருக்கு தெரிந்திருந்ததால், இந்த தன்னார்வப் பணியை ஏற்க எனக்கு விருப்பமா எனக் கேட்டார். சிறிதும் தயக்கமின்றி, உடனே எனது விருப்பத்தைத் தெரிவித்தேன்”, எனக் கூறினார்.அன்றிலிருந்து, தான் எடுத்த முடிவிலிருந்து, மாலா, திரும்பிப் பார்க்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக, ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும், காக்கி உடை அணிந்து, மயிலாப்பூரின் பரபரப்பான சாலைகளில், போக்குவரத்தை நிர்வகிக்கின்றார். சென்னை மாநகரில் பணிபுரியும், இரண்டு பெண் போக்குவரத்து பாதுகாவலர்களில், மாலாவும் ஒருவர் ஆவார்.
"நான் பணியில் சேர்ந்த போது, சில பெண்கள் போக்குவரத்து காவலர்களாக இருந்தனர்,  ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் பணியிலிருந்து வெளியேறினார்கள்," என்கிறார் 37 வயதான, மாலா. மேலும் பல பெண்கள் இவ்வாறான தன்னார்வப் பணி செய்ய முன்நோக்கி வரவேண்டும் எனக் கூறுகிறார்.இரு குழந்தைகளின் தாயான, மாலா, திருமணமோ அல்லது குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்போ, அவரது தன்னார்வ சேவைக்கு இடையூறாக இருக்கவில்லை. மாங்காடு முதல் மயிலாப்பூர் வரை பயணம் செய்வது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை, அவருக்கு. இதைப்பற்றி அவர் கூறுகையில், “போக்குவரத்தைச் சீர் செய்து, மக்களைப் பாதுகாப்பாக பயணிக்க உதவி புரிகையில், தொலைதூரப் பயணம் ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை என்கிறார். மேலும், என் கணவர் மற்றும் குழந்தைகள், நான் செய்யும் சேவையை நினைத்து பெருமை கொள்கின்றனர், எனக்கு ஆதரவாகவும் திகழ்கின்றனர்”, என்று அவர் கூறுகின்றார்.ஒரு போக்குவரத்து வார்டன் என்ற முறையில், ஆர்.எஸ்.பீ கேடட்ஸ்களை முன்னின்று வழிநடத்துவது, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவது ஆகியவை மாலாவின் பொறுப்புக்களாகும். இதைத்தவிர, தான் வேலை செய்யும், மயிலாப்பூர் சில்றன்ஸ் கார்டன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, சாலை பாதுகாப்பு பற்றிய வழிமுறைகளை கற்றுக்கொடுக்கிறார். “மக்கள் பாதுகாப்பிற்கு, என்னுடைய சிறிய பங்களிப்பு தான், நான் செய்யும் இந்தப் பணி. விபத்து இல்லாத நகரமாக சென்னை கூடிய விரைவில் மாற வேண்டும் என விரும்புகிறேன்”, என்று கூறுகின்றார்.ஆசிரியர் மற்றும் போக்குவரத்துக் காவலர், எனப் பொது பணிக்குத் தன்னை அர்ப்பணம் செய்து, மக்கள் சேவையே மகேசன் சேவை, என்று வாழும் மாலா அவர்களை மனதாரப் பாராட்டுவோம். மேலும், மாலாவை முன்னுதாரணமாகக் கொண்டு, நாம் அனைவரும் தன்னார்வப் பணியில் ஈடுபட விழைவோமாக!

Flash News : அரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி :

அரசு பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும் 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
அரசு பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. ,சுமார் 900 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 15-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகேயுள்ள பள்ளிகளுடன் இணைக்கலாமா என்று அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர் சேர்க்கை 10-க்கும் குறைவாக உள்ள 890 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

அரசு தொடக்கப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் உடைய பள்ளிகளாக 892 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை குறையாமல் இருக்கவும் என்னென்ன வழிவகைகளை செய்யலாம் என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை :

              
பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முன் அனுமதி இல்லாமல் அங்கு கூடியதால் நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களை கலைந்து செல்லும் படி கூறினர். உரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசிய பின்பே போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுப்போம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா கூறியதாவது: கடந்த 2012ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்டையில் 16,500 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார்கள்.

 அதன்படி தமிழகம் முழுவதும் நேர்காணல் நடத்தி கிட்டத்தட்ட 14,500 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக மாதம் ஒன்றுக்கு ரூ.5500 சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர். ஊதிய உயர்வு எங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. 2200 ஊதிய உயர்வு சேர்த்து தற்போது 7,700 நாங்கள் சம்பளம் பெற்று கொண்டிருக்கிறோம். ஆனால் பள்ளியில் கோடைகால விடுமுறையில் பணி இல்லை என்பதால் எங்களுக்கு சம்பளம் கிடையாது. தற்போது விற்கும் விலைவாசி அடிப்படையில் குறைந்த சம்பளத்தை வைத்து கொண்டு சிரமப்பட்டு வருகிறோம். இதனால் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இறந்துவிட்டனர்.

 தொடர்ந்து நாங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு வருகிறோம். 6, 7 ஆண்டுகளில் 10 கல்வி அமைச்சர்கள் மாறிவிட்டனர். அவர்களை சந்தித்து எங்கள் கோரிக்கையை சொல்லும் போதெல்லாம் செய்கிறோம் செய்கிறோம் என்று சொல்கிறார்களே தவிர யாரும் செய்யவில்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இதுபோன்ற தொகுப்பூதியத்தில் இருப்பவர்களுக்கு 16,500 சம்பள உயர்வு கொடுத்து பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.  ஆனால் தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 முன்பு அதிமுக ஆட்சியில் 1996ல் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியனம் செய்யப்பட்ட ஆசிரியர்களாக இருந்து 2006 திமுக ஆட்சியில் 13500 பேரை பணி நிரந்தரம் செய்தனர். அதை முன் உதாரணமாக கொண்டு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். தற்போதுள்ள கல்வி துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த போது நிதி ஆதாரமில்லை என்று சொன்னார். தற்போது, 12,500 பேர் பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க போகிறோம். உறுதி மொழி அளிக்காவிட்டால் தொடர்ந்து நாங்கள் இந்த வளாகத்தில் இரவு பகலாக போராட்டத்தை தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

24/9/18

அரசு ஊழியர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? விரிவான விளக்கம்



வட்டி வீதம்:

கடன் தொகையில்

🌷முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 % 
50,001 முதல் 1,50,000 வரை : 7% 
1,50,001 முதல் 5,00,000 வரை: 9% 
5,00,000க்கு மேல் : 10%

🌷இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.

கடன் வரம்பு:

🌷அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. 

🌷கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். 

🌷கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும்.

யாரெல்லாம் கடன் பெறலாம்?:

🌷சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

கடனின் பல்வேறு பிரிவுகள்:

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.

2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.

3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.

4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.

5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.

6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.

7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.

8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.

9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.

10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்:

🌷வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். 

🌷வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.

மனை வரைபடம்

வீட்டு வரைபடம்( உள்ளாட்சி அனுமதியுடன் )

கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு

மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று

அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )

அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று

உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்

கடன் ஏற்பளிப்பு:

🌷மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். 

🌷படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும்.

🌷முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும்.

🌷இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். 

🌷வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும்.

🌷ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். 

🌷இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.

கடன் பிடித்தம்:

🌷ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும்,

🌷 புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும். 

🌷இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்.

🌷இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். 

🌷எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். 

🌷சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும்.

காப்பீடு:

🌷வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும்.

🌷 காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும்.

🌷 கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சிறப்பு குடும்ப நலத்திட்டம்:

🌷வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும். 

🌷கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 

2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 

3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.

PF - வருங்கால வைப்பு நிதி கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஒரு நிறுவனத்தில் ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்குப் பிஎப், மருத்துவக் காப்பீடு, பயணப்படி, பொழுதுபோக்கு படி போன்ற நன்மைகள் அளிப்பார்கள். ஆனால் அவர்கள் அளிக்கும் பிஎப் கணக்கில் உள்ள 6 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு பற்றி மட்டும் பலருக்குத் தெரியாது.


1976-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கை நிர்வகித்து வருபவர்களுக்கு EDLI எனப்படும் பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பிஎப் கணக்கு வைத்துள்ள எல்லா ஊழியர்களும் பயன்பெறமுடியும்.

எப்படி இந்தக் காப்பீட்டிற்கான பங்களிப்பை அளிப்பது?
ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு எப்படி ஈபிஎஸ் எனப்படும் பென்ஷன் பங்களிப்புப் பிடித்தம் செய்யப்படுகிறதோ அதே போன்று EDLI-க்கான பிரீமியமும் செலுத்தப்படுகிறது.

EDLI பிரீமியத்தினை எப்படிச் செலுத்துவது?
EDLI பிரீமியத்திற்கான தொகை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். பிஎப் சந்தார்களின் சம்பளத்தில் இருந்து இதற்காக எந்தக் கூடுதல் தோகையும் பிடித்தம் செய்யப்பட மட்டாது.

நிறுவனங்கள் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பு எப்படிப் பிரிகிறது?
பிஎப் கணக்கில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதமும் செலுத்தப்படும் என்றும் பொதுவாக நாம் அறிவோம். ஆனால் நிறுவனம் நமக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் 8.33 சதவீதம் பென்ஷனுக்காகவும், 3.67 சதவீதம் ஈபிஎப் பங்களிப்பு, 0.51 சதவீதம் EDLI பிரீமியம், 0.85% ஈபிஎப் அட்மின் கட்டணங்கள், 0.01% EDLI கட்டணங்களாகச் செல்கிறது.

EDLI காப்பீடு எப்படிக் கணக்கிட்டு அளிக்கப்படுகிறது?
EDLI காப்பீடு பிஎப் சந்தாதார் இறந்த பிறகு அவரது 30 மடங்கு அடிப்படை சம்பளம் + அகவிலைப்படியைக் கணக்கிட்டு அளிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் பொனஸ் தொகையாக 1,50,000 ரூபாய் அளிக்கப்படும். காப்பீடு பிரீமியம் தொகை அனைவருக்கும் சமமானதே ஆகும்.

பிஎப் சந்தாதார் இறக்க நேர்ந்தால் EDLI காப்பீடு தொகையைப் பெறுவது எப்படி?
ஈபிஎப் கணக்குச் சந்தாதரகள் இறக்க நேர்ந்தால் நாமினிக்கள் இந்தக் காப்பீட்டுப் பணத்தினைத் திரும்பப் பெற முடியும். ஒருவேலை நாமினி இல்லை என்றால் சட்டப்பூர்வமான குடும்ப உறுப்பினர்கள் காப்பீடு தொகையினைத் திரும்பப்பெறலாம்.
அதற்கு நாமினி அல்லது சட்டப்பூர்வமான குடும்ப உறுப்பினர்கள் படிவம் 5-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

காப்பீடு தொகையைத் திரும்பப் பெறும் போது கவணிக்க வேண்டியவை?
EDLI காப்பீட்டினை பெறும் போது பிஎப் சந்தாரர் இறக்கும் வரை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்து இருக்க வேண்டும். படிவத்தில் நிறுவனத்தின் அத்தாட்சி இருக்க வேண்டும். நிறுவனத்தில் அத்தாட்சி பெற முடியவில்லை என்றால் கெசட் அலுவலரிடம் பெறலாம்.

தேவையான ஆவணங்கள்
1) இறப்புச் சான்றிதழ்
2) நாமிக்கள் மேஜராக இல்லாத போது பாதுகாவலர் நிலை சான்றிதழ் கட்டாயம்.
3) கேன்சல் செய்யப்பட்ட செக்

உதாரணம்
பாபுவின் மாத சம்பளம் 15,000 ரூபாய். ஈபிஎப், ஈபிஎஸ், EDLI திட்டங்களில் இவரது பெயரில் பங்களிப்புகள் உள்ளது. பணிக் காலத்தில் இவர் இறந்துவிடுகிறார். இவரது நாமினி EDLI காப்பீடு தொகையினைப் பெற முயலும் போது (30 x Rs.15,000) + (Rs.1,50,000) = Rs.6,00,000 அல்லது இதற்கு இணையான ஒரு தொகையினைக் காப்பீடாகப் பெறலாம்

தரம் உயர்த்தப்பட்ட 200 அரசு பள்ளிகளில் 'அட்மிஷன்' போட்டாச்சு : ஆசிரியர்களை பணியிடங்கள் பல காலியாக உள்ளன

தரம் உயர்த்தப்பட்ட 200 அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்ந்தும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாத மர்மம் நீடிக்கிறது.நடப்பு ஆண்டில் 100 அரசு பள்ளிகள் மேல்நிலையாகவும், 100 பள்ளிகள் உயர்நிலையாகவும் ஆக.,7ல் தரம் உயர்த்தப்பட்டன.


மேல்நிலையில் தலா ஆறு வீதம் 600, உயர்நிலையில் தலா ஐந்து வீதம் 500 ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.ஆனால் மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் இதுவரை பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேல்நிலையில் தலைமை ஆசிரியர் பணியிடமும் காலியாக உள்ளது. சமீபத்தில் நடந்த பதவி உயர்வு கலந்தாய்விற்கு பின் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பல காலியாக உள்ளன.

இதனால் மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறும் மனநிலையில் உள்ளனர். இதை சரிக்கட்ட ஒரு ஆசிரியர் இரு பள்ளிகளில் (மாற்றுப் பணி) பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலர் பிரபாகரன், மாவட்ட செயலர் சரவணமுருகன் கூறுகையில், ''ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் கவலைக்கிடமாக உள்ளன. மாற்றுப் பணியால் இரு பள்ளியிலுமே பாடம் நடத்துவது சவாலாக உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்,'' என்றனர்.

அக்.,1 முதல் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைப்பு : மாவட்ட அலுவலகங்கள் உதயம்

செயல்படவுள்ளன.கல்வித்துறையில் 1975ல் தனி இயக்குனரகமாக தேர்வுத்துறை உருவானது. சென்னை, மதுரை உட்பட 7 மண்டல அலுவலகங்கள் துணை இயக்குனர் கீழ் செயல்பட்டன.


இதன் மூலம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உட்பட 40 வகை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு முடிவு, மதிப்பெண் சான்றிதழ், மறுகூட்டல், விடைத்தாள் நகல் வழங்கல் பணிகளில் இத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டு மாவட்ட அலுவலகங்கள் துவங்கப்படுகின்றன.

இதற்காக புதிதாக உதவி இயக்குனர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் நியமிக்கப்படவுள்ளனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்.,1 முதல் 32 மாவட்டங்களிலும் புதிய அலுவலகங்கள் செயல்பட சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது,' என்றார். மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஆர்.எம்.எஸ்., ரோட்டில் செயல்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், தேர்வுத்துறை அலுவலகமாக செயல்படும்.

புத்தகம் எழுதியதற்கு ஊதியம் ஆசிரியர்களுக்கு கிடைக்குமா?

புதிய பாடத்திட்ட புத்தகம் எழுதியவர்களுக்கு, உரிய தொகை வழங்காததால், அப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், இந்த ஆண்டு அமலுக்கு வந்துள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, அடுத்த கல்வியாண்டில் அமலாகிறது.

அதற்கும் சேர்த்து, புதிய புத்தகங்கள் எழுதும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், பேராசிரியர்களும், ஆசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து, புத்தகம் எழுதும் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
இந்த பணியில், அனுபவமும், நிபுணத்துவமும் பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகிறோம். இரவு, பகல் பாராமல் பாடங்களை எழுதிஉள்ளோம். இதற்காக, பல்வேறு புத்தகங்களையும், தரவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.ஆனால், ஆசிரியர்களுக்கான உழைப்பூதியமோ, தனி சம்பளமோ வழங்கப்படவில்லை. தினமும், 500 முதல், 1,000 ரூபாய் சம்பளம் நிர்ணயித்து, கையெழுத்து மட்டும் பெற்றுஉள்ளனர்.ஆனால், கடந்த ஆண்டு புத்தகம் எழுதும் பணியில் ஈடுபட்டதற்கே, இன்னும் சம்பளம் வழங்கவில்லை.ஆசிரியர்கள், தங்களின் பள்ளி வேலை நேரம் போக, மற்ற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், இதில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு உரிய கவுரவமும், ஊக்கமும் அளிக்க வேண்டிய நிலையில், ஊதியமோ, செலவு தொகையோ கூட வழங்காமல் இருப்பது, வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள்-கடும் கொந்தளிப்பு- நவம்பர் 27 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பு!!

800 கணினி ஆசிரியர்கள் பணியிடம் காலி: மாணவர்களின் கல்விநிலை கேள்விக்குறி.. செய்தி:தினகரன் நாளிதழ்

டிவி நிகழ்ச்சியினால் பள்ளி மாணவருக்கு நேர்ந்த விபரீதம்!

டிவி நிகழ்ச்சியினால் நேர்ந்த விபரீதம்!

தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சியைப் பார்த்து வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைக்க முயற்சித்தபோது பள்ளி மாணவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஊரப்பாக்கத்தை அடுத்த ஐயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் வில்சன். இவர், தனியார் ஹோட்டலொன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செம்மஞ்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகனான ஜெபின், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.


காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி விடுமுறை தொடங்கியுள்ளதால், இன்று (செப்டம்பர் 22) வீட்டில் தனியாக இருந்தார் ஜெபின். அப்போது, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான சாகச நிகழ்ச்சியை அவர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அதனால் தூண்டுதலுக்கு ஆளான ஜெபின், வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடல் முழுவதும் தீ பரவியதில் படுகாயமடைந்த ஜெபின், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சமூகச் செயற்பாட்டாளர் ஈசன் இளங்கோ அவர்களிடம் பேசினோம். அவர் கூறுகையில், “ஊடகங்களில் முன்பெல்லாம் இது மாதிரியான நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும்போது, இந்த நிகழ்ச்சிகளைச் செய்து பார்க்க வேண்டாம் என்று சமூக அக்கறையுடன் டைட்டில் போடுவார்கள். அது மட்டுமல்லாமல், ஊடகங்களுக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும். “இது மாதிரியெல்லாம் செய்யாதீர்கள்; ரொம்ப ஆபத்தானது; வீட்டில் இருக்கிறவர்கள் தனியாக எதுவும் செய்ய வேண்டாம்” என்று சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே சொல்வார்கள். அல்லது அந்த நிகழ்ச்சியின் அடியில் எழுத்தில் அந்த தகவல் இருக்கும். தற்போது இதுமாதிரி எதுவும் போடுவதில்லை” என்று தெரிவித்தார்.

தற்போது, ஊடகங்கள் பொறுப்பற்ற தன்மையோடு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். “இது மாதிரியான சாகசங்கள் செய்தே ஆக வேண்டும் என்று எந்தவிதக் கட்டாயமுமில்லை. இதில் என்ன அவசியம் உள்ளது. இது போன்ற முட்டாள்தனமான விஷயங்களைச் செய்யக்கூடாது. இது மாதிரி செய்கிறவர்களை ஊடகங்களும் அங்கீகரிக்கக்கூடாது” என்றார் ஈசன் இளங்கோ.

பாலியல் தொல்லை கொடுக்கும் மாணவர்கள் பட்டியல் தயாரித்து கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு

தனி ஊதியம் 2000 பதவி உயர்வில் செல்லும் போது தொடர இயலாது...நிதித்துறை பதில்..

ஆசிரியர்களுக்கு 20 நாட்கள் கலை பயிற்சி :

மத்திய கலாசார மையம் சார்பில், ஆசிரியர்களுக்கு, 20 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது

 மத்திய அரசின் கலாசாரம் மற்றும் பயிற்சி மையம் சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும், 20 நாட்கள் கொண்ட ஒருங்கிணைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது

 இதில், கலை மற்றும் கலாசாரம் குறித்து, மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பயிற்சி வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராஜஸ்தான், தெலுங்கானா, அசாம் உள்ளிட்ட மண்டல அலுவலகங்களில், பயிற்சி வழங்கப்படுகிறது.

பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை தேர்வு செய்து, பரிந்துரை செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது


*SOURCE DINAMALAR WEBSITE*

9, 10, +1,+2 வகுப்புகள் கணினிமயமாக்கம்"விரைவில் "கணினி ஆசிரியர் தேர்வு" செய்யப்படும் அமைச்சர் செங்கோட்டையன்.!!


மாநகர பஸ்களில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.1300 ஆக உயர்கிறது

டீசல் விலை உயர்வால் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் கடும் எதிர்ப்புக்கு இடையே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னையில் 3,200 மாநகர பஸ்கள் ஓடுகின்றன. நாள்தோறும் 40 முதல் 45 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
பஸ் கட்டண உயர்வுக்கு முன் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.85 கோடி வருவாய் கிடைத்தது. பஸ் கட்டணம் உயர்த்திய பின்பு எதிர்பார்த்ததை விட வருவாய் ரூ.2.3 கோடியாக குறைந்தது. கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் மின்சார ரெயில், இரு சக்கர வாகனம் போன்ற மாற்று பயணங்களுக்கு மாறியதால் இந்த இழப்பு ஏற்பட்டது.
தற்போது மெல்ல மெல்ல வருவாய் சரிவில் இருந்து மாநகர பஸ்கள் மீண்டு வருகிறது. ஷேர் ஆட்டோ கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வால் மீண்டும் மாநகர பஸ்களுக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே மாநகர பஸ்களில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாதாந்திர பாஸ் ரூ.1000-க்கும் வழங்கப்பட்டு வருகிறது.


இது வழக்கமான பயண கட்டணத்தை விட குறைத்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் மாநகர பஸ்களில் பயணம் செய்வோர் பாஸ்களை எடுத்து பயணம் செய்கிறார்கள். இந்த பாஸ்களில் குளிர்சாதன பஸ்கள் தவிர மற்ற பஸ்களில் விருப்பம்போல் பயணம் செய்யலாம்.
பஸ் பாஸ் வழங்கு வதாலும் மாநகர போக்கு வரத்து கழகக்துக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால் பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாஸ் ரூ.50-ஐ விட மாதாந்திர பாஸ் ரூ.1000வழங்குவதில்தான் அதிக இழப்பு ஏற்படுகிறது. இதனால் மாதாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது மாதந்தோறும் 1,20,000 பேர் மாதாந்திர பாஸ் பயன்படுத்துகிறார்கள். மாதாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,300 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த யோசனைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தினால் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.
இதுபற்றி மாநகர போக்கு வரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “மாதாந்திர சீசன் கட்ட ணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அதுபோன்ற எந்த தகவலும் அரசிடம் இருந்து மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.