யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/11/18

அரசு ஊழியர்களுக்கு 'ஐ.டி., கார்டு' கட்டாயம்

சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பெரும்பாலும், தங்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதில்லை. இதனால், ஊழியர்கள் யார், பொதுமக்கள் யார் என, பிரித்து பார்க்க முடியவில்லை. 

இந்நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்தே பணியாற்ற வேண்டும் என, இந்த ஆண்டு, ஜூலையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவை பின்பற்றி, அனைத்து பள்ளி, கல்லுாரி அலுவலகங்கள் மற்றும் அரசின் பிற துறை அலுவலகங்களில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து, பணியாற்ற வேண்டும் என, அரசு சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஓய்வூதியர் வாழ்நாள் சான்று கருவூல ஆணையர் அறிவிப்பு

சென்னை:'ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றை, அடுத்த ஆண்டு சமர்ப் பிக்க வேண்டும்' என, கருவூல கணக்கு ஆணையர், ஜவகர் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழக அரசின் ஓய்வூதியர்களில் சிலர், கடந்த ஆண்டு வரை, வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அவர்களுடைய சிரமங்களை குறைக்க, பொதுத்துறை வங்கி திட்டத்தின் வழியே, ஓய்வூதியம் பெற்ற, 70 ஆயிரம் பேர், இந்த ஆண்டு முதல், கருவூலத்துறை திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள், தற்போது, மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவற்றின் வழியே, ஓய்வூதியம் பெறுகின்றனர். பொதுத்துறை வங்கி திட்டத்தில் உள்ள, தமிழக அரசு ஓய்வூதியர்கள், கடந்த ஆண்டு, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில், தங்கள் வாழ்நாள் சான்றை, வங்கிகளில் அளித்து வந்தனர்.தற்போது, அவர்களுடைய அனைத்து பதிவேடுகளும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. 
எனவே, அடுத்த ஆண்டுக்கான, தங்கள் வாழ்நாள் சான்றை, தங்களது ஓய்வூதிய அலுவலகம், மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் ஆகியவற்றில், 2019 ஏப்., 1 முதல், ஜூன், 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

அசல் சான்றிதழை வாங்கி வைக்க கல்லுாரி, பல்கலைகளுக்கு தடை

மாணவர்களின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ள, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது.

கல்லுாரிகள் மற்றும் பல்கலை களில் இருந்து, வேறு கல்லுாரிக்கு மாறும் மாணவர்களுக்கு, உரிய அசல் சான்றிதழ்களை தருவதில்லை என்றும், முழுமையாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்குவதில்லை என்றும், புகார்கள் எழுந்துள்ளன.இதையடுத்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., தரப்பில், புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, யு.ஜி.சி.,யின் செயலர், ரஜினிஷ் ஜெயின் கூறியிருப்பதாவது:கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இருந்து, வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாறும் மாணவர்களுக்கு, அவர்களுக்கு சேர வேண்டிய கட்டணத்தை, உடனடியாக வழங்க வேண்டும். கட்டணத்தை தராமல் இழுத்தடிக்க கூடாது.
அதேபோல, மாணவர் சேர்க்கையின் போது, சான்றிதழ்களை வாங்கி ஆய்வு செய்து, மீண்டும் அவர்களிடம் வழங்கி விட வேண்டும். தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன், மாணவர் களின் சுய கையொப்பம் மற்றும் உறுதி கடிதம், பெற்று கொள்ள வேண்டும். மாணவர்களின் அசல் சான்றிதழ்கள், பள்ளி படிப்புக்கான சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது, அங்கீகாரம் ரத்து உட்பட, பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

ஆராய்ச்சிகளுக்கு புதிய கண்டுபிடிப்பு கவுன்சில்

சென்னை:'கல்லுாரிகளின் ஆராய்ச்சி பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புக்கான கவுன்சில் உருவாக்கப்படும்' என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. இதில், பதிவு செய்யும்படி, கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் பணிகளில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., கலைக்கப்பட்டு, புதிதாக உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும் என, மத்திய அரசு, ஏற்கனவே அறிவித்துள்ளது.அதேபோல, உள்கட்டமைப்பு மற்றும் தரத்தில் சிறந்து விளங்கும், கல்வி நிறுவனங்களுக்கு, சர்வதேச அடிப்படையிலான, உயர்தர உயர்கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 
இதை தொடர்ந்து, ஆராய்ச்சி பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புக்கான கவுன்சிலான, 'இண்டியன் இன்னோவேஷன்ஸ் கவுன்சில்' என்ற, ஐ.ஐ.சி., அமைப்பு நிறுவப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கவுன்சிலில் இணைந்து, ஆராய்ச்சி பணிகளை மேம்படுத்த, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. நவ., 20க்குள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் இணையதளத்தில், விபரங்களை பதிவேற்ற வேண்டும் என, உயர்கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

TRB - சிறப்பாசிரியர் இறுதிப் பட்டியல் குளறுபடி - விளக்கம் அளிக்க கோரிக்கை!

வீடு கட்டுவதற்கான விதி மாற்றம்



வீடு கட்ட அனுமதிக்கப்படும் எஃப்எஸ்ஐ எனப்படும் தளப் பரப்பளவு குறியீடு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நேற்று (நவம்பர் 7) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் வீடு மற்றும் அடுக்குமாடிக் கட்டடம் கட்டுவதற்கு, தளப் பரப்பளவு குறியீடு எனப்படும் கட்டட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது. சிறப்புக் கட்டடங்கள் எனப்படும் நான்கு மாடிகளுக்கு மிகாத கட்டடங்களுக்கு, தளப் பரப்பளவு 1.5 மடங்காக இருந்தது. இதனால், 1,000 சதுர அடி நிலத்தில் 1,500 சதுர அடி பரப்புக்கு மிகாமல் மட்டுமே கட்டடத்தைக் கட்ட முடியும்.

சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில், அனைவருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் தளப் பரப்பளவு குறியீடானது 1.5இல் இருந்து 2 ஆக மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இது குறித்த அரசாணை, நேற்று தமிழக அரசினால் வெளியிடப்பட்டது. “1,000 சதுரடி நிலம் வைத்திருப்பவர்கள் 1,500 சதுர அடிக்குக் கட்டடம் கட்டிக்கொள்ளலாம் என்ற அனுமதியானது, தற்போது 2,000 சதுர அடி வரை மாற்றப்பட்டுள்ளது” என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை: 24.01.2019 க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் பதிவு சலுகை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


 திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் கடந்த 2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் தங்கள் பதிவினை 24.01.2019 தேதிக்குள் அரசு வேலைவாய்ப்பு இணையதளம் வாயிலாகவோ, அல்லது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவட்டையின் நகலுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, பதிவஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். 

மேலும், 25.01.2019-க்குப் பிறகு புதுப்பித்தல் கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தமிழக அரசு அறிவித்துள்ள இச்சலுகையினைப் பெற்று பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவித்துள்ளார்

கலெக்டரிடம் ஆசிரியர்கள் புகார் - 2 BEO - கள் , 'சஸ்பெண்ட்'

ஆசிரியர்களுக்கு, பணப்பலன்களை பெற்று தராமல், காலதாமதம் செய்ததால், இரு வட்டார கல்வி அலுவலர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் இரு வட்டார கல்வி அலுவலகங்கள், மகாதானபுரம் அக்ரஹாரத்தில் செயல்படுகிறது. இங்குள்ள ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன் மற்றும் அவர்கள் கடன் வேண்டி மனு அளித்திருந்தனர். மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்காதால், பணப்பலன்களை பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்தனர்.

இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், அனைத்து ஆசிரியர்கள் சார்பில், கல்வி அலுவலரை கண்டித்து கண்டன நோட்டீஸ் ஒட்டப்பட்டது.கடந்த மாதம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தங்கவேல், குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர், கபீர் ஆகியோர், ஆசிரியர்களிடம், 'சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பலன் உட்பட அனைத்து சலுகைகளும் பெற்று தரப்படும்' என, உறுதியளித்தனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் கொடுத்த புகார்படி, ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் மற்றும் கடன் வசதி பெற்று தராமல் தாமதம் செய்ததாக, கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் சேகர், குமுதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் தங்கவேல் கூறியதாவது:

கிருஷ்ணராயபுரம் தாலுகா வட்டார கல்வி அலுவலர் சேகர் மற்றும் குமுதா ஆகியோர், ஆசிரியர் களுக்கு பெற்று தர வேண்டிய பணப்பலன் மற்றும் கடன் வசதி செய்து தராமல், ஓராண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. ஆசிரியர்கள் கொடுத்த புகார்படி, இரு அலுவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்

ஷாலாசித்தி' திட்டத்தில் பள்ளிகள் 'சென்டம்

மத்திய அரசின், 'ஷாலாசித்தி' இணையதளத்தில்,
அனைத்து பள்ளிகளும், தகவல்களை பதிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்



மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், நாடு முழுக்க, பள்ளிக்கல்வி தரத்தை மேம்படுத்த, 'ஷாலாஷித்தி' திட்டம், கடந்த 2016ல் கொண்டு வரப்பட்டது


*தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் (நியூபா) சார்பில், திட்டத்துக்கென பிரத்யேக இணையதளம் (www.shaalasiddhi.nuebha.org) உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி சார்ந்த தகவல்களை உள்ளீடு செய்யும் பட்சத்தில், நிதியுதவி அளிக்கப்படுகிறது

*பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, தேவையான அனைத்து வகை பயிற்சிகளும், தலைமையாசிரியர்களுக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் சேர, அக்.,31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது


*கோவையில் உள்ள அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் இந்த இணையதளத்தில் தகவல்களை பதிவேற்றியுள்ளன


*பள்ளியின் பெயர், மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு பணிகள், கால அவகாசம் குறித்து, தெளிவாக குறிப்பிட்டு நிதி ஒதுக்குவதால், அரசுப்பள்ளிகள் இத்திட்டத்தில் பயனடைவதாக, ஒருங்கிணைந்த கல்வி உதவித்திட்ட அலுவலர் கண்ணன் தெரிவித்தார்

சென்னையில் ஜாக்டோ-ஜியோ இணைப்பு குறித்து இருபிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது !!

16.11.2018 வெள்ளிக்கிழமை பள்ளிகள்,கல்லூரிகள்,அரசு அலுவலகங்கள் அனைத்தும் உள்ளூர் விடுமுறை-நாகை மாவட்டம்

கூகுள் டியோ செயலி' உபயோகப்படுத்தினால் ரூ.9 ஆயிரம் வரை ரொக்க பரிசு: கூகுள் அறிவிப்பு :

கூகுள் டியோ செயலி (Google Duo) உபயோகப்படுத்தினால் ரூ.9 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்து உள்ளது. கூகுள் டியோவை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது கூகுள் நிறுவனம் தனது புதிய வீடியோ அரட்டை செயலியை (Video Chat App) கடந்த ஆகஸ்டு மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியானது ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த செயலியை பதிவு செய்யும் போது, பயன்பாட்டில் இருக்கும் சிம் மற்றும் தொலைப்பேசி எண்ணை சரிபார்த்து உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், தொலைபேசி எண்ணுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெறும் வகையிலும் இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

கூகுள் டியோவில் உள்ள ஒரு சிறந்த அம்சம் "நாக் நாக்". இது அண்ட்ராய்டு போன்களுக்கு மட்டும் உள்ளதாகும். அண்ட்ராய்டு போனில் அழைப்பு பெறும் போது, அழைப்பை எடுக்கும் முன்னே மோபைல் திரையில் அழைப்பாளரிடம் இருந்து நேரடி வீடியோ காண்பிக்கப்படுகிறது.
இந்த செயலி வேகமாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வீடியோ செயலியை பிரபலப்படுத்தும் நோக்கில் ரோக்கப்பரிசு அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது,.
அதில், இந்தியாவில் அதன் வீடியோ அழைப்புப் பயன்பாட்டைப் பயன்படுத்தும் நபர்களுக்கு கூகுள் பே பேமென்ட் மூலம் மொத்தமாக 9,000 ரூபாய் வரை வருடத்திற்கு சம்பாதிக்கலாம் என்று கூறி உள்ளது. இநத செயலி மூலம் புதிய பயனாளர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் இது உங்களுக்கும், தொடர்பை ஏற்படுத்துபவர்களும் பணப் பரிசு கிடைக்கும் என்று கூறி உள்ளத
...

சிறப்பாசியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை - செங்கோட்டையன்

சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு சம்பத் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, சிறப்பாசிரியர் தேர்வில் தவறு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் ஏதும் இருந்தால், அவற்றை விசாரித்து தீர்வு காண அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.


மேலும், டிசம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்றும், இதே காலஅவகாசத்தில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

பெற்றோர்களே எச்சரிக்கையாக வண்டி ஓட்டுங்கள்- குட்டி போலீஸ் உங்களைக் கண்காணிக்கிறது

இத்தனை நாட்களாக ப்ரோக்ரஸ் கார்டைப் பார்த்து மாணவர்கள்தான் பயப்பட்டார்கள். இனி பெற்றோர் பயப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது' அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுடைய பெற்றோர் எப்படி வண்டி ஓட்டுகிறார் என்பதைக் கவனித்து சான்றிதழ் அளிக்கின்றனர்.
அவை மாதக் கடைசியில் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பப்படும். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பெற்றோருக்குப் பரிசுகளும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆரம்பித்துள்ளது. வரும் காலங்களில் இந்த முறை மற்ற அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, பள்ளி ஆசிரியர்கள் மதிப்பீட்டு அட்டை ஒன்றை மாணவர்களுக்கு அளிப்பர். அதில், மாணவர்கள் தங்களின் பெற்றோருடன் செல்லும் பயணங்கள் குறித்து மாதத்துக்கு 12 முறை மதிப்பிட வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள் தங்களின் பெற்றோர் ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடுகிறார்களா, வண்டி ஓட்டும்போது போன் பேசாமல் இருக்கிறார்களா, ஹெல்மெட் / சீட் பெல்ட் அணிகிறார்களா, சரியான முறையில் ஓவர்டேக் எடுக்கின்றனரா, ஹாரன் அடிக்கிறார்களா மற்றும் பிற விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்று மாணவர்கள் கண்காணிக்க வேண்டும். பின்னர் அதை அட்டையில் மதிப்பிட்டு ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். அவை மாதக் கடைசியில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பெற்றோருக்குப் பரிசுகளும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும். 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் சாலை விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை ஆசிரியர்களே கண்காணித்து மதிப்பிட உதவுகின்றனர். அதே நேரம் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பீட்டு அட்டையை அவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். இந்தப் பிரச்சாரத்தில் சுமார் 200 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 'குட்டி போலீஸ்' என்று அழைக்கப்படுகின்றனர். ஒருவழிச் சாலையில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த மாணவர்களே ட்ராபிக் போலீஸ் போல சீருடை அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்யவும் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ''எங்க டீச்சர்களும் ரூல்ஸ ஃபாலோ பண்றாங்களான்னு செக் பண்ணுவோம்a

ஓபிசி மாணவர்களுக்கு வங்கி தேர்வு இலவச பயிற்சி :

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணி யாளர் நலச் சங்க தமிழ்நாடு தலைவர் கோ.கருணாநிதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) யூனியன் வங்கி பிற்படுத்தப்பட் டோர் நல சங்கம், எம்பவர் அறக் கட்டளை மற்றும் பெரியார் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து 10 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கவுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் 23 முதல் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும். இதில் பங் கேற்க விரும்பும் ஓபிசி மாணவர் கள் வங்கி தேர்வு வாரியத்துக்கு (ஐபிபிஎஸ்) அனுப்பிய விண் ணப்பத்தின் நகலை empower.socialjustice@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது periyariasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ நவம்பர் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


பயிற்சி வகுப்புக்கு கட்டணம் எதுவும் கிடையாது. பதிவு கட்டண மாக ரூ.100 மட்டும் முதல் நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விவரங் களுக்கு 9381007998, 9092881663 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

EMIS Flash News : நாளை-10.11.2018 ஒருநாள் மட்டும் +1 மாணவர்களுக்கு மட்டும்EMIS ல் EDIT வசதி செய்யப்படஉள்ளது.

EMIS Flash news-
இவ்வாண்டு முதல் 10,11,12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாமினல் ரோல் தயாரிக்கும் பொழுது அது சார்ந்த தகவல்கள் திரட்டப்படுவது அரசின் EMIS வலைதளம் மூலமே நடந்தன. 

எனவே 10,11,12 ஆம் வகுப்பிற்கான மாணவர்கள் EDIT வசதி நிறுத்தப்பட்டு இருந்தது, ஆனால் +1 மாணவர்களின் பதிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளதால் EMIS ல் EDIT வசதி செய்யப்படவேண்டும் என பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று நாளை-10.11.2018 ஒருநாள் மட்டும் +1 மாணவர்களுக்கு மட்டும்EMIS ல் EDIT வசதி செய்யப்படஉள்ளது.  
               இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் +1 மாணவர்களின் பதிவில் திருத்தங்கள் செய்து மாணவரின் தகவல்களை நிகழ்நிலைக்கு கொண்டு வரகேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்aaa

12/10/18

6TH STD SOCIAL SCIENCE UNIT-WISE QUESTION PAPERS (EM) TERM-2 (NEW)



6th Social Science Unit 1 (His-1) test EM (Term -2).pdf

6th Social Science Unit 2 (His-2) test EM (Term -2).pdf

6th Social Science Unit 3 (His-3) test EM (Term -2).pdf

6th Social Science Unit 1 (Geo-1) test EM (Term -2).pdf

6th Social Science Unit 1 (Civ-1) test EM (Term -2).pdf

6th Social Science Unit 2 (Civ-2) test EM (Term -2).pdf

6th Social Science Unit 1 (Eco-1) test EM (Term -2)pdf.


6TH STD SOCIAL SCIENCE UNIT-WISE QUESTION PAPERS (EM) TERM-2 (NEW)

6th Std - Term 2 - QR Videos - Tamil - Page 5


ஆசிரியர் பணி தகுதி தேர்வு : கவுன்சிலுக்கு அதிகாரம்

ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வில், மாநில கல்வியியல் கவுன்சிலின் கருத்தை கேட்ட பின், பாடத்திட்ட மாற்றம் குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, 'டெட்' என்ற மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்பு மற்றும், பி.எட்., மட்டும் படித்தால் போதாது; டெட் தேர்விலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்ச்சி சான்றிதழ், ஏழு ஆண்டுகளுக்கு செல்லும்.இந்த ஆண்டு, அக்டோபரில், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட இருந்தது. ஆனால், பாடத்திட்ட மாற்றம், அரசு பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர்கள் மற்றும் டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது எழுந்த முறைகேடு புகார்கள் போன்றவற்றால், தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது.ஆனால், அரசு பணிக்கு ஆள் எடுக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் சேர்வோருக்காக, டெட் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதன்படி, இன்னும் மூன்று மாதங்களுக்குள், டெட் தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த தேர்வுக்கு, பாடத்திட்டத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.பாடத்திட்டம் மாற்ற வேண்டும் என்றால், பாடத்திட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்களை புத்தகமாக தயாரிக்க வேண்டும். இதற்காக, புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகம் தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர், அறிவொளியிடம், டி.ஆர்.பி., சார்பில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவரது கருத்து கிடைத்த பின், அடுத்த நடவடிக்கை துவங்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

மொட்டை கடிதத்தின் மேல் நடவடிக்கை தேவையில்லை : அரசு உத்தரவு

மத்திய அரசு துறைகளின் கீழ் பணிபுரியும் உயரதிகாரிகளுக்கு எதிராக புகார் அளிப்பவர்களின் பெயர் மற்றும் பிற விவரங்கள் இல்லாமல் வரும் மனுக்கள் மற்றும் கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவு குறித்து மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம், அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அல்லது வேறு முக்கிய துறைகளில் நியமனம் செய்ய ஆலோசனை நடக்கும் போது, பெயர் குறிப்பிடாத நபர்களின் புகார்கள் அல்லது முழுமை பெறாத குற்றச்சாட்டுகளுடன் கடிதங்கள் அதிகளவு வருவது வழக்கம்.


உண்மை தன்மை குறித்து ஆராயும் அளவிற்கு கூட பல சமயங்களில் புகார்கள் இருப்பதில்லை. எனவே புகார் அளிப்பவரின் விவரங்கள் இல்லாமல் மொட்டை கடிதம் வமீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை. அதனை பதிவு செய்தால் போதும் என மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறினர். இதே உத்தரவை, சிவிசி எனப்படும், மத்திய கண்காணிப்பு ஆணையமும் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளது